Thursday, 25 August 2011

என் முதல் நேர்க்காணல் அனுபவம்

சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு,பள்ளி முடித்தவுடன்(ரொம்ப படிக்கல??),தற்காலிக ஆசிரியர் வேலைக்கு (கிடைக்கும் என்ற நம்பிக்கையில்)விண்ணப்பம் செய்து விட்டு (S.I)யாக!!! வீட்டில் இருந்தேன்.
அந்த நேரத்தில்தான் ,அந்த ஜாப்பானியர் நிறுவனத்தில் நிறைய ஆட்கள் தேவைப்படுதாம்(எஸ்.பி.எம்)எங்கள் ஊர் பெரிய படிப்பு(செகண்டரி லெவெல்)தகுதி என்றும் கேள்வியுற்று சென்றேன்.

   அப்பா காலையிலே காரில் அனுப்பிவிட்டு,’போகும்பொழுது பஸ்ஸில் போய்விடுமா, என்றும் (12பி) என்ற பஸ் வரும்மா என்று சொல்லி சென்றார்.'ஆனால் ஒரு பஸ் போய்ட்டா,மீண்டும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்மா பார்த்து என்று கூறி ஐந்து வெள்ளி கொடுத்து சென்றார்!
காலை பத்து மணிக்கு என் பெயர் அழைக்கப்பட்டது.அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தால்,வ்ழக்கம்போல் மலாய்க்காரர்(ன்)கள்...(சரியான இடத்தில் தவறான ஆட்கள்??)என் வயித்தெரிச்சல்!!!
                             சம்பந்தம் சம்பந்தமில்லாத கேள்விகள்(இது அவர்களின் கலாச்சாரமாச்சே??).நானும் புத்திசாலித்தனமாக(எனக்கு ஒரு நெனப்பு)பதில் கூறி சமாளித்தேன்.இறுதியாக ஒரு கேள்வி கேட்டான்’கூனன் எப்படி தூங்குவான்??என்று.'உன்னையும் என்னையும் போல கண்ணைமூடித்தானே என்றேன்!அப்படி சிரித்தான்!!.இதற்கு முன்பே இதைப்பள்ளியில் கேட்டாகிவிட்டதே???’ சரி பாஸ்,நீ வேலைக்கு வரலாம் என்றனர்(பாவம் கம்பெனிக்காரன்?/)வெளியே வந்தேன்,ஏதோ அமைச்சர் பதவி கிடைத்தாற்போல ஒரு மகிழ்ச்சி!!!அங்கே ஒரு இன்ஸ்டண்ட் தோழி கிடைத்தாள்.அதெல்லாம் நமக்கு கைவந்த கலையாச்சே??சரி வாங்க பஸ்ஸ்டாண்ட் போவோம் என்று நடக்க ஆரம்பித்தோம்!!அந்தோ பரிதாபம்,அப்பா சொன்ன 12பி பஸ் விருட்டென்று எங்களைத் தாண்டி போனது??ஷாம் நிலைமைத்தானெ எனக்கும் போல??ஐயோ ,என்ன செய்ய??என்று திருட்டு முழிமுழித்தோம்(எப்போதுமே அப்படித்தானே)???
ஒரு பத்து நிமிடம் கழித்து,தூரத்தில் ஒரு மோட்டார் வண்டி எங்களை நோக்கி!!ஏய் மாமா என்று அந்த தோழி ஓடினாள்!!!ஐயோ அவள் தப்பிச்சாளே என்று கோபம்தான்(எப்படி என் கூட இருந்து கஷ்டபடனுமே??).கிளம்பிபோனாள்......
                          சுமார் அரைமணி நேரம் கழித்து,அதே மோட்டார் மீண்டும்..’என்னங்க,பஸ் இன்னும் வரலியா??என்றார் அதே மாமா!!’இல்லை,காணோம் என்று சொல்லி முடிப்பதற்குள்,’சரி வாங்க நான் போய் விடுகிறேன்’என்றார்!’இல்லை வந்து ....பஸ்..இல்லை அப்பா’என்று முடிப்பதற்குள் ,அந்த நல்ல மாமா’ஹலோ,உங்க தோழி(இன்ஸ்டண்ட்)என் மனைவியின் தங்கைதான்!ஒன்னும் பயப்படாதிங்க,இந்தாங்க புடிங்க..இதுக்கு மேல் நின்னா,உங்களுக்குத்தான் ஆபத்து என்றார்!(அப்பாவும் சொன்ன ஒன்றுதான்,காரணம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்???)..அரை மனதோடு ஹெல்மெட்டை வாங்கினேன்!!;தோ பாருங்க,என் மோட்டார் எண்பட்டையை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!என் பெயர்...விலாசம்..அனைத்தையும்..சொல்லிமுடித்தார்!.’ச்சே!,இனியும் என்ன’என்று ஏறி உட்கார்ந்தேன்.’ஆனால் ஒன்று ,உங்களை நான் 8வது மைலில் விடுகிறேன்..அங்கிருந்து நிறைய 12பி போகும்..எப்படியாவது போங்க;என்று ஒரு நிபந்தனை வேறு!மோட்டார் பத்தே நிமிடத்தில் போய் நின்றது!நன்றி கூறினேன்!

                      மீண்டும் அரை மணி நேரம் ஆனது!!!!ஐயோ!அப்போதெல்லாம் ,மொபைல் வசதி,ஏன் பொது போன் வசதியே குறைவுதான்???செய்வதறியாது நின்றுகொண்டிருக்கையில்,ஒரு லாரி வந்து நின்றது!’ஏம்மா..எங்கே போகணும்??'பூச்சோங் அங்கிள்,நான் அவருடைய மகள் என்று அப்பாவின் பெயரைக் குறிப்பிட்ட மாத்திரத்தில் லாரியிலிருந்து கதவைத் திறந்து ஓர் உருவம் இறங்கி’வாம்மா,வந்து உட்கார்’என்று எனக்கு வழிவிட்டு பின்னால் ஏறி அமர்ந்துகொண்டார்(அப்பாவின் பெயரில் அவ்வளவு மரியாதை!!)பிறகு லாரி அங்கிளும், அவர் பங்குக்கு பேட்டி எடுத்து முடித்து’சரிம்மா,நான் உன்னை 16 மைலில் இறக்கிவிட்டு ,வேறு இடத்திற்கு போகிறேன்..அங்கிருந்து டாக்சி எடுத்தால்..நம் கம்போங்( தற்பொழுது அத்திப்பட்டி கிராமம்)போய் விடலாம்'என்று ஐடியா சொல்லி இறக்கி விட்டார்!!!!!!

           இறங்கி ,ஒரு ஐந்து நிமிடங்களில் கார் ஒன்று என்னைத் தாண்டி போய் நின்று மீண்டும் ரிவர்சில் வந்து,’செல்வி ஏன் இங்கு??சரி வா’என்று ஒரு குரல்!என் தாய்மாமாவின்(போலிஸ் உயர் அதிகாரி)உற்ற தோழன்!

ஒருவகையாக வீடு வந்து சேர்கிறேன்,பின்னாலேயே அப்பாவின் கார்!!ஏம்மா ,இப்போதான் வருகிறாயா??மணி சாயங்காலம்  ஐந்தாகிவிட்டது!!!!
        இவ்வளவு இன்னல்களுக்குப் பிறகும் இந்த வேலைக்குபோக வேண்டுமா???என்று யோசித்து....!!பிறகு தடைக்கற்களே படிக்கற்கள் என்று அந்த வேலையில் சேர்ந்தேன்......................வாழ்க்கையிலும் செட்டில் ஆக துணை புரிந்தது அந்த வேலைதான்(மண்ணாரன் கம்பெனி மானேஜர்)

9 comments:

  1. ஷாம் நிலைமைத்தானெ எனக்கும் போல?// இதன் அர்த்தம் என்ன?? சம்பந்தமில்லாத நபர் சம்பந்தமில்லாத இடத்தில்???????? புரியவில்லை.

    ReplyDelete
  2. .வாழ்க்கையிலும் செட்டில் ஆக துணை புரிந்தது அந்த வேலைதான்//
    பரவாயில்லையே செட்டில் ஆனதற்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விஜயன்!12-பி படத்தில் வரும் ஷாமுக்குத்தான் இந்த வரி!

    ReplyDelete
  4. நன்றி விஜயன்,வாழ்த்துக்களுக்கு!

    ReplyDelete
  5. சென்னை பித்தன் ஐயா அவர்களே நன்றி!விஜயன் கேள்விக்கும் பதில் கூறியதற்கும் நன்றி சார்!

    ReplyDelete
  6. படங்கள் பார்க்காதது எவ்வளவு பிரச்சனையாய் இருக்குது இப்பதான் தெரியுது. நன்றி ஐயா.

    ReplyDelete