என் மன வானில்
வெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது!
Sunday, 22 May 2022
Wednesday, 12 January 2022
Friday, 31 December 2021
'ஏவல்' மலேசிய குறுந்தொடர் .
A must watch malaysia mini horror series!
'ஏவல்' மலேசிய குறுந்தொடர் விமர்சனம்.
பொதுவாக நான் மலேசிய சினிமா படங்கள், நாடகங்களைப் பார்ப்பதில்லை.அதற்காக முதலில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கான காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.ஆர்வமில்லை ,மேலும் தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு ஆர்வம் குறைவு.அதுதான் காரணமாக இருக்கலாம்!
நண்பன் சிவா மற்றும் மணி இவர்கள் இருவருமே பாடல்கள்கேட்பதிலும் சரி ,சினிமா படங்கள் பார்ப்பதிலும் சரி என்னைப்போன்ற ரசனை உள்ளவர்கள்.பொதுவாக இவர்கள் சிபாரிசு செய்யும் படங்களை நான் தைரியமாக பார்ப்பேன்.அந்த வகையில் நண்பன் சிவா ,அழைத்து செல்வி அவசியம் இந்த மலேசிய குறுந்தொடரைப் பாருங்கள்,மிகவும்
அருமையாக
எடுத்துள்ளார் இயக்குனர் என்றான்.சரி பார்ப்போம் என்று YouTube இல் நுழைந்தேன்.Tririse film தயாரிப்பில் ஆரம்பமே மிக அசத்தல்!
அருமையான
ஒளிப்பதிவு,சூழலுக்கேற்ப இசை,அதற்கு மேலாக அதில் நடித்துள்ள நடிகர்கள். தம்பதிகளாக நடிக்கும் Hamsni Perumal மற்றும் K.Nivagaran நாயகனும் நாயகியும் மிகவும் திறமையான நடிப்பை வெளிகாட்டியுள்ளனர்.ஏதோ பல வருடங்கள் ,நடித்ததுபோன்ற ஓர் அபார நடிப்பு.வில்லியாக வரும் நாயகனின் தாயாரும் அதீத திறமையுடன் தன் நடிப்பைக் காட்டியுள்ளார்.மர்மம்,திகில்,காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என ஆர்வத்துடன் நம்மையும் பாத்திரமாகவே மாற்றியுள்ளார் இயக்குனர் S.Keshvan .வாரம் ஒரு பகுதி என 10 பகுதிகளாக ஒளியேறிய இந்த குறுந்தொடரை அவசியம் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.மலேசிய சினிமா உலகிற்கு ஒரு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது இந்த ஏவல் குறுந்தொடர்.
சபாஷ் Tririse film n the team!
Tuesday, 31 August 2021
Monday, 30 August 2021
Wednesday, 25 August 2021
Sunday, 13 December 2020
Subscribe to:
Posts (Atom)