சென்றவருடம் தொடங்கிய நேரடியாக பத்துமலை அடிவாரத்தில்,கொண்டு போய் பக்தர்களைச் சேர்க்கும் மின்ரயில்(commuter)சேவையைப் பாராட்டியே ஆகணும்!!ஏனென்றால் ,பத்துமலையில் ஏற்றிய எங்களை(நேரடி சேவை??)கோலாலும்பூர் நிலையம் வந்ததும்(நாங்கள் இறங்கும் இடம் அல்ல)பாதியிலே நிறுத்தி,எல்லோரும் இறங்குங்க ,இந்த ரயில் மீண்டும் பத்துமலைக்கே போகப்போகுது???என்று தமிழ்ப்பெண் மலாய்மொழியில் (உள்ளே உள்ளவர்கள் எல்லோரும் நம் இனம்)கூவி கூவி ,களைப்பில் தூங்கிகொண்டிடுந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லணும் காரணம் பயண அட்டை வாங்கும் பொழுது,வண்டி பாதியில் மீண்டும் பத்துமலைக்கு திரும்பும்னு அறிவிக்கப்படவில்லையே???மிகுந்த களைப்பில் நானும் ,கால்வலியில்(இன்று மலை ஏறவில்லை,ஞாயிறு ஏறிய பொழுது ஏற்பட்ட கால்வலி)ரயிலை விட்டு இறங்கி அக்கரைக்கு மாடிப்படியில் ஏறி(பத்துமலை ஏறாததால் தண்டனை போல??)அங்கே போய் காத்துக்கிடந்தேன்!!!!!(இது வீட்டுக்கு வரும்பொழுது)
காலையில் ரயிலைப்பிடித்து,ஒருவழியாக பத்துமலையை அடைந்தோம்!முதலில் நான் தேடிய இடம்??வேறு என்ன ??இலவசமாக வழங்கும் பசியாறைதான்!!!!பட்டினியாக சாமி கும்பிடச்சொல்லி யாரு அடிச்சா??கூட்ட நெரிசலில் ,ரயிலை விட்டு இறங்கி,மலைமேல் இருக்கும் முருகனை ,கீழிருந்தவாறு கையெடுத்து கும்பிட்டு ..புத்தக கடைக்குச் சென்றோம்(என்க்கு இல்லை,என் பொண்ணுக்கு புத்தகம் வாங்க)
ஒருவழியாக என்னுடைய ஸ்பாட்டை அடைந்தேன்,அங்கே பணியில் சாரி சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆகணும்! ஆம்,வீட்டில் ஒரு பிடி சமைக்கவே யோசிக்கும் நாம் ,இங்கே லட்சபோ லட்சம் மக்களுக்கு ,உடனுக்குடன் சுட சுட சமைத்து ,பரிமாறும் தொண்டூழியர்களை இறைவன்ஆசிர்வதிப்பாராக!முகத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சற்றும் களைப்பில்லாமல் பரிமாறுவது சுலபமா என்ன??பல சங்கங்கள் இதுபோன்ற அன்னதானங்களை வழங்க முன்வருகின்றனர்!ஆனாலும் அதை சரியான முறையில் நம் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ளாத்ததுதான் கவலையே??
கொடுக்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு ,ஆங்காகே தூக்கி எறிந்து செல்லும் பக்தர்களை வீட்டில் என்ன நன்னெறி சொல்லி வளர்த்திருப்பாங்களோன்னு கேட்க தோணும்??அள்ளிக்கட்டிக்கிட்டு போகும் பக்தர்கள் ,அதை மற்றவர்கள்க்காவது கொடுக்கலாம் ,இல்லை முறையாக எடுத்துச்செல்லாம்!ஆசை யாரை விட்டுச்சு??ஆனாலும் நாங்கள் அப்படி இல்லை,வாங்கி உடனுக்குடன் அங்கேயே நின்று(இடம் தேடி உட்கார பொறுமை இல்லாததால்)சாப்பிட்டு ,குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு வந்தோம் என்று சொல்வதில் பெருமை படுகிறோம்!அதுக்கும் ஒரு கதை இருக்கு !பிறகு சொல்கிறேன்.
தைப்பூசம் என்றாலே எனக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகள் நினைப்பு வாட்டும்!!!அதிலும் இலவச மோர் கொடுப்பாங்களே,வெயிலில் நடந்து சென்று களைப்பு தீர குடிக்கும் பொழுது ,பாபிலோன் தொங்கும் தோட்டம் கண்களுக்கு தெரியும்!அப்படி ஒரு சுவை!மலேசியாவில் பிரசித்திப்பெற்ற எவரிடே பால் மாவு கம்பெனிக்காரர்களின் ஏற்பாட்டில் வழங்கப்படும் மோர் ,தனி சுவை!!முகம்சுளிக்காமல் பாட்டில்களை நீட்டினால்,அதிலும் ஊற்றி கொடுக்கும் தொண்டூழியர்களை எப்படி பாராட்ட??
சுமார் 5 கிண்ணமாவது வாங்கி குடித்தேன் !அம்புட்டு ருசி!
ஆனாலும் அங்கே நடந்த சில சம்பவங்களைத் திட்டாமல் இருக்கமுடியவில்லையே??என்ன ஒரு அலட்சியம்??கொடுக்கப்படும் உணவுகளை,சரியாக சாப்பிடத்தெரியவில்லை ஆனாலும் அங்கேயே கிடத்திவைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டியில் போடலாமே??சிலருக்கு ஒரு வினோதமான பழக்கம் உண்டு ,அதாவது ’இங்கே இதை செய்யாதிர்கள்’என்று சொல்லும் இடத்தில்தான் செய்வார்கள்!உதாரணத்திற்கு இங்கே நடக்காதீர்கள் என்றால் அங்கேதான் நடப்பது??இங்கே அமைதியாக இருக்கவும் என்றால் ,அங்கேதான்் பேசுவது??பக்கத்தில் இருக்கும் குப்பைத்தொட்ட்யில் குப்பைகளைப் போடாமல் ,கண்ட இடங்களில் குப்பைகளை வீசிய பெருமைக்குரிய நம்மவர்களை எப்படி,என்ன சொல்லால் திட்டலாம்?????
யாரோ வீசிய குப்பைகளை பொதுசேவை ஊழியர்கள் ‘சுய விருப்பம்’என்ற ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு ,அந்த குப்பைகளை அகற்றிய காட்சி நெகிழ வைத்தது!!ஹ்ம்ம்ம்,புத்த மத இயக்கத்தைச் சார்த்தவர்கள் ,இதையும் ஒரு சேவையாக(நாம் போட்ட குப்பைகளை)செய்தனர்!அதைப்பார்த்ததும் படம் பிடித்துவிட்டு கை கொடுக்க எண்ணினேன்,அவர் கையுறைப்போட்டிருந்தார்,மேலும் அழுக்கான கைகள்,ஆகவே ஒரு புன்னகையோடு நன்றி சொன்னேன்!ஆனால் ,அவ்ர் அதைப்பொருட்படுத்தாமல் தன் பணியைத் தொடர்கிறார்!அவருக்கு ஒரு சபாஷ்!!!
இப்போ எங்கள் பிள்ளைகள் அதுவும் இரண்டு பசங்களை(நாங்க 7 பேர்)கூட்டிப்போக கஷ்டமாக இருக்கு!!!வெளியேறும்போது ,வேலவனின் வேலைக்கண்டேன்!
‘உன் அறிவு, என் வேலைப்போல் அகன்றும் ,கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எங்கோ படித்த நினைவுடன் வீடு திரும்பினேன்!