Sunday, 29 December 2013

’தீட்டு’ என்று சொல்லி திட்டு கிடைத்தது!

          பெண்கள் ருதுவாகும் விசயம் மற்றும் இறப்பு வீடு என்றாலே அது ’தீட்டு’ என்றுதான் வழக்கத்தில் கூறப்படுகிறது.அண்மையில் அடியேன் கலந்துகொண்ட ‘வாழ்வியல் அருளியல்’பயிற்சியில் ‘தீட்டு’என்றும் தீண்டதகாத விசயம் என்று எதுவும் இல்லை.வீட்டு விலக்கு என்பது அந்த காலங்களில் வசதியற்ற நிலையில் நாம் சிக்கிக்கொண்டிருந்த சமயங்களில் பெரியோர்கள் அப்படி சொல்லி பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர்.
       அதுவே நாளடைவில் வீட்டுக்குத் தூரமாக இருக்கவேண்டும் ஆகிற்று.
அதுபோலவேதான் இறப்பு வீட்டில் இருந்து யாரும் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் அந்த வீட்டில் சுவாமிக்கு விளக்கு போடக்கூடாது என்பதுவும் தவறான விசயம் என்று விளக்கம் இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசயம்.இவை யாவும் முன்பே புத்தகங்களில் படித்தும் செவி வழி கேட்ட ஒன்றுதான் ஆனால் அண்மையில் அடியேனுக்கு கிடைத்த விளக்கங்களும் மற்றும் கேள்வி பதில் அங்கத்தில் பேரூர் ஆதினத்தைச் சார்ந்த இளையபட்டம் மருதாசல அடிகளாரும் ,பேராசிரியர் டாக்டர் ஜெயப்ரகாசமும் கொடுத்த விளக்கத்தினால் ,இங்கே சிலவற்றை பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளேன்.
      உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தை தீட்டு என்று சொல்வது தவறான சொல்லாகும். பழங்காலங்களில் கோவில்கள் சற்று தூரமாகவும் மேலும் பாறைகளாளும் உயரமான மேட்டுப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்.பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளரீதியாகவும் உள்ளரீதியாகவும் சோர்வடைத்து போயிருப்பர்.அப்படிட்ப்பட்ட காலங்களில் நெடுந்தூரம் நடந்தோ ,பயணம் செய்தோ கோவில்களுக்கு செல்ல இயலாததால் ,கோவிலுக்கு போகவேண்டாம் ,வீட்டில் ஓர் ஓரமாக இருந்து ஓய்வெடுக்க பணிக்கப்பட்டனார். மேலும் நீர் வசதியும் தற்போதைய நவீன (உள்ளாடைகள்) வசதிகளும் அந்த காலங்களில் இல்லை ஆகவேதான் விசேசங்களிலும் கூட்ட நெரிசல்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
       தற்போதைய நவீன வசதிகள் இருக்கும்போது ஏன் இன்னும் அதேப்போன்ற காரணங்களில் சிக்குண்டு கிடக்க வேண்டும் ? இறைவனுக்கு முன்னால் யாரும் விலக்கிவைக்க வேண்டியவர்கள் அல்லர் . அதேப்போலத்தான் இறப்பு வீடுகளில்  சம்பந்தப்பட்டவர்கள் எவரும் ஒருவருடம் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் தடை செய்யப்படுவதும் தவறான ஒன்றாகும்.பயிற்சியின் போது கேள்வி பதில் அங்கத்தில் மருதாச அடிகளார் அவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம்.
        அதாவது இறப்பு வீட்டில் இருந்து யாரும் ஒரு வருடத்துக்கு கோவிலுக்கு போகக்கூடாது என்றும் விசேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகூடாதாமே? அடிகளார் எங்களிடம் கேட்ட கேள்வி ‘ஒரு வருடம் டிவி பார்க்கவேண்டாம் ,வானொலி கேட்க வேண்டாம் ,உணவில் உப்பு மிளகு சேர்க்க வேண்டாம் ,வேலைக்கு போகவேண்டாம் ,உங்களுக்கு அதிகம் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்;என்றெல்லாம் தடை செய்தால் ,அதன்படி நடந்துகொள்வீர்களா? கோவிலுக்கு போகவேண்டாம் ,பூஜையறையில் விளக்கு போடவேண்டாம் என்றால் மட்டும் ரொம்ப மகிழ்ச்சியாய் அதனைப் பின்பற்றும் நாம் மேற்கூறிய விசயங்களைப் பின்பற்றுவோமா? ஆகவே அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
            சவம் எடுத்துச் செல்லப்பட்டவுடன் வீட்டினைச் சுத்தம் செய்து பூஜையறையில் விளக்கு ஏற்றி திருமுறைப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்ய .அந்த வீட்டில் இருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நிம்மதியடையும். ஒருவேளை இறப்பு நடந்தவுடன் கோவிலுக்குச் சென்றால் ,நமக்கு அறிமுகம் ஆனவர்களை அங்கே  சந்திக்க நேரிடும் ,மீண்டும் இறப்பு பற்றி விசாரிக்க நேரும்.அது நாம் மறந்திருந்த விசயத்தை மேலும் நமக்கு நினைவூட்டும் என்பதால் வெளியே போகவேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
           அதேப்போலத்தான் கர்ப்பமாக இருக்கும் மகளோ மருமகளோ அல்லது நெருங்கிய உறவுப் பெண்களோ ஈமக்காரியங்களில் சாங்கியம் செய்யக்கூடாது என்பதுவும் தவறான விசயமே. கர்ப்பமான பெண்ணின் உடல் நிலை கூட்ட நெரிசலில் நெடுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாததால் அவர்களை  சாங்கியங்கள் செய்யவேண்டாமென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அந்த பெண்ணின் உடல் நிலையை பொருத்து அவளால் முடியும் என்ற பட்சத்தில் அவள் எல்லா சாங்கியங்களையும் தாரளமாக செய்யலாம்,தன் நெருங்கிய உறவுக்கும் அவள் செலுத்தும் இறுதி மரியாதை அதுவே. அதையும் தடைச் செய்யலாமா?
          இப்படி பல்வேறு விசயங்கள் பழக்கத்தில் இருந்து வழக்கத்திற்கு வந்து ,அவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படாமல் கிடக்கின்றன.ஆகவே  தடை ,ஆகாது ,கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த விளக்கங்களை கொடுத்தால்  நாமும் நாலு விசயம் தெரிந்துகொள்ளலாம்.பிறருக்கு தெரியப்படுத்தலாம்!விளக்கம் கொடுக்காத கேள்விகள்தான் வீண் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நம்மில் பலரை இட்டுச் செல்கிறது!
                                           போற்றியோ நமசிவாய!!!
 

7 comments:

  1. சில விடயங்கள் உறுத்தலாகவே இருக்கின்றன நம் சம்பிரதாயங்களில்.இவையெல்லாம் பெரியோர்களால் சொல்லப்பட்டவை அல்ல!மாறாக சாஸ்திரங்கள்(?!)அறிந்த பிராமணர்கள்/அந்தணர்களால் வகுக்கப்பட்டவை தானே?என்ன ஒரு முரண்?????????

    ReplyDelete
  2. உண்மைதான்... நிறைய விஷயங்கள் புழக்கத்திற்கு வந்தும் விளக்கம் அளிக்கப்படாமலே இருக்கின்றன...

    ReplyDelete
  3. தெளிவான விளக்கங்கள்..

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்...

    ReplyDelete
  5. நம் முன்னோர்கள் சொல்லி வைத்தால் அதில் பின் அர்த்தங்கள் இருக்கத்தான் செய்யும்...

    ReplyDelete
  6. Hi Mam, I am Suchithra Seetharaman Working as a reporter in Vikatan. How can I contact you? Would like to use this article in Vikatan magazine

    ReplyDelete
    Replies
    1. தாராளமாக சகோ. மிக்க நன்றி.எந்த எடிசன் இதழ் என தெரியப்படுத்தினால் ,அடியேனும் வாங்கி வாசிப்பேன்

      Delete