ஆபத்து அவரசமாக எதையாவது செய்யப்போய் ,அது வில்லங்கமாய் முடியும் ஆனால் முடிவில் சிரிப்பாய் சிரிக்க வைக்கும்.அப்படி சின்ன சின்ன வில்லங்கத்தையும் ,வம்பை விலை கொடுத்து வாங்கியதையும் கொஞ்சம் நினைத்துப்பார்த்துச் சிரித்தேன்!அந்த நிமிடத்தில் கோபம் வந்தாலும் ,நொடியில் சிரிப்பு எம்மை ஆட்கொண்ட அந்த தருணங்களை கொஞ்சம் பார்ப்போம்.
ஒருமுறை நாங்கள் எல்லோரும் மாமாவுடன் காரில் வெளியே கிளம்பினோம். மாமா ,அவசர அவசரமாக கிளம்பி வந்தவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு காரில் வந்து உட்கார்ந்தார்.ஒருவேளை காரை அக்காவிடம் ஒப்படைத்துவிட்டு ,அவர் பைக்கில் போகிறார் என நினைத்தோம் ,ஆனாலும் மாமா காரை ஸ்டார்ட் செய்தார்.’எதுக்கு ஹெல்மெட் ?என்று அக்கா கேட்க ,தலையைச் சொறிந்தவர்’ச்சே என்னமோ ஞாபகத்தில் போடுக்கிட்டு வந்துட்டேன் என சொல்ல ,அன்றைய நாள் முழுவதும் சிரிப்பாய் சிரித்தோம்.
காலையில் எழுந்து பலவேலைகளைப் பம்பரம்போல செய்வது, எங்கள் பெண் குலத்துக்கே (வேலைக்குப்போகும்)கிடைத்த சாபம்......வரம்!’நூறு இளைஞர்களைக் கொடுங்கள் ,நூறு நல்ல தலைவர்களை உருவாக்கிக் காட்டுகிறேன்’ என விவேகானந்தர் சொன்னதுபோல,அந்தக் காலை வேளையில் ’ஒரு பத்து நிமிடம் கொடுத்துப்பாருங்களேன்’ ,அம்புட்டு வேலைகளையும் ,சமையல்,கிளினிங்,அயனிங் என செய்து முடித்திடும் ஒரு அபூர்வ சக்தி இருக்கும்.அம்புட்டு சுறுசுறுப்பாய் ஓடுவோம். அந்தப் பரபரப்பில் பல முறை அரிசியை களைந்து குக்கரில் போட்டு விட்டு ,பக்கத்தில் இருந்த கேத்தல் சுவிட்சை ஆன் செய்துவிட்டு , அரைமணி நேரம் கழித்து எல்லா வேலைகளையும் முடித்து ,’என்னடா இன்னும் அரிசி வேகும் மணம் இல்லையே ?என எட்டிப்பார்த்தால்,ஆன் செய்யப்பட்டது வேற சுவிட்ச்?அந்த நாட்களெல்லாம் மதியம் வந்துதான் சோறு சமைக்க முடிந்தது.பசி உயிரு போகும்.ச்சே என் புத்தியை என் ...............!
டூத் பேஸ்ட்டும்,முகம் கழுவும் கிளின்சிங் கிரிம் டியுப்பையும் ஒரே கூடையில் வைத்து டாய்லெட்டில் வைத்திருப்பேன்.எப்போதும் போல பரபரப்பாய் காலையில் கடமைகள் செய்வது வழக்கம்.ஒருமுறை காலையில் அவசர அவசரமாக ஓடிப்போய் ,பல் விலக்கும் தூரிகையில் கிளின்சிங் ஃபாம்-ஐயும் ,முகத்தில் டூத் பேஸ்ட்டையும் தடவி விட்டு ,ஏன் முகத்தில் ஒருமாதிரி இருக்குன்னு ,முகர்ந்து பார்த்தால்,அது டூத் பேஸ்ட்,நல்ல வேளையில் பல் தூரிகையை வாயில் திணிக்காமல் போனேனே.....!
மாலில் ஷாப்பிங் செய்துட்டு,வேக வேகமாய் வந்து கார் சாவியைப்போட்டு காரைத் திறந்தேன்,திறக்கவே இல்லை.ஆத்திரத்தில் கொஞ்சம் ரஃப்ஃபா திறக்கப்போய் ,பக்கத்தில் வந்த ஓர் இளைஞன் ‘அக்கா என்ன அக்கா பிரச்சனை ?என்றான்.அப்பாடா உதவி செய்யத்தான் தம்பி வந்திருக்கான்னு ‘ரொம்ப நேரமா திறக்கிறேன் ,காரைத் திறக்க முடியல தம்பி’என்றேன்.’எப்படி முடியும்கா? நீங்கள் திறப்பது என் கார் அக்கா!’ஐயோ அப்படியா? திரும்பி கார் எண் பட்டையைப் பார்த்தேன்.ஒரே கலர் ,அதே ப்ராண்ட் கார் ஆனால் நம்பர் மட்டும் வேற!!’சாரி தம்பி ,நானும் இங்கே பார்க் பண்ணினேன் போல...என முடிப்பதற்குள்,அந்த பையனாக கொஞ்சம் நகர்ந்து போய்பார்த்தான்.
என் கார் கொஞ்சம் தள்ளி இருந்தது. ‘அக்கா நான் தூரத்தில் இருந்து பார்த்துட்டேன்,நீங்கள் என் கார் கிட்ட போய் கதைவைத் திறப்பதை.’இப்போவெல்லாம் திருட்டு வேலைகளைப் பெண்களை வைத்துதானே செய்யறானுங்க,அதான் நானும் கொஞ்சம் உஷாராகிட்டு உங்களை கவனிச்சேன்,ஆனால் உங்கள் செயலைக்கண்டு ,நீங்கள் திருட வந்த ஆள் இல்லை என்பதை புரிஞ்சிக்கிட்டுதான் கிட்டே வந்தேன் அக்கா. அதோ உங்கள் கார்’ என்றான் சிரித்துக்கொண்டே!அடக்கடவுளே என்னைப்பார்த்தால் திருடிபோலவா இருக்கு??அதுவும் ஆள் வச்சி திருடச் சொன்ன மாதிரியா இருக்கு?
எங்கள் சித்தப்பா மகன் மணி அண்ணன்.ஜோகூரில் இருந்து வீட்டுக்கு எப்போதாவது வரும்.அண்ணா வந்தால் வீட்டில் ராஜ மரியாதை.மூத்தப்பேரன் .அப்பாவின் தம்பி மகன். ரொம்ப பாசமான அண்ணா என பல தகுதிகள் பெற்ற அண்ணா. ஒருமுறை அம்மா வீட்டுக்கு வந்து, ,குளித்து முடிந்து வெளியே வந்த அண்ணா,’பாப்பா ,அது என்ன சோப்?நல்ல வாசம் ,சிகப்பு கலர்ல? ஜோகூரில் இந்த மாதிரி சோப் எல்லாம் கிடைக்காதும்மா.அம்மா எங்கே வாங்கினாங்க?என கேட்கும்போதுதான் எங்களுக்கு தெரிய வந்தது.....!
அண்ணா குளிச்சது நாய் குளிப்பாட்டும் சோப்.வீட்டில் நாங்கள் இருப்பதால் எங்களுக்கு எது குளிக்கும் சோப் ,நாய் குளிப்பாட்டும் சோப் என தெரியும்!ஆனால் பாவம் மணி அண்ணா.அம்மாவிடம் விசயம் போய் எங்களுக்கு அடி கிடைக்கும் முன் நானும் தங்கையும் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்டு மீண்டும் குளிக்கச் சொன்னோம்!அன்றிலிருந்து மணி அண்ணாவின் பெயர் ’நாய் சோப் மணி அண்ணா’ என்று மாற்றம் கண்டது.
மிக மிக அண்மையில் ,வாட்ஸ் ஆப்பில் என்னைக் கோர்த்துவிட்டான் என் தம்பி.ஃபேமிலி பேக் என்ற குழுவில் சேர்த்துவிட்டான்.அதில் இரண்டு பிரிவு ,ஒன்று அப்பாவின் உறவு ,மற்றொன்று அம்மாவின் உறவு.இங்கே சொல்வதை சொல்லக்கூடாது.அங்கே சொல்வதை இங்கே சொல்லக்கூடாது என்ற ஒரு விதிமுறை உண்டு.(எல்லாம் புறணி பேசறதுதான்).நான் கோபம் வந்தால் ,பதற்றத்தில் எதையாச்சும் உளறி வைப்பேன்னு எனக்கு நல்லா தெரியும்.அதனால் நானே அந்த குழுவில் இருந்து வெளியானேன்.
இருந்தாலும் நாம இல்லாமல் நல்லா இருக்காதுன்னு மீண்டும் கோர்த்து விட்டான் தம்பி(இதில் என் அக்காவும் உடந்தை).விளைவு ?நானோ என் திருவாயால் ,அப்பா உறவுகளைப் பற்றி அப்பா ஃபேமிலி பேக்ல சொல்லப்போய்.........?எனக்காக என் உடன்பிறப்புகள் 7 பேர் மட்டும் அவர்களின் பிள்ளைகள் என எல்லோரும் எதை எதையோ போட்டு 350 மேசேஜ்களைப் போட்டு ,நான் பேசியதை பழைய மேசேஜ்-ஆக மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சி இருக்கே?அதன் பிறகு என் உடன்பிறப்புகளிடன் எனக்கு கிடச்ச துப்பு இருக்கே?
இதேப்போலத்தான் முகநூலில் (2011-இல்)ஒரு சம்பவம். இன்பாக்சில் நான் பிறரிடம் பேசுவது ரொம்பவே குறைவு. முகநூலுக்கு வந்த புதிதில் நிறைய தப்புகள் செய்துள்ளேன்.இன்பாக்சில் அனுப்ப வேண்டிய சிலவற்றை தவறாய் வாலில் போட்டதுண்டு.என் நட்புக்கு அனுப்ப வேண்டிய மேசேஜை தவறாக ஒரு நண்பருக்கு அனுப்பி ,அந்த நண்பர் மெத்த மகிழ்ச்சியில் ‘எனக்கா டீச்சர் இப்படி அழகான வரிகள் போட்டு மேசேஜ் போட்டிருக்கிங்கள்?நீங்கள் என் கூட பேசக்கூட மாட்டிங்கள்?என் வாலுக்கு கூட வந்ததில்லையே?என்று கேட்கும்போதுதான் தெரிந்தது நான் தவறான நபருக்கு இன்பாக்ஸ் செய்தது.மன்னிக்கவும் அது என் நட்புக்கு அனுப்பிய குட் மார்னிங் மேசேஜ்,பிளிஸ் இக்நோர் என்று பதில் போட்டு மன்னிப்பும் கேட்டேன்.விளைவு அந்த சகோதரன் என்னை அன்பிரண்ட் பண்ணிட்டுப்போய்ட்டார்.
(இப்படி நீங்கள் பல்பு வாங்கிய சம்பவம் உண்டா?)
நல்லாயிருக்கு...
ReplyDelete