Wednesday, 7 June 2017

நான் கொஞ்சம் (கர்வம்) பெருமை கொள்கிறேன் !



              1997 இல், நான் ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த போது, தமிழ்நாடு சென்றேன்.அப்போ நாங்கள் டூர் சென்ற பேருந்து ஓட்டுநர் நட்பாக அறிமுகம் ஆனார் .நாடு திரும்பி ,அவர் குடும்பத்துக்கு  எதுவும் செய்யலாம் என நினைத்திருந்த  வேளையில் ,தமிழ்நாட்டில் இருந்து ஒரு இன்ஜினியர் எங்கள் அலுவலகத்துக்கு அலுவல் காரணமாக வந்தார்.
           பேசி அறிமுகம் ஆனவுடன் ,நானும் என் தோழியும் அந்த பேருந்து ஓட்டுனருக்கு பரிசு ஒன்றை இவர் மூலம் அனுப்பிவைத்தோம் . பரிசைப் பெற்றுக்கொள்ள , அந்த நண்பர் வீட்டுக்கு ,ஓட்டுநர் குடும்ப சகிதம் சென்றபோது,அவர் மகளுடன் காதல் வயப்பட்டார் என்  நண்பர்.
                 22 வயதில் திருமணம் நடந்தது அந்த இளைஞனுக்கு . இதில் அழகிய அங்கம் என்னவென்றால் அந்த பெண்தான் முதலில் தன காதலை வெளிக்கொணர்ந்தாள் என்பது முன்பே உங்களுக்குத் தெரியும்.அதை அந்தப் பெண் கடிதம் வழி எங்களுக்கு தெரியப்படுத்தினாள் .மற்றுமொரு முக்கிய விஷயம் நண்பர் கூறியது 'சகோ செல்வி ,எனக்கு அவளுடைய பெற்றோர்களை ரொம்ப பிடித்துப்போனது,பிறகுதான் அவளை  ரொம்பவே பிடித்துப்போனது 'என்றும் கூறினார்.

          18 வருடங்கள் கழித்து ,என் தோழியின்(அவளும் நானும் கொடுத்தனுப்பிய பரிசுதான் ) முகநூலில்,அவள் பிறந்த நாளுக்கு நான் வாழ்த்து கூறியிருந்ததை (31 /5/2017)அந்த நண்பர் பார்த்துவிட்டு என்னை கண்டுபிடித்து  பேசினார்.'உங்கள் நாட்டில் வேலைக்கு வந்த என்னை எங்கள் நாட்டு பெண்ணிடம் புடிச்சி கொடுத்த்த்தது மட்டுமல்லாமல் ,
22 வயசில் எனக்கு திருமணம் செய்ய வச்ச உங்களைத்தான் தேடினேன்,சிக்கிட்டிங்க ,இனி விடமாட்டேன் ,எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா?' என்றார் ரொம்ப வெள்ளந்தியாய் அந்த நண்பர்.
          'மிக அருமையான   மாமனார் மாமியார் உங்களால் எனக்கு கிடைத்தனர் .அதற்காகவே உங்களுக்கும் உங்கள் தோழி புஷ்பாவுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் 'என்றார்
பிறகுதான் தெரிய வந்தது ,நாங்கள் நினைத்ததைவிட,(அந்த பெண் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு ) அவர் மனைவியை  மகிழ்ச்சி,பணம் பொருள் என எல்லாவற்றிலும்  சிறப்பாக வாழவைத்துக்கொண்டிருக்கிறார், கவனித்துக்கொள்கிறார்.
            அதுமட்டுமல்ல  அவர்  பெற்றோர் மற்றும் மாமனார் மாமியாரையும்  கூட ஒரே நிலையில் வைத்து பார்ப்பதாகவும் அறிந்தேன்.இன்னும் அந்த தம்பதியினர் வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்!
#எங்கள் செயல், ஒரு பெண்ணுக்கு மிகசிறந்த வாழ்வினைக் கொடுத்துச்  சென்றது என்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி.