என்னைவிட்டுப்போன 2011!!
சென்ற வருடம்,இந்த தேதியில்,நான் தவிர்க்கமுடியாத காரணங்களால், வேலை செய்த பள்ளியிலிருந்து விலகவேண்டிய சூழல்!!நாங்கள் மூன்று ஆசிரியைகளும்,வெளியேறினோம்!செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தோம்!இப்படி சொன்னாலே பணம்தானே காரணம்!
பள்ளி திறக்க இன்னும் மூன்றே நாட்கள் எஞ்சி இருந்தன!என்ன செய்ய போகிறோம்????எங்களிடம் கற்றுத்தேர்ந்த சில மாணவர்களை ,அவர்கள் பெற்றோர்கள் எங்களிடமே,அனுப்பிவைக்க முடிவு செய்தனர்!!!!இடம் இல்லை,பணம் இல்லை!நிம்மதி இல்லை!எங்கள் நலனுக்காக இல்லாவிட்டாலும்,எங்களை நம்பி ,தங்கள் பிள்ளைகளை எங்களிடமே,அனுப்பவிருக்கும் ,அந்த பெற்றோர்களின் நம்பிக்கைக்காக ,எப்படியும் எதையாவது சாதிக்க வேண்டுமே????அந்த தருணங்கள்,நான் வணங்கும் சிவபெருமான் மற்றுமின்றி உலகத்தில் உள்ள எல்லா சாமிகளையும் நான் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்லனும்!பின்னே,இக்கட்டான சூழலாச்சே??அப்படித்தானே??
பொதுவாக இதுபோன்ற சூழலில் இருக்கும்பொழுது,நம் குடும்பமோ அல்லது உறவுகளோசொல்லும் ஒரே சொல்,’வேறு வேலைத் தேடலாமே??’.அது நமக்கு தெரியாதா??அதெல்லாம் போய் ,செய்து,துப்புபட்டு,அவமானப்பட்டு ,பைய பைய கற்றுத்தேர்ந்து,பிறகுதானே சம்பாத்தித்து அப்புறம் சலிப்புத்தட்டிதானே,ஆசிரியைத் தொழிலுக்கு(ஏதோ ஆர்வமும்,கொஞ்சம் திறமையும்)வந்தேன்??????
மறுபடியும் ஹைஹீல்ஸ் போட்டுக்கொண்டு,எட்டு மணிநேரம்,ஆங்கிலம்(ரொம்ப தெரிந்ததுபோல்),அஞ்சுகாசு பிடிக்காத மலாய்மொழியும் மட்டுமே பேசிக்கொண்டு ,ஒட்டியும் ஒட்டாமலும் அலுவலக வேலை?????ஐயோ,சத்தியமாக என்னால் முடியாது!!பணம் என்னவோ அதிகம்தான்,ஆனாலும் ஆத்மதிருப்தி,கிடைக்குமா?????மாதாமாதம் 27-ம் தேதியில் அந்த திருப்தி கிடைக்கும்,ஏனேன்றால் அறுவடை தினம்(சம்பள நாள்)அந்த வேலை ,வேலைக்கு ஆகாது என்று குடும்பத்தாரிடம்(எல்லோருமேதான்???)ஆலோசனைக் கேட்காமல்,’நட்பு’என்ற ரிதியில் ‘அந்த 5 பேர்’ கொண்ட என் நட்பு உலகைத் தொடர்பு கொண்டேன்!!நான் பள்ளியில் இருந்த காலங்க்ளில் ,ஏற்பட்ட நட்பு அது!என் பாஸ் மற்றும் அவரது சகாக்களே அந்த ஐவரும்!
பொதுவாக உதவி என்று போய் நின்றால், கணவர் என்றால் என் மனைவி என்ற நலன்,உடன்பிறப்புகள் என்றால் நம் உடன்பிறந்தவள் என்ற நலன்,உறவுகள் என்றால்,ஏதோ நம் அண்ணன் மகள் அல்லது அக்கா மகள் என்ற அல்லது என் தம்பிக்கு வாழ்க்கைப்பட்டவள் என்ற நலன்,இப்படித்தான் நினைத்து உதவ முன் வருவார்கள்!அது உலக நியதி!
ஆனால் ,நான் ’எனக்கு ஒரு உதவி வேண்டும்’,நான் செய்வதறியாது நிற்கிறேன்’ என்று போன் பண்ணியவுடன் ,மறுமுனையில் என் பாஸ்;செல்வி ,என்ன உதவி வேண்டுமோ, தயங்காமல் கேளுங்கள்,உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு’என்றார்!அது மட்டுமா??,சரி நான் என் படையுடன் வருகிறேன் என்று போனை வைத்தார்!அன்று மாலை ,என்னையும், என் சக ஆசிரியைகளையும் சந்தித்துப்பேசினார்.என்னை தனியாக அழைத்து ;செல்வி,புதிய பள்ளியைத் தொடங்க என்ன செலவு ஆகுமோன்னு கவலைப்பட வேண்டாம்!நான் உங்களுக்கு. ஒரு தொகையாக ரிம..................பணம் கொடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்!ஆகவே தாராளமாக உங்கள் இதர வேலைகளைத் தொடங்கலாம்’என்றார்!ஒரு கணம் ,என் அப்பன், அந்த கூத்தபிரான என் முன்னே ,அவர் உருவில் இருப்பதை உணர்ந்தேன்!இறைவனை, நேரில் கண்டால்,பேச முடியாதாமே??அதையும் அந்த நிமிடம் உணர்ந்தேன்!இறைவன் வேறொருவர் உருவில்தான் வருவார் என்பதும் புலப்பட்டது!பணம் மட்டும் கொடுக்கவில்லை,அவர் பணிப்படையை(சகாக்களை) அழைத்து,அவர்களுக்கு (எங்கள் மூவருக்கும்)என்ன உதவிகள் வேண்டுமோ.செய்து கொடுக்கனும் ‘என்று கட்டளையும் இட்டார்.
இவை அனைத்துக்கும் ஒரே காரணம்,நான் பள்ளியில் வேலை செய்த மூன்று வருடங்களில் ,அவர் எங்களிடம் கண்ட நேர்மையே!!!ஆம்,அவர் அந்த சமயம் அப்பள்ளியின் பெ.ஆ.சங்க தலைவர்!!பள்ளிக்கட்டணம் உட்பட பணம் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களையும் நான்,அவரிடம் ஒப்படைப்பேன்!!நாம் என்ன செய்கிறோமே,அதுதான் ,பிறகு நமக்கு வேறுவகையில் கிடைக்குமாம்!!!அதுதான் ,அன்று எனக்கு (2011)கிடைத்தது!!
வேலைகளில் இறங்கினேன்!அந்த நிமிடங்களைத் திரும்பி பார்த்தால்,மயக்கமே வரும்,ம்ம்ம்ம் அப்படி ஒரு அலைச்சல்,அழுகையும்!காரணம் ,இரண்டே வாரங்களில்,ஒரு இடத்தைப்பார்த்து,சகல வசதிகளுடன் ,பாலர்பள்ளி தொடங்குவது அத்துணை சுலபம் அல்ல???ஒரேடியாக இல்லாவிட்டாலும்,ஏதோ போட்ட பணத்தை திரும்ப பெற்று விட்டதால்,பாஸுக்கு போன் பண்ணி ,உங்கள் உதவியை(பணத்தை) ,முழுமனதுடன் மீண்டும் கொடுக்க எண்ணுகிறோம் என்று சொல்லும்போதெல்லாம்,’அதற்கு ஒன்றும் அவசரமில்லை செல்வி,நீங்கள் வெற்றி பெற்றால் அதுபோதும்,உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்க’என்று அதை(பணத்தை)ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை!!
இன்று ,நான் ஒரு பள்ளிக்கு பொறுப்பாசிரியையாக செயல்படுகிறேன் என்றால் ,அதற்கு எதிர்ப்பார்ப்பு இல்லாத, ஆரோக்கியமான அந்த நட்புதான் அடிக்கல் என்பதை கூறிக்கொள்வது இல்லாமல் ,எனக்கு கிடைத்த நட்புகள் எல்லாமே, என்னை ஏதாவது ஒரு வழியில் தட்டிக்கொடுத்து வளர செய்தன என்ற உண்மையையும் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்!!
Saturday, 31 December 2011
Tuesday, 29 November 2011
நானும் வெளிநாடு போகபோகிறேன்!!!!
அப்பொழுது எனக்கு வயது 22(எந்த வருசம்னு கேட்ககூடாது???).Manufacturing air-cond துறையில்,Quality inspector-ஆக பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது,ஒரு வெள்ளிக்கிழமை மதிய வேளை என் சக தோழி என்னை நோக்கி அறக்கபறக்க ஓடி வந்து’செல்வி கையைகொடு,உனக்கு ஜப்பான போக வாய்ப்பு கிடைத்திருக்கு!உன் பெயர் அங்கே லிஸ்டில் வெளிவந்துள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
’என்ன??அக்கா,பொய்யா..போங்க’என்று நிலைத் தடுமாறி உளறுவதற்குள்,ஏய்.என்ன நம்பலையா??இரு,அப்புறமா ,அவன்(முதலாளிக்கு மரியாதை)கூப்பிடுவான்,பாரு!அப்புறம் நம்புவாய்’என்று சொல்லி நகர்ந்த்தார்,ரொம்ப நேரம், லைனில் நின்று(conveyer system)பேசக்கூடாது!அதுவும் நான் Quality inspector,நுண்ணியமாக சோதனை செய்யணும்(குளிர் சாதன ஊடுருவியை)!என்னைவிட சீனியர்கள் இருக்கும்பொழுது எனக்கு எப்படி??இது என் சந்தேகம்??????
அந்த கொஞ்ச நேரம் மிதக்க ஆரம்பித்து ,நார்மல் நிலைக்கு வருவதற்குள்,மற்றொரு நண்பர்(தரக்கட்டுப்பாடு அதிகாரி)என்னை நோக்கி வந்தார்.’செல்வி கொஞ்ச கவனமாக வேலையைச் செய்யுங்கள்,உங்கள் பெயர் வெளிநாடு போக பரிந்துரைக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’ஐய்யோ,என்ன சொல்றிங்க சார்???(தெரியாததுபோல்)நிஜமாகவா??’என்றேன்.’ஆமாம்.செல்வி இப்போதான் ,பெயர் பட்டியல் பார்த்தேன்!காங்ராட்ஸ் என்று சொல்லி அவரும் நகர்ந்தார்.
பொதுவாக வீட்டு 7.20(2 மணி நேரம் ஓவர்டைம் )போகும் நான்,அன்று over exiciting,சீக்கிரமே போய்ட்டேன்.வீட்டில் நுழைந்த்ததும் ‘அம்மா,.............என் பெயர்!என்னால் நம்பமுடியல????...........................அக்கா.....,அண்ணே.......!நாய்க்குட்டிக்கு பேச தெரியாது ,இல்லாட்டா அது கிட்டேயும் சொல்லியிருப்பேன்!அவ்வளவு சந்தோசம்!!!!ஆமாம்,மலேசியாவையே ஒழுங்கா முழுசா,பார்த்தது இல்லையே??அப்புறம் எங்கே வெளிநாடு??அதுவும் ஜப்பான் நாடு!அதுவும் ஓசியில் போவது???வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்!!
மறுநாள்,சீன பையன் (இரண்டாம் முதலாளி)என்னை இண்டர்வியூ பண்ணினான்!கேட்ட கேள்விகளுக்கு ‘டக்கு டக்குன்னு ‘பதில் சொன்னேன்!அவனுக்கும் தெரிந்திருக்கும்,என் சந்தோசம்??
இன்னும் இரெண்டே வாரங்களில்,எல்லா பிரெபரசன்களையும் செய்தாக வேண்டும்!!!அனைத்து ,வேலைகளையும் கம்பெனிக்காரனே செய்து கொடுத்தான்!
நான் போக இரண்டு நாட்கள் இருக்கும்!என் வீட்டில் அண்ணன் மற்றும் தம்பிக்கு அம்மை நோய் கண்டது??????வெகுவிரைவாக அனைவருக்கும் பரவியது!!!!ஐயோ,நான் போவதற்குள் ,எனக்கும் வந்துவிடுமோன்னு நினைத்து,அக்கா வீட்டில் போய் தங்கலாம்னு போனேன்!அங்கே போனால்,என் அக்கா மகள்,எங்கள் பராமரிப்பில் உள்ளவள்,இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான்,அவள் அம்மா தூக்கிப்போனாள்(என் வீட்டில் இருந்துபோனதால்)அவளுக்கும் அம்மை நோய் கண்டிருந்தது???அன்றிரவு எனக்கும் பயங்கர காய்ச்சல்??அம்மை நோயின் முதல் அறிகுறி காய்ச்சல்தானே??.பேசாமல் டாக்டரைப்போய் பார்த்தேன்,அவரும் செல்வி காய்ச்சல் அதிகம் என்றார்!விசயத்தைச் சொன்னேன்!அப்படி நோய்க்கண்டால்,நீ போக கூடாது??????ஐயோ!ஆசைக்காட்டி மோசம் செய்வது இதுதானா??கடவுள் மீது கோபம்????நான் வெளிநாடு போவேனா??என்று பல கேள்விகள்???நடந்தால் நன்மை,நடக்காவிட்டால் அதைவிட நன்மை?????என்னை நான் ஆறுதல் படுத்திக்கொண்டேன்!!வேற வழி????
அந்த நாளும் வந்தது .நான் முதன் முதலாக வெளிநாடு போகபோகிறேன்!!இரவு முழுவதும் தூங்கவில்லை!!எப்படி தூக்கம் வரும்?????காலையிலே எழுந்தேன்,காலைக்கடனகளை முடித்தேன்,அன்றைக்குன்னு பார்த்து என் பெரியண்ணா,ரொம்ப சுத்தமா குளிக்குது??அவ்வளவு நேரம்,டாய்லட்டில்??எனக்கு கோபம்,ஏனென்றால் ,அண்ணாதானே என்னை ஏர்போர்ட் அனுப்பனும்??கிளம்பினோம்,வீட்டில், உடல் நிலை மிக மோசமான நிலையில் தாத்தா!!கட்டிப்பிடித்து அழுதேன்’நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுதோம்???காரணம் என் அப்பா இறந்து ,ஆறே மாதங்கள்தான் ஆகியிருந்தன!!!அந்த வேதனை மறுபுறம்??
சுமார் எட்டு மணிநேரம் பயணம்!!அழுத களைப்பு வேற??விமானத்தில்,அவனுங்க கொடுத்த கொடுரமான சாப்பாடு,ஒரே வாந்தி???(cathay pacific).இரவில் சென்றடைந்தோம்,ஓசாகா மண்ணை மிதித்தேன்!ஹோட்டல் போய் சேர்ந்ததும்,நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா???
ஒரு காலண்டர் வரைந்து,நான் போன முதல் நாள் தொடங்கி ,நான் திரும்பும் நாள் வரை ,ஓவ்வொரு நாட்களாக டிக் பண்ண ஆரம்பித்தேன்!!!!தினமும் நான்,அவுங்க ஊர் கொடுரமான சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ,அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்திலி சம்பல்??என்னையறியாமல் கண்ணில் நீர் வழியும்??இதை அறிந்த அம்மா,வரும் நாட்களில் போன் பண்ணினால்,இன்னிக்கு ஒழுங்காகவே சமைக்கலைன்னு சமாளிப்பாங்க??எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????

Sunday, 28 August 2011
ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்!!!!!!!!
ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்
தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோணுது !’ என்று.
தினமும் இதைக் கேட்ட கணவன்,அன்று பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்...கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது. இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்??இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!!!!
மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ:ஐயோ அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று அப்பககல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.
தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…ட்ரிங் ட்ரிங் ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.
அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள்: மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்கா ரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்! பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.
அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன் என்று சொல்லும் பொழுதுதான் உணர்கிறான்; வீட்டில் கார் இல்லை என்று???செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை???’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!!
காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !!!!!!!
தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோணுது !’ என்று.
தினமும் இதைக் கேட்ட கணவன்,அன்று பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்...கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது. இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்??இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!!!!
மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ:ஐயோ அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று அப்பககல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.
தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…ட்ரிங் ட்ரிங் ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.
அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள்: மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்கா
அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன் என்று சொல்லும் பொழுதுதான் உணர்கிறான்; வீட்டில் கார் இல்லை என்று???செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை???’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!!
காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !!!!!!!
உன்னால் முடியும்(என்னால் முடியவே இல்லை!!!!!)
’உன்னால் முடியும்’ என்ற ஒரு தன்முனைப்பு(அப்படின்னு,அவுங்க சொல்லிக்கிறாங்க)நிகழ்ச்சிக்கு, நண்பனின் அன்புத்தொல்லையால்(வேறு வழியின்றி) போக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்!!!!
நிகழ்ச்சி ,மாலை மணி ஏழுக்குன்னு சொல்லி,மாலை மரியாதை..அந்த கழுதை,இந்த கழுதைன்னு!மணி வெற்றிகரமாக 8.30(ஏற்பாட்டுக்குழுவுக்கே??தன ்முனைப்பு,தாளம் போடுது போல!!!)..
நிகழ்ச்சி ஓடுது,ஓடுது......ஓடுது .முடிவே இல்லை?பெரிய பெரிய ரம்பங்களைக் கொண்டுட்டு வந்துருந்தாங்க பேச்சாளர்கள் எல்லோருமே!!
உன்னால் முடியும்...நிகழ்ச்சியும் முடியல,என்னாலேயும் முடியல(பெரிய பெரிய கொட்டாவி, என்னுள்ளிருந்து வெளியேற்றம்) ஏற்பாட்டுக்குழுவுக்கும் ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுக்க முடியல!!!!!!இப்படியாக எதுவுமே முடியல....முடியல...முடியல..... ஆனால் நிகழ்ச்சியின் பெயர் :’உன்னால் முடியும்’.இருப்பினும் ஒரு இடத்தில்,முடியும் என்ற சொல்லை பயன்படுத்த முடிந்தது!!!!!!!!!!!!!!!எங்கே? ??????அதாங்க..............’நிக ழ்ச்சி எப்படா முடியும்னு இருந்த்து!!!!
சக நண்பர்களே,இனிமேல் என்னை அழைத்து போகும் முன்.................(யோசிங்கப ்பா??)
***ஆனால் ஒன்று,நான் அடைந்த நன்மை:ரொம்ப நாட்களுக்கு பிறகு,என் அருமை நண்பர்களைப் பார்த்து சுமார் இரண்டு மணி நேரம், நல்லா பேசி,சிரித்தோம் பின்னால் இருக்கையில்அமர்ந்து கொண்டு (நிகழ்ச்சியை யார் பார்த்தா???)
நிகழ்ச்சி ,மாலை மணி ஏழுக்குன்னு சொல்லி,மாலை மரியாதை..அந்த கழுதை,இந்த கழுதைன்னு!மணி வெற்றிகரமாக 8.30(ஏற்பாட்டுக்குழுவுக்கே??தன
நிகழ்ச்சி ஓடுது,ஓடுது......ஓடுது .முடிவே இல்லை?பெரிய பெரிய ரம்பங்களைக் கொண்டுட்டு வந்துருந்தாங்க பேச்சாளர்கள் எல்லோருமே!!
உன்னால் முடியும்...நிகழ்ச்சியும் முடியல,என்னாலேயும் முடியல(பெரிய பெரிய கொட்டாவி, என்னுள்ளிருந்து வெளியேற்றம்) ஏற்பாட்டுக்குழுவுக்கும் ஒரு தரமான நிகழ்ச்சியைக் கொடுக்க முடியல!!!!!!இப்படியாக எதுவுமே முடியல....முடியல...முடியல.....
சக நண்பர்களே,இனிமேல் என்னை அழைத்து போகும் முன்.................(யோசிங்கப
***ஆனால் ஒன்று,நான் அடைந்த நன்மை:ரொம்ப நாட்களுக்கு பிறகு,என் அருமை நண்பர்களைப் பார்த்து சுமார் இரண்டு மணி நேரம், நல்லா பேசி,சிரித்தோம் பின்னால் இருக்கையில்அமர்ந்து கொண்டு (நிகழ்ச்சியை யார் பார்த்தா???)
Thursday, 25 August 2011
என் முதல் நேர்க்காணல் அனுபவம்
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு,பள்ளி முடித்தவுடன்(ரொம்ப படிக்கல??),தற்காலிக ஆசிரியர் வேலைக்கு (கிடைக்கும் என்ற நம்பிக்கையில்)விண்ணப்பம் செய்து விட்டு (S.I)யாக!!! வீட்டில் இருந்தேன்.
அந்த நேரத்தில்தான் ,அந்த ஜாப்பானியர் நிறுவனத்தில் நிறைய ஆட்கள் தேவைப்படுதாம்(எஸ்.பி.எம்)எங்கள் ஊர் பெரிய படிப்பு(செகண்டரி லெவெல்)தகுதி என்றும் கேள்வியுற்று சென்றேன்.
அப்பா காலையிலே காரில் அனுப்பிவிட்டு,’போகும்பொழுது பஸ்ஸில் போய்விடுமா, என்றும் (12பி) என்ற பஸ் வரும்மா என்று சொல்லி சென்றார்.'ஆனால் ஒரு பஸ் போய்ட்டா,மீண்டும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்மா பார்த்து என்று கூறி ஐந்து வெள்ளி கொடுத்து சென்றார்!
காலை பத்து மணிக்கு என் பெயர் அழைக்கப்பட்டது.அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தால்,வ்ழக்கம்போல் மலாய்க்காரர்(ன்)கள்...(சரியான இடத்தில் தவறான ஆட்கள்??)என் வயித்தெரிச்சல்!!!
சம்பந்தம் சம்பந்தமில்லாத கேள்விகள்(இது அவர்களின் கலாச்சாரமாச்சே??).நானும் புத்திசாலித்தனமாக(எனக்கு ஒரு நெனப்பு)பதில் கூறி சமாளித்தேன்.இறுதியாக ஒரு கேள்வி கேட்டான்’கூனன் எப்படி தூங்குவான்??என்று.'உன்னையும் என்னையும் போல கண்ணைமூடித்தானே என்றேன்!அப்படி சிரித்தான்!!.இதற்கு முன்பே இதைப்பள்ளியில் கேட்டாகிவிட்டதே???’ சரி பாஸ்,நீ வேலைக்கு வரலாம் என்றனர்(பாவம் கம்பெனிக்காரன்?/)வெளியே வந்தேன்,ஏதோ அமைச்சர் பதவி கிடைத்தாற்போல ஒரு மகிழ்ச்சி!!!அங்கே ஒரு இன்ஸ்டண்ட் தோழி கிடைத்தாள்.அதெல்லாம் நமக்கு கைவந்த கலையாச்சே??சரி வாங்க பஸ்ஸ்டாண்ட் போவோம் என்று நடக்க ஆரம்பித்தோம்!!அந்தோ பரிதாபம்,அப்பா சொன்ன 12பி பஸ் விருட்டென்று எங்களைத் தாண்டி போனது??ஷாம் நிலைமைத்தானெ எனக்கும் போல??ஐயோ ,என்ன செய்ய??என்று திருட்டு முழிமுழித்தோம்(எப்போதுமே அப்படித்தானே)???
ஒரு பத்து நிமிடம் கழித்து,தூரத்தில் ஒரு மோட்டார் வண்டி எங்களை நோக்கி!!ஏய் மாமா என்று அந்த தோழி ஓடினாள்!!!ஐயோ அவள் தப்பிச்சாளே என்று கோபம்தான்(எப்படி என் கூட இருந்து கஷ்டபடனுமே??).கிளம்பிபோனாள்......
சுமார் அரைமணி நேரம் கழித்து,அதே மோட்டார் மீண்டும்..’என்னங்க,பஸ் இன்னும் வரலியா??என்றார் அதே மாமா!!’இல்லை,காணோம் என்று சொல்லி முடிப்பதற்குள்,’சரி வாங்க நான் போய் விடுகிறேன்’என்றார்!’இல்லை வந்து ....பஸ்..இல்லை அப்பா’என்று முடிப்பதற்குள் ,அந்த நல்ல மாமா’ஹலோ,உங்க தோழி(இன்ஸ்டண்ட்)என் மனைவியின் தங்கைதான்!ஒன்னும் பயப்படாதிங்க,இந்தாங்க புடிங்க..இதுக்கு மேல் நின்னா,உங்களுக்குத்தான் ஆபத்து என்றார்!(அப்பாவும் சொன்ன ஒன்றுதான்,காரணம் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்???)..அரை மனதோடு ஹெல்மெட்டை வாங்கினேன்!!;தோ பாருங்க,என் மோட்டார் எண்பட்டையை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்!என் பெயர்...விலாசம்..அனைத்தையும்..சொல்லிமுடித்தார்!.’ச்சே!,இனியும் என்ன’என்று ஏறி உட்கார்ந்தேன்.’ஆனால் ஒன்று ,உங்களை நான் 8வது மைலில் விடுகிறேன்..அங்கிருந்து நிறைய 12பி போகும்..எப்படியாவது போங்க;என்று ஒரு நிபந்தனை வேறு!மோட்டார் பத்தே நிமிடத்தில் போய் நின்றது!நன்றி கூறினேன்!
மீண்டும் அரை மணி நேரம் ஆனது!!!!ஐயோ!அப்போதெல்லாம் ,மொபைல் வசதி,ஏன் பொது போன் வசதியே குறைவுதான்???செய்வதறியாது நின்றுகொண்டிருக்கையில்,ஒரு லாரி வந்து நின்றது!’ஏம்மா..எங்கே போகணும்??'பூச்சோங் அங்கிள்,நான் அவருடைய மகள் என்று அப்பாவின் பெயரைக் குறிப்பிட்ட மாத்திரத்தில் லாரியிலிருந்து கதவைத் திறந்து ஓர் உருவம் இறங்கி’வாம்மா,வந்து உட்கார்’என்று எனக்கு வழிவிட்டு பின்னால் ஏறி அமர்ந்துகொண்டார்(அப்பாவின் பெயரில் அவ்வளவு மரியாதை!!)பிறகு லாரி அங்கிளும், அவர் பங்குக்கு பேட்டி எடுத்து முடித்து’சரிம்மா,நான் உன்னை 16 மைலில் இறக்கிவிட்டு ,வேறு இடத்திற்கு போகிறேன்..அங்கிருந்து டாக்சி எடுத்தால்..நம் கம்போங்( தற்பொழுது அத்திப்பட்டி கிராமம்)போய் விடலாம்'என்று ஐடியா சொல்லி இறக்கி விட்டார்!!!!!!
இறங்கி ,ஒரு ஐந்து நிமிடங்களில் கார் ஒன்று என்னைத் தாண்டி போய் நின்று மீண்டும் ரிவர்சில் வந்து,’செல்வி ஏன் இங்கு??சரி வா’என்று ஒரு குரல்!என் தாய்மாமாவின்(போலிஸ் உயர் அதிகாரி)உற்ற தோழன்!
ஒருவகையாக வீடு வந்து சேர்கிறேன்,பின்னாலேயே அப்பாவின் கார்!!ஏம்மா ,இப்போதான் வருகிறாயா??மணி சாயங்காலம் ஐந்தாகிவிட்டது!!!!
இவ்வளவு இன்னல்களுக்குப் பிறகும் இந்த வேலைக்குபோக வேண்டுமா???என்று யோசித்து....!!பிறகு தடைக்கற்களே படிக்கற்கள் என்று அந்த வேலையில் சேர்ந்தேன்......................வாழ்க்கையிலும் செட்டில் ஆக துணை புரிந்தது அந்த வேலைதான்(மண்ணாரன் கம்பெனி மானேஜர்)

Sunday, 10 July 2011
மலரும் நினைவுகள்
நண்பர்களைப் பற்றி என்னை இங்கே எழுத பணித்த என் முகநூல் நண்பர் திரு கே.ஆர்.விஜயனுக்கு நன்றி!!
நண்பர்கள் உலகில் நான் ராணி என்பதை நான் அடிக்கடி சொல்ல பலரும் கேட்டதுண்டு..கிராமத்து பக்கத்து(பலகை)வீட்டு தோழி:பொதுவாக எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்ட நான் ,நண்பர்களைத் தேர்வு செய்வதில் மிக கவனம்!!(உன் நண்பனைச் சொல்,உன்னைப்பற்றி சொல்கிறேன்??நாங்கள் ,கிராமத்தில் பலகை வீட்டில் இருந்த பொழுது,என் பக்கத்து வீட்டில் வசித்தவள்தான் கலைமதி.நாங்கள் இருவரும் வேறு பள்ளியில்தான் படித்தோம்,ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் அவள் என் வீட்டில்,நான் அவள் வீட்டில்(இதுக்காக வீட்டில் அடி கூட வாங்கியதுண்டு!!அப்பா மற்றும் அண்ணன் இல்லாத அவள் வீட்டில் சென்று உறங்குவதும், அவள் என் படுக்கையில் உறங்குவதும் எங்களுக்கு தனி குஷி.தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அவள் வீட்டில் உறங்கி அவர்களுக்கு பலகாரங்கள் செய்து கொடுப்பதும் வீட்டைச் சுத்தம் செய்வதும் யாருமே அனுபவித்திராத ஒரு சந்தோசம் என்றால் அது மிகையாகாது!!இடநிலைப்பள்ளிக்குச் சென்றோம். மீண்டும் அவள் வேறு,நான் வேறு பள்ளி!!எப்படியாவது என் பள்ளிக்கு இழுத்து வர நாங்கள் போட்ட திட்டம் கொஞ்ச நஞ்சமில்லை!பிறகு ....ஜப்பானிய நிறுவனத்தில் வேலை...இப்படியே எல்லா இடங்களுக்கும் பிரவேசம்..1997-இல் தமிழ்நாட்டுக்கும் நான் இழுத்துப்போனேன்.என் நட்பைவிட்டு விலக முடியாமல்?,.....என் இரண்டாவது அண்ணனை சைட் அடித்து இன்று என் அண்ணியாக என் வீட்டில்!தைரியம்,மனோதிடம் மற்றும் அழவே கூடாது என்ற அவளுடைய மனவலிமை என்னை வெகுவாக கவர்ந்தது!!அவள் அம்மா இறப்பில் கூட நாங்கள்தான் அழுது ஆர்ப்பாட்டம்!!இடநிலைப்பள்ளி நண்பர்கள்:
நான் காலேஜ் போகாத்தால்(நல்லா படிச்சாதானே??)என் இடைநிலைப்பள்ளிதான் என் யூனிவர்சிட்டி!எனக்கு 16 வயது...(ஸ்ரீதேவிபோல)அறிமுகம் ஆன நண்பர்கள்(தம்பிகள்)சிவா,மணி,இளன்,இவா,முருகன்!எல்லோருக்கும் அடியேன் அக்கா!!ஆம் நான் மூத்தவள்..அந்த மரியாதை இன்னும் அவர்கள் மனதில் இருப்பது என் நட்புக்கு அடித்தளம்!!பள்ளியில் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை எங்கள் நட்பினால்??ரொம்ப அழகு,நெனப்பு..இவனுங்களும் ரொம்பதான்..என்ற முணுகல்!!அந்த நண்பர்களில் இன்றும் என்ன பிசியோ,வேலையோ என்னைத்தேடி வருபவன் சிவா!மணி எனக்கு போக்குவரத்து மினிஸ்டர்(கார் ஓட்ட தெரியாத காலங்களில்).எனக்கு போன் கூட பண்ணாமல் வீட்டு வாசலில் வந்து நிற்பான் சிவா.’ஏன் சிவா?நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய் ’என்று கேட்டால்,இல்லை கோவில் சென்று அம்பாளை வணங்க நினைத்தேன் அதான் நேராக இங்கு??எங்கள் நட்புக்கு பாலமாக அமைந்தது எங்கள் அனைவரின் நகைசுவை உணர்வே!!அவனும் ஒரு பட்டதாரி ஆசிரியரே!நான் எங்காவது பிசியாக இருப்பேன்,போனில் அழைத்து ‘செல்வி ஒரு ஜோக் படிச்சேன்’என்று என்னை அதிகம் சிரிக்க வைத்தவன்.அவனுடைய இன்பதுன்பம் இரண்டையும் சொல்லி சிரித்தும் அழுதும் உள்ளான்!என் மனைவி , அம்மா மற்றும்அக்காள்கள் அனைவருடைய அன்பையும் ஒருங்கே உங்களிடம் காண்கிறேன் செல்வின்னு வாய் நிறைய சொல்லுவான்.என் திருமணத்தில் என் சித்திகள் பார்த்து ‘இவளுக்குத்தான் திருமணம் ஆச்சே??ஏன் இன்னும் இவள் பின்னால்’ என்று சொல்லியவர்கள் வாயை அடக்க வைத்தது எங்கள் நட்பு..ஆம் அவன் எனக்கு மட்டுமின்றி என் குடும்பம்..அதைவிட என் கணவருக்கும் நல்ல நண்பேண்டா??என் முதல் வேலை உலகம்(Matsushita air-cond corp):நான் முதன் முதலாய் வேலைக்குச் சென்ற நிறுவனம்..நல்லது கெட்டது படித்தது அங்கேதான்.அங்கேயும் இறைவன் எனக்கு ஒரு தம்பியை நண்பன் உருவத்தில் அனுப்பிவைத்தார்.அவன் பெயர் சின்னையா..என்ன பெயர் உனக்கு இனிமேல் பெயர் சீனு..நான் மாற்றினேன்.இன்று கூட அவனை சீனு என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.ஜப்பானியர்கள் முன்னிலையில் தமிழில் பேசி சிரித்து வேலையை கலகலப்பாக ஆனால் கவனமாக செய்வோம்.’அக்கா,இன்றைக்கு லீடர் ஏசிட்டான்,அவன் நாளை மானேஜருக்கு காட்டவேண்டிய ஃபைல்ஸ் அனைத்தும் நாளை காணாமல் போயிடும்??.எனக்கும் நாளைக் காய்ச்சல் ,தேடாதிங்கன்னு ,நான் திருட்டு முழி முழிப்பேன்!!அக்கா உங்கள் பிறந்தநாளுக்கு நாந்தான் முதலில் வாழ்த்து சொல்லணும் என்று கடந்த 12 வருடங்களாய் அவனே இரவு 12 மணிக்கு விழித்திருந்து சொல்பவன்!!ஒரு சில தரங்கட்ட நபர்களால் ,எனக்கு கெட்ட பெயர் வர இருந்ததை இவனும் கலைமதியும் அங்கே தடுத்தாண்டு கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது!!அதே நிறுவனத்தில் இன்னொரு தோழி(பாகம் 2)
ஆம்.அந்த நிறுவனத்தில் முதலில் நான் manufacturing dept-இல் ,பிறகு அலுவலத்தில் குமாஸ்தா!!ஒன்றுமே தெரியாத என்னை பட்டைத்தீட்டி எடுத்தவள் புஷ்பா(தற்பொழுது கனடாவில்).அவளிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய ..ஆனால் அவள் என்னிடம் கற்றுக்கொண்டது (என் அறிவுக்கு எட்டிய,)தமிழும் சமயமும்!!இலங்கை குடும்பம் அவள்.வீட்டில் ஒரே பெண் என்பதால் அதிக செல்லம்.என் குடும்ப கண்டீசன் ,டிசிப்ளின் அவளுக்கு ரொம்ப பிடித்தது.காதல் என்று போய் ஒருவரிடம் ஏமாந்த அவளை, நான் பழைய நிலைக்கு கொண்டு வந்ததே ,அவர்கள் பெற்றோருக்கு நான் கொடுத்த பெரிய பரிசு!!இன்று நான் கணினி இயக்குகிறேன் என்றால் அவள்தான் முக்கிய காரணம்.மிகவும் முன் கோபக்காரி,ஆனால், உங்கள் கோபம் என்னை ஒன்று செய்யாது என்பேன் அமைதியாய்!கல்யாணம் செய்து கனடா செல்லும்போது அவள் குடும்பத்தைவிட ஏர்போர்ட்டில் அதிகம் அழுதவள் நானாகத்தன் இருக்க முடியும்.தற்பொழுது நான் உபயோகிக்கும் (perfium,handbag,lipstick and handphone)முதல் கொரியரில்(ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்) எனக்கு அனுப்பிவைத்து என்னை அதிகம் சங்கடத்துக்குள் ஆக்கிகொண்டிருக்கிறாள்!!’இதெல்லாம் வேண்டாம் புஷ்பா’ என்றால்..அப்படின்னா என் போனையோ,எஸ்.எம்.எஸ்-ஐ யோ எதிர்பார்க்காதே??என்று கோபங் கொள்(ல்)வாள்.நீ என் தங்கை, ..தோழியல்ல..?இதுக்கு, அவள் அம்மாவை வேறு அழைத்து சிபாரிசு செய்ய சொல்வாள் !இளவரசி:
அதே ஜப்பானிய நிறுவனத்தில்(12 வருடமாச்சே),அறிமுகமானவள் இளவரசி!வேலைக்கு வந்த புதிதில் அக்கா ,என் அம்மா இட்லி செஞ்சு கொடுத்தாங்க,நீங்க சாப்பாடு வாங்க வேண்டாம் என்று அன்புதொல்லை செய்வாள் அடிக்கடி!நாளடைவில் மலாய்க்காரிகளும் ,சீனப்பெண்களும் எங்களைக் கண்டு பொறாமை படும் அளவு எங்கள் நட்பு வளர்ந்தது.’என்னதான் உங்களுக்கு பேசி சிரிக்க இருக்குதோ என்று அனைவரும் கேட்கும் வரையில் பேசுவோம் சிரிப்போம்.என் ரசனையும் அவள் ரசனையும் ஒரே மாதிரி(இசை மற்றும் நகைசுவை).எனக்கு முன்பே மாப்பிள்ளை வந்ததால் ,என்னை அம்போன்னு விட்டு போனாள்.துடித்தேன்..ஏன்னா நான் ஒரே தமிழ்பெண் (வேலைப்பிரிவில்)..மனதை தேற்றிக்கொண்டு நாட்களை கடத்தினேன்..இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்திய அந்த தருணம்..ஆம் அவளைப்பிரிந்து சுமார் 5 வருட்ங்கள் கழித்து ஒரு கடையில் சந்த்திதேன்.சிரித்தோம்,சிரித்தோம் சிரித்தோம் ..அப்படி ஒரு சந்தோசம்.வானொலியில் எனக்கு பிடிச்ச பாடல் ஒலியேறும் ..அவளுக்கும் பிடிச்ச பாடலாச்சே?போனை எடுப்பேன்..ஆனால் அதற்குள் என் போன் அலறும்!அக்கா ரெடியோ கேளுங்க நம்ம பாட்டு ஓடுது(இது பலமுறை நடந்த சம்பவம்)டெலிபதி!!ரொம்ப கண்டீசனான கணவன்(என்னை மட்டுமே தன் வீட்டுக்கு அனுமதிக்கும் கணவன்)அண்மையில் இறந்துவிட்டார்!!!இன்னும் நெருக்கமானாள் என்னோடு,இன்றுவரை.**இதில் என்ன விசேசம் என்றால் ,நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து நான் நண்பர்களாக்கி விட்டேன்(இது எனக்கு பெருமை)**இவர்களையெல்லாம் பற்றி என்னை இங்கு அழைத்த திரு கே,ஆர்.விஜயன் ,ஃபேஸ் புக்கில் அண்மையில் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிசம்!!!இன்னும் நிறைய பேரைப்பற்றி எழுத ஆசை..இன்னொரு நாளில் சந்திப்போம்
Sunday, 3 July 2011
சொல்ல மறந்த கதை.
சற்று முன் வகுப்பில் நடந்த சம்பவம்:
மாணவர்களுக்கு sleeping beauty கதை சொல்லலாம் என புத்தகத்தை எடுத்து வந்து அமர்ந்த்தேன்!சரி ,குழந்தைகளா, யார் வீட்டிலாவது இந்த கார்ட்டூன் டிவிடி இருக்கா என்றேன்???ஒரு குழந்தையும் கை தூக்கவில்லை!!இதைப்பார்த்த என் சக ஆசிரியை,’இருங்க டீச்சர் வர்ரேன்னு’ வந்து:யார் வீட்டிலெல்லாம் சிங்கம் டிவிடி இருக்கு??கையை உயர்த்து...18/20 கைகள் உயர்ந்தன..,சரி யார் வீட்டில் சிறுத்தை டிவிடி இருக்கு????16/20 கைகள் உயர்ந்தன!!..இதில் வேடிக்கை என்னவென்றால் ?என் தம்பி மகன்’டீச்சர்,டீச்சர் என் வீட்டில் இன்னும் ஆடுகளம்,ஆடுபுலின்னு சொல்ல ,என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!!!என் சக ஆசிரியையும் என்னை ஒரு மாதிரியாக பார்க்க ????ஐயோ !என் மருமகன் என் மானத்தை container ஏற்றி கப்பலில் ........!!(ஆனால் நல்லா சிரித்தேன்!!!)

Subscribe to:
Posts (Atom)