Friday, 13 April 2012

பகைத்துக்கொண்ட நண்பனை இப்படியும் சிறப்பாக திட்டலாமா!!!

இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்!!(வைரமுத்து)

இசை ஞானியே??
என்னோடு நீ சேர்ந்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும்இல்லை,
உன்னோடு நான் சேர்ந்து  இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் என்ற நிலையில் நானும் இல்லை!
எனவே இந்த என் எழுத்துக்கு - பிழை உணர்ந்து கொள்ளப்படும் பிழை நேராதிருக்க - இந்தப் பீடிகை போதுமானது என் நம்புகிறேன்.....
உன்னை நினைக்கும்போதெல்லாம் என் மனசில் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு,பேரிச்சம் பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப் போல என் இதயத்தில் உன்னைப்பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.
மனையிவின் பிரிவுக்குப்பிறகு அவள் புடவையத் தலைக்கு வைத்துப்படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப்போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்......

நான் மனிதன்,
இறக்கும்வரை ஈரமானவன்;இறுக்கமானவன்.
சூரியகாந்தியும் நானே!தொட்டாற்சுருங்கியும் நானே!

எனவேதான் அவ்வப்போது உணர்வுகளின் முடிச்சவிழ்த்து உதறி விடுகிறேன்........!
.............................................................................................
(ஐயா கவிப்பேரரசே,இத்துனை அழகாகவும் ஆழமாகவும் பிரிந்துபோன நண்பைனை சிறப்பு சேர்க்க உங்களால் மட்டுமே முடிகிறதே????
இனி ஒருபொழுதும் என்னைப் பகைத்துக்கொண்ட்வர்களைத் திட்ட எனக்கு அருகதையோ தகுதியோ இல்லை என்பதை உணர்த்திய எழுத்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அண்மையில் தமிழ்நாட்டில் வாங்கிய புத்தகம்,என் தோழிக்காக எடுத்துச் சென்றேன்,’அக்கா நான் படித்துவிட்டேன்,ஆகவே வேறொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டாள்,அவளுக்காக வாங்கியது ஆனால் இன்றுதான் எனக்கு சொந்தமானதால்,வரும்வழியில் புரட்டியபொழ்து கண்ணில் பட்ட காந்த வரிகள்!
சாட்டையால் அடித்ததுபோல உணர வைத்த எழுத்துக்கள் ஐயா!
கொட்டையை எறிந்துவிட்டு,பேரிச்சம் பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப் போல என் இதயத்தில் உன்னைப்பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.

நான் மனிதன்,
இறக்கும்வரை ஈரமானவன்;இறுக்கமானவன்.
சூரியகாந்தியும் நானே!தொட்டாற்சுருங்கியும் நானே!




3 comments:

  1. எந்த சூழலிலும் யாரையும் இழிவாகவோ,மட்டட்ந்த்தட்டியோ பேசக்கூடாது என்று உணர்த்திய காந்தவரிகள்.தேனில் துவத்த கற்கண்டு போன்ற வரிகள்!இனி ஒருபொழுதும்,திட்டப்போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன்.....ஐயா கவியே,உங்கள் எழுத்துக்கு என்னை மீண்டும் அடிமையாக்கிய வரிகள்!

    ReplyDelete
  2. அருமையான வரிகள். வைரமுத்து வரிகள் வைரம் தான்.

    ReplyDelete
  3. வைரம் பாய்ந்த வரிகள்...

    ReplyDelete