ஐயோ !இன்று சூர்ப்பணகைப்போல மூக்கறுப்பட்டு வந்தேன்?(28/5/2012)
பிள்ளைகளை நீச்சல்குளத்துக்கு கூட்டிச்சென்று ,குளித்து முடிந்து அதுகளுக்கு பசி எடுக்கவே,அவசர அவசரமாக வங்கி போக வேண்டிய வேலை.காரில் பிள்ளைகளை உட்காரவைத்துவிட்டு ,வங்கி சென்றேன்.நான் போகவேண்டியது cimb bank ஆனால் அந்த வங்கி அருகிலேயே am bank, மற்ற எல்லா வங்கிகளும் இருக்கும்.வேக வேகமாய் ஓடினேன் ,ஒரு சீனர் நுழையும் முன் ,அவரை முந்திக்கொண்டு நான் நுழைந்தேன்.
நானும் வங்கியில் நுழைந்து ,(இந்த வங்கியில் எனக்கு டீலிங் இல்லை),வேறு ஒருவருக்கு பணம் பட்டுவாடா செய்ய போனேன்,ஆகவே இயந்திரத்தில் டக் டக் என்று தட்டினேன்,எண்களை தட்டினேன்,அங்கே 13 டிஜிட் மட்டுமே ,ஆனால் என்னிடம்உள்ள அக்கெளண்டில் இரண்டு எண்கள் அதிகப்படியாக இருந்தன.பலமுறைத் தட்டினேன் ,பிழை ,பிழை என் காட்டியது!
பின்னால் சீனர் நின்றுகொண்டிருந்தார்,அவருக்கு சங்கடம் ஆகக்கூடாதென ,அவரிடமே (கெட்டக்கேடுக்கு ஆங்கிலத்தில்)கேட்டேன்.’நான் இதற்கு முன்பு இங்கே வந்ததில்லை,எப்படி என்றேன்.அவரும் (நல்ல படிச்சவன் மாதிரி இருந்தார்),எனக்காக தட்டிப்பார்த்தார்,மீண்டும் பிழை..பிழை..!ஏன் ..என்னவாக இருக்கும் என்று என் மொபைலை வாங்கி ,அக்கெளண்ட் எண்களை அவரே சரிப்பார்த்து ,மீண்டும் தட்ட முயன்றபோதுதான் ,அந்த கன்றாவியைக்கண்டுபுடிச்சி சிரித்தார்.
ஐயோ என் கையில் இருந்தது cimb bank,ஆனால் நான் நின்றுகொண்டிருந்தது am bank?என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ,நீ தவறாக நுழைந்துவிட்டாய் ,இது என்ன பேங்க்னு பார் என்றார்?நல்லவேளைப்படிக்கத் தெரியுமான்னு கேக்கலையே?ஐயோ ,வெட்கம் புடுங்கி தின்ன ,வந்து ,இது ..அது..ஹ்ம்ம்ம் ,சாரி,நன்றி எல்லாமே கலந்து பேசிவிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியேறினேன்.எல்லோரும் அவுங்க அவுங்க வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்,ஆனால் எனக்கென்னவோ என்னையே????
நல்லவேளை தெரிந்தவர்கள் யாரும் என்னைப்பார்க்கவே இல்லை,அப்படிப் பார்த்திருந்தாலும் ,நான் அவர்களைப் பார்க்கவே இல்லைன்னுதான் ......வேற வழி தப்பிக்க?ஒருவேளை இரண்டு வங்கிகளின் லோகோவும் ஒரே மாதிரியா இருப்பது போல இருந்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் போல?(என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன்)பிள்ளைகள் காரில் ,ஏம்மா சிரிச்சிக்கிட்டே வர்றிங்கன்னு கேட்க,கதையைச் சொன்னேன்,உடனே கோரசாக ,இருங்க எல்லார்கிட்டேயும் சொல்றேன்னு சொல்லுதுங்க!
ஏற்னவே ஒரு முறையில் வங்கியில்தான்,கதவில் pull என்பதை push பண்ணிய அனுபவமும்??
இதுமட்டுமல்ல ,சிலவேளைகளில் அவசர அவசரமாக காருக்கு போய்,பக்கத்தில் நம் காரைப்போலவே கார் நிற்கும்.என் கார் என்று கார் கதவை சாவியை விட்டு நெம்பு நெம்புன்னு நெம்பிய அனுபவமும் பல!!இதெல்லாம் எனக்கு மட்டும்தானா?
மறக்க முடியுமா இதை?
ReplyDeleteகண்டிப்பாக முடியாது ஐயா.ஐயோ இப்போ நினைத்தாலும் வெட்கம் வெட்கமா இருக்கு!
Deleteஹீ...ஹீ...வயசானாலே கண்ணு சரியா தெரியாது தான்...;-)))
ReplyDeleteபாருப்பா....இத்தூனுண்டு டாபிக் ஐ...எலாபரெட் பண்ணி ஒரு போஸ்ட் ஆ போடுற சாமர்த்தியத்தை...:-)) எப்படி அண்ணி இதெல்லாம்...;-))
ReplyDeleteபிரபல பதிவர் ஆய்ருவீங்க போலே சீக்கிரம்...:-)))
அண்ணி...மொக்கை டாபிக்கையும் லைவ் ஆ சுவாரசியமா சொல்ல இப்போ எல்லாம் ட்ரை பண்றேங்க...நல்லா பண்ணுங்க அண்ணி...சிறந்த எழுத்தாளர் செல்வியா சீக்கிரம் மாறக்கூடிய எக்ஸ்ட்ரா skills வளர்த்துக்கோங்க...ஆர்வமா நீங்க எழுதுறது...ஷேர் பண்றது எல்லாமே நல்ல முயற்சி அண்ணி...எழுத்தில் ஆரம்பத்தை விட மெருகு தெரிய ஆரம்பிச்சிருக்கு...வெல் டன் டியர் அண்ணி...
ஆனந்தி நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கேண்டா.மிக்க நன்றி.எல்லாமே உங்களைப்போன்ற பதிவ்ர்களின் பதிவைப்பார்த்துதான் வருது!
Deleteஹஹா...நிறைய அனுபவம் உண்டு கைவசம்!
ReplyDeleteபகிருங்கள் ,யாம் பெற்ற இன்பம்....
Delete