நமக்கு கிடைக்காத
ரொம்ப நாள் ஏங்கிய,கிடைத்தும்
சரியாக பூர்த்தியாகாத ஒன்று கிடைக்கும்போது,அதை எப்படியெல்லாம் வைத்துபோற்றுவோம்.உயிருக்கும் மேலாக,இறைவனுக்கு அருகில் ,இமைப்பொழுதும் சதா அதே எண்ணத்தில்தான் இருப்போம்,மிதப்போம். அப்படி எல்லோருக்கும் ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும்,எனக்கும் உண்டு (அது என்னவென்று நீங்கள் கேட்பதுவும்
எனக்கு விளங்குது,ஆனால் ரகசியம்
என்று மட்டுமே சொல்ல முடியும்).
சரி இப்போ விசயம் என்னவென்றால்,சித்தப்பா மகள் என்
வீட்டுக்கு அருகில் குடி வந்திருக்கிறாள்.அவள் கண்வனின் அப்பா ‘யூரேசன்’ ஆனால் அம்மா
தமிழச்சிதான்.அப்பா ஒழுங்காக ஒரு வேலை செய்து
நான் பார்த்ததே இல்லை.வீட்டிற்கு வருவார்,மனைவியை அடிப்பார்,அந்த மனைவி சேமிச்சு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போவார்.கிராம வீட்டில் என் பக்கத்து வீடு தோழியின் சின்னம்மா பையந்தான் அந்த மாப்பிள்ளை.எப்போதுமே ஏதாவது ஒரு உறவினர் வீட்டில்தான் அந்த தாய் அந்த 14 பிள்ளைகளோடு இருப்பார்.எத்தனை நாள்தான் எல்லோரும் சகித்துக்கொள்வார்கள்?
வறுமையின் காரணமாக பதிநான்கு பேர் கொண்ட உடன்பிறப்புகளை எல்லாம் ,அந்த தாய் சின்ன வயசிலே ஆசிரமம் ,சர்ச்சில் கொண்டுபோய் விட்டு வளர்த்தார்.அப்பா அம்மா இருந்தும் அனாதையாக வளர்ந்த அந்த பையனின் மனதில் அன்பு ஏக்கம் இருக்கே?வந்த ஒரே வாரம்தான் என் பிள்ளைகளை அவன் பிள்ளைகள் போல அன்பு காட்டுவதும்.என்னை வாய் நிறைய அக்கா அக்கா என்றும் அழைப்பான்.அவன் வீட்டில் எந்த நேரமும் விருந்தாளிகள் இருக்கவேண்டும்என்றே நினைப்பான்.அவன் அப்பாவை அவன் பார்த்தது கிடையாது.என் அண்டை வீடு என்பதால்,நான் அவனிடம் சொல்வேன் ‘உன் அப்பா இப்படி இருப்பார்,ஆங்கிலம்தான் பேசுவார்,மற்றபடி கெட்டதை சொன்னது கிடையாது அவனிடம்.

அவர்கள் பையனுக்கு தற்பொழுது ஒரு வயது ஆகிறது.பையன் ஹைப்பெர் ஆக்டிவ்,படு சுட்டி ஆனால் தாய்
கண்டிக்கவே கூடாது என்பான் பையனின் அப்பா.ஐந்தாவது மாடி வீட்டில் இருந்து பொருட்களை கீழே வீசுவதும்,கோபம் வந்தால்வீட்டில் உள்ள மொபைல் போன்,ரிமொட் கண்ட்ரோலை எடுத்து வீசுவதும் அந்த குட்டி பையனின் பழக்கம்.’பாருங்க அக்கா வாசன் இருக்கற இடமே தெரியல,ஆனால் என் பையன் ரொம்ப ராங்கி,அடித்தால் அவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார் என்றாள் சித்தப்பா
பொண்ணு.அதைக்கேட்ட அந்த் கணவன் சொல்கிறான் ‘நீ அவனை அடித்தோ கண்டீசனாகவோ ,ஒழுங்காக கவனிக்காமல் இருக்கிறாய் என்று எனக்கு தெரியவந்தால்,நான் உன்னை
அடிக்கமாட்டேன்,என் தாய் அனுபவிப்பதை நீ அனுபவிக்கவேண்டாம்,ஆனால் என் பையனைத் தூக்கிகொண்டு வெளியேறிவிடுவேன்
.என் பணம் காசு ,வீடு சொத்து எல்லாத்தையும் எடுத்துக்கொள் ஆனால் ஒரு குடும்பம் இல்லாமல் நான்
வளர்ந்த அந்த வலியை நீயும் அனுபவிக்கனும் என்று கூறும்போதே கலங்கிய அவன் கணகளைக் கண்டேன்.
தொடர்ந்தான்,’அக்கா நீ பயப்படாதே உன் தங்கையை அப்படி நான் விட்டுபோக மாட்டேன்.அப்படியிருந்தால் என் தாயே எதிர்த்த இந்த திருமணத்தை நான் வெற்றிகரமாக்கிவிட்டேன்.ஒரு பெண்,அன்பு,அதுக்காக ஏங்கும் மனிதர்கள்,இதையெல்லாம் நான் நன்கு அறிந்தவன்.என்னையும் சரி, எங்கள் பிள்ளையும் சரி அன்பால் நீ அடக்கவேண்டும் என்றுதான் சொல்லவருகிறேன்.அக்கா 14 பேர் கொண்ட உடன்பிறப்பில் நான் கடைசி.அப்பா அம்மா இருந்தும் கடைக்குட்டி நான் தனிமையில் ஆசிரமத்தில் வளர்ந்த அந்த வலி யாருக்குமே வரக்கூடாது.என் அப்பா எவ்வளவு மோசமான அப்பாவோ,நான் அவரைப் பார்த்த்து கூட இல்லை,நீங்கள் சொல்லிதான் அவர் எப்படி இருப்பர் என்று எனக்கு யூகிக்க முடிகிறது,என் அம்மா அவர் படத்தைக்கூட என்னிடம் காட்டியது இல்லை.நான் அனுபவித்த எதையும் என் பிள்ளை எந்த விதத்திலும் இம்மியளவும் அனுபவிக்ககூடாது என்று கண்ணீர் மல்க கூறினான்.
திரும்பி அவன் முகத்தைப்பார்த்தேன் ‘அன்பே சிவம்’.அவன் அனுமதியோடுதான் இந்த பதிவையும் எழுதினேன்.

அன்பு கிடைக்காமல் ஏங்குகிரவர்களுக்குதான் தெரியும் அதன் வலி என்னவென்று இல்லையா...!
ReplyDeleteஆமாம் மனோ
Deleteபரந்த மனம் வேண்டும்... இருக்கிறது உங்களிடம்... பாராட்டுக்கள்...
ReplyDeleteFollowers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சார் .இன்றுதான் கவனித்தேன் ,மன்னியுங்கள் லேட் ரிப்ளை
Deleteவலைச்சர வாழ்த்துக்கள்...
ReplyDeleteVisit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_2.html
ReplyDeleteதங்கள் பதிவுக்கு இன்று வரக்கூடிய வாய்ப்பு இல்லை பாக்கியம் வலைச்சரம் ஆசிரியர் வாயிலாக கிடைத்தது.
தங்களது பதிவினை முதல் பாராவை படித்த உடன் அடுத்த பாராவையும் படிக்கவேண்டும் எனத்தோன்றியது.
அடுத்த பாராவையும் படித்தேன். இன்னும் கவனமாக இந்த கட்டுரை முழுவதுமே படி என மனம் ஆணையிட்டது
என்றால் மிகையில்லை. படித்து முடித்த பின்பும் பழைய பதிவுகளைப் படிக்கவேண்டும் என ஒரு உந்துதல்,
மனதின்னுள்ளே எழுந்தது.
உங்கள் பதிவினில் உடனே எண்ணையும் இணைத்துக்கொண்டேன்.
இந்தியா குறிப்பாக தமிழகத்தில் இருப்பது போல பிரி கேஜி, எல்.கே.ஜி. யூ.கே.ஜி. என்று இரண்டரை வயது
முதலிலேயே அவைகளை பிரி கே ஜி, இவற்றிற்கெல்லாம் அனுப்பி அவர்கள் நேரத்தை அங்கு எப்படி
செல்வழிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லித் தெரியவேண்டாம்.
கொத்தடிமைகள் போல எனச் சொல்ல முடியாவிடினும், சொன்னதைச் சொல்லும் கிளிப்போல இந்த குழந்தைகளை பயில்வித்து,
இல்லை ட்ரில் செய்து, ஒரு பத்து நர்சரி ரைம்ஸ்களை அந்த இளம் பிஞ்சுகளின் வாயினால் சொல்ல வைக்கும் இந்த பள்ளி நிர்வாகத்தினர் பெரும் பணம் ஈட்டுகின்றனர்.
பெற்றோர்கள். கேட்டு மகிழ்கிறார்கள் . ஒரு தாய் வேலைக்குச் செல்லாதபொழுது வீட்டிலேயே அந்தக் கல்வியை போதிக்கலாம் என
நீங்கள் கூறியது தமிழகத்துத் தாய்மார்கள் காதிலே இன்னும் நன்றாக விழ் வேண்டும்.
இன்னும் ஒன்று சொல்லவேண்டும். எனது பேரன் அமெரிக்காவில் ப்ளே ஸ்கூல் கின்டர் கார்டனில் படித்தவன். அங்கு இரண்டாம்
கிரேட் வரும்பொழுது தான் அவன் பென்சிலைப் பிடித்து எழுத த்துவங்குகிறான். அவன் இந்தியாவுக்கு வந்து இந்தப் பள்ளிகளிலே ஒன்றாம் வகுப்பில்
சேரும்பொழுது அவனது பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகள் ஆங்கிலத்தில் எல்லா எழுத்துக்கள் மட்டுமல்ல, வார்த்தைகளை எழுதவும்
யூ கேஜியில் கற்றுக்கொண்டு இருந்தனர். பல ஆங்கில வார்த்தைகள் என் பேரனுக்கும் ஸ்பெல்லிங் உட்பட சரியாக தெரிந்திருப்பினும்
அவற்றினை எழுத முடியவில்லை. எழுதுவதைத் தவிர மற்றபடி பள்ளியில் அவன் முதலாவதாக இருந்தான். இருந்தாலும் கையெழுத்து
படியவில்லை. ஏனெனின் அவனை முதல் இரு வருடங்கள் டிரில் செய்யவில்லை எழுதப்பழகி.
நீங்கள் சொல்லியவாறு மற்ற நாடுகளில் படித்த குழந்தைகள் இந்தியாவுக்கு திரும்ப வந்து இங்கு பள்ளிகளில் சேரும்பொழுது ஒரு
வகையில் மிஸ் மேட்ச் ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் 40க்கும் மேல் சிறுவர்கள். அங்கோ அதிகபட்சம் 17. அதனால்
ஆசிரியருக்கும் தனி கவனம் செலுத்த இயலாத நிலைமை.
இது ஒரு தொடர் கதை.
நானும் ஒரு ஆசிரியராக ( ஆசிரியர்களைப் பயில்விக்கும் பயிற்சியாளராக) இருந்து தான் ஓய்வு பெற்றேன்.
உங்கள் பணி சிறப்புடைத்து. மேலும் தொடர எங்கள் ஆசிகள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.in
www.subbuthatha.blogspot.in