அந்த வகையில் நான் நட்பாக ஏற்றுக்கொண்ட என் நட்புகள் எனக்கு கொடுத்த பரிசுகளை இன்றைய நட்பு தினத்தில் நினைவு கூர்கிறேன். பல்வேறு பரிசுகள் பலரிடம் இருந்து பெற்றிருந்தாலும் ,இன்னும் நான் பொக்கிசமாக பாதுகாத்துவரும் பரிசுகள் அவை.பள்ளிக்காலத்தில் என் தோழி அடிக்கடி பஜனை வகுப்புக்கு போவாள் .அவள் பெயர் சிவனேஸ்வரி
அவள் ஒரு முறை பஜன் வகுப்புக்குச்சென்று எனக்கு ஒரு சின்ன படம் (பர்ஸில் வைக்கும் அளவுக்கு) ஒரு சாய் பாபா படம் கொடுத்தாள் .நான் குரு வழிபாட்டில் தீவிரம் காட்டாதவள் இருப்பினும் என் 13 வயதில் அவள் கொடுத்த அந்தப்படம் இன்னும் என் பர்ஸில் இருக்கிறது!
என் 21 வயது பிறந்தநாளுக்கு என் அருமை நண்பர்கள் ,சிவா,மணி ,இளன் அப்போ அவனுங்க எல்லோரும் படித்துக்கொண்டிந்த நேரம் ,ஆகவே ஒரு புடவை வாங்குவது அந்த காலகட்டத்தில் சிரமம்தான். இருப்பினும் என் பிறந்தநாளுக்கு அவர்கள் வாங்கிகொடுத்த புடவை இன்னும் என் வீட்டு அலமாரியில் பத்திரமாக இருக்கிறது.
திருமணமாகி,2000 பொங்கல் அன்று புதிய வீடு குடி புகுந்தேன்.அன்று எனக்கு என்ன இல்லை என்று கேட்டு ,ஒரு மின் கேத்தல் ஒன்றை என் தோழி புஷ்பா பரிசாக கொடுத்தாள்.இன்று வரை அந்த கேத்தலில் நான் வெந்நீர் கொதிக்கவைப்பேன்.
அண்மையில் கனடாவில் இருந்து அவள் என் வீட்டிற்கு வந்த சமயம்,இதோ உன் கேத்தல் என்று சொல்லி அதில் நீர் கொதிக்க வைத்துக்காப்பி கலந்து கொடுத்தேன்.செல்வி u are great ,still u keep this ?என்று ஆச்சரியப்பட்டு போனாள்.
அது மட்டுமல்ல புஷ்பாவுக்கு பரிசு கொடுப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் .அதிலும் எனக்கு என்றால் எக்ஸ்ட்ராவா செய்வாள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ,இங்கே வந்தவளைக் காணச் சென்றேன். உடனே என்னை அறைக்குள் அழைத்து கையில் ஒரு சிறிய நகைப்பெட்டியைக் கொடுத்தாள் .என்ன்வென்று பார்த்தேன்.
அவளுடைய தங்க மூக்குத்திகள் 4 மற்றும் ஒரு s போட்ட தங்க லாக்கேட்.ஐயோ !எனக்கு வேண்டாம் புஷ்பா நான் என்ன மூக்குத்தியா அணிகிறேன் ,வேண்டாம்’என்றேன்.’நீ போடவேண்டாம் ,உன் மகள் இன்னும் கொஞ்ச காலத்தில் அணியும் வயது வரும் ,இதை எனக்கு பிறருக்கு கொடுக்க மனம் இல்லை’என்றாள்.
அந்த தங்க லாக்கெட்டை எப்போதாவது ஆசை வந்தாள் சங்கிலியில் அணிந்துகொள்வேன்.அதைப்பார்க்கும்போதெல்லாம் ,பாசம் மட்டுமே என் கண்களுக்கு தென்படும்.மற்றுமொரு தோழி இளவரசி ,என் நெருங்கிய தோழி ,எனக்கு பல பரிசுகள் கொடுத்தாலும் , கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை கொடுத்தாள்.
முதன்முறையாக நான் படித்த வைரமுத்துவின் கவிதை என்றும் சொல்லலாம்.பலர் அதை இரவல் வாங்கிச் சென்றாலும் ,எப்படியோ திரும்பகேட்டு இன்னும் அலமாரியில் என்னைப்பார்த்துச் சிரிக்குது.
கடந்த மூன்று வருட பழக்கத்தில் என் நட்பு எனக்கு சில பரிசுகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.அவர் அனுப்பிய உடைகள் ,அணிகலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ,நானாக கேட்டு, அவர் அனுப்பிய ’அத்தனைக்கும் ஆசைப்படு’ மற்றும் ’சாகாவரம்’ புத்தகங்கள் இரண்டையும் பத்திரமாய் பாதுகாத்துவருகிறேன்.சில நண்பர்கள் வந்தால் இரவல் கேட்பதுவும் ஒன்று,ஒரே வார்த்தையில் ‘நோ’சொல்லிடுவேன்.காரணம் அது கடல் கடந்து வந்த பரிசு!
விலை மதிப்பு குறைவாயினும் நண்பர்கள் வாங்கிக்கொடுக்கும் பரிசுகள் விலை மதிப்பற்றவை....
ReplyDeleteகேத்தல் அனுபவம் அருமை...
நட்புகள் கொடுக்கும் பரிசு அவர்களின் விலையில்லாத அன்பு மனசைத்தான் காட்டுகிறது...!
ReplyDeleteஎன் நண்பன் ஜவஹர் என்பர் கொடுத்த கூலிங் கிளாஸ்தான் பத்து வருஷமாக அணிந்து வருகிறேன், போனமுறை ஊருக்கு போகும்போது கண்ணாடியை பார்த்த அவர் அசந்து போனார், மக்கா இன்னமுமா இதை நீ உபயோகிகிராய் என்று வியந்து போனார்...!
நட்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் !!!!
அருமை!நண்பர்கள் தினத்தில் நண்பிகள் பாசத்துக்கு இலக்கணம் கூறுமாப்போல் நினைவுகள் சுமந்த பாசப் பகிர்வு!
ReplyDeleteஅருமை நினைவுகள் §
ReplyDeletenalla pathivu
ReplyDelete