ஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் மனைவியாக ஒரு தம்பதி இருந்தால், அவர்கள் கணவன் மனைவி என்பது யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் உண்டு.அப்படி காட்டிக்கொள்ளாமல் பண்புடன் வாழ்ந்த காலம் போய்,இப்போ காதல் செய்ய தொடங்கியவுடன் ,அனைத்து செயல்களையும் செல்ஃபி அல்லது வீடியோவில் பதிவு செய்து உலகமே பார்க்கும் வண்ணம் செய்கின்றனர்!இறுதியில் எதிர்பார்க்காத விபரீதங்களை மட்டுமே கேட்கவும் காணவும் முடிகிறது!
இதையெல்லாம் கேட்டால்,’பத்து வயசுல போட்ட சட்டையை ,இப்ப்போ போட முடியுமான்னு 'கேட்கறாங்கள். 'மாற்றம் வரும்போது மாறிக்கொள்ளுங்கள்' என்றும் விவாதம் பண்ணுகிறார்கள்.சரிதான் பத்து வயசு போட்ட சட்டையை இப்போ போடத்தான் முடியாது ஆனால் பத்து வயசுல 'அம்மான்னு' கூப்பிட்ட அன்னையை இப்போ 'அத்தைன்னா' அழைக்கிறோம்?
ஏன்
நமக்கு வம்பு?நம்ம வீட்டில் எல்லாத்தையும்
சரியாக நடத்துவோமே!