குழைந்தையைப் பிரசவிப்பது போல,
ஆண்பெண் உறவு . தாவணியோ
ரவிக்கையோ போடாத சாமி சிலை
என பல்வகையான சிலைகளைக் கண்டதுண்டு. அவ்வளவு ஏன் கருவறைக்குச்
செல்லும்முன் அங்கே உள்ள துவார
பாலகன் சிலைகூட
சிலநேரங்களில் அப்படியே காட்சிகொடுக்கும்.வெளியில் இருக்கும் வெறும் சிற்பத்தைக் கண்டு
மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டு அப்படியே திரும்பி போகப்போகிறாயா?அல்லது அதையெல்லாம் தாண்டி
,உள்ளே கருணையே வடிவமான அன்னை
இருக்கிறாள்.கேட்பதைக் கொடுப்பவள்.
வெளியில் கண்ட பெண்
சிற்பத்தைப்போல , அவளும் பெண் தான்.ஆனால் உள்ளே அவள்
வீற்றிருக்கும் விதம் , அனைத்து மும்மலங்களையும்
அழித்து,உன் திருவடி போதும்,இதைவிட வேற எதை
நாங்கள் கண்டு இன்புற்றிருக்கப் போகிறோம்
என்ற தத்துவத்தை கற்பிப்பது
போல அமைந்திருக்கும் !அவளைப்போய் பார் . கோபுரத்தில்
உனக்கு கிடைத்தது வெறும் சிற்றின்பம் மட்டுமே
,உள்ளே உனக்கு கிடைக்கப்போவதோ பேரின்பம்!
அதைப்பற்றுவதற்குத்தான் இதயெல்லாம் நீ கடந்து போக
வேண்டிகிடக்கு என்று பொருள் படும்.ஆனால் இன்றுவரை கற்றுத்தேர்ந்த
பலருக்குக்கூட இது எட்டவில்லையே?அவர்களும்
அதைக் கேலிக்கூத்தாகத்தானே, பேசியும் வர்ணித்தும் வருகின்றனர்?
நம் முன்னோர்களின் செயல்
ஒவ்வொன்றிலும் ஓர் அர்த்தம் மறைந்திருக்கும்
என்பதை மறுப்பதற்கில்லை!திருவள்ளுவரின் குறளும் அதைத்தானே உணர்த்திச்
செல்கிறது!
பற்றுக
பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு.
குறள் விளக்கம்
நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலத்தின் பின் டீச்சர் ஆய்வுடன் அருமையான பகிர்வு!ஆர்தங்கள் பற்றி இன்று யார் சிந்திக்கின்றார்கள்!
ReplyDeleteஉண்மைதான்! நல்ல பதிவு
ReplyDelete