Tuesday, 29 October 2013
ஏழையின் தீபாவளி !
அந்த ஒருநாள் மட்டுமே...
வீட்டின் சமையலறையில்,
கோழிக்கறி,
ஆட்டுக்கறி,
அவித்த முட்டை,
(அ.ஒ.நா)
சீடை ,முறுக்கு,அதிரசம்,
என்றுமே இல்லாத இனிப்புகள்,
(அ.ஒ.நா)
சண்டைப்போடும் அப்பா உறவினர்
வீட்டுக்கு வந்து போவது,
(அ.ஒ.நா)
பக்கத்துவீட்டு பங்களா வீட்டில்
கொடுக்கும் ‘கொஞ்சம்’நல்ல உடைகள்,
(அ.ஒ.நா)
முன் வீட்டு எஜமானியம்மா
கொடுக்கும் இட்லியும் இடியாப்பமும்,
(அ.ஒ.நா)
காலை உணவாக
அம்மா சுடும் தோசை,
மட்டன் குழம்பு,
(அ.ஒ.நா)
பணக்கார்கள் கொடுக்க முன்வருவது,
ஏழைகள் பலர் கண்ணில் படுவதுவும்
(அ.ஒ.நா)
எங்களுக்கு காசு கிடைப்பதுவும்,
திண்பண்டங்கள் திகட்டிப்போவதும்,
(அ.ஒ.நா)
பணக்காரன் வீட்டில்,
பாத்திரம் கழுவும் தொழிலுக்கு
அம்மா விடுமுறைப்போட்டு
வீட்டில் இருப்பது,
(அ.ஒ.நா)
முரட்டு மாமா வீட்டில்
டிவி பார்க்க அனுமதி கொடுப்பது,
(அ.ஒ.நா)
அம்மாவுக்கு கோபம் தராத,
அப்பாவின் குடிபோதை
(அ.ஒ.நா)
ஷோ கேசில் இருக்கும்,
கண்ணாடி பாத்திரத்தில்
சாப்பாடு கிடைக்கும்,
(அ.ஒ.நா)
வீட்டில் எவ்வளவு வேலைக்கொடுத்தாலும்
எங்களுக்கு சலிப்பே வராது,
(அ.ஒ.நா)
யாரும் சொல்லாமல்
நாங்கள் வேலையைச் செய்வோம்!
...................................................................................................................................................................
அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
நன்றாக இருக்கிறது செல்வி.
ReplyDeleteவாழ்த்துகள் ...
தொடர்ந்து எழுதுங்கள்
அருமை..
ReplyDelete(அ.ஒ.நா) மட்டும் நாங்களும் முகம் தெரியா உறவுகளுக்கெல்லாம் வாழ்த்து,சொல்லுவோம்!கடி காமெண்ட் எல்லாம் போட மாடோம்!!!ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteம(நெ)கிழ்ச்சி
ReplyDeleteஅருமை... இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனதை ஏனோ பிசைகிறது கவிதை...
ReplyDeleteஏதேதோ எண்ணங்கள் வந்து நெஞ்சை முட்டுகிறது...
சந்தோசமான அந்த ஒரு நாள் மட்டும்...
எம்மவர்களுக்கு எந்நாளும் அமைந்திடட்டும்...
உள்ளுணர்ச்சிகளை சற்று நேரம் தூண்டிப்பார்த்த கவிதை...
வாழ்த்துக்கள் சகோதரி....
ஏழ்மையையும், இப்போதைய வசதியையும் சொல்லி செல்கிறது வரிகள்...!
ReplyDeleteஉங்கள் குடும்பத்தார் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!
ReplyDeleteதீபாவளியை கொண்டாட்டமாக கொண்டாடுவது வட இந்தியர்கள்தாம், ஏன்னா நரகாசுரன் தமிழனாம்....!
ReplyDeleteவித்தியாசமாக அருமையாக
ReplyDeleteஏழையின் தீபாவளி குறித்து படைத்த கவிதை
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி .இன்பம் பொங்கும் இத் திருநாள்
ReplyDeleteஎன்றும் தொடர வேண்டும் என்றே வாழ்த்துகின்றோம் .....
அம்மா உங்கள் சொந்த கதையா?
ReplyDeleteமிகவும் அருமை!!!
வாழ்த்துக்கள் டிச்சர் கவிதை அருமை !!ஆனாலும் மலேசியாவில் தீபாவளி சிறப்பு அன்புவத்தித்தேன்!முன்கூட்டிய வாழ்த்துக்கள் உறவுகளுக்கு.
ReplyDelete