Wednesday, 28 May 2014

கோபத்துக்கு கழிவு 40வெள்ளியா?


            சீனர் கடைக்குச் சாப்பிடப்போனோம்.10 நிமிடம் ஆகி ஆர்டர் பண்ணிய குளிர்பானம் வந்தன. அரைமணி நேரம் ஆனது சாப்பாடு வரவில்லை.பேசாமல் இருந்தேன் ,பிறகு சாப்பாடு வந்தது எங்களுக்கு அல்ல,எங்களுக்கு பின்னால் வந்த மேஜைக்கு போனது.இனியும் பேசாமல் இருப்பேனா? கூப்பிட்டேன் ‘எங்கே உணவு’?லேட் ஆகுமா?என்றேன்.
           சில சீனர் கடைகளில் தமிழர்களை மதிப்பது குறைவு காரணம் நாம் அவர்களைப்போல பாம்பும் பன்றி இறைச்சியும் சாப்பிடமாட்டோம் ,ரொம்ப குறைவான விலைக்கு சாப்பிடுவோம் என்ற இளக்காரம்!அந்த நேரம் வூட்டுக்காரய்யா பக்கத்து கடையில் ஏதோ வாங்க போய்விட்டார். கடைக்காரியும் ‘இரு தோ வருது ‘என்று சொல்லிச் சென்றவள் ,40 நிமிசம் ஆனது.இனியும் தாங்காது ;என்று எழுந்து ‘ஹலோ நாங்க குடிச்ச டிரிங்ஸ் மட்டும் பில் போடு நான் கிளம்புகிறேன்’என்று குரலை உயர்த்தினேன். 
          முதலாளி ஓடிவந்தாள் ‘என்ன மேடம்?’என்றாள்.’40 நிமிசம் ஆச்சு!என்ன நடக்குது?என்றேன். ‘இல்லை நீ சைவம் அசைவம் கலந்து ஆர்டர் செய்ததால் வந்த கோளாறு ‘என்று சமாளித்துக்கொண்டே கடைப் பெண்ணிடம் சைகையில் பேசினாள்.அவளும் ஏதோ ஒரு ஐயிட்டத்தைக் கொண்டு வந்து வைத்தாள் ‘இது என்ன?’ என்றேன். இல்லை ..வந்து ..’என்று நீட்டினாள்.நான் இதை ஆர்டர் செய்யலை ,போதும் பில் போடு ‘என்று எழுந்தேன் (உள்ளுக்குள் பயம்தாம் இருந்தாலும் கோபத்தைக்காட்டணுமே?) பிள்ளைகளும் ‘அம்மா பேசாமல் இருங்க,’என்று கண் ஜாடை செய்தனர். 
          அதற்குள் வூட்டுக்காரய்யா வரவே ’கடைக்காரி ஐயாவிடம் ‘சாரி ..பூரி’என்று மழுப்பினாள்’நிலைமையை அறிந்தவர் பிள்ளைகள் இன்னும் சாப்பிடல ,அதான் இதான் என்று என் கோபத்துக்கு விளைக்கம் கூறிக்கொண்டிருந்தார்,நான் அவளிடம் ’ஆர்டர் செய்ததை கான்செல் பண்ணு ‘என்று காருக்குள் போனேன். சாரி மேடம் ’‘என்றாள்.பசங்களும் என்னோடு ஓடி வந்தார்கள்.சற்று நேரம் கழித்து பொட்டலங்களோடு வந்த கணவர்’ அவளும் ரொம்ப மன்னிப்புக் கேட்டாள்,எனிவேய் ரிம100 பில்,லேட் ஆகியதால் ரிம60தான்’பில் போட்டாள்’என்றார்.’அடடா!அப்படின்னா இனிமேல் போகிற கடையில் எல்லாம் சண்டைபோடலாமே,கழிவு விலை கிடைக்கும்’என்றேன்.முன் சீட்டில் இருந்து ஒரு குரல்’இனி உன்னை கடைக்கு அழைச்சிட்டுப்போனால்தானே?நான் அப்படி நடந்துகொள்ள காரணம் ஒரு பாடம் புகட்டவே மேலும் நம் இனம் என்றால் ஏளன புத்தி வரக்கூடாது என்பதால் மட்டுமே.
                        உரிமையைத் தட்டிகேட்டால் தப்பா?

4 comments:

  1. தலைப்பும் சொல்லிய விஷயமும்
    சொல்லிச் சென்றவிதமும் முடிவாக
    எழுப்பிச் சென்ற கேள்வியும்
    மனம் கவர்ந்தது
    இப்போது என்னுள்ளும் அந்தக் கேள்வி
    பகிர்வுக்கும் தொடராவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உரிமையைத் தட்டிக் கேட்டால் தப்பா?

    தப்பே இல்லை...... சரி தான்!

    ReplyDelete
  3. தப்பே இல்லை! தொடருங்கள்!

    ReplyDelete
  4. வணக்கம்,டீச்சர்!நலமா?///தட்டிக் கேக்குறதுல தப்பே இல்ல!ஆனா,சீனக்காரிய "தட்டி" கேக்கப்புடாது,மேசையைத் தட்டிக் கேக்கணும்,ஹ!ஹ!!ஹா!!!(எப்புடியோ,ரி.ம.40 இலாபம்!)

    ReplyDelete