Sunday, 25 May 2014

ஒரு தவறுன்னா பரவாயில்லை!

                         சென்றமாதம்  காலையிலே 6 மணிக்கெல்லாம் காரை விட்டேன், யூனிவர்சிட்டி மருத்துவமனைக்கு. மலாயா பல்கலைக்கழகம் அருகே இருப்பதால்  அதன் பெயர் பல்கழைக்கழக மருத்துவமனை.எனக்கு கண்,காது,தொண்டை நிபுணரைச் சந்திக்க தேதி நியமனிக்கப்பட்டிருந்தது.
             பொதுவாகவே அந்த மருத்துவமனைக்கு போகும் சாலைகள் சாதா நாட்களிலே கொடுரமான நெரிசல் ஏற்படும்.அதுவும் திங்கட்கிழமைகள் ,பள்ளி நாட்களில் சொல்லவே வேண்டாம்.ஆகவே நெரிசலைத் தவிர்க்க , காலையிலே காரை விட்டேன். அப்படி ஓடவும் ஒரு காரணம் உண்டு.பிரத்தியேக கார் பார்க்கில் கார் நிறுத்தும் இடம் ரொம்ப குறுகலாக இருக்கும்.என்னால் அப்படி உள்ள இடத்தில் காரை நுழைக்கவோ? காரைப்பார்க் பண்ணவோ ரொம்ப கஷ்டப்படுவேன்.என் கார் ஸ்டேரிங் பவர் ஸ்டேரிங் அல்ல என்பதால்!
           
             அப்படி ஒருமுறை என் தங்கை மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் அவள் காரை முதன்முதலாக நான் ஓட்ட வேண்டிய நிலைமை!காரை எடுத்து இறங்கிய நொடியில் சர்ரேன்று குறுகலான பாதையில் கார் தேய்ச்சிக்கொண்டுப்போனது.சுமார் ரிம300 வெள்ளி செலவு வச்சது.அன்று முதல் எனக்கு அங்கே கார் பார்க் பண்ண பயந்து கொண்டு ,திறந்த வெளியிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலே காரை பார்க் பண்ணிவிடுவேன்.அன்று என் தோழி சொன்னால்’டீச்சர் நீங்கள் ஏன் கஷ்டப்படுறிங்க கொஞ்சம் சீக்கிரமா போனால் கேட் அருகிலேயே கார் பார்க் பண்ணலாம்’ என்றாள். சரி அவ அடிக்கடி போய் வருபவள் ஆனால் கணவர்தான் கார் ஓட்டுவார் ,இவளுக்கு காரைப்பத்தி ஒரு மண்ணும் தெரியாது.அவ கணவரைக் கேட்டிருக்க வேண்டும்.

              நானும் ரொம்ப திறமையாய் காரை விட்டேன்.மருத்துவமனையை நெருங்கிய போது காலை மணி 6.30. நானும் தோழி சொன்ன இடத்துக்கு காரை விட்டேன். கார் போய் நுழைவாயிலில் நின்று டிக்கெட் எடுத்தால்  தானியங்கி கேட் திறக்கும்.அந்தோ பரிதாபம்! , நான் தவறுதலாக நுழைந்துவிட்டேன்.என்னால் டிக்கெட் எடுக்கமுடியவில்லை காரணம் அது மருத்துவமனை ஊழியர்களின் பார்க்கிங் இடம் ,பாஸ் இருந்தால் மட்டுமே கேட் திறக்கும்,நானும் பின்னால் போகமூடியாமல் காலையிலே அழாத குறையாய் நிற்க எனக்கு பின்னால் (நல்லவேளை காலை 6.30 என்பதால்) ஒரு நான்கு கார்கள் மட்டுமே  கடுப்பில் ஹார்ன் அடித்துக்கொண்டு நின்றன. என் பின்னால் நின்ற நர்ஸ் இறங்கி அவர்களிடம் நிலைமையை விளக்கி விட்டு நான் பின்னால் ரிவர்சில் போக ஏதுவாக அவள் காரை ரிவர்சில் எடுத்து எனக்கு வழி கொடுத்தாள்.அழுதே விட்டேன் .

                      அப்படியே போய் ரொம்ப சிரமப்பட்டு காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு ,மீண்டும்  தவறான இடத்தில் பார்க்கிங்  டிக்கெட் எடுக்க போனேன்.நல்லவேளையாக அங்கே இருந்த செக்யூரிட்டி காண்பித்தான். அப்போதான் தெரியும் ,நான் போகும் கிளினிக் எங்கோ இருக்கிறது நான் காரைப் பார்க் பண்ணியது வேறு ஒரு இடத்தில் என்று.’சரி காரை வைத்துவிட்டாய்,இனி காரை எடுத்தால் அப்புறம் பார்க்கிங் கிடைக்காது’என்றார் செக்யூரிட்டி.என்ன செய்ய! சுமார் அரை கிலோ மீட்டர் காலையிலே அவசர அவசரமாக  ஓடினேன்.நிறைய மாற்றங்கள் ,புதிய கட்டிடங்கள் ,பல புதிய அறைகள் என எல்லாமே புதிதாக இருந்தன.இரண்டு வருடங்களில் அப்படி ஒரு மாற்றம்.அங்கே போய் நம்பர் எடுத்தேன் .என் டெர்ன் ஐந்து காட்டியது.கொஞ்சம் அமர்ந்த்து ஆ.வி புத்தகத்தைப்புரட்டினேன்.மனம் ஏதோ தவறு என்று சொல்வதுபோல அசெளகரியமாக இருந்தது. எட்டிப்பார்த்தேன் நான் உட்கார்ந்து இருந்தது கண் கிளினிக். டிக்கெட்டை அங்கேயே கடாசி விட்டு பக்கத்தில் இருந்த காது கிளினிக் வந்தேன்.இரண்டு கவுண்ட்டர் ,சரியா படிக்காமல் (கண்ணாடி அணியாமல்)டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தேன் .

                  என் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்மணியும் டிக்கெட் வைத்திருந்தாள். அவள் வைத்திருந்த டிக்கெட்டில் E போட்டு பிறகு எண் இருந்தது.எனக்கு வெறும் எண் மட்டுமே.அவளிடம் காட்டி ஏன் எனக்கு இ இல்லை ’என்றேன்.’நீ காது பார்க்க வந்தியா ?என்றாள்’ஆமாம் ‘என்றேன்.’அப்படின்னா நீ வலப்பக்கம் இருக்கும் கவுண்ட்டரில் டிக்கெட் எடு,இது கர்ப்பப்பை கவுண்டர் ‘என்றாள்.ஏன் கர்ப்பை கிளினிக் சம்பந்தமில்லாமல்  இங்கே இருக்கிறது?என்று கொஞ்சம் கோபமாக கேட்டேன்.அவளும் மெதுவாக ’நம் நாட்டில் எது சிஸ்டமெட்டிக்-ஆக இருக்கு?என்றாள். மேலும் ‘நீ இங்கே புதுசா”என்றாள்.இல்லையே என் பிரசவம் தொடங்கி பல சிகிச்சைக்கு இங்குதான் வருவேன்.ஒரு இரண்டு வருசமா ரொம்ப நலமாக இருப்பதால் ,இங்கே வர வேண்டிய வேலை இல்லை’ என்றேன்.சிரித்தாள் ,’இரண்டு வருடங்களில் நிறைய மாற்றங்கள் தோழி’சரி போய் முதலில் டிக்கெட்டைச் சரியா எடு ‘என்று பணித்தாள்.

                    நான்காவது தவறு?சரி போய் டிக்கெட் எடுத்து காத்திருந்தேன்,என் டெர்ன் வந்ததும் உள்ளே போய் ,இங்கே எந்த தவறும் நிகழக்கூடாது என்று ரொம்ப கவனமா டாக்டரிம் காதைக் காட்டினேன் ஆனால் டாக்டர் தவறான காதை(வலியில்லாத காதை)முதலில் பார்த்தார்.காது நிபுணர்கள் எப்போதும் நார்மலான காதைத்தான் முதலில் பார்ப்பார்களாமே?எல்லாம் முடிந்து ‘நல்லா இருக்கு,நீ இனி வலி என்றால் மட்டும் வரலாம்’என்றார். எங்கேடா வேறு எதுவும் தவறு நடந்திடும் என்று அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாய் திரும்பினேன்.

             அந்த தவறுகளில் நிறைய அனுபவம் பெற்றேன். நிறைய  மாற்றங்கள் செய்யப்பட்டன. என்னைப்போல நீண்டநாட்கள் போகாதவர்கள் யாரும் அங்கே போவதாக கூறினால், சரியான வழி,பார்க்கிங்,கிளினிக் என்று விலாவாரியாக கூறி அனுப்புவேன்.திரும்பியவுடன் அவர்கள் வந்து நன்றி கூறிவிட்டு’நல்லவேளை நீங்கள் சரியா சொன்னீங்கள், இல்லாட்டா பழைய கட்டிடங்களில் போய் அலைமோதிக்கொண்டு இருப்போம் ‘என்பார்கள்.
                 என் ஜப்பானிய பாஸ் எப்போதும் ஒன்று சொல்வார்:
             learn from mistakes and mistake  makes a man perfect!

         



6 comments:

  1. பல்பு பல்பு பல்பு பல்பு பல்பு எல்லாம் நமக்கு புதுசா என்ன டீச்சர் ?

    ReplyDelete
  2. தவறுகளில் இருந்து பாடம் அதிகம்படிக்கின்றோம் இனிமேல் இவ்வாறு பிழைவிடக்கூடாது என்று ஆனால் வாங்குவது அதிகம் பல்ப்புத்தான்!ஹீ

    ReplyDelete
  3. தவறுகளில் இருந்து தான் பாடம் படிக்கிறோம்.....

    ReplyDelete
  4. ஹாஹா.. எனக்கும் இந்த அனுபவம் உண்டு.. எமெர்ஜென்சி வாட்டில் வழி, மெனாரா உத்தாமா சென்று அங்கிருந்து மெனாரா திமோருக்கு கால்வலிக்க நடையாய் நடந்து லிஃப்ட் ஏறி மெயின் கேட் அருகே வந்தபோதுதான் தெரிந்தது, கண்டீன் பின்புறம் நாங்கள் கார் பார்க் செய்த இடம், அதைத்தாண்டி கொஞ்ச தூரம் வந்தாலே, மெனாரா திமோரின் நுழைவாசல்.. படாதபாடு இரவு வேளையில்.. தலைசுற்றல் புதிய கட்டிடம்..

    ReplyDelete
  5. நிறைய பரபரப்பா இருந்திருப்பீங்க போல! பரபரப்பில் தான் நாம் மேலும் மேலும் தவறு செய்கிறோம்!

    ReplyDelete
  6. வணக்கம்,டீச்சர்!நலமா?(மண்டு யோகா,உடம்பு ஏதோ சரில்லேன்னு தானே,ஹாஸ்பிட்டல் போய் பல்பு வாங்கியிருக்கேன்?)///சரி விடுங்க,டீச்சர்.ரெண்டு வருஷத்தில என்னென்னமோ மாறிடிச்சு.அது மாதிரி,ஹாஸ்பிட்டலும் மாறிப் போச்சு.இப்ப எல்லாம் 'தெளிவா' தெரிஞ்சு போச்சுல்ல?மறுபடி அங்கெல்லாம் போக சான்ஸ் வராது,தகிரியமா இருங்க!

    ReplyDelete