Saturday, 31 December 2011

என்னை விட்டுப்போன 2011

என்னைவிட்டுப்போன 2011!!
                      சென்ற வருடம்,இந்த தேதியில்,நான் தவிர்க்கமுடியாத காரணங்களால்,  வேலை செய்த பள்ளியிலிருந்து விலகவேண்டிய சூழல்!!நாங்கள் மூன்று ஆசிரியைகளும்,வெளியேறினோம்!செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தோம்!இப்படி சொன்னாலே பணம்தானே காரணம்!

             பள்ளி திறக்க இன்னும் மூன்றே நாட்கள் எஞ்சி இருந்தன!என்ன செய்ய போகிறோம்????எங்களிடம் கற்றுத்தேர்ந்த சில மாணவர்களை ,அவர்கள் பெற்றோர்கள் எங்களிடமே,அனுப்பிவைக்க  முடிவு செய்தனர்!!!!இடம் இல்லை,பணம் இல்லை!நிம்மதி இல்லை!எங்கள் நலனுக்காக இல்லாவிட்டாலும்,எங்களை நம்பி ,தங்கள் பிள்ளைகளை எங்களிடமே,அனுப்பவிருக்கும் ,அந்த பெற்றோர்களின் நம்பிக்கைக்காக ,எப்படியும் எதையாவது சாதிக்க வேண்டுமே????அந்த தருணங்கள்,நான் வணங்கும் சிவபெருமான் மற்றுமின்றி உலகத்தில் உள்ள எல்லா சாமிகளையும் நான் விட்டு வைக்கவில்லை என்றுதான் சொல்லனும்!பின்னே,இக்கட்டான சூழலாச்சே??அப்படித்தானே??

              பொதுவாக இதுபோன்ற சூழலில் இருக்கும்பொழுது,நம் குடும்பமோ அல்லது உறவுகளோசொல்லும் ஒரே சொல்,’வேறு வேலைத் தேடலாமே??’.அது நமக்கு தெரியாதா??அதெல்லாம் போய் ,செய்து,துப்புபட்டு,அவமானப்பட்டு ,பைய பைய கற்றுத்தேர்ந்து,பிறகுதானே சம்பாத்தித்து அப்புறம் சலிப்புத்தட்டிதானே,ஆசிரியைத் தொழிலுக்கு(ஏதோ ஆர்வமும்,கொஞ்சம் திறமையும்)வந்தேன்??????

              மறுபடியும் ஹைஹீல்ஸ் போட்டுக்கொண்டு,எட்டு மணிநேரம்,ஆங்கிலம்(ரொம்ப தெரிந்ததுபோல்),அஞ்சுகாசு பிடிக்காத மலாய்மொழியும் மட்டுமே பேசிக்கொண்டு ,ஒட்டியும் ஒட்டாமலும் அலுவலக வேலை?????ஐயோ,சத்தியமாக என்னால் முடியாது!!பணம் என்னவோ அதிகம்தான்,ஆனாலும் ஆத்மதிருப்தி,கிடைக்குமா?????மாதாமாதம் 27-ம் தேதியில் அந்த திருப்தி கிடைக்கும்,ஏனேன்றால் அறுவடை தினம்(சம்பள நாள்)அந்த வேலை ,வேலைக்கு ஆகாது என்று குடும்பத்தாரிடம்(எல்லோருமேதான்???)ஆலோசனைக் கேட்காமல்,’நட்பு’என்ற ரிதியில் ‘அந்த 5 பேர்’ கொண்ட என் நட்பு உலகைத் தொடர்பு கொண்டேன்!!நான் பள்ளியில் இருந்த காலங்க்ளில் ,ஏற்பட்ட நட்பு அது!என் பாஸ் மற்றும் அவரது சகாக்களே அந்த ஐவரும்!

        பொதுவாக உதவி என்று போய் நின்றால், கணவர் என்றால் என் மனைவி என்ற நலன்,உடன்பிறப்புகள் என்றால் நம் உடன்பிறந்தவள் என்ற நலன்,உறவுகள் என்றால்,ஏதோ நம் அண்ணன் மகள் அல்லது அக்கா மகள் என்ற அல்லது என் தம்பிக்கு வாழ்க்கைப்பட்டவள் என்ற நலன்,இப்படித்தான் நினைத்து உதவ முன் வருவார்கள்!அது உலக நியதி!

                          ஆனால் ,நான் ’எனக்கு ஒரு உதவி வேண்டும்’,நான் செய்வதறியாது நிற்கிறேன்’ என்று போன் பண்ணியவுடன் ,மறுமுனையில் என் பாஸ்;செல்வி ,என்ன உதவி வேண்டுமோ, தயங்காமல் கேளுங்கள்,உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு’என்றார்!அது மட்டுமா??,சரி நான் என் படையுடன் வருகிறேன் என்று போனை வைத்தார்!அன்று மாலை ,என்னையும், என் சக ஆசிரியைகளையும் சந்தித்துப்பேசினார்.என்னை தனியாக அழைத்து ;செல்வி,புதிய பள்ளியைத் தொடங்க என்ன செலவு ஆகுமோன்னு கவலைப்பட வேண்டாம்!நான் உங்களுக்கு. ஒரு தொகையாக ரிம..................பணம் கொடுக்க எண்ணம் கொண்டுள்ளேன்!ஆகவே தாராளமாக உங்கள் இதர வேலைகளைத் தொடங்கலாம்’என்றார்!ஒரு கணம் ,என் அப்பன், அந்த கூத்தபிரான என் முன்னே ,அவர் உருவில் இருப்பதை உணர்ந்தேன்!இறைவனை, நேரில் கண்டால்,பேச முடியாதாமே??அதையும் அந்த நிமிடம் உணர்ந்தேன்!இறைவன் வேறொருவர் உருவில்தான் வருவார் என்பதும் புலப்பட்டது!பணம் மட்டும் கொடுக்கவில்லை,அவர் பணிப்படையை(சகாக்களை) அழைத்து,அவர்களுக்கு (எங்கள் மூவருக்கும்)என்ன உதவிகள் வேண்டுமோ.செய்து கொடுக்கனும் ‘என்று கட்டளையும் இட்டார்.

             இவை அனைத்துக்கும் ஒரே காரணம்,நான் பள்ளியில் வேலை செய்த மூன்று வருடங்களில் ,அவர் எங்களிடம் கண்ட நேர்மையே!!!ஆம்,அவர் அந்த சமயம் அப்பள்ளியின் பெ.ஆ.சங்க தலைவர்!!பள்ளிக்கட்டணம் உட்பட பணம் சம்பந்தப்பட்ட எல்லா விசயங்களையும் நான்,அவரிடம் ஒப்படைப்பேன்!!நாம் என்ன செய்கிறோமே,அதுதான் ,பிறகு நமக்கு வேறுவகையில் கிடைக்குமாம்!!!அதுதான் ,அன்று எனக்கு (2011)கிடைத்தது!!

                                வேலைகளில் இறங்கினேன்!அந்த நிமிடங்களைத் திரும்பி பார்த்தால்,மயக்கமே வரும்,ம்ம்ம்ம் அப்படி ஒரு அலைச்சல்,அழுகையும்!காரணம் ,இரண்டே வாரங்களில்,ஒரு இடத்தைப்பார்த்து,சகல வசதிகளுடன் ,பாலர்பள்ளி தொடங்குவது அத்துணை சுலபம் அல்ல???ஒரேடியாக இல்லாவிட்டாலும்,ஏதோ போட்ட பணத்தை திரும்ப பெற்று விட்டதால்,பாஸுக்கு போன் பண்ணி ,உங்கள் உதவியை(பணத்தை) ,முழுமனதுடன் மீண்டும் கொடுக்க எண்ணுகிறோம் என்று சொல்லும்போதெல்லாம்,’அதற்கு ஒன்றும் அவசரமில்லை செல்வி,நீங்கள் வெற்றி பெற்றால் அதுபோதும்,உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்க’என்று  அதை(பணத்தை)ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை!!

                               இன்று ,நான் ஒரு பள்ளிக்கு பொறுப்பாசிரியையாக செயல்படுகிறேன் என்றால் ,அதற்கு  எதிர்ப்பார்ப்பு இல்லாத, ஆரோக்கியமான அந்த நட்புதான் அடிக்கல் என்பதை கூறிக்கொள்வது இல்லாமல் ,எனக்கு கிடைத்த நட்புகள் எல்லாமே, என்னை ஏதாவது ஒரு வழியில் தட்டிக்கொடுத்து வளர செய்தன என்ற உண்மையையும் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்!!