Monday 28 May 2012

மூக்கறுப்பட்டு வந்தேன்


ஐயோ !இன்று சூர்ப்பணகைப்போல மூக்கறுப்பட்டு வந்தேன்?(28/5/2012)

பிள்ளைகளை நீச்சல்குளத்துக்கு கூட்டிச்சென்று ,குளித்து முடிந்து அதுகளுக்கு பசி எடுக்கவே,அவசர அவசரமாக வங்கி போக வேண்டிய வேலை.காரில் பிள்ளைகளை உட்காரவைத்துவிட்டு ,வங்கி சென்றேன்.நான் போகவேண்டியது cimb bank ஆனால் அந்த வங்கி அருகிலேயே am bank, மற்ற எல்லா வங்கிகளும் இருக்கும்.வேக வேகமாய் ஓடினேன் ,ஒரு சீனர் நுழையும் முன் ,அவரை முந்திக்கொண்டு நான் நுழைந்தேன்.

                                                                                   
நானும் வங்கியில் நுழைந்து ,(இந்த வங்கியில் எனக்கு டீலிங் இல்லை),வேறு ஒருவருக்கு பணம் பட்டுவாடா செய்ய போனேன்,ஆகவே இயந்திரத்தில் டக் டக் என்று தட்டினேன்,எண்களை தட்டினேன்,அங்கே 13 டிஜிட் மட்டுமே ,ஆனால் என்னிடம்உள்ள அக்கெளண்டில் இரண்டு எண்கள் அதிகப்படியாக இருந்தன.பலமுறைத் தட்டினேன் ,பிழை ,பிழை என் காட்டியது!
                                                                       
பின்னால் சீனர் நின்றுகொண்டிருந்தார்,அவருக்கு  சங்கடம் ஆகக்கூடாதென ,அவரிடமே (கெட்டக்கேடுக்கு ஆங்கிலத்தில்)கேட்டேன்.’நான் இதற்கு முன்பு இங்கே வந்ததில்லை,எப்படி என்றேன்.அவரும் (நல்ல படிச்சவன் மாதிரி இருந்தார்),எனக்காக தட்டிப்பார்த்தார்,மீண்டும் பிழை..பிழை..!ஏன் ..என்னவாக இருக்கும் என்று என் மொபைலை  வாங்கி ,அக்கெளண்ட் எண்களை அவரே சரிப்பார்த்து ,மீண்டும் தட்ட முயன்றபோதுதான் ,அந்த கன்றாவியைக்கண்டுபுடிச்சி சிரித்தார்.
                                                                       
ஐயோ என் கையில் இருந்தது cimb bank,ஆனால் நான் நின்றுகொண்டிருந்தது  am bank?என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ,நீ தவறாக நுழைந்துவிட்டாய் ,இது என்ன பேங்க்னு   பார் என்றார்?நல்லவேளைப்படிக்கத் தெரியுமான்னு கேக்கலையே?ஐயோ ,வெட்கம் புடுங்கி தின்ன ,வந்து ,இது ..அது..ஹ்ம்ம்ம் ,சாரி,நன்றி எல்லாமே கலந்து பேசிவிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியேறினேன்.எல்லோரும் அவுங்க அவுங்க வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்,ஆனால் எனக்கென்னவோ என்னையே????
நல்லவேளை தெரிந்தவர்கள் யாரும் என்னைப்பார்க்கவே இல்லை,அப்படிப் பார்த்திருந்தாலும் ,நான் அவர்களைப் பார்க்கவே இல்லைன்னுதான் ......வேற வழி தப்பிக்க?ஒருவேளை இரண்டு வங்கிகளின் லோகோவும் ஒரே மாதிரியா இருப்பது போல இருந்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் போல?(என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன்)பிள்ளைகள் காரில் ,ஏம்மா சிரிச்சிக்கிட்டே வர்றிங்கன்னு கேட்க,கதையைச் சொன்னேன்,உடனே கோரசாக ,இருங்க எல்லார்கிட்டேயும் சொல்றேன்னு சொல்லுதுங்க!
                                                                         

ஏற்னவே ஒரு முறையில் வங்கியில்தான்,கதவில் pull என்பதை     push  பண்ணிய அனுபவமும்??
இதுமட்டுமல்ல ,சிலவேளைகளில் அவசர அவசரமாக காருக்கு போய்,பக்கத்தில் நம் காரைப்போலவே கார் நிற்கும்.என் கார் என்று கார் கதவை சாவியை விட்டு நெம்பு நெம்புன்னு நெம்பிய அனுபவமும் பல!!இதெல்லாம் எனக்கு மட்டும்தானா?
                                                                         

Saturday 26 May 2012

மனைவி ஆகாத காதலியின் கன்ணீர்

அண்மைய காலமாக மலேசியாவிலும் சரி ,தமிழ்நாட்டிலும் தேர்வு முடிவுகள் வந்துள்ளன.அதேவேளையில் ஒரு சில தற்கொலை செய்திகளும் ,கன்னிபெண்கள் காணாமல் போகும் செய்தியும் அதிகமே!உண்மையில் கடத்திச்செல்லப்பட்டனரா?காணாமல் போய்விட்டனரா?அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டனரா?ஓடிப்போகும் திட்டம் இருப்பவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்,இந்த உண்மைக்கதையை படித்துவிட்டு ஓடிப்போவிங்களோ,செத்து தொலைவிங்களோ ,அது உங்கள் விருப்பம்!முழுவதும் படித்துவிட்டு முடிவை தேர்ந்தெடுங்கள்......
                                                               
(இங்கே இடம் பெற்றுள்ள பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன).பல வருடங்களுக்கு முன்பு ,ஒருநாள் என் மூத்த அக்காள்  கண்வரின் உறவுக்காரர் ஒருவர் ,அவர் அத்தைப்பெண்ணுடன் ஓடி வரவில்லை(ஜோகூரில் இருந்து ஓடி வர முடியாது,ரயிலில் வந்துவிட்டார்).அககாவும் ,என் அம்மாவிடம் வந்து ,பணம் கேட்டு வாங்கி போனார்.வந்தவர்கள் திரும்பி போய்விடுவார்கள் விருந்து கொடுக்கலாம் என,ஆனால் அவர்கள் திரும்பிபோக வரவில்லை,இனி திரும்பவே கூடாதுன்னு வந்தனர்!பெண்ணுக்கு வயது 16,அவருக்கு வயது 24.உறவுக்காரர்கள்தான்,ஆனால்  ஆனால் பெண் வீட்டில் எதிர்ப்பு.என் மாமா அந்த சமயம் வேன் ஓட்டியதால், எங்கே போனாலும் எங்களையும் வேனில் அழைத்துச்செல்வார்.அப்பொழுது அந்த காதல் ஜோடிகளும் வருவார்கள்,அந்தப் பெண்ணைவிட எனக்கு 2 வயது மூப்பு ,ஆகவே அவளை  ஒத்த வயது நான் என்பதால் என்னுடன் நெருக்கமானாள்.
                                                                                   
பிறகென்ன ,அவளுடைய கதைகள் அனைத்தையும் என்னிட்ம் கூறுவாள்.எனக்கோ அதெல்லாம் கேட்க புதிதாக ,இதுவரைக்கேட்காத கதையும் கூட!நான் அந்த சமயம் என் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த சமயம்.எஸ்.பி.எம் தேர்வு முடிந்தால் ,சுமார் 4 மாதங்கள் ஆகும் முடிவுகள் வர,ஆகவே நான் மட்டும் வீட்டில் இருப்பேன், அந்த காதலன்(சிவா) மாமாவோடு வேலைக்குச்சென்றால்,அவளை(லதா)  என்னுடந்தான் விட்டுச்செல்வார்கள்.இப்படியே அவள் தன் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கையில் ,ஓர் அதிர்ச்சியான செய்தியை ,இடி விழுந்த மாதிரி (நான் கேட்டதும் காய்ச்சலே வந்தது)செய்தி சொன்னாள்.ஹ்ம்ம், அவள் கர்ப்பமாக இருக்கும் செய்தி!இதைக்கேட்டு நான் பேசாமல் இருப்பேனா??சத்தியமாக முடியாது,நாளைக்கு செல்விக்குத்தான் எல்லா விசயமும் தெரியுமேன்னு சொன்னால் ,என் எலும்பு முறிக்கப்படும் எங்கள் வீட்டில்.எப்போடா அக்கா வரும் ,இந்த செய்தியை சொல்லவேண்டுமே?மணியானதும் ,மாமாவும் சிவாவும் ,வந்து லதாவை அழைத்துக்கொண்டு போய் விட்டனர்.அக்காவிடம் அறையைப்பூட்டிக்கொண்டு அந்த( கெட்ட வார்த்தையை )சொன்னேன்.அக்காவோ ,எங்களுக்கு அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை(அக்கா இருவரும் திருமணமானவர்கள்),இரு அம்மா வரட்டும் சொல்லிடலாம்னு ,எனக்கு உதறல் ,காய்ச்சல் + பயம் எல்லாமே ?
எங்கள் வீட்டைப்பொறுத்தவரை அம்மாவுக்கு நாங்கள் இன்னும் சின்னப்பிள்ளைகள்தான்,ஆகவே பெரியமனுசித்தனமா ஏதேதோ பேசியிருக்கிறாயான்னு அடி விழுமே??
                                                                         
அம்மா வந்தார்.விசயம் அம்மா காதுக்கு !என்னை அழைத்து விசாரணை?ஆனால் அம்மா என்னைக்கேட்கவில்லை ,எங்கள் வீட்டில் சில விச்யங்கள் ,இன்னமும் நாங்கள் அம்மாவோடு பேசுவதில்ல்லை(அதில் இது போன்ற டாபிக்ஸ் கூட).அக்காவையும் மாமாவையும் போன் பண்ணி வர சொன்னாங்க,விசயத்தைச் சொன்னார் அம்மா,அப்பா மாமாவிடம் ,’இது சரியில்லை தம்பி ,அது உங்க உறவுக்காரப்பையன் மேலும் இருவரும் அத்தை மாமா பிள்ளைகள் ,பொல்லாப்பு வேண்டாம் ,அவுங்க வீட்டுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லுங்கள் என்றார்.அப்போதான் சிவா வாய் திறந்து விசயத்தைச் சொன்னார்.’இல்லை மாமா ,வந்து ,அவ அம்மா வீட்டில் எதிர்ப்பு ,நான் தப்பு பண்ணியது உண்மைதான் ,ஆனால் அவ அம்மா இவளைக் கொல்லக்கூட அஞ்ச மாட்டார் அதான் வந்துட்டோம்’என்று கையைப்பிசந்தார்.மாமாவோ ‘இல்லை ,இல்லை இது பற்றி நீ கவலைப்பட வேண்டாம் ,நான் வீட்டில் அழகாக பேசி சமாளிக்கிறேன்’என்று தைரியம் சொன்னார்.அந்த சமயம் தைப்பூசம் நெருங்க்கிகொண்டிருந்தது,மாமா பத்துமலையில் வியாபாரம் செய்ய ஆயத்தமானார் ,சிவா கூட போய் உதவிகள் செய்வார்!சிவா நல்லா வேலை செய்வார் ஆனால் அடிக்கடி சீக்கிரம் களைப்படந்துவிடுவார் ,கைகால்கள் அடிக்கடி வீங்கும்?இது எங்களுக்கு வினோதமாக தோன்றும் காரணம் சிவாவுக்கு என் அண்ணா வயது .ஆனால் அண்ணா நல்லா ஆரோக்கியமாக இருக்கும்!
                                                             
அன்று முதல் ,நான் லதாவிடம் நெருக்கமாக பேசுவதைக் குறைத்துக்கொண்டேன் ,காரணம் அவ செஞ்சி வந்த காரியம் ,மேலும் அவ என் கண்களுக்கு என்னைவிட மூத்தவளாக தெரிந்தால்,அதையெல்லாம் மீறி அம்மாவின் கட்டளையும் கூட?அதுமட்டுமின்றி ,வீட்டில் சிவா லதா கதையை  வைத்தே டாச்சரும் ஆரம்பம் ஆனது!கொஞ்சம் வாய் பேசினாலும் அம்மா உடனே ‘பேசுங்க ,பேசுங்க ,அப்புறம் வீட்டுக்கு அடங்காமல் ,அக்கா வீட்டுக்கு தலைவலி வந்து சேர்ந்திருக்கே,அந்தமாதிரி பெரியமனுசி மாதிரி முடிவெடுங்கள்னு டாச்சர் ,ஆனால் அப்பா ரொம்ப அமைதியாக அறிவுரை சொல்வார் ,அது நஞ்சு போல இருக்கும் ,இது அப்பா ஸ்டைல்!அதனாலேயே ??சில பல விசயங்கள் நாங்கள் பேச வாய்ப்பே இல்லை (பொதுவாக நம் தமிழர்கள் வீட்டில் அப்படித்தானே ,ரொம்ப கட்டுப்பாடு)
                                                                                           
மாமா தைப்பூசத்தில்  இரவு பகல் வியாபாரம் செய்தார்,சிவாவும் !அப்போதான் அந்த விபத்து நடந்தது,மாமா வியாபாரம் முடிந்து ,வேனை ஓட்டிச்செல்லும்போது ,வேன் விபத்துக்குள்ளானது!அன்று காலை ,வீட்டில் எல்லோரும் பசியாறிக்கொண்டிருந்த சமயம் ,போலிஸ்காரர்கள் எங்கள் வீட்டுக்கு போன் செய்து ‘தாஸ் என்பவர் விபத்துக்குள்ளானார்,உடனே மருத்துவமனை வரவும் ‘என்று .அண்ணா அப்பா ,மாமா உடன் பிறப்புகள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு போய் பார்த்தனர்.மாமாவுக்கு அடி அதிகம் ஆனால் மாமாவால் பேசவும் ,நடக்கவும் முடிந்தது,சிவாவுக்கு அடி குறைவு ஆனால் கோமாவில் கிடந்தார்???ஏன் என்ன ஆச்சு?ஒரு வேளை ,அதிர்ச்சி என்று நினைத்தோம்...ஆனால் அதுவல்ல ......?
                                                                           
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ,சிவாவைக்காண மருத்துவமனை சென்றபோது அந்த ரகசியம் தெரிய வந்தது,அவர் படுக்கையில் 'do not touch the patient ,hepatitis b 'என்று அறிவிப்பு.அப்படின்னா என்ன என்று அண்ணாவும் (அப்போ அதுவெல்லாம் பெரிய நோய் இல்லையே)மருத்துவரைக்கேட்டது.மருத்துவரும் விளக்கம் சொல்லிவிட்டு ,அவர் குடும்ப உறுப்பினர்களை உடனே வர சொல்லுங்கள்,அனைவரையும் சோதிக்கவேண்டும் என்றார்.அண்ணா மருத்துவரிடம் தயங்கியபடி ,லதா கர்ப்பமான விசயத்தை சொன்னுச்சி,இப்போ டாக்டர் அதிர்ச்சிக்குள்ளானார்’what stupid ?he cant get married ,his situation is very critical?'என்று ஆத்திரமாக பேசினார்.லதாவை அழைத்து ஏதேதோ கேள்விகள்.லதா வெளியே வந்ததும் ,அந்த ஐ.சி.யூ வார்ட் ஊழியர்களே லதாவை பரிதாபமாக பார்த்தனர்!ஆம்,அந்த நோய் கொடியது,வயிற்றில் உள்ளை பிள்ளையையும் தாக்க்குமாம்!ஐயோ ,இதுவெல்லாம் சினிமா பார்ப்பது போல எங்களுக்கு!
                                                                                     
இருதரப்பு குடும்பமும் வந்தது.பிறகு என்ன?பெண் வீட்டார் ,ஹ்ம்ம் என் பிள்ளை
யை ஏமாத்திட்டான்,சிவா வீட்டாரோ ,உங்க சவகாசமே வேம்ண்டாம்னுதானே இருந்தோம்,என்னவானாலும் என் பிள்ளையை நாங்கள் பார்த்துக்கொள்வோம்னு.இரு குடும்பங்களையும் மாமா,அண்ணா ,அப்பா மற்றும் மாமா குடும்பம் எல்லாம் சேர்ந்து ‘முதலில் பையன் பிழைத்து வரட்டும்,பிறகு பேசுங்கள்னு எரிச்சலாக திட்டி தீர்த்தனர்!ஒரு வாரம் ஆகியும் கண் விழிக்கவே இல்லை சிவா.லதா ஒடுங்கி போனாள்.சாமியாரையெல்லாம் வரவழச்சி ,சிவாவின் பெற்றோர்கள் உயிர் பிச்சைக் கேட்டனர்..இரண்டு வாரம் ஆனது..முன்னேற்றமே இல்லை!டாக்டரும் கைவிரித்தார்.லதாவின் அம்மா ,லதாவைத் திட்டாத நாளே இல்லை.அதைப்பார்த்த நான் அம்மாவிடம் ‘ஏம்மா அந்த அத்தை அப்படின்னு ‘கேட்டதற்கு அம்மா சொன்னது ‘எந்த அம்மாவும் தன் பிள்ளை வாழனும்னுதான் நினைப்பாங்க ,அழிந்துபோவதைப்பார்க்க மாட்டார்கள்,இது உங்களுக்கு தேவை இல்லாத விசயம்னு’என் வாயை அடைத்தார்.அம்மா எங்களை  வீட்டில் நின்னால் குத்தம் ,நிமிர்ந்தால் குத்தம்னு வளர்த்த விதம்  அந்த சம்பத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடமும்கூட!
                                                                                   
நாட்கள் உருண்டோடின,அந்த நாள் வந்தது!ஆம் ,அந்த மாலைப்பொழுது என் வீட்டு போன் அலறியது,நான் தான் போன் எடுத்தேன் ,மறுமுனையில் மாமா,சிவா போயிட்டான் ,நம்மை விட்டுப்போயிட்டான்......’அம்மா,அண்ணா..ஓடி வாங்க என்று போனைக்கீழே போட்டேன்’ !எல்லோரும் பதறியடித்து மருத்துவமனை ஓடினார்கள்!லதாவின் நிலை?உருண்டு புரண்டு அழுதாளாம்,கதறினாளாம்,அவ அம்மாவிடம் அறையும் விழுந்ததாம்,மாமியாரிடம் சாபமும்! நாங்கள் மருத்துவமனைப் போக வீட்டில் அனுமதி  இல்லை!அனைத்து வேலைகளும் நடந்தது .கோலாலும்பூரில் இருந்து ஜோகூருக்கு சிவாவின் உடலை அனுப்ப வேண்டுமே?நாங்கள் வீட்டில் அழுத வண்ணம்,அம்மா எங்களை அங்கேயெல்லாம கூட்டிப்போக முடியாதுன்னு கிளம்பிட்டாங்க!இறுதியாக பார்க்கமுடியவில்லையே என்ற கவலை என்னையும் என் தங்கையையும் ஆட்டிப்படைத்தது!      
                                                             

தன் வாழ்க்கையைப் பற்றி பல கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து வந்த லதா மயங்கி விழுந்தாள்.முன்னால் பிண ஊர்தி, சிவாவின் உடலை சுமந்து செல்ல ,இனி என்னதான் ஆகுமோ ?என்ற லதாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக பின்னால் காரில் அவளை சுமந்து செல்ல!இறப்புக்கு போய் வந்த என் பெற்றோர்கள் ,வந்தவுடன் எங்கள் ஐவருக்கும் உட்கார வைத்து சொன்ன அறிவுரைகள் இன்னும் எங்களுக்கு பசுமையாக இருக்கிறது!இது விதியா?அல்லது அவர்களாக தேடிக்கொண்டதா?சிவாவுக்கு இந்த நோய் இருப்பது தெரியுமா??யாரை நோவது???ஆனால் என் கோபம் எல்லாம் லதாவின் மேல்தான்!ஒழுக்கம் ,கட்டுப்பாடு ,நன்னெறி எங்கே அடகு வைத்தாள்??சிவா ஆம்பளை ,அவனைக் கட்டுக்குள் வைக்க இவளால் ஏன் முடியவில்லை?ஒருவேளைப் பருவத்தில் வரும் காதல் கட்டுக்கு அடங்காதோ?இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை இப்படி ஆக்கிவிட்டதா??

(கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ,என் அண்டைவீட்டாரின் உறவுக்காரப்பையன் விபத்தில் மரணம் ,அவனுக்கு  இந்த வாரம் திருமணம்,அந்த மணமகள் கர்ப்பமாம்,இதைக்கேள்விப்பட்டவுடன் ,இந்த பதிவை எழுத எத்தனித்தேன்,யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல)                                        
                                                                               

Friday 25 May 2012

கொஞ்சம் பழசுதான் (எல்லாம் ஒரு விளம்பரம்தான்)

என் வாலில் கிடந்த சில தொகுப்புகள்,கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்!

                                                                            


பூஞ்சோலை வீடு
படித்ததில் பிடித்தது..இல்லை சுட்டதில் பிடித்தது!!!

ஓர் ஏழைப் பையன், அனாதை இல்லத்தில் படித்து வருபவன்...தினமும் பள்ளி முடிந்து,பகுதி நேரமாக சோப்பு போன்ற பொருட்களை விற்று வந்தான்.ஒருமுறை வழக்கத்திற்கு மாறாக..பக்கத்தில் இருக்கும் காலனிக்குச் சென்று..ஒரு வீட்டுக் கதவைத் தட்டினான்! ஒரு பெண்மணி கதவைத் திறந்தாள்.வெயிலில் அலைந்து திரிந்த அவனுக்கு தாகம்+பசி .விசயத்தை கூறினான்..அவளோ ,அவனை அழைத்து ‘உள்ளே உட்கார சொல்லி,ஒரு கிலாஸ் பால் கொடுத்தாள்.மதியம் ஒன்றுமே சாப்பிடாத அவனுக்கு,விருந்து போல் இருந்தது பால்!
தினமும் அந்த காலனிக்குச் செல்லும்போது ,பெண்மணி வீட்டுகுச் செல்வான்,அவள் வீட்டில் நிறைய பூக்கள்,ஆகவே ‘உங்கள் வீடு, பூஞ்சோலை வீடு’என்று அழைப்பான்.அந்த பெண்மணியின் பிள்ளைகள் வெளியூருக்கு சென்றுவிட்ட்தாகவும்,அவளை கண்டு கொள்வதில்லை என்பதுவும் அவனுக்கு தெரியும்.நாட்கள் உருண்டோடின......பையனும் மேற்படிப்பைத் தொடர சென்றுவிட்டான்.
சில வருடங்கள் கழித்து,அதே காலனிக்கு அருகாமையில் ஒரு மருத்துவமனை!ஒரு வயதான பெண்மணியைச் கொண்டு வந்து சேர்த்தனர் அங்குள்ள முதியோர் இல்ல உறுப்பினர்!’இவருக்கு யாருமில்லை,அவருடைய நோயக் குணபடுத்த இந்த மருத்துவமனைத்தான் சிறந்த்து’என்று மருத்துவர்கள் கூறி விட்டனர் என்றும் வேண்டிக்கேட்டுக்கொண்டனர்.ஆனால் அங்குள்ள மருத்துவர்களோ ‘இது தனியார் மருத்துவமனை,சிகிச்சைக்கு நிறைய பணம் கட்ட வேண்டி வருமே!எதுக்கும் நாங்கள்,chief doctor-ஐ வந்து பார்க்கச் சொல்கிறோம், என்று தயங்கினர்!
விசயம் chief doctorக்கு போனது.!கிழவிக்கு சிகிச்சையும் முடிந்த்து,வீட்டுக்குப் போக தயாரானாள்.தாதியர்களிடம் கிழவி ,நான் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?என்று வினவினாள்.அவர்களும் chief doctor ’உங்களிடம் இதைக் கொடுக்கச் சொன்னார்’என்று ஒரு துண்டுச் சீட்டை,அவளிடம் நீட்டினர்:அதில் எழுதப்பட்டிருந்த்து:
>
>
.‘பூஞ்சோலை வீடு,ஒரு கிளாஸ் பால்”!!
நெகிழ்ந்து போனாள் கிழவி!(தர்ம்ம் தலைக்காக்குமோ??)
நன்றி Readers Digest magazine
தமிழாக்கம்:அடியேன்selvisk

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
தியாக தாய்
இரவு 9.30 குடும்பத்தோடு படம் பார்க்கும் அம்மா,எழுந்து 'சரி நான் படுக்க போறேன்னு' மேல் மாடிக்குப் போய் துணிகளை iron பண்ணுகிறாள்,பிறகு எல்லா படுக்கை அறைகளையும் ஒழுங்கு செய்கிறாள்,சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொதிக்க வைத்து பிள்ளைகளின் பள்ளி bottles - களில் நிரப்புகிறாள்,துணிகளை washing machine-போடுகிறாள். அப்புறம் நாளை breakfast-க்கு தயார் செய்கிறாள்.சாப்பிட்டு வைத்த மங்கு பாத்திரங்களைக் கழுவி வைக்கிறாள்.படமும் முடிகிறது மணி சுமார் 11.00 ஆகிறது.பிள்ளைகள் மேல் மாடிக்குப் போய் .'அம்மா இன்னும் நீங்கள் தூங்கலையா,அப்பவே மேல் மாடிக்கு ஏறீனீங்க என்று கேட்கிறார்கள்??? ( இதுதாங்க நாங்க ,தியாக தாய்)
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஆத்திரக்கார அப்பன்
புதிதாக வாங்கிய காரை,அப்பா கழுவிக்கொண்டிருக்க ,5 வயது மகன் அப்பாவோடு சேர்ந்து காரை கழுவும் சாக்கில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து கார் முழுதும் ஏதோ கிறுக்குகிறான்.அதைக் கண்ட முரட்டு அப்பன் பிள்ளையை அடித்து , ஒரு கட்டையை எடுத்து பிஞ்சு விரல்களை கண்மூடித்தனமாக அடிக்க , அன்புத்தாய் ஓடி வந்து பார்க்கிறாள்.கையில் ரத்தம் ஒழுக ஓடுகிறாள் டாக்டரிடம்.அந்தோ பரிதாபம்?? ஒரு சில விரல்கள் அகற்றப்படுகின்றன.மழலை மொழியில் பிள்ளை அப்பனைக் கேட்கிறான் 'அப்பா இனிமேல் எனக்கு எப்போ இந்த விரல்கள் வளரும்? முட்டாள் அப்பன் வெளியே போய் புதிய காரை உதைக்கிறான்,செய்வதறியாது நெஞ்சைப் பிடித்துக்கொண்டு காரை உற்று நோக்குகிறான் ,பிள்ளையின் கிறுக்கலை அப்போதான் பார்க்கிறான் 'dad i love you'

(ஆத்திரக்கார அப்பனுக்கு புத்தி மட்டோ??????)
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
அன்னையர் தினம்
இந்த இனிய நாளில் ,நான் படித்த ஒரு கதையைப பகிர்ந்து கொள்ள விரும்புகுறேன் ......(ஐந்தாம் படை )
ஒரு பணக்காரன் ,ஒரு நாள் செல்ல பிராணிகள் விற்க்கும் கடைக்கு செல்கிறான். அங்கே தன் நண்பனை பார்க்கிறான் .நண்பனும் விசாரிக்கிறான் ,என்ன வாங்க வந்தாய் என்று கேட்கிறான். அதற்க்கு பணக்காரன், ஐயர் நேற்று வீட்டுக்கு வந்து பூஜைகள் செய்தபின், "உங்கள் வீடு ராசி எண் 5 ஆனால் நீங்கள், மனைவி மற்றும் 2 பிள்ளைகள் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர் .ஆகவே இன்னும் ஒரு உயிர் வீட்டில் இருந்தால் மிக சிறப்பு என்றார் .அதனால்தான் எதாவது ஒரு செல்ல பிராணி வங்கி போகலாம் என்று வந்தேன் என்றான் .நண்பனும் அப்படியா ,நாளை ஒரு அருமையான ஜீவனை அழைத்து வருகிறேன் என்று கூறுகிறான் . அந்த ஜீவன் உங்கள் வீட்டிற்கு நல்ல ஐந்தாம் படை.
மறுநாள் நண்பன் காரில் வந்திறங்கி ,பணக்காரனை அழைக்க ,ஆசையை ஓடி வருகிறான் அவன்,எங்கே அந்த ஐந்தாம் ஜீவன் ?என் ராசி ,எனக்கு செல்வம் கொடுக்கப் போகும் உயிர் என கேட்க நண்பன்
காரை திறக்க வெளியே வருகிறாள்......முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த பணக்காரனின் தாய் !!!!!!இவர் உன் வீட்டில் இருந்தால் ஆயிரம் பொன் என்று சொல்லி நண்பன் விடை பெறுகிறான் ......வெட்கத்துடன் ஓடோடி வந்து தாயை தாங்கி கொள்கிறான் ??????
(நன்றி எழுதியவருக்கு )

````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஏன்?ஏன்?ஏன்?..எனக்கு மட்டும் ஏன் இப்படி??
-ATM Machine-la க்யூவில் நின்னு,என் turn வந்ததும் ‘out of service'காட்டும்!

-எல்லா காரும் ஸ்மூத்தா போகும்,என் கார் போகும் போது மட்டும் சிகப்பு விளக்கு வந்திடும்!

-எனக்கு பிடிச்ச பாடல் ஒளியேறும்போது,வானொலி ஒரே இரைச்சல்,பாடல் முடியும் வரை மட்டுமே!

-hospitalil-la என் turn வந்ததும்,அப்போதான் என் டாக்டர் லீவுலே,போய்ட்டாருன்னு சொல்லுவாங்க!

-போனில் நண்பர்களுடன்,ஜோரா ஊர்க்கதை பேசிக்குட்டு இருக்கும்போதுதான்,பிள்ளைகள் ஹோம்வோர்க் கேட்பாங்க,வீட்டுக்காரு காப்பி கேட்பாரு,line cut cut ஆகி வரும்!

-கடையிலே ஏதாவது வாங்கலாம்ன்னு போனா,அப்பத்தான் நான் தேடும் பொருள் ஸ்டாக் இருக்காது!

-கோயில் அன்னதானம் ,பசியோடு க்யூவில் நின்னு,என் turn வந்ததும்:ஒன்னு சாதம் முடிஞ்சிருக்கும்,இல்லை தட்டு இருக்காது,இல்லாட்டா யாராவது வயசானவங்க வந்து ‘என்னை முதலில் விடும்மா’ன்னு சொல்லுவாங்க!

-இதையெல்லாம் சகித்துக்கொண்டு ,முகநுலுக்கு ஆசையாக வந்தால்,அப்பத்தான் internet problem,pc hang ஆகிடும், டைப்படிச்ச போஸ்டிங் காணமல் போயிருக்கும்!

ஏன்,எனக்கு மட்டும் இதெல்லாம் நடக்குது?
ராகுவும் கேதுவும் ஒன்னா பின்னிக்கிட்டு இருக்காங்களா??

**ஏதும் பரிகாரம் இருக்கா??
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````

நெஞ்சை நெகிழ வைத்த ‘தில்லாலங்கடி’பட வசனம்!!


’அந்தப் பையன் அனுவரைப் பார்,இன்னும் நான்கு நாட்களுக்கு மேல் உயிரா இருப்பான்னு சந்தேகம்தான்,அது அவனுக்கும் தெரியும்!இருந்தும் , இறக்கவிருந்த தன் ஸ்நேகிதி பிழைத்து வருகிறாள்ன்னு எவ்வளவு சந்தோசமா எல்லோருக்கும் இனிப்புக் கொடுக்கிறான்!!இப்போ சொல்லு தம்பி,அதுங்க நோயாளியா??இல்லை நாம் எல்லோரும் நோயாளியா???
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
படித்ததில் ரசித்தது;
ஒருமுறை,அன்னை தெரேசா மும்பை செல்ல விமானநிலையம் செல்கிறார்.அந்த சமயம் விமானம் சற்று தாமதமாகும் என்று அறிவிக்கப்படுகிறது!அன்னையின் மானேஜர் சற்றே தயங்கியபடி:அம்மா விமானம்,தாமதமாகும்..ஆகவே..என்று முடிப்பதற்குள்,அன்னை ‘பரவாயில்லை நான் இன்று காலையில் தியானம் செய்யவில்லை...எதையோ தவறவிட்டதுபோல் ஓர் உணர்வு,ஆகவே இந்த தருணத்தைப் பயன்படுத்தி ,அதை செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டே ஜபமாலையைக் கையில் எடுக்கிறார்.
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
கேட்டுப் பூரித்து போனேன்:(சுகி சிவம்)
ஒரு நாட்டின் மிக சிறந்த பிரதமர்,ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு செய்கின்றனர்!,பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கின்றனர்;உங்களின் இந்த வெற்றிக்கு யார் காரணம்,அஸ்திவாரம் என்றெல்லாம் கேட்க,பிரதமரும் ‘என் ஆசிரியர் என்கிறார்.பத்திரிக்கையாளர்கள்,ஆசிரியர் விட்டிற்கு படையெடுக்கின்றனர்.ஆசிரியரை நிறையக் கேட்கின்றனர்,இறுதியாய் ஒருவர்,’ஏன் ஐயா?உங்கள் மாணவன் ஒரு பிரதமராக ஆகிவிட்டார்,நீங்கள் இன்னும் ஆசிரியராகவே இருக்கிறிரே?’என்று கிண்டல் செய்ய,அதற்கு ஆசிரியர் தன்னடக்கமாக ‘நான் பிரதமரானால் ஒரு நாட்டை மட்டுமே உருவாக்குவேன்!அதுவே நான் ஓர் ஆசிரியராக இருந்தால் இன்னும் நூறு பிரதமரை உருவாக்குவேன்’என்றாராம்!!
(என்னால் ஒரு நல்ல குடிமகனையாவது உருவாக்க முடியும்)

````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஏன்?ஏன்?ஏன்?
ஏனோ,மீன் மற்றும் கோழி வெட்டி சுத்தம் செய்யும் பொழுதுதான்,தலை அரிக்கும்??
கையில் நிறைய பொருட்கள் இருக்கும் பொழுதுதான் ,உடம்பில் எறும்பு ஊறும்??
மிளகாய் போன்ற காரமான பொருட்களை வெட்டும்பொழுதுதான்,கண்ணில் ஏதாவது வந்து விழும்??
தோசைக்கு மாவு கரைக்கும்பொழுதுதான் மூக்கில் ஏதோ ஊறும்???
ஏதாவது தேடுவதற்காக பையில் கை விட்டால் தேடுவது கையில் அகப்படவேபடாது????
கைபயில் போட்ட போன், ரிங் கேட்கும்,ஆனால் கையை விட்டு துளாவினாலும் அகப்படவே படாது????
இதெல்லாம் எனக்கு மட்டும்தானா??
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````

நெகிழவைத்த குட்டிகதை!!!!
இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் காதல் கொள்கின்றன.தங்கள் இருவருக்குமே ஒருவர் மேல் ஒருவருக்கு அளவு கடந்த நேசம்!
அடிக்கடி பெண்ணுக்கும் ஆணுக்கும் சண்டைகூட,’எனக்குத்தான் உன் மேல் அதிக காதல்’எனக்குத்தான் அதிக நேசம் என்று’.
இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றனர்.’சரி நம் இருவருள் உண்மை காதல் யாருக்கு என்று பார்க்கலாம்’என சபதம்.அதாவது, நாளை மலர
விருக்கும் இந்த பூவை, யார் அதிகாலையில் முதலில் பார்க்கிறோமோ? அவரே உண்மைக் காதலுக்கு உரியவர்!!!!!
அதிகாலை புலர்ந்த்து!ஆண்,மலருக்கு முன்னால் அமர்ந்து காத்திருக்க மொட்டு அவிழ்கிறது,அவிழ்ந்த மொட்டுக்குள்,பெண் இறந்து கிடக்க கண்ட ஆண் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு தன் உயிரை மாய்ச்சுகிறது!!!!!!
பாதித்த குட்டிகதை!!!!!!!
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நன்றி திருடனுக்கு,
கோயிலுக்குச் சென்று காரைப் பார்க்,பண்ணி விட்டு,கைப்பையை(ரொக்கம் 1000வெ,ஒரு சில நகைகள்)காரிலே விட்டுட்டு இறங்கினேன்.ஆனால் உள்மனம்;’வேண்டாம் எடுத்துப்போ’என்று சொல்வதுபோல இருந்த்து.!சரி மீண்டும் வந்து,கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே போனேன்,சுமார் ஒரு மணி நேரம் கழித்து,கார் கதவைத் திறந்தேன்...அதற்கு அவசியமே இல்லாமல் கதவு திறந்திருந்த்து!!!ஆ..என்ன ஆச்சு?என்று யூகிக்கும் முன் எனக்கு தெரிந்துவிட்ட்து!ஆம்,என் கார் எப்படியோ திறக்கப்பட்டுள்ளது???ஒன்றும் உடைக்கப்படாமல் ,மிக சுலபமாக திருடன் கைவரிசையைக் காட்டி உள்ளான்!உள்ளே நுழைந்து, முதலில் என் கைப்பயை எங்கே இருக்கு? என பதற்றமாக தேடினேன்!ஆனால் என் கையில்தான் இருந்த்து,எல்லாம் பதற்றம் காரணமே???
இருப்பினும் காரில் உள்ள எதையோ காணவில்லை???அது மட்டும் எனக்குப் புலப்பட்ட்து!!ஆம் என் பிள்ளைகளின் school bags.அன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்திறங்கியவுடன்,மழைக் காரணமாக நானே ‘வாங்க அப்புறம் எடுக்கலாம்னு சொன்னேன்.அந்த புத்தகப்பைகளைக் காணோம்!ஒரு கணம் உறைந்து போனேன்’ஏன்னா இந்த வருடம்,என் மகள் அரசு தேர்வு எழுதவிருக்கிறாள்?????என் மகளோ துடித்தாள்,;ஏம்மா கடவுள் என்னைச் சோதிக்கிறார்,ஏதேதோ உளறினாள்..நானோ செய்வதறியாது.......?????சரி அடுத்த என்ன செய்வது??
போலீஸ்கார்ரோ,’அதை வைச்சு,அவனுங்க என்ன செய்யப்போறான்னு என்னிடமே கேட்டார்கள்!என் மகள் இருட்டறையில்,உண்ணாவிரதமிருந்த்தாள்!என் மகனுக்கு இது சாதகமாக இருந்த்துபோல!!ஏன்னா,இனிபடிக்கவேண்டாமே?? அவள், பள்ளிக்குச் சென்று விசயத்தைச் சொல்லிவிட்டு, தேடும் படலத்தில் இறங்கினேன்.’போதைப்பித்தர்கள் அதிகமாக உலாவும் இடம் அது,கண்டிப்பா அவனுங்க அதை எங்கேயாவது விட்டுட்டுப் போயிருப்பானுங்க’எல்லோரும் சொன்ன ஒரே ஆறுதல் வார்த்தை அது???
உலகத்தில் உள்ள,அனைத்துக் கடவுள்களையும் கும்புட்டுக்கிட்டேன்.அவள் வரும் செப்டம்பர் மாதம் பரீட்சை எழுதப்போறாளே???
இரண்டு இரவுகள் ஓடின! என் மகள் பள்ளியிலிருந்து,அன்று காலைப் போன் வந்த்து!’செல்வி,தொலைந்த்து போன ,உங்கள் பிள்ளைகளின் bags பத்திரமாக இருக்காம்,வேறொரு பள்ளியில்,தலைமையாசிரியரின் குரல்!ஆ,மறுகணம் ,அந்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு,ஒடிப்போய் நின்றேன் அந்த மலாய் பள்ளியின் அலுவலகத்தில்!பிறகு விபரம் யாவும் அறிந்தேன்!இரண்டு நாட்களாக ஏதோ,ஒரு பஸ் ஸ்டாப்பில் கிடந்த்தாகவும்,யாரோ ஒருவர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றதாகவும்.அப்பள்ளியின் முதல்வர்,புத்தகங்களில் பள்ளியின் பெயரைப் பார்த்துவிட்டு,டைரக்டரியில் தொலைபேசி எண்களைப் பார்த்து......................என்று எல்லா விபரங்களையும் கூறினர்.
ஐயோ!இறைவன் ரொம்ப பெரியவர்!ஒருக்கால்,பணமே போயிருந்தாலும் சம்பாதித்துக்கொள்ளலாம் ஆனால் கல்வி சமாச்சாரம் ஆச்சே??எல்லாம் பையில் இருந்த்து,விலை உயர்ந்த பென்சில் பெட்டியைத் தவிர!!!!!
முற்றும்.
மலேசிய கார் iswara ,மிக சுலபமாக சாவி இல்லாமல் திறக்கலாமாம்.ஆம்,கதவின் வெளிபுறத்தில் இருக்கும் ரப்பர் பார்-ஐ நெம்பி ..... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,ரப்பர் பாரும்.....!
ஒருசில நேரங்களில்,என் கைப்பையக்கூட ,பிள்ளைகளின் புத்தகபையில் ஒளித்துவைத்துவிட்டு போயிருக்கேன்(இவ்வளவு கனமான bags-ஐ எவன் எடுக்கப்போறான்னு??ஆனால் எடுத்துட்ட்டுப்போய்ட்டானே??
**எது எப்படியோ,கண்ணியமான திருடன் போல,எங்காவது குளம்,குட்டைன்னு வீசாம???
`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
ஒரு உண்மைச் சம்பவம்:
ரொம்ப நாளைக்குப் பிறகு,தோழி ஒருவளை சந்தித்தேன்!ரொம்ப வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால்,அவள் வீட்டிற்குச் சென்றேன்.சுமார் 90 வயது அவளுடைய பாட்டி(10 வருசமா) படுத்தப் படுக்கையாக துன்பப்பட்டு வந்தார்.நான் அவர்களைச் சந்தித்து வீடு திரும்பினேன்.மறு நாள் தோழி தொடர்புகொண்டு,பாட்டி இரவு இறந்து விட்டதாக கூறினாள்.இறப்புக்குச் சென்றேன்.எல்லா நண்பர்களும் சென்றோம்.தோழியும் என்னைக் கண்டதும்;செல்வி ,பாட்டி இறந்த நேரம் பார்க்கப் போன இடத்தில்,’உங்கள் வீட்டிற்கு ஏதோ ஒரு சக்தி வந்துபோனதால்தான் ,இழுபறியாய் கிடந்த பாட்டி போய்ட்டாங்க என்றாள்.கதையை உற்று கேட்டுக்கொண்டிருந்த நண்பன் சிவா ,என் காதருகே வந்து ’செல்வி எங்க வீட்டுக்கும் வந்து போங்க..எங்க தாத்தாவும்(82 வயது) ஒரு அஞ்சு வருசமா பாடாய் படுத்துரார் என்றான் சிரிக்காமல்..???? நானோ வாய்விட்டு சிரித்து ,விஷயம் காட்டுத் தீப் போல் அங்கே பரவியது!!!!

`````````````````````````````````````````````````````````````````````````````````````````````
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்
நேற்று, மகிழுந்தில் போய்க்கொண்டிருக்கையில் ,என் முன்னே ஒரு இளைஞன் இரண்டு சக்கர வண்டியில் ஒரு வயதான அம்மாவை ஏற்றிக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தான்.திடீரென மழை லேசாக தூறத் தொடங்கியது.உடனே அந்த வண்டியில் சென்றுக்கொண்டிருந்த அந்த அம்மா தன் பையில் கையை விட்டு வேகவேகமாக எதையோ இழுத்தார்.வெளியே வந்தது ஒரு நெகிழிப் பை.அதை எடுத்து மழைத் தன் மகனை நனைக்கும் முன்னே அவனைப் போர்த்தி விடுகிறார் அந்தத் தாய்.மழை வேகமாக பெய்கிறது.வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது.இளைஞன் நனையாமல் செல்ல பின்னால் அம்ர்ந்திருந்த தாய் முழுதும் நனைந்தாள்.அன்பின் இலக்கணம் அன்னையன்றோ!!!!
``````````````````````````````````````````````````````````````````````````````````````````  

Sunday 20 May 2012

உண்மை அன்பையும் ,இயற்கையையும் தடுக்க முடியுமா?

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னாள் ,என் மாணவன் ஒருவன் ,6 வயது பையன்,தினமும்  காலையில் ,எனக்கு ஒவ்வொரு விதமான பூ கொண்டு வந்து கொடுப்பான்.அவன் தந்தை பள்ளிக்கு வரும்போது ,டீச்சர் இன்னிக்கு கொடுத்த பூ ,இந்த கடையில் வாங்கிய செடி ,அங்கே வாங்கியது என்று விளக்கம் கொடுப்பார்.அதிலே தெரியும் அவருக்கு செடி நடுவதில் இருக்கும் ஆர்வம்!’என் டீச்சருக்கு நான்  செய்ததை ,என் பையன் செய்கிறான் டீச்சர் ‘என்பார்.’ஒரே ஆண் வாரிசு டீச்சர்,என் கனவே அவன்தான்.அவனுக்காக எல்லாமே சேர்த்து வைக்கிறேன்.இரண்டு பெண் பிள்ளைகள்.அவர் நல்ல வசதியானவர் ஆனாலும் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கும்.காரணம் அவர் கட்டணம் செலுத்த வரும்பொழுதோ அல்லது பள்ளிக்கு ஏதாவது நன்கொடை கொடுக்க வந்தாலோ,அவர் பணப்பையில் கட்டுக்கட்டாக கசாமுசாவென கிடக்கும்  பணத்தை அவர் எடுத்து மேஜை மேல் வைக்கும் விதம்???எனக்கு சந்தேகமாக வே இருக்கும்!அது அவர் தனிப்பட்ட விசயம் ,எங்களுக்கு நல்லது செய்கிறார் அது போதும் என்று பேசாமல் இருப்பேன்.

அவர் வீட்டில் நிறைய பூச்செடிகள் வைத்திருக்கிறாராம்.அது அவருக்கு பொழுதுபோக்கு என்று அவர் மனைவி சிலநேரங்களில் வந்தால்,சொல்லுவார்.இப்படி இருக்க ஒருமுறை எனக்கு அந்த பையன் கொண்டு வந்த பூ ,நான் இதுவரையில்  பாத்திராத பூ!மல்லிகைப்பூதான் ஆனால் சுமார் எலுமிச்சைப்பூப்போல அளவு,சுமார் மூன்றுக்கும் மேலான அடுக்கு (இதழ்கள்).நிஜமாகவே அவன் கொடுத்த பூக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த பூ.உடனே அவனை அழைத்து,அம்மாவை எனக்கு போன் பண்ண சொல் என்றேன்,என் சக ஆசிரியர்களிடமும் காட்டினேன்.அவர்களும் இது மல்லிகைவகைத்தான் ஆனால் மிக அரிது கிடைப்பது என்றனர்.
                                                                         
மறுநாள் ,அந்த மாணவனின் அப்பா ,ஏதோ முக்கியமான விசயம்னு பள்ளிக்கூடத்திற்கே வந்தார்.என்ன டீச்சர் ,பையன் போன் பண்ண சொன்னிங்கன்னு சொன்னான்,அதான் வந்தேன்’என்றார்.ஐயையோ,முக்கியமான விசயம் ஒன்னும் இல்லைங்க பிரதர் ,வந்து நேற்று அவன் கொடுத்த பூ ரொம்ப ,அழகாக இருந்தது,வித்தியாசமாகவும் இருந்தது,அதான் அது பற்றி கேட்க ‘என்று கொஞ்சம் பயந்துகொண்டே சொன்னேன்(ஆமாம்,காலையில் வேலைக்கு போகும் அவரை ,சும்மா கூப்பிட்டு பூ நல்லாயிருக்கு பொடலங்காய் நல்லாயிருக்குன்னு).ஆனால் அவரோ ‘ஓ அதுவா டீச்சர் ,அது எட்டடுக்கு மல்லிகைன்னு சொல்வாங்க.அது எல்லாரிடமும் வளராது,ரொம்ப நல்லா பராமறிக்கணும்.இருங்க நாளைக்கும் கொடுத்து விடுகிறேன் ,என்று சொல்லி ,வந்ததுக்காக  பள்ளிக்கட்டணம் செலுத்திவிட்டு சென்றார்.
தின்மும் அந்த பூ என் பள்ளியின் பூஜை அறையை அலங்கரிக்கும்.நாட்கள் ஓட ஓட ஒருநாள்,அந்த பையனின் அம்மா ,பள்ளிக்கு அந்த பூச்செடியை கொண்டு வந்து கொடுத்தார்,என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.’இந்தாங்க டீச்சர் ,நீங்க அவர்கிட்டே சொன்னதும் ,வீட்டில் வந்து ,ஒரு கிளையை உடைத்து ,வேறொரு ஜாடியில் நட்டு வைத்தார்,கொஞ்சம் வளர்ந்து இலைகள் வந்தவுடன் கொடுக்கலாம்னு ,வீட்டில் வைத்திருந்தார்,  இப்போ கொடுப்பதற்கு தயாராகிவிட்டது’என்றார்.எனக்கு ஒரே ஆச்சரியம் ,இப்படியும் நல்ல கணவன் மனைவியா??என் ஆசைக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?
வீட்டில் வைத்து நல்லபடி பராமறித்து வந்தேன்.எப்போடா பூ பூக்கும் என்று ஆர்வமாய் எட்டி எட்டிப்பார்ப்ப்பேன்.
                                                                               
இப்படியே சிலமாதங்கள் கழித்து ,ஒருநாள்   அந்த நெஞ்சைப் பிழிய வைக்கும் செய்தி  வந்தது.ஆம்,அந்த தந்தையை ரெஸ்டாரண்ட்டில் வெட்டிக்கொலை செய்தனர் என்ற செய்தி.பள்ளிமுடிந்து பதறியடித்து ஓடினேன்..ஐயோ ,மலைப்போல் நின்றவரை சாய்ச்சிட்டானுங்களே பாவிங்க?? பிசினெஸ் பொறாமையால் கொல்லப்பட்டார் என்று கேள்வி!பெட்டிக்குள் அந்த தந்தை,இது நிஜமா??என்னால் யூகிக்கவே முடியவில்லை.ஐயோ ..’டீச்சர் ,என் பையனுக்கு ஒன்னுமே தெரியல டீச்சர்,அவனைப்பார்த்துக்குங்க டீச்சர்னு,மனைவி ,அழ..வேறென்ன? நமக்கும் மறைத்தாலும் கண்ணீர் மடிதாண்டி விடுமே??
இதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்று வெளியேறிவிட்டேன்.
 அந்த சம்பவம் என்னால் மறக்கமுடியாத ஒன்று.ஆனாலும் பள்ளி உறவு என்பதால் கொஞ்சம் மறக்க முயற்சி செய்தேன்.இருந்தாலும் அவர் கொடுத்த செடியைப்ப்பார்ர்கும் போதெல்லாம் ,அவர் இல்லையென்றாலும் அந்த செடி இருக்கு,என்றாவது ஒருநாள் பூக்கும் என்ற நம்பிக்கையே!ஆனால் என் நம்பிக்கை பாழாய் போனது.நான் செடி வைத்திருந்த இடத்தில் இந்தோனேசிய வேலைக்காரனுங்க ,ஏதோ பொருட்களை கிடத்தி வைத்திருந்தனர்.என் வீடு தரை வீடு ,என்பதால் ,அவனுங்க பொருட்களை என் அனுமதியோடு அங்கே விட்டு செல்வார்கள் ,பிறகு வேலைக்குப்போகும்பொழுது,எடுத்துச் செல்வார்கள் .அப்படி எடுக்கவும் வைக்கவும் இருக்க,அந்த செடிமேல் ஏதோ திராவாகம் பட்டு, செடி நாளடைவில் பட்டுப்போனது!இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது,அவனுங்க திட்டலாம் என்றால் ,பயம் .எதையும்செய்ய துணிந்தவனுங்க ,அவனுங்க!சரி மனதை கஷ்டப்பட்டு தேத்திக்கொண்டேன்.கேட்டாலும் திரும்ப வரவா போகுது ,செத்தது??
 அன்று முதல் அந்த செடிப்பக்கம் போகவே மாட்டேன்.பார்க்கும் போதெல்லாம் வயிறெரியும்.இது நடந்து ஒரு மூன்று மாதங்கள் ஆகின.

இன்று காலையில் ஏதேச்சையாக அந்த செடிப்பக்கம் போன எனக்கு ஓர் ஆச்சரியம்!என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.ஆம் பட்டுப்போன அந்த செடியின் தண்டில் கீழ் மீண்டும் அந்த செடி முளைத்து இருந்தது!ஐயோ ,இறந்த அந்த மனுசன் உயிர்பெற்றதுபோல ஒரு மகிழ்ச்சி ,அப்படிப்பட்ட வருத்தமும் வேதனையும் தந்தது செடி செத்துபோனபோது!கடையில் வாங்கலாம்   ஆனால் ஒருவர் அன்பாக கொடுப்பதுக்கு சமமாகுமா??                                                      
இதுதான், இயற்கையைத் தடுக்கவா முடியும் ,உண்மை அன்பை மூடி வைக்கவா முடியும் என்று கேட்கிறார்கள்??இன்று முதல் நல்லபடி பராமறிப்பேன்.என் ஆசை நிறைவேறுமா?அந்த செடியில் பூக்கும் முதல் பூ ,என் பூஜை அறைக்கு ,இரண்டாம் பூ ,இறந்துபோன அந்த தந்தைக்கு சமர்ப்பணம்!