Saturday, 26 May 2012

மனைவி ஆகாத காதலியின் கன்ணீர்

அண்மைய காலமாக மலேசியாவிலும் சரி ,தமிழ்நாட்டிலும் தேர்வு முடிவுகள் வந்துள்ளன.அதேவேளையில் ஒரு சில தற்கொலை செய்திகளும் ,கன்னிபெண்கள் காணாமல் போகும் செய்தியும் அதிகமே!உண்மையில் கடத்திச்செல்லப்பட்டனரா?காணாமல் போய்விட்டனரா?அல்லது வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டனரா?ஓடிப்போகும் திட்டம் இருப்பவர்கள் கொஞ்சம் நில்லுங்கள்,இந்த உண்மைக்கதையை படித்துவிட்டு ஓடிப்போவிங்களோ,செத்து தொலைவிங்களோ ,அது உங்கள் விருப்பம்!முழுவதும் படித்துவிட்டு முடிவை தேர்ந்தெடுங்கள்......
                                                               
(இங்கே இடம் பெற்றுள்ள பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன).பல வருடங்களுக்கு முன்பு ,ஒருநாள் என் மூத்த அக்காள்  கண்வரின் உறவுக்காரர் ஒருவர் ,அவர் அத்தைப்பெண்ணுடன் ஓடி வரவில்லை(ஜோகூரில் இருந்து ஓடி வர முடியாது,ரயிலில் வந்துவிட்டார்).அககாவும் ,என் அம்மாவிடம் வந்து ,பணம் கேட்டு வாங்கி போனார்.வந்தவர்கள் திரும்பி போய்விடுவார்கள் விருந்து கொடுக்கலாம் என,ஆனால் அவர்கள் திரும்பிபோக வரவில்லை,இனி திரும்பவே கூடாதுன்னு வந்தனர்!பெண்ணுக்கு வயது 16,அவருக்கு வயது 24.உறவுக்காரர்கள்தான்,ஆனால்  ஆனால் பெண் வீட்டில் எதிர்ப்பு.என் மாமா அந்த சமயம் வேன் ஓட்டியதால், எங்கே போனாலும் எங்களையும் வேனில் அழைத்துச்செல்வார்.அப்பொழுது அந்த காதல் ஜோடிகளும் வருவார்கள்,அந்தப் பெண்ணைவிட எனக்கு 2 வயது மூப்பு ,ஆகவே அவளை  ஒத்த வயது நான் என்பதால் என்னுடன் நெருக்கமானாள்.
                                                                                   
பிறகென்ன ,அவளுடைய கதைகள் அனைத்தையும் என்னிட்ம் கூறுவாள்.எனக்கோ அதெல்லாம் கேட்க புதிதாக ,இதுவரைக்கேட்காத கதையும் கூட!நான் அந்த சமயம் என் தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த சமயம்.எஸ்.பி.எம் தேர்வு முடிந்தால் ,சுமார் 4 மாதங்கள் ஆகும் முடிவுகள் வர,ஆகவே நான் மட்டும் வீட்டில் இருப்பேன், அந்த காதலன்(சிவா) மாமாவோடு வேலைக்குச்சென்றால்,அவளை(லதா)  என்னுடந்தான் விட்டுச்செல்வார்கள்.இப்படியே அவள் தன் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கையில் ,ஓர் அதிர்ச்சியான செய்தியை ,இடி விழுந்த மாதிரி (நான் கேட்டதும் காய்ச்சலே வந்தது)செய்தி சொன்னாள்.ஹ்ம்ம், அவள் கர்ப்பமாக இருக்கும் செய்தி!இதைக்கேட்டு நான் பேசாமல் இருப்பேனா??சத்தியமாக முடியாது,நாளைக்கு செல்விக்குத்தான் எல்லா விசயமும் தெரியுமேன்னு சொன்னால் ,என் எலும்பு முறிக்கப்படும் எங்கள் வீட்டில்.எப்போடா அக்கா வரும் ,இந்த செய்தியை சொல்லவேண்டுமே?மணியானதும் ,மாமாவும் சிவாவும் ,வந்து லதாவை அழைத்துக்கொண்டு போய் விட்டனர்.அக்காவிடம் அறையைப்பூட்டிக்கொண்டு அந்த( கெட்ட வார்த்தையை )சொன்னேன்.அக்காவோ ,எங்களுக்கு அந்த சந்தேகம் இல்லாமல் இல்லை(அக்கா இருவரும் திருமணமானவர்கள்),இரு அம்மா வரட்டும் சொல்லிடலாம்னு ,எனக்கு உதறல் ,காய்ச்சல் + பயம் எல்லாமே ?
எங்கள் வீட்டைப்பொறுத்தவரை அம்மாவுக்கு நாங்கள் இன்னும் சின்னப்பிள்ளைகள்தான்,ஆகவே பெரியமனுசித்தனமா ஏதேதோ பேசியிருக்கிறாயான்னு அடி விழுமே??
                                                                         
அம்மா வந்தார்.விசயம் அம்மா காதுக்கு !என்னை அழைத்து விசாரணை?ஆனால் அம்மா என்னைக்கேட்கவில்லை ,எங்கள் வீட்டில் சில விச்யங்கள் ,இன்னமும் நாங்கள் அம்மாவோடு பேசுவதில்ல்லை(அதில் இது போன்ற டாபிக்ஸ் கூட).அக்காவையும் மாமாவையும் போன் பண்ணி வர சொன்னாங்க,விசயத்தைச் சொன்னார் அம்மா,அப்பா மாமாவிடம் ,’இது சரியில்லை தம்பி ,அது உங்க உறவுக்காரப்பையன் மேலும் இருவரும் அத்தை மாமா பிள்ளைகள் ,பொல்லாப்பு வேண்டாம் ,அவுங்க வீட்டுக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லுங்கள் என்றார்.அப்போதான் சிவா வாய் திறந்து விசயத்தைச் சொன்னார்.’இல்லை மாமா ,வந்து ,அவ அம்மா வீட்டில் எதிர்ப்பு ,நான் தப்பு பண்ணியது உண்மைதான் ,ஆனால் அவ அம்மா இவளைக் கொல்லக்கூட அஞ்ச மாட்டார் அதான் வந்துட்டோம்’என்று கையைப்பிசந்தார்.மாமாவோ ‘இல்லை ,இல்லை இது பற்றி நீ கவலைப்பட வேண்டாம் ,நான் வீட்டில் அழகாக பேசி சமாளிக்கிறேன்’என்று தைரியம் சொன்னார்.அந்த சமயம் தைப்பூசம் நெருங்க்கிகொண்டிருந்தது,மாமா பத்துமலையில் வியாபாரம் செய்ய ஆயத்தமானார் ,சிவா கூட போய் உதவிகள் செய்வார்!சிவா நல்லா வேலை செய்வார் ஆனால் அடிக்கடி சீக்கிரம் களைப்படந்துவிடுவார் ,கைகால்கள் அடிக்கடி வீங்கும்?இது எங்களுக்கு வினோதமாக தோன்றும் காரணம் சிவாவுக்கு என் அண்ணா வயது .ஆனால் அண்ணா நல்லா ஆரோக்கியமாக இருக்கும்!
                                                             
அன்று முதல் ,நான் லதாவிடம் நெருக்கமாக பேசுவதைக் குறைத்துக்கொண்டேன் ,காரணம் அவ செஞ்சி வந்த காரியம் ,மேலும் அவ என் கண்களுக்கு என்னைவிட மூத்தவளாக தெரிந்தால்,அதையெல்லாம் மீறி அம்மாவின் கட்டளையும் கூட?அதுமட்டுமின்றி ,வீட்டில் சிவா லதா கதையை  வைத்தே டாச்சரும் ஆரம்பம் ஆனது!கொஞ்சம் வாய் பேசினாலும் அம்மா உடனே ‘பேசுங்க ,பேசுங்க ,அப்புறம் வீட்டுக்கு அடங்காமல் ,அக்கா வீட்டுக்கு தலைவலி வந்து சேர்ந்திருக்கே,அந்தமாதிரி பெரியமனுசி மாதிரி முடிவெடுங்கள்னு டாச்சர் ,ஆனால் அப்பா ரொம்ப அமைதியாக அறிவுரை சொல்வார் ,அது நஞ்சு போல இருக்கும் ,இது அப்பா ஸ்டைல்!அதனாலேயே ??சில பல விசயங்கள் நாங்கள் பேச வாய்ப்பே இல்லை (பொதுவாக நம் தமிழர்கள் வீட்டில் அப்படித்தானே ,ரொம்ப கட்டுப்பாடு)
                                                                                           
மாமா தைப்பூசத்தில்  இரவு பகல் வியாபாரம் செய்தார்,சிவாவும் !அப்போதான் அந்த விபத்து நடந்தது,மாமா வியாபாரம் முடிந்து ,வேனை ஓட்டிச்செல்லும்போது ,வேன் விபத்துக்குள்ளானது!அன்று காலை ,வீட்டில் எல்லோரும் பசியாறிக்கொண்டிருந்த சமயம் ,போலிஸ்காரர்கள் எங்கள் வீட்டுக்கு போன் செய்து ‘தாஸ் என்பவர் விபத்துக்குள்ளானார்,உடனே மருத்துவமனை வரவும் ‘என்று .அண்ணா அப்பா ,மாமா உடன் பிறப்புகள் எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு போய் பார்த்தனர்.மாமாவுக்கு அடி அதிகம் ஆனால் மாமாவால் பேசவும் ,நடக்கவும் முடிந்தது,சிவாவுக்கு அடி குறைவு ஆனால் கோமாவில் கிடந்தார்???ஏன் என்ன ஆச்சு?ஒரு வேளை ,அதிர்ச்சி என்று நினைத்தோம்...ஆனால் அதுவல்ல ......?
                                                                           
இரண்டு மூன்று நாட்கள் கழித்து ,சிவாவைக்காண மருத்துவமனை சென்றபோது அந்த ரகசியம் தெரிய வந்தது,அவர் படுக்கையில் 'do not touch the patient ,hepatitis b 'என்று அறிவிப்பு.அப்படின்னா என்ன என்று அண்ணாவும் (அப்போ அதுவெல்லாம் பெரிய நோய் இல்லையே)மருத்துவரைக்கேட்டது.மருத்துவரும் விளக்கம் சொல்லிவிட்டு ,அவர் குடும்ப உறுப்பினர்களை உடனே வர சொல்லுங்கள்,அனைவரையும் சோதிக்கவேண்டும் என்றார்.அண்ணா மருத்துவரிடம் தயங்கியபடி ,லதா கர்ப்பமான விசயத்தை சொன்னுச்சி,இப்போ டாக்டர் அதிர்ச்சிக்குள்ளானார்’what stupid ?he cant get married ,his situation is very critical?'என்று ஆத்திரமாக பேசினார்.லதாவை அழைத்து ஏதேதோ கேள்விகள்.லதா வெளியே வந்ததும் ,அந்த ஐ.சி.யூ வார்ட் ஊழியர்களே லதாவை பரிதாபமாக பார்த்தனர்!ஆம்,அந்த நோய் கொடியது,வயிற்றில் உள்ளை பிள்ளையையும் தாக்க்குமாம்!ஐயோ ,இதுவெல்லாம் சினிமா பார்ப்பது போல எங்களுக்கு!
                                                                                     
இருதரப்பு குடும்பமும் வந்தது.பிறகு என்ன?பெண் வீட்டார் ,ஹ்ம்ம் என் பிள்ளை
யை ஏமாத்திட்டான்,சிவா வீட்டாரோ ,உங்க சவகாசமே வேம்ண்டாம்னுதானே இருந்தோம்,என்னவானாலும் என் பிள்ளையை நாங்கள் பார்த்துக்கொள்வோம்னு.இரு குடும்பங்களையும் மாமா,அண்ணா ,அப்பா மற்றும் மாமா குடும்பம் எல்லாம் சேர்ந்து ‘முதலில் பையன் பிழைத்து வரட்டும்,பிறகு பேசுங்கள்னு எரிச்சலாக திட்டி தீர்த்தனர்!ஒரு வாரம் ஆகியும் கண் விழிக்கவே இல்லை சிவா.லதா ஒடுங்கி போனாள்.சாமியாரையெல்லாம் வரவழச்சி ,சிவாவின் பெற்றோர்கள் உயிர் பிச்சைக் கேட்டனர்..இரண்டு வாரம் ஆனது..முன்னேற்றமே இல்லை!டாக்டரும் கைவிரித்தார்.லதாவின் அம்மா ,லதாவைத் திட்டாத நாளே இல்லை.அதைப்பார்த்த நான் அம்மாவிடம் ‘ஏம்மா அந்த அத்தை அப்படின்னு ‘கேட்டதற்கு அம்மா சொன்னது ‘எந்த அம்மாவும் தன் பிள்ளை வாழனும்னுதான் நினைப்பாங்க ,அழிந்துபோவதைப்பார்க்க மாட்டார்கள்,இது உங்களுக்கு தேவை இல்லாத விசயம்னு’என் வாயை அடைத்தார்.அம்மா எங்களை  வீட்டில் நின்னால் குத்தம் ,நிமிர்ந்தால் குத்தம்னு வளர்த்த விதம்  அந்த சம்பத்தில் நாங்கள் கற்றுக்கொண்ட பாடமும்கூட!
                                                                                   
நாட்கள் உருண்டோடின,அந்த நாள் வந்தது!ஆம் ,அந்த மாலைப்பொழுது என் வீட்டு போன் அலறியது,நான் தான் போன் எடுத்தேன் ,மறுமுனையில் மாமா,சிவா போயிட்டான் ,நம்மை விட்டுப்போயிட்டான்......’அம்மா,அண்ணா..ஓடி வாங்க என்று போனைக்கீழே போட்டேன்’ !எல்லோரும் பதறியடித்து மருத்துவமனை ஓடினார்கள்!லதாவின் நிலை?உருண்டு புரண்டு அழுதாளாம்,கதறினாளாம்,அவ அம்மாவிடம் அறையும் விழுந்ததாம்,மாமியாரிடம் சாபமும்! நாங்கள் மருத்துவமனைப் போக வீட்டில் அனுமதி  இல்லை!அனைத்து வேலைகளும் நடந்தது .கோலாலும்பூரில் இருந்து ஜோகூருக்கு சிவாவின் உடலை அனுப்ப வேண்டுமே?நாங்கள் வீட்டில் அழுத வண்ணம்,அம்மா எங்களை அங்கேயெல்லாம கூட்டிப்போக முடியாதுன்னு கிளம்பிட்டாங்க!இறுதியாக பார்க்கமுடியவில்லையே என்ற கவலை என்னையும் என் தங்கையையும் ஆட்டிப்படைத்தது!      
                                                             

தன் வாழ்க்கையைப் பற்றி பல கனவுகளையும் கற்பனைகளையும் சுமந்து வந்த லதா மயங்கி விழுந்தாள்.முன்னால் பிண ஊர்தி, சிவாவின் உடலை சுமந்து செல்ல ,இனி என்னதான் ஆகுமோ ?என்ற லதாவின் வாழ்க்கை கேள்விக்குறியாக பின்னால் காரில் அவளை சுமந்து செல்ல!இறப்புக்கு போய் வந்த என் பெற்றோர்கள் ,வந்தவுடன் எங்கள் ஐவருக்கும் உட்கார வைத்து சொன்ன அறிவுரைகள் இன்னும் எங்களுக்கு பசுமையாக இருக்கிறது!இது விதியா?அல்லது அவர்களாக தேடிக்கொண்டதா?சிவாவுக்கு இந்த நோய் இருப்பது தெரியுமா??யாரை நோவது???ஆனால் என் கோபம் எல்லாம் லதாவின் மேல்தான்!ஒழுக்கம் ,கட்டுப்பாடு ,நன்னெறி எங்கே அடகு வைத்தாள்??சிவா ஆம்பளை ,அவனைக் கட்டுக்குள் வைக்க இவளால் ஏன் முடியவில்லை?ஒருவேளைப் பருவத்தில் வரும் காதல் கட்டுக்கு அடங்காதோ?இருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை இப்படி ஆக்கிவிட்டதா??

(கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ,என் அண்டைவீட்டாரின் உறவுக்காரப்பையன் விபத்தில் மரணம் ,அவனுக்கு  இந்த வாரம் திருமணம்,அந்த மணமகள் கர்ப்பமாம்,இதைக்கேள்விப்பட்டவுடன் ,இந்த பதிவை எழுத எத்தனித்தேன்,யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல)                                        
                                                                               

13 comments:

 1. வளரும் [[படிக்கும்]] பிள்ளைகளே உஷாராக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மனோ,நம் பெற்றோர்கள் போல டாச்சர்தான் கொடுத்துதான் வளக்கனும்போல?

   Delete
 2. சில காதல்கள் இன்னும் விநோதமாகவே இருக்கிறது....!!!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் தற்பொழுது காமத்துக்குத்தான் முதலிடம் போல் தெரியுது??கட்டுப்பாடற்ற காதல்!

   Delete
 3. இந்த பதிவு எல்லாரையும் போய் சேரவேண்டும்....!!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோ.உங்களைப்போல பிரபல பதிவர்களின் வாலில் சேர் பண்றிங்களே,அதுவே பெரிய விசயம் மனோ!மிக்க் நன்றி.

   Delete
 4. Good Real Story!!!!!!!! Ennathan Vidiya Vidiya Ramayanatha Sonnalum Puriyiravanukuthan Puriyum...!!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க சார்.என்ன செய்ய ,எங்கே தப்ப்புன்னு தெரியலையே?

   Delete
 5. அண்ணி...போஸ்ட் படிச்சேன்....ரொம்ப பரிதாபமா இருந்தது...ம்ம்...நல்ல படிப்பினை பதிவு

  ReplyDelete
  Replies
  1. இப்போ அந்த பெண் வேறு திருமணம் செய்து கொண்டதாக செய்தி!

   Delete
 6. அண்ணி...லதா விஷயம் ரொம்பவே கொடுமை...பட் நிச்சயம் இந்த மாதிரி நேரத்தில் லதாக்கிட்ட மனிதாபிமானத்தோட நடக்குறதும் மனிதம் அண்ணி...

  ReplyDelete
 7. அண்ணி...சின்ன டிப்ஸ் :

  *அண்ணி...உங்க பிளஸ் பாயிண்ட் மொக்கை இல்லாத டாபிக் எடுத்து எழுதுறது...நீங்க முதல் காபி ரெடி பண்ணிட்டு...எடிட் பண்ணி...இன்னும் கொஞ்சம் சுருக்கமான பதிவா ஆக்க முடியுமான்னு அடுத்த அடுத்த பதிவுல ட்ரை பண்ணுங்க...
  * நீங்க விவரிக்கும் ஸ்டைல் ரொம்ப லைவா இருக்குறது ஸ்பெஷல் அண்ணி...ஒரு பெரிய விவரிப்பை இன்னும் சுருக்க முடியுமா பாருங்க...அது இன்னும் உங்கள் பதிவை பேரழகாக்கும் தோணுது அண்ணி...
  *ஆரம்பத்தில் உள்ள பதிவுகளுக்கும்...இப்போ நீங்க எழுதும் உங்க பதிவுகளுக்கும் நிறைய மெச்சூரிட்டி தெரியுது அண்ணி...எழுத எழுத ஒரு professionalism வர ஆரம்பிச்சிரும் அண்ணி...உங்களுக்கு அந்த ஸ்கில் இருக்கு...ஸோ...பின்றீங்க...நிறைய எழுதுங்க...அதை எடிட் பண்ணி...இன்னும் சுவாரஸ்யமா ஆக்க முடியுமா பாருங்க...உங்களோட ஸ்பெஷல் ஸ்கில் இந்த lively narration ஆ விட்ராதிங்க...உங்களோட அழகான ஸ்டைல்...நல்ல செய்திகளும் சொல்றீங்க...அசத்துங்க அண்ணி...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப் நன்றி ஆனந்தி.உன் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிடா.உன் மாதிரி பதிவர்கள் எட்டிப்பார்ப்பதும் படிப்பதுவும் மனசுக்கு மகிழ்ச்சிடா.நிச்சயம் உன் டிப்ஸ்களை பின்பற்றி எழுதுவேன்.மீண்டும் நன்றி ஆனந்தி!

   Delete