Tuesday 29 November 2011

நானும் வெளிநாடு போகபோகிறேன்!!!!

அப்பொழுது எனக்கு வயது 22(எந்த வருசம்னு கேட்ககூடாது???).Manufacturing air-cond துறையில்,Quality inspector-ஆக பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது,ஒரு வெள்ளிக்கிழமை மதிய வேளை என் சக தோழி என்னை நோக்கி அறக்கபறக்க ஓடி வந்து’செல்வி கையைகொடு,உனக்கு ஜப்பான போக வாய்ப்பு கிடைத்திருக்கு!உன் பெயர் அங்கே லிஸ்டில் வெளிவந்துள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
                                                                   
    ’என்ன??அக்கா,பொய்யா..போங்க’என்று நிலைத் தடுமாறி உளறுவதற்குள்,ஏய்.என்ன நம்பலையா??இரு,அப்புறமா ,அவன்(முதலாளிக்கு மரியாதை)கூப்பிடுவான்,பாரு!அப்புறம் நம்புவாய்’என்று சொல்லி நகர்ந்த்தார்,ரொம்ப நேரம், லைனில் நின்று(conveyer  system)பேசக்கூடாது!அதுவும் நான் Quality inspector,நுண்ணியமாக சோதனை செய்யணும்(குளிர் சாதன ஊடுருவியை)!என்னைவிட சீனியர்கள் இருக்கும்பொழுது எனக்கு எப்படி??இது என் சந்தேகம்??????

அந்த கொஞ்ச நேரம் மிதக்க ஆரம்பித்து ,நார்மல் நிலைக்கு வருவதற்குள்,மற்றொரு நண்பர்(தரக்கட்டுப்பாடு அதிகாரி)என்னை நோக்கி வந்தார்.’செல்வி கொஞ்ச கவனமாக வேலையைச் செய்யுங்கள்,உங்கள் பெயர் வெளிநாடு போக பரிந்துரைக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’ஐய்யோ,என்ன சொல்றிங்க சார்???(தெரியாததுபோல்)நிஜமாகவா??’என்றேன்.’ஆமாம்.செல்வி இப்போதான் ,பெயர் பட்டியல் பார்த்தேன்!காங்ராட்ஸ் என்று சொல்லி அவரும் நகர்ந்தார்.

பொதுவாக வீட்டு 7.20(2 மணி நேரம் ஓவர்டைம் )போகும் நான்,அன்று over exiciting,சீக்கிரமே போய்ட்டேன்.வீட்டில் நுழைந்த்ததும் ‘அம்மா,.............என் பெயர்!என்னால் நம்பமுடியல????...........................அக்கா.....,அண்ணே.......!நாய்க்குட்டிக்கு பேச தெரியாது ,இல்லாட்டா அது கிட்டேயும் சொல்லியிருப்பேன்!அவ்வளவு சந்தோசம்!!!!ஆமாம்,மலேசியாவையே ஒழுங்கா முழுசா,பார்த்தது இல்லையே??அப்புறம் எங்கே வெளிநாடு??அதுவும் ஜப்பான் நாடு!அதுவும் ஓசியில் போவது???வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்!!

மறுநாள்,சீன பையன் (இரண்டாம் முதலாளி)என்னை இண்டர்வியூ பண்ணினான்!கேட்ட கேள்விகளுக்கு ‘டக்கு டக்குன்னு ‘பதில் சொன்னேன்!அவனுக்கும் தெரிந்திருக்கும்,என் சந்தோசம்??
இன்னும் இரெண்டே வாரங்களில்,எல்லா பிரெபரசன்களையும் செய்தாக வேண்டும்!!!அனைத்து ,வேலைகளையும் கம்பெனிக்காரனே செய்து கொடுத்தான்!
நான் போக இரண்டு நாட்கள் இருக்கும்!என் வீட்டில் அண்ணன் மற்றும் தம்பிக்கு அம்மை நோய் கண்டது??????வெகுவிரைவாக அனைவருக்கும் பரவியது!!!!ஐயோ,நான் போவதற்குள் ,எனக்கும் வந்துவிடுமோன்னு நினைத்து,அக்கா வீட்டில் போய் தங்கலாம்னு போனேன்!அங்கே போனால்,என் அக்கா மகள்,எங்கள் பராமரிப்பில் உள்ளவள்,இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான்,அவள் அம்மா தூக்கிப்போனாள்(என் வீட்டில் இருந்துபோனதால்)அவளுக்கும் அம்மை நோய் கண்டிருந்தது???அன்றிரவு எனக்கும் பயங்கர காய்ச்சல்??அம்மை நோயின் முதல் அறிகுறி காய்ச்சல்தானே??.பேசாமல் டாக்டரைப்போய் பார்த்தேன்,அவரும் செல்வி காய்ச்சல் அதிகம் என்றார்!விசயத்தைச் சொன்னேன்!அப்படி நோய்க்கண்டால்,நீ போக கூடாது??????ஐயோ!ஆசைக்காட்டி மோசம் செய்வது இதுதானா??கடவுள் மீது கோபம்????நான் வெளிநாடு போவேனா??என்று பல கேள்விகள்???நடந்தால் நன்மை,நடக்காவிட்டால் அதைவிட நன்மை?????என்னை நான் ஆறுதல் படுத்திக்கொண்டேன்!!வேற வழி????

அந்த நாளும் வந்தது .நான் முதன் முதலாக வெளிநாடு போகபோகிறேன்!!இரவு முழுவதும் தூங்கவில்லை!!எப்படி தூக்கம் வரும்?????காலையிலே எழுந்தேன்,காலைக்கடனகளை முடித்தேன்,அன்றைக்குன்னு பார்த்து என் பெரியண்ணா,ரொம்ப சுத்தமா குளிக்குது??அவ்வளவு நேரம்,டாய்லட்டில்??எனக்கு கோபம்,ஏனென்றால் ,அண்ணாதானே என்னை ஏர்போர்ட் அனுப்பனும்??கிளம்பினோம்,வீட்டில், உடல் நிலை மிக மோசமான நிலையில் தாத்தா!!கட்டிப்பிடித்து அழுதேன்’நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுதோம்???காரணம் என் அப்பா இறந்து ,ஆறே மாதங்கள்தான் ஆகியிருந்தன!!!அந்த வேதனை மறுபுறம்??

சுமார் எட்டு மணிநேரம் பயணம்!!அழுத களைப்பு வேற??விமானத்தில்,அவனுங்க கொடுத்த கொடுரமான சாப்பாடு,ஒரே வாந்தி???(cathay pacific).இரவில் சென்றடைந்தோம்,ஓசாகா மண்ணை மிதித்தேன்!ஹோட்டல் போய் சேர்ந்ததும்,நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா???
ஒரு காலண்டர் வரைந்து,நான் போன முதல் நாள் தொடங்கி ,நான் திரும்பும் நாள் வரை ,ஓவ்வொரு நாட்களாக டிக் பண்ண ஆரம்பித்தேன்!!!!தினமும் நான்,அவுங்க ஊர் கொடுரமான சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ,அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்திலி சம்பல்??என்னையறியாமல் கண்ணில் நீர் வழியும்??இதை அறிந்த அம்மா,வரும் நாட்களில் போன் பண்ணினால்,இன்னிக்கு ஒழுங்காகவே சமைக்கலைன்னு சமாளிப்பாங்க??எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????