Tuesday, 29 November 2011

நானும் வெளிநாடு போகபோகிறேன்!!!!

அப்பொழுது எனக்கு வயது 22(எந்த வருசம்னு கேட்ககூடாது???).Manufacturing air-cond துறையில்,Quality inspector-ஆக பணியாற்றிக்கொண்டிருந்தபொழுது,ஒரு வெள்ளிக்கிழமை மதிய வேளை என் சக தோழி என்னை நோக்கி அறக்கபறக்க ஓடி வந்து’செல்வி கையைகொடு,உனக்கு ஜப்பான போக வாய்ப்பு கிடைத்திருக்கு!உன் பெயர் அங்கே லிஸ்டில் வெளிவந்துள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
                                                                   
    ’என்ன??அக்கா,பொய்யா..போங்க’என்று நிலைத் தடுமாறி உளறுவதற்குள்,ஏய்.என்ன நம்பலையா??இரு,அப்புறமா ,அவன்(முதலாளிக்கு மரியாதை)கூப்பிடுவான்,பாரு!அப்புறம் நம்புவாய்’என்று சொல்லி நகர்ந்த்தார்,ரொம்ப நேரம், லைனில் நின்று(conveyer  system)பேசக்கூடாது!அதுவும் நான் Quality inspector,நுண்ணியமாக சோதனை செய்யணும்(குளிர் சாதன ஊடுருவியை)!என்னைவிட சீனியர்கள் இருக்கும்பொழுது எனக்கு எப்படி??இது என் சந்தேகம்??????

அந்த கொஞ்ச நேரம் மிதக்க ஆரம்பித்து ,நார்மல் நிலைக்கு வருவதற்குள்,மற்றொரு நண்பர்(தரக்கட்டுப்பாடு அதிகாரி)என்னை நோக்கி வந்தார்.’செல்வி கொஞ்ச கவனமாக வேலையைச் செய்யுங்கள்,உங்கள் பெயர் வெளிநாடு போக பரிந்துரைக்கப்பட்டுள்ளது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’ஐய்யோ,என்ன சொல்றிங்க சார்???(தெரியாததுபோல்)நிஜமாகவா??’என்றேன்.’ஆமாம்.செல்வி இப்போதான் ,பெயர் பட்டியல் பார்த்தேன்!காங்ராட்ஸ் என்று சொல்லி அவரும் நகர்ந்தார்.

பொதுவாக வீட்டு 7.20(2 மணி நேரம் ஓவர்டைம் )போகும் நான்,அன்று over exiciting,சீக்கிரமே போய்ட்டேன்.வீட்டில் நுழைந்த்ததும் ‘அம்மா,.............என் பெயர்!என்னால் நம்பமுடியல????...........................அக்கா.....,அண்ணே.......!நாய்க்குட்டிக்கு பேச தெரியாது ,இல்லாட்டா அது கிட்டேயும் சொல்லியிருப்பேன்!அவ்வளவு சந்தோசம்!!!!ஆமாம்,மலேசியாவையே ஒழுங்கா முழுசா,பார்த்தது இல்லையே??அப்புறம் எங்கே வெளிநாடு??அதுவும் ஜப்பான் நாடு!அதுவும் ஓசியில் போவது???வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்!!

மறுநாள்,சீன பையன் (இரண்டாம் முதலாளி)என்னை இண்டர்வியூ பண்ணினான்!கேட்ட கேள்விகளுக்கு ‘டக்கு டக்குன்னு ‘பதில் சொன்னேன்!அவனுக்கும் தெரிந்திருக்கும்,என் சந்தோசம்??
இன்னும் இரெண்டே வாரங்களில்,எல்லா பிரெபரசன்களையும் செய்தாக வேண்டும்!!!அனைத்து ,வேலைகளையும் கம்பெனிக்காரனே செய்து கொடுத்தான்!
நான் போக இரண்டு நாட்கள் இருக்கும்!என் வீட்டில் அண்ணன் மற்றும் தம்பிக்கு அம்மை நோய் கண்டது??????வெகுவிரைவாக அனைவருக்கும் பரவியது!!!!ஐயோ,நான் போவதற்குள் ,எனக்கும் வந்துவிடுமோன்னு நினைத்து,அக்கா வீட்டில் போய் தங்கலாம்னு போனேன்!அங்கே போனால்,என் அக்கா மகள்,எங்கள் பராமரிப்பில் உள்ளவள்,இரண்டு மூன்று நாட்களுக்கு முன்புதான்,அவள் அம்மா தூக்கிப்போனாள்(என் வீட்டில் இருந்துபோனதால்)அவளுக்கும் அம்மை நோய் கண்டிருந்தது???அன்றிரவு எனக்கும் பயங்கர காய்ச்சல்??அம்மை நோயின் முதல் அறிகுறி காய்ச்சல்தானே??.பேசாமல் டாக்டரைப்போய் பார்த்தேன்,அவரும் செல்வி காய்ச்சல் அதிகம் என்றார்!விசயத்தைச் சொன்னேன்!அப்படி நோய்க்கண்டால்,நீ போக கூடாது??????ஐயோ!ஆசைக்காட்டி மோசம் செய்வது இதுதானா??கடவுள் மீது கோபம்????நான் வெளிநாடு போவேனா??என்று பல கேள்விகள்???நடந்தால் நன்மை,நடக்காவிட்டால் அதைவிட நன்மை?????என்னை நான் ஆறுதல் படுத்திக்கொண்டேன்!!வேற வழி????

அந்த நாளும் வந்தது .நான் முதன் முதலாக வெளிநாடு போகபோகிறேன்!!இரவு முழுவதும் தூங்கவில்லை!!எப்படி தூக்கம் வரும்?????காலையிலே எழுந்தேன்,காலைக்கடனகளை முடித்தேன்,அன்றைக்குன்னு பார்த்து என் பெரியண்ணா,ரொம்ப சுத்தமா குளிக்குது??அவ்வளவு நேரம்,டாய்லட்டில்??எனக்கு கோபம்,ஏனென்றால் ,அண்ணாதானே என்னை ஏர்போர்ட் அனுப்பனும்??கிளம்பினோம்,வீட்டில், உடல் நிலை மிக மோசமான நிலையில் தாத்தா!!கட்டிப்பிடித்து அழுதேன்’நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுதோம்???காரணம் என் அப்பா இறந்து ,ஆறே மாதங்கள்தான் ஆகியிருந்தன!!!அந்த வேதனை மறுபுறம்??

சுமார் எட்டு மணிநேரம் பயணம்!!அழுத களைப்பு வேற??விமானத்தில்,அவனுங்க கொடுத்த கொடுரமான சாப்பாடு,ஒரே வாந்தி???(cathay pacific).இரவில் சென்றடைந்தோம்,ஓசாகா மண்ணை மிதித்தேன்!ஹோட்டல் போய் சேர்ந்ததும்,நான் செய்த முதல் வேலை என்ன தெரியுமா???
ஒரு காலண்டர் வரைந்து,நான் போன முதல் நாள் தொடங்கி ,நான் திரும்பும் நாள் வரை ,ஓவ்வொரு நாட்களாக டிக் பண்ண ஆரம்பித்தேன்!!!!தினமும் நான்,அவுங்க ஊர் கொடுரமான சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ,அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்திலி சம்பல்??என்னையறியாமல் கண்ணில் நீர் வழியும்??இதை அறிந்த அம்மா,வரும் நாட்களில் போன் பண்ணினால்,இன்னிக்கு ஒழுங்காகவே சமைக்கலைன்னு சமாளிப்பாங்க??எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????

11 comments:

 1. இப்பவும் நேற்று நடந்தது மாதிரி ஞாபகம் வைத்திருக்கீங்களே அதுதான் ஆச்சர்யம். நல்ல ஞாபக சக்தி. வாழ்த்துக்கள் செல்வி. நல்ல பதிவு.

  ReplyDelete
 2. ஆமா இது எப்போ நடந்த சம்பவம், ரொம்ப பரவசமா எழுதி இருக்கீங்களே...?

  ReplyDelete
 3. அம்மாவுக்கு போன் பண்ணினால்,கருவாட்டுக்குழம்பு,நெத்திலி சம்பல்??என்னையறியாமல் கண்ணில் நீர் வழியும்?//

  வீட்டு சாப்பாடின் அருமை வெளியே போனால்தான் தெரியும் இல்லையா...

  ReplyDelete
 4. எனக்கு தெரியாதா,எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????//

  நெகிழ்ச்சியா இருக்கு செல்வி, அருமையான பகிர்வு...!!!

  ReplyDelete
 5. அட நானே இப்போதான் உங்க பாலோவர் ஆகி இருக்கேன், ஆஹா இம்புட்டு நாள் நான் உங்க பாலோவர் என்ற நினைப்பில் இருந்துருக்கேன், அப்பிடியே நீங்களும் என் பாலோவர் ஆகிருங்க ஹி ஹி...

  ReplyDelete
 6. நாஞ்சில் புயல் இங்கேயும் வந்தாச்சு ஹி ஹி...

  ReplyDelete
 7. நன்றி மனோ!///வீட்டு சாப்பாடின் அருமை வெளியே போனால்தான் தெரியும் இல்லையா...///ஐயோ ரொம்ப மனோ??வீட்டில் இருந்தால்,இது சரியில்லை,அது சரியில்லைன்னு,அம்மா கிட்டே சண்டை!

  ReplyDelete
 8. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete
 9. வணக்கம்! இப்போதுதான் உங்கள் பெரும்பாலான கட்டுரைகளை படித்தேன், எளிமையான எழுத்துக்கள், நல்ல எழுத்து நடை, வாழ்த்துகள்!
  நன்றி!

  ReplyDelete
 10. //நான் வரும் வரை இருக்கனும் தாத்தா??எல்லோரும் அழுதோம்???//

  ஹா ஹா ஹா. வெளிநாடு போனதுக்கே இந்த அலம்பலா?

  //எங்கள் வீட்டில் இரவு 12 மணிக்கு யார் வந்தாலும்கூட சாப்பாடு கிடைக்கும்னு????//

  ம்ம் என் வீட்டு நினைவு வருகிறது. :-(

  ReplyDelete