Sunday 28 August 2011

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்!!!!!!!!

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்

தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோணுது !’ என்று.
                         தினமும் இதைக் கேட்ட கணவன்,அன்று பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்...கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.
இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்??இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!!!!
                 மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ:ஐயோ அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று அப்பககல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள் என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.
              தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…ட்ரிங் ட்ரிங் ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.
அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள்: மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்! பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.
அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
              ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன் என்று சொல்லும் பொழுதுதான் உணர்கிறான்; வீட்டில் கார் இல்லை என்று???செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை???’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!!

        காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !!!!!!!
                                                                 


3 comments:

  1. மனைவி அந்த வீட்டை பராமரித்து வரும் முறை சரியில்லை. வீட்டு பிரச்சனை மட்டும்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஆபீஸில் என்ன நடந்தது என்று சொல்லப்படவில்லை. அதிலிருந்தே நீங்கள் ஒருதலை பட்சமாக இருப்பது தெரிய வருகிறது.நாம் வசிக்கும் வீட்டிலே இவ்வளவு பிரச்சனை இருக்கும்போது ஆபீசில் எவ்வளவு பிரச்சனை இருக்கும். நீங்கள் சொல்லும் அனைத்து வேலையும் நிறைய கணவன்மார்கள் செய்வதுதான். மேலும் தன் அலுவலக வேலையும் பார்த்துக்கொள்கின்றனர். ஒரு வேளை இது உங்க சொந்த அனுபவமோ??

    ReplyDelete
  2. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

    * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

    * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

    * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

    * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    ReplyDelete
  3. இது ஒரு பொய்யான ஒரு தலைப் பட்சமான கதை, ஆபீசில் பெல்பாட்டம் மொல்லாளிகிட்ட லெப்ட் ரைட் வாங்கிகிட்டு வந்து அழுது மன்னிப்பு கேட்ட சம்பவம் இடம் பெற வில்லை

    ReplyDelete