Tuesday, 31 January 2012

தீர விசாரிப்பதே நலம்!!!!

       அண்மையில் எனக்கும், என் பள்ளி நண்பன் மணிமாறனுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இது!!!மணிமாறனை எனக்கு,என் பதின்ம வயதிலிருந்தே பழக்கம்!மிகவும் அருமையானவன்!என் ஆண் நண்பர்கள் நான்குபேர்,இவர்கள் எல்லாமே என்னைவிட இளைய வயதினர்,ஆகவே மூத்தவள்(அக்காள்)என்ற பக்தியும் மரியாதையும் அதிகம் என்றே சொல்லலாம்!அதில் மணிமாறன் என்னோடு கொஞ்சம் நெருக்கம்,காரணம் ,அவன் குடும்ப உறுப்பினர்கள்(அம்மா,அண்ணி மற்றும் அக்காள் தங்கை )எல்லாமே எனக்கு அறிமுகம்!!அவனுக்கு  13வயது  இருக்கும் பொழுது மூக்குகண்ணாடி அணிய ஆரம்பித்தான்.நாளடைவில் ,ரொம்ப பவர் காரணமாக ,மிகவும் மொத்தமான கண்ணாடி போடுவான்,கண்ணாடியின் உதவியின்றி அவனால் பார்க்க கொஞ்சம் கஷ்டம்னு சொல்லலாம்!

                    அவனுடைய பிரச்சனைகள் அனைத்தையும் என்னிடம் சொல்லுவான்.சோல்யூசன் கேட்பான்!பணப்பிரச்சனை,மனப்பிரச்சனை,வீட்டுப்பிரச்சனை எல்லாவற்றையும் சொல்லுவான்!பல நாட்களில், பண விசயத்தில் நான் அவனுக்கு உதவியதும் உண்டு(என்னிடம் பணம் அதிகம் இருந்த காலம்)!ஒரு பெண்ணைக் காதலித்து,தோல்வியடைந்தான்,அந்த சமயத்தில் நண்பர்காளான நாங்கள், அவனை ஆறுதல் படுத்தி,அறிவுரைச் சொல்லி மீட்டுக்கொண்டு வர பட்ட சிரமங்கள் இருக்கே?????என் வீட்டில் என் நண்பர்கள் அனைவரையும் என் உடன்பிறப்புகளுக்கு தெரியும்,ஆனாலும் மணி அதிக   உரிமையோடு வீட்டுக்கு  வந்து போவான்.
             
  இப்படியெல்லாம் பழகி வந்த மணிமாறன்,திடிரென என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்தான்,என்னை மட்டுமல்ல, எங்கள் அனைவருடைய நட்பையும் விட்டு!இது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது!அவன் நாத்திகம் பேசுபவன் ஆனால் கொஞ்சகாலமாக சாமி கும்பிடுவதும்,மூடநம்பிக்கைகளை நம்புவதும் போன்ற விசயங்களை , நாங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து  கேள்விப்பட்டோம்!!குடும்பத்தில் நிறைய பிரச்சனை(பொறுப்பில்லாத அண்ணன்,திருமணம் ஆகாத மூன்று தங்கைகள் ,நோயாளி பெற்றோர்கள் என பல பொறுப்புகள்)அவன் தலையில்!!!
       
                பிரச்சனை அவனை நெருக்கவே ,அதிலிருந்து மீள முடியாமல் சிக்கி தவித்தான்.மற்ற நண்பர்களும் ‘செல்வி மணி போனே பண்ணுவதில்லை,உங்களைக் கூப்பிட்டானா ‘என்று என்னை நச்சரிப்பார்கள்.நாளடைவில் போன் பண்ணினாலும் எடுப்பதில்லை???         ஏதோ கடன் பிரச்சனையிலும் இருக்கிறானோ என்று எங்களுக்கு ஒரே பயம்!மலேசியாவில் ஆலோங்கிடம்(வட்டி முதலைகள்)சிக்கினால் ,ஆபத்து நம் வீட்டுக் கதவைத் த்ட்டிக்கொண்டே இருக்கும்????நண்பர்களை அழைத்து ‘அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேளுங்கடா,பிறகு ஏதாவது சிக்கலில் மாட்டி ,அவனை இழக்க வேண்டாம்னு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன்.’சும்மா இருங்க செல்வி,அவன் நம்மை நினைப்பதே இல்லை,போன் பண்ணுவதும் இல்லை ,நமக்கு மட்டும் என்ன அக்கறை??யாருக்குத்தான் பிரச்சனை இல்லை??நீங்கதான் அவனைத் தூக்கி தலையிலே வச்சிப்பிங்கன்னு’கடிந்து கொள்வானுங்க!

                இப்படியே நாட்கள் உருண்டோடின!அவனுடைய நட்பு அடியோடு விட்டு போனது என்றே சொல்லலாம்.  இப்படி இருக்க ஒருநாள் ,சமிக்ஜை விளக்கில் நின்றுகொண்டிருந்தேன் ஒரு நோயாளியாக, என் காரில்(உடல் நலம் சரியில்லை)அப்பொழுது ,யாரோ என் கார் கதவைத் தட்டுவதை உணர்ந்தேன்,நண்பன் மணிமாறன்,நான் சரியான சூழலில் இல்லை என்பதால் (அவன் மீது கோபம், மேலும் என் உடல் நலமில்லை)தலையை அசைத்தேன்,அவனும் ஏதோ சொல்ல முனைந்தான் ,அதற்குள் பச்சை விளக்கு விழவே நான் காரை ஓட்டினேன்,ஆனாலும் கண்ணாடியில் அவனைப் பார்த்தேன் ,அவன் என் காரையே பார்த்துக்கொண்டு வேறு வழியில் சென்றான்.

        இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும்.  ஒருநாள் நான் காரில் போய்க்கொண்டிருந்த சமயம்,அவன் மோட்டார், என் காரை மீறிக்கொண்டு போனது,நான் உடனே ஹோர்ன் அடித்து கையை அசைத்தேன்.அவனோ திரும்பி பார்த்துவிட்டு, எந்த ரிப்ளையும் இல்லாமல் போனான்!எனக்கு அந்த தருணம்..இடி  விழுந்தது போல் இருந்தது????நான் என்ன தப்பு செய்தேன் ,ஏன் என்னைப்பார்த்தும் பார்க்காமல் போனான்???இப்படியே கேள்விகள் என்னுள் ??காரில் அழுதே விட்டேன் .உடனே வீட்டுக்கு வந்து சிவாவிடம் போன் போட்டு விசயத்தைச் சொன்னேன் .சிவா ,மற்றொரு நண்பன் ,அவனுக்கு மிகுந்த கோபம்!’அப்படியென்ன செல்வி பிரச்சனை அவனுக்கு??இருங்க நான் போன் பண்ணிக் கேட்கிறேன்’ என்றான்.நானும் அவன் போன் பண்ணி என்ன சொல்லுவான் என் பெரிதும் எதிர்பார்த்தேன்.ஒரு வேளை ,என்னைப் பழி வாங்கி விட்டானா??நான் இருந்த நிலை அவனுக்கு என்ன தெரியும் ??என்றெல்லாம் என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது!!

        இரண்டு நாட்கள் கழித்து ,சிவா போன் பண்ணினான்.’செல்வி ,நான் அவனை நல்லா திட்டிவிட்டேன்,’செல்வி யாருடா ,ஏன் அவுங்களைப்பார்த்தும் பார்க்காமலும் போய்விட்டாய்’அந்த அளவு உனக்கு திமிரா என்றெல்லாம் கேட்டுள்ளான்!’சரி சிவா,அது கிடக்கட்டும் ,அதுக்கு மணி என்ன சொன்னான்’ என்று கேட்டேன்??’டேய் ,செல்வியை சந்திக்க உடனே ஏற்பாடு பண்ணு ‘என்று கூறினான் , என்றான் .சரி நானும் சம்மதிதேன்.

         என் வீட்டுக்கு இருவரும் வந்தனர்.சாப்பிட்டுவிட்டு பேச்சைத் தொடங்கினேன்.’மணி உனக்கு என்ன பிரச்சனை என்றேன்?’செல்வி உங்களுக்கு என்னை எத்தனை வருடங்களாக தெரியும்?? ‘என்று கேட்டான்.’இது என்ன கேள்வி மணி??’ என்றேன்.’இல்லை சும்மா சொல்லுங்க’ என்றான்.நானும் நட்பின் வயதைக் கூறினேன்.’செல்வி நீங்க என்னைப் பார்த்து ,ஹோர்ன் அடித்துச் சென்றபொழுது ,நான் கண்ணாடி அணிந்திருந்தேனா ???’என்று கேட்டான்.’சரியா ஞாபகம் இல்லை என்றேன்.நான் அன்று கண்ணாடி அணியவில்லை.நீங்கள் மட்டும் அல்ல பள்ளியிலும் எனக்கு இதனால் பல பிரச்சனைகள். அன்று எனக்கு ஹோர்ன் சத்தம் மட்டுமே  கேட்டது ,யாரென்று என்னால் தொலைவிலிருந்து பார்க்க முடியவில்லை’என்று விளக்கினான்.’அடடா .வீணாக கோபப்பட்டு விட்டோமே’என்று கொஞ்சம் தலை குனிந்தேன்.மன்னிப்புக் கேட்டேன்!

    அடுத்து அவனுடைய turn??விடுவானா என்னை??’ஓகே செல்வி ,என் தவற்றை நான் கூறி விட்டேன் ,இப்போ நீங்கள் சொல்லுங்க ‘அன்று சமிக்ஜை விளக்கில் ,நான் உங்க கார் கண்ணாடியைத் திறக்க சொல்லித் தட்டினேன்,ஆனால் நீங்கள் திறக்கவே இல்லை,ஆனால் உங்கள்  கையை கன்னத்தில் வைத்து ‘காய்ச்சல்’என்று சொல்வதுபோல சைகை மட்டும் காட்டி விட்டு சென்றீர்கள்??அப்படி என்ன என் மீது கோபம் செல்வி’என்று குற்றவாளியைப்போல் கேள்வி கேட்டான்.நான் ‘கொள்’என்று சிரித்தேன் காரணம்  எனக்கும் கண்ணாடித்தானே பிரச்சனை??ஆமாம்,என் டிரைவ்ர் சீட் கண்ணாடி இறக்க முடியாமல் பழுதாகி விட்டது,ஒரு ஒன்றரை மாதமாக கண்ணாடி அப்படித்தான் இருந்தது.அதனால்தான் நான் கண்ணாடியைத் திறக்கவில்லை மணி’என்றேன்.சிவா இருவரையும் பார்த்தான் .ஒரு சின்ன விசயம் ,ஆனால் என்னவெல்லாம் நடந்துவிட்டது??செல்வி பண்ணிய ஆர்ப்பாட்டம் இருக்கே??சாரிடா மணி நான் வேற உன்னை நல்லா திட்டிவிட்டேன்’என்று அவனை ஆசுவாசப்படுத்தினான்.மணி ரொம்ப பொறுமைசாலியும் கூட!அதனால் நான் தப்பித்தேன் .’நல்லவேளை நான் இருவரையும் சந்திக்க வைத்தேன்,இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் ?என்று அங்கலாய்த்துக்கொண்டான் சிவா!பிறகு அவனுக்கு ஏற்ட்ட பல பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கூறி,எங்களிடம் கேப் ஏற்படுத்திக்கொண்ட காரணத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்டு  விடைப்பெற்றான்.

        இதுதான் தீர விசாரிப்பது நலம் என்று சொல்கிறார்களோ??
    
**இந்த வேளையில் ,வாலில் சுட்ட சில வரிகள் நினைவுக்கு வந்தன:
எந்த ஒரு காயத்திற்கும் 
நண்பன் மருந்தாவான். 
ஆனால் ,
நண்பன் ஏற்படுத்தும் 
காயத்திற்கு மருந்தே இல்லை.
எனவே ,
யாரையும் காயப்படுத்தாதிருங்கள் .........!
                                                                                    

Tuesday, 24 January 2012

மயிரிழையில் உயிர் தப்பினோம்!!!!!!

அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன!!!இருப்பினும் ,இன்றும் பசுமரத்தாணிப்போல ,என் மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது ,அதற்கு காரணம் நாங்கள் (என் தோழியும்)தப்பித்து வந்த அந்த நொடிகள்!!!!!!

       ஆம்,அந்த வருடம் நாங்கள், எஸ்.பி.எம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரம்!!!பஸ்ஸில்தான் போவோம்!அம்மா கணக்கா ,சாப்பாடு  ,பஸ் கட்டணம் என்று கணக்கா ரிம1.50 காசு கொடுப்பார்!!கொடுக்கும் ஃபைனன்சை சரியாக யூஸ் பண்ண வேண்டும்,இல்லையென்றால் ,பள்ளி முடிந்து’ நடடா ராசா, நடடா கதைதான்!!!!அன்று கணிதம் பரிட்சை!பரிட்சைக்கு போகும்போதே (கணிதம் என்றாலே எனக்கு ராகு கேது எல்லாமே நிற்பாங்க????)பஸ்ஸைத் தவர விட்டோம்அவசர அவசரமாக போய் பரிட்சை ஹாலில் சேர்ந்தோம்!!(அப்படி போயும்  ,ஒன்னும் பெரிசா மார்க் கிடைக்கல??)

            என்னமோ பிரசவம் முடிந்து ,வெளியே வந்ததுபோல் ஒரு களைப்பு(உருப்படியாக படிச்சா ,ஏன் இந்த பதற்றம்????)ரொம்பவும் களைத்துப்போய் ,கொஞ்ச தூரம் நடந்துதான் ,பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகனும்!அலுத்து ,சலிச்சி ,வெயிலில் நடந்து போய் பஸ் ஸ்டாண்டைச் சேர்ந்தோம்!அந்த சமயம் பள்ளி விடுமுறை ,மலேசியாவில் அரசு தேர்வு என்றால் ,பிற வகுப்புக்கு விடுமுறை கொடுப்பாங்க!அதுக்கு காரணம் மற்ற மாணவர்களால் ,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொல்லை வரக்கூடாதுன்னுதான்???

     அதனால் ,அன்று பஸ் ஸ்டாண்ட் கூட்டம் குறைவுதான்!!!பஸ் வந்தது ,ஏறினோம் ,ஏதோ பின்னாடி ஒரே சத்தம்!!!என்னவென்று பின்னால் எட்டியும் ,எம்பியும் பார்த்தேன்(தெரியாமல் போய்ட்டா ,தூக்கம் வராதே??ஊரான்வீட்டு கதை?????)ஒரு குடிகாரர்(எந்த இனம் என்று சொல்லவேண்டாமே)ஆனால் தமிழர்,சீனன்,மலாய்க்காரன் அல்ல???பிறகு???அது சஸ்பெண்ட்ஸ்!!!!!குடித்து விட்டு ஒரே ஆர்ப்பாட்டம்!ஆம் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரே சத்தம் !யாரும் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,குடிகாரனுக்கு அதுதானே மரியாதை????மேலும் ,அது நிறைய கூட்டம் இல்லாத நேரம் ,ஆகவே பஸ்ஸில் ,ஆங்காங்கே பயணிகள் அமர்ந்திருந்தனர்,நிறைய சீட் காலியாக இருந்தன!!

          பஸ் காண்டக்டர் ,அவ்வப்போது அந்த குடிகாரனை ,ஓய் டியாம்லா!!(ஓய் பேசாமல் இரு)அப்படின்னு அவர் வேலையில் கவனமாய்!!நானும் என் தோழியும் ,டிரைவர் சீட் அருகே போய் உட்கார்ந்தோம்!!படு போதையில் இருந்த அந்த நபர்,பஸ் குலுங்க குலுங்க ,அங்கும் இங்குமாய் ,ஆடி ஆடி ,எங்களுக்கு அருகில் வ்ந்து சேர்ந்தார்!!(சனி பெயர்ச்சியில் ,சனி புலம் பெயர்ந்து என் ராசிக்கு பக்கத்தில் வந்ததுபோலவே????)ஒரே சம்சு வாடை(சாராயம்)!!!!பஸ் ஓடிக்கொண்டிருந்த சமயம் ,டிரைவர் சடென் பிரேக் போட்டார் பாருங்க,அந்த குடிகாரர் ,தடாலென கீழே (என் காலுக்கு அருகே)வந்து விழுந்தார்!!!!!எனக்கு சிரிப்பு தாங்கல???????என் தோழிக்கு அதைவிட!!!!!!!கொள்லென்று சிரித்தோம்.........அடுத்த கணம் ,அந்த குடிகாரக்கு மானம் போனது (இருந்துச்சோ????)’ஓய் அப்பா லு பாவா பஸ்????(ஓய் ,நீ எப்படி பஸ் ஓட்டுற )என்ற சத்தம்!!!ஓட்டுனரும் ,பதிலுக்கு ‘ஒய் மாபுக்(டேய் குடிகாரா)பேசாமல் உட்காருடா ‘என்று கத்த ,அந்த குடிகாரருக்கு கோபம்!!!!எடுத்த எடுப்பில் ,உடல் உறுப்பில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளயும் சொல்ல ,அடுத்த நிமிடம் ,நான் விழுந்து விழுந்து சிரிக்க,மனுசன் ஓடி வந்து என் அருகில்’ஏய் என்ன சிரிப்பு ,ஒழுங்கா இரு’இல்லை என்ன செய்வேன் தெரியுமா என்று கை நீட்டி என்னைத் திட்டினார்??????ஐயோ ,கத்தியை உருவி, கழுத்தில் வைத்தால் எப்படி இருக்கும்??அதுபோல ஒரு ஃபீலிங்!!!!!!!!!வியர்த்துக்கொட்டியது,உட்கார்ந்திருந்தும் ,உடல் தூக்கி எறிவதுப்போல ஓர் பதற்றம்!!!!! இந்த பாழாய்ப்போன சிரிப்பு வேறு(கெட்ட வார்த்தை ஞாபகம்)????

       அடுத்த நிமிடம் ,ஓட்டுனர் ,ஓய் பேசாமல் போய் உட்கார் ,உதை வேண்டுமா ??என்று எங்களைக் காப்பாற்ற போய் ,சிங்கத்தின் வாயில் தள்ளிவிட்டார்!!ஆம் ,அவர் கத்தியவுடன் மேலும் கோபமடைந்த குடிகாரன்,காலில் அணிந்திருந்த செருப்பை(சாதாரண ரப்பர் செருப்புதான்)கழற்றிக்கொண்டு ,ஓட்டுனரை நோக்கி ஓடினார்!!!!!!!ஓட்டுனர் கையில் ஸ்டேர்ரிங் ஆயுதமாய் இருந்ததால் ,மீண்டும் ஒரு சட்டென் பிரேக்!!!!!!!!!!!!!!!!!!!!!!தடால் என் குடிகாரன் விழ,நாங்க சிரிக்க,சிரிக்க......அவசர அவசரமாக எழுந்த குடிகாரன் ,செருப்பை ஏந்திக்கொண்டு என் அருகில் ஓடி வந்தார்!!!!!!!!!!!!!!!!ஐயோ???????இன்று யார் முகத்தில் முழித்தேனோ??????என் சிரிப்புக்கு பரிசு,செருப்படியா????நான் கொஞ்ச நேரம் செத்தேபோனேன்??????என்றுதான் சொல்லனும்!!!!!!!!!!!ரத்தம் உறைந்து போனது,உடல் ஜில்லென ஆகியது!!!!!குடிகாரன் செருப்புடன் என் கன்னம் அருகே?????

             சர்ச் ,மசூதி ,கோவில்கள் உட்பட எல்லா கடவுளும் என் கண் முன்னே!!!!ஆடாமல் ,அசையாமல் பிணமாய் (அசைந்தால் செருப்படி திண்ணம்??)சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன்..பீதி..பேதியாகாத குறைதான்....!!!!இருப்பினும் ,ஏதோ ஒரு சாமி ஹெப்ல் பண்ணியது!!!!பின்னாலே இருந்து ,ஒரு குரல்,;டேய் குடிகார ,பேசாமல் உட்காருடா!!!குரல் மட்டுமே,யாருமே ஓடி வந்து காப்பாற்றமாட்டாங்களோ??என் மனக்குமுறல்(அதுக்கும் நேரம் இருந்தது,அதான் ஆச்சரியம்????)குரலைக் கேட்ட குடிகாரர்,கொஞ்சம் செருப்பை திசைத் திருப்பி,பின்னால் பார்த்தவாறு’எவனுக்கு என்னை திட்ட தைரியம்,வாங்கடா ,வாங்க’ன்னு கத்தும் அந்த தருணம்,நான் மெதுவாக தலையைத்  திருப்பி ,நாம் அடி வாங்க போகும்,அந்த செருப்பை பார்க்கலாமேன்னு பார்த்தால்???ஐயோ ,சாதாரண ரப்பர் செருப்புதான் ,ஆனால் அதில் ஒட்டியிருந்த பொருட்கள்???சுவிங் கம்,புல்...?????

                 ஐயோ ......அழுவதற்குள்,தெய்வாதினமாய் யாரோ மணி அடிக்க,பஸ் நின்றது!!!!!நான் என் தோழியின் கை இழுத்துகொண்டு ‘வா இறங்கிடலாம்னு,தடால் புடாலென்று ,மணி அடித்தவர் இறங்குவதற்குள் நாங்க பஸ்ஸிலிருந்து இறங்கினோம்..இல்லை குதித்தோம்!!!!!!!!!!அந்த பஸ் ஸ்டாண்ட் நாங்க இறங்கும் இடத்திலிருந்து ,மூன்று ஸ்டாண்ட் முன்னமே இறங்கிட்டோம்,செருப்படி வாங்க தயாரில்லை,தைரியமுமில்லை.!!!!!!!!

            இறங்கி ,ஓடிப்போய் கொஞ்ச தூரம் தள்ளி,உடம்பே உதறுது ஆனால் சிரியோத்தனமாய் சிரிக்க ,என் பின்னால் இறங்கிய மலாய்க்காரர்’ஏன் அப்படி பயம்,அப்படியா அடிச்சிடுவான் குடிகாரன்,நாங்க இருக்கோம்ல????ஆனால் பஸ்ஸில் ஒன்னுமே பேசல??வெட்டி தைரியம் சொல்லிச் சென்றார்!பஸ்ஸும் நகர்ந்தது,இறைவா ,மயிரிழையில் உயிர் தப்பினோமே????என்று பெருமூச்சு விட்டு ,ஃபைனான்ஸ் காரணமாக நடந்தே(நடக்ககூட தெம்பே இல்லை,அப்படி ஒரு உதறல் +  சிரிப்பு) ..இல்லை சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!
             சம்பவம் நடந்து பல வருடங்கள்தான்,ஆனால் இன்று எழுத காரணம்,என் மகள் ‘அம்மா எப்போ பார்த்தாலும் காரில்தான் வெளியே போகிறோம்,இன்று ஒருநாளாவது பஸ் பயணம் செய்யலாமெனெ ,வற்புறுத்தி பஸ்ஸில் கடைக்கு அழைத்துச் சென்றாள்!!!!!!!!!!!!!!!!!!!கதையைக் கேட்ட அவள் ,என்னிடம் கேட்ட கேள்வி,அப்படி அந்த குடிகாரன் அடித்திருந்தால் ..அம்மாவின் ரியாக்சன் என்ன????                                        
                                                                         

Sunday, 1 January 2012

என் எண்ணம் தப்பா???

                     அன்று ஒரு வேலையாக ,வெளியே போக தம்பி வந்து காரில் ஏற்றிச் செல்வதாக சொன்னான்!நானும் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு,ரொம்ப அழ்காக(உறவினர் வீட்டுக்குப்போவதால்)உடை உடுத்திகொண்டு ,கிளம்பினேன்!பொதுவாக புடவை என்றாலே கட்டுவதற்கு சோம்பல் படுவேன்!!ஆனால் கட்டினால் அழகாக இருப்பதாக, எனக்கு ஒரு நெனப்பு?????(மற்றவர்களும் சொல்வதால்தான்,இல்லாவிட்டால் ,தைரியமாக சொல்லுவேனா??)

                       எங்கள் அப்பார்ட்மெண்டில்,மலேசியர்களை விட அந்நிய நாட்டினர் அதிகம்,அவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் அவ்வப்போது இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்!!நீக்ரோஸ்,இண்டோன்,பங்ளாதேசி,பாகிஸ்தானி மேலும் தமிழ்நாட்டு நண்பர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்!!!பொதுவாக இவர்களில் யாராவது பேசினால்(அவர்களுக்கு நம்மிடம் பேசரொம்ப ஆர்வம்)நான் பதில் சொல்வது ரொம்ப குறைவு!!!ஆனால் தமிழ்நாட்டு நண்பர்கள் என்றால் பதில் சொல்லுவேன்.ஆகவே நம் நண்பர்கள் ரொம்ப நல்லாவே பேசுவார்கள்!!
சிலவேளைகளில்,’அக்கா ,கணவர் எங்கே(அவரும் பழக்கம்)?,இன்னிக்கு ஸ்கூல் போகலையா?,அக்கா இன்னிக்கு உங்க டிரெஸ் அழகாக இருக்குன்னு,பேசுவாங்க!ஆனால் சிலர் பேசமாட்டார்கள்,ஏனோ தெரியாது..நம்மை வெறித்துப்பார்ப்பார்கள்??ஒருவேளை ,நம் இனம் என்ற உள்ளுணர்வோ அல்லது பேச ஆசை ஆனால் பயப்படுவார்களோ ???தெரியாது.

                     சரி கதைக்கு வருவோம்!சம்பவம் நடந்த அன்று,நான் ஹேட்ண்பேக்கை எடுத்துக்கொண்டு ,தம்பி ‘கார்ட் ஹவுசில்’வந்து நில்லு என்றதால் ,நடந்து வெளியே போனேன்!!அந்த சமயம் பார்த்து,குப்பைகளை வீச சென்ற நம் நண்பர் ஒருவர் ,என்னைப் பார்த்தார்,எத்ரெதிரே வந்ததால் சிரித்தார்!நானும் புதிய முகம் என்பதால் ,வேண்டாவெறுப்புக்கு சிரித்தேன்.சிறிது வினாடிக்குள்,குப்பைகளை வீசியவர்,என் பின்னால் வேகமாக நடந்து வருவதை உணர்ந்தேன்,நான் நடையை வேகமாக்கினேன்,அவர் செருப்பு சத்தம் வேகமாகியது!என்ன இது???இவ்வளவு தைரியமா உனக்கு??(என் திட்டல்)நான் இனி வேலைக்கு ஆகாது, என்று வியர்க்க விறுவிறுக்க ஓட ஆரம்பிச்சேன்(சும்மா ஓடுவதுபோல் ஆக்டிங்),என்ன ஆச்சரியம்,அவரும் ஓடி(இல்லை ,துரத்த)வந்தார்????என்ன தைரியம்,பட்ட பகலில்??எங்க ஏரியாவில்??வா..வா..என் தம்பி கார்ட் ஹவுசில் ,நிற்கிறான்,இன்றைக்கு ‘உன்னை நையப்புடைக்க சொல்கிறேன்’என்று மனதில் திட்டிக்கொண்டே மெதுவாக ஓடினேன்.

                        கார்ட் ஹவுசும் வந்துவிட்டது!தம்பி காரும் நின்றுகொண்டிருந்தது!!இப்போ,கொஞ்சம் திமிராக நடையை வேகமாக்கி ,காரை நோக்கிசென்றேன்(ஆள் இருக்கும் தைரியம்).ஆனால்,அவரோ இன்னும் வேகமாக ,என்னைத்தாண்டி ஓடினார்??????எனக்கு ஒன்றும் புரியல??என்ன ஆச்சு,ஏன்..இன்னும் எங்கே என்று திரும்பி அவர் திசையை நோக்கிப்பார்த்தால்,மனுசன் அறக்கப்பறக்க ஓடோடி ,அங்கே கிளம்புவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த 12பி பஸ்ஸைப் பிடிக்க ஓடி,அவசர அவசரமாக உள்ளே ஏறினார்???????????????????ஐயோ,’நான் தப்பாக ஒரு நண்பரை நினைத்துவிட்டோமே??”என்று ஒரு கணம் ,முகம் தெரியாத அந்த ஜீவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்!!கொஞ்சநேரம் நானே என்னைத் திட்டித் தொலைத்தேன்!
                          பொதுவாக கோலாலும்பூர் போகும் டவுன்பஸ்கள் அங்கேதான் நிற்கும்,பாவம் அவருக்கு என்ன அவசரமோ???ஆனால் என் எண்ணம் தப்பா???
நான் தற்பொழுது நடக்கும்,சம்பவங்களை வைத்துதானே முடிவெடுத்தேன்??அது தப்பா??அன்று ,இறைவனின் புத்தகத்தில், என் பேஜில் ஒரு ’சிகப்பு மார்க்’விழுந்திருக்கும்??? ,இன்றும் என் செயலைக் கண்டு   என் மனம்  சிரிக்கிறது???????????இதெல்லாம் தப்பா??.