Tuesday, 31 January 2012

தீர விசாரிப்பதே நலம்!!!!

       அண்மையில் எனக்கும், என் பள்ளி நண்பன் மணிமாறனுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவம் இது!!!மணிமாறனை எனக்கு,என் பதின்ம வயதிலிருந்தே பழக்கம்!மிகவும் அருமையானவன்!என் ஆண் நண்பர்கள் நான்குபேர்,இவர்கள் எல்லாமே என்னைவிட இளைய வயதினர்,ஆகவே மூத்தவள்(அக்காள்)என்ற பக்தியும் மரியாதையும் அதிகம் என்றே சொல்லலாம்!அதில் மணிமாறன் என்னோடு கொஞ்சம் நெருக்கம்,காரணம் ,அவன் குடும்ப உறுப்பினர்கள்(அம்மா,அண்ணி மற்றும் அக்காள் தங்கை )எல்லாமே எனக்கு அறிமுகம்!!அவனுக்கு  13வயது  இருக்கும் பொழுது மூக்குகண்ணாடி அணிய ஆரம்பித்தான்.நாளடைவில் ,ரொம்ப பவர் காரணமாக ,மிகவும் மொத்தமான கண்ணாடி போடுவான்,கண்ணாடியின் உதவியின்றி அவனால் பார்க்க கொஞ்சம் கஷ்டம்னு சொல்லலாம்!

                    அவனுடைய பிரச்சனைகள் அனைத்தையும் என்னிடம் சொல்லுவான்.சோல்யூசன் கேட்பான்!பணப்பிரச்சனை,மனப்பிரச்சனை,வீட்டுப்பிரச்சனை எல்லாவற்றையும் சொல்லுவான்!பல நாட்களில், பண விசயத்தில் நான் அவனுக்கு உதவியதும் உண்டு(என்னிடம் பணம் அதிகம் இருந்த காலம்)!ஒரு பெண்ணைக் காதலித்து,தோல்வியடைந்தான்,அந்த சமயத்தில் நண்பர்காளான நாங்கள், அவனை ஆறுதல் படுத்தி,அறிவுரைச் சொல்லி மீட்டுக்கொண்டு வர பட்ட சிரமங்கள் இருக்கே?????என் வீட்டில் என் நண்பர்கள் அனைவரையும் என் உடன்பிறப்புகளுக்கு தெரியும்,ஆனாலும் மணி அதிக   உரிமையோடு வீட்டுக்கு  வந்து போவான்.
             
  இப்படியெல்லாம் பழகி வந்த மணிமாறன்,திடிரென என்னை விட்டு கொஞ்சம் விலக ஆரம்பித்தான்,என்னை மட்டுமல்ல, எங்கள் அனைவருடைய நட்பையும் விட்டு!இது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது!அவன் நாத்திகம் பேசுபவன் ஆனால் கொஞ்சகாலமாக சாமி கும்பிடுவதும்,மூடநம்பிக்கைகளை நம்புவதும் போன்ற விசயங்களை , நாங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து  கேள்விப்பட்டோம்!!குடும்பத்தில் நிறைய பிரச்சனை(பொறுப்பில்லாத அண்ணன்,திருமணம் ஆகாத மூன்று தங்கைகள் ,நோயாளி பெற்றோர்கள் என பல பொறுப்புகள்)அவன் தலையில்!!!
       
                பிரச்சனை அவனை நெருக்கவே ,அதிலிருந்து மீள முடியாமல் சிக்கி தவித்தான்.மற்ற நண்பர்களும் ‘செல்வி மணி போனே பண்ணுவதில்லை,உங்களைக் கூப்பிட்டானா ‘என்று என்னை நச்சரிப்பார்கள்.நாளடைவில் போன் பண்ணினாலும் எடுப்பதில்லை???         ஏதோ கடன் பிரச்சனையிலும் இருக்கிறானோ என்று எங்களுக்கு ஒரே பயம்!மலேசியாவில் ஆலோங்கிடம்(வட்டி முதலைகள்)சிக்கினால் ,ஆபத்து நம் வீட்டுக் கதவைத் த்ட்டிக்கொண்டே இருக்கும்????நண்பர்களை அழைத்து ‘அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கேளுங்கடா,பிறகு ஏதாவது சிக்கலில் மாட்டி ,அவனை இழக்க வேண்டாம்னு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பேன்.’சும்மா இருங்க செல்வி,அவன் நம்மை நினைப்பதே இல்லை,போன் பண்ணுவதும் இல்லை ,நமக்கு மட்டும் என்ன அக்கறை??யாருக்குத்தான் பிரச்சனை இல்லை??நீங்கதான் அவனைத் தூக்கி தலையிலே வச்சிப்பிங்கன்னு’கடிந்து கொள்வானுங்க!

                இப்படியே நாட்கள் உருண்டோடின!அவனுடைய நட்பு அடியோடு விட்டு போனது என்றே சொல்லலாம்.  இப்படி இருக்க ஒருநாள் ,சமிக்ஜை விளக்கில் நின்றுகொண்டிருந்தேன் ஒரு நோயாளியாக, என் காரில்(உடல் நலம் சரியில்லை)அப்பொழுது ,யாரோ என் கார் கதவைத் தட்டுவதை உணர்ந்தேன்,நண்பன் மணிமாறன்,நான் சரியான சூழலில் இல்லை என்பதால் (அவன் மீது கோபம், மேலும் என் உடல் நலமில்லை)தலையை அசைத்தேன்,அவனும் ஏதோ சொல்ல முனைந்தான் ,அதற்குள் பச்சை விளக்கு விழவே நான் காரை ஓட்டினேன்,ஆனாலும் கண்ணாடியில் அவனைப் பார்த்தேன் ,அவன் என் காரையே பார்த்துக்கொண்டு வேறு வழியில் சென்றான்.

        இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும்.  ஒருநாள் நான் காரில் போய்க்கொண்டிருந்த சமயம்,அவன் மோட்டார், என் காரை மீறிக்கொண்டு போனது,நான் உடனே ஹோர்ன் அடித்து கையை அசைத்தேன்.அவனோ திரும்பி பார்த்துவிட்டு, எந்த ரிப்ளையும் இல்லாமல் போனான்!எனக்கு அந்த தருணம்..இடி  விழுந்தது போல் இருந்தது????நான் என்ன தப்பு செய்தேன் ,ஏன் என்னைப்பார்த்தும் பார்க்காமல் போனான்???இப்படியே கேள்விகள் என்னுள் ??காரில் அழுதே விட்டேன் .உடனே வீட்டுக்கு வந்து சிவாவிடம் போன் போட்டு விசயத்தைச் சொன்னேன் .சிவா ,மற்றொரு நண்பன் ,அவனுக்கு மிகுந்த கோபம்!’அப்படியென்ன செல்வி பிரச்சனை அவனுக்கு??இருங்க நான் போன் பண்ணிக் கேட்கிறேன்’ என்றான்.நானும் அவன் போன் பண்ணி என்ன சொல்லுவான் என் பெரிதும் எதிர்பார்த்தேன்.ஒரு வேளை ,என்னைப் பழி வாங்கி விட்டானா??நான் இருந்த நிலை அவனுக்கு என்ன தெரியும் ??என்றெல்லாம் என் மனம் என்னை ஆறுதல் படுத்தியது!!

        இரண்டு நாட்கள் கழித்து ,சிவா போன் பண்ணினான்.’செல்வி ,நான் அவனை நல்லா திட்டிவிட்டேன்,’செல்வி யாருடா ,ஏன் அவுங்களைப்பார்த்தும் பார்க்காமலும் போய்விட்டாய்’அந்த அளவு உனக்கு திமிரா என்றெல்லாம் கேட்டுள்ளான்!’சரி சிவா,அது கிடக்கட்டும் ,அதுக்கு மணி என்ன சொன்னான்’ என்று கேட்டேன்??’டேய் ,செல்வியை சந்திக்க உடனே ஏற்பாடு பண்ணு ‘என்று கூறினான் , என்றான் .சரி நானும் சம்மதிதேன்.

         என் வீட்டுக்கு இருவரும் வந்தனர்.சாப்பிட்டுவிட்டு பேச்சைத் தொடங்கினேன்.’மணி உனக்கு என்ன பிரச்சனை என்றேன்?’செல்வி உங்களுக்கு என்னை எத்தனை வருடங்களாக தெரியும்?? ‘என்று கேட்டான்.’இது என்ன கேள்வி மணி??’ என்றேன்.’இல்லை சும்மா சொல்லுங்க’ என்றான்.நானும் நட்பின் வயதைக் கூறினேன்.’செல்வி நீங்க என்னைப் பார்த்து ,ஹோர்ன் அடித்துச் சென்றபொழுது ,நான் கண்ணாடி அணிந்திருந்தேனா ???’என்று கேட்டான்.’சரியா ஞாபகம் இல்லை என்றேன்.நான் அன்று கண்ணாடி அணியவில்லை.நீங்கள் மட்டும் அல்ல பள்ளியிலும் எனக்கு இதனால் பல பிரச்சனைகள். அன்று எனக்கு ஹோர்ன் சத்தம் மட்டுமே  கேட்டது ,யாரென்று என்னால் தொலைவிலிருந்து பார்க்க முடியவில்லை’என்று விளக்கினான்.’அடடா .வீணாக கோபப்பட்டு விட்டோமே’என்று கொஞ்சம் தலை குனிந்தேன்.மன்னிப்புக் கேட்டேன்!

    அடுத்து அவனுடைய turn??விடுவானா என்னை??’ஓகே செல்வி ,என் தவற்றை நான் கூறி விட்டேன் ,இப்போ நீங்கள் சொல்லுங்க ‘அன்று சமிக்ஜை விளக்கில் ,நான் உங்க கார் கண்ணாடியைத் திறக்க சொல்லித் தட்டினேன்,ஆனால் நீங்கள் திறக்கவே இல்லை,ஆனால் உங்கள்  கையை கன்னத்தில் வைத்து ‘காய்ச்சல்’என்று சொல்வதுபோல சைகை மட்டும் காட்டி விட்டு சென்றீர்கள்??அப்படி என்ன என் மீது கோபம் செல்வி’என்று குற்றவாளியைப்போல் கேள்வி கேட்டான்.நான் ‘கொள்’என்று சிரித்தேன் காரணம்  எனக்கும் கண்ணாடித்தானே பிரச்சனை??ஆமாம்,என் டிரைவ்ர் சீட் கண்ணாடி இறக்க முடியாமல் பழுதாகி விட்டது,ஒரு ஒன்றரை மாதமாக கண்ணாடி அப்படித்தான் இருந்தது.அதனால்தான் நான் கண்ணாடியைத் திறக்கவில்லை மணி’என்றேன்.சிவா இருவரையும் பார்த்தான் .ஒரு சின்ன விசயம் ,ஆனால் என்னவெல்லாம் நடந்துவிட்டது??செல்வி பண்ணிய ஆர்ப்பாட்டம் இருக்கே??சாரிடா மணி நான் வேற உன்னை நல்லா திட்டிவிட்டேன்’என்று அவனை ஆசுவாசப்படுத்தினான்.மணி ரொம்ப பொறுமைசாலியும் கூட!அதனால் நான் தப்பித்தேன் .’நல்லவேளை நான் இருவரையும் சந்திக்க வைத்தேன்,இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்கும் ?என்று அங்கலாய்த்துக்கொண்டான் சிவா!பிறகு அவனுக்கு ஏற்ட்ட பல பிரச்சனைகளையும் சிக்கல்களையும் கூறி,எங்களிடம் கேப் ஏற்படுத்திக்கொண்ட காரணத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்டு  விடைப்பெற்றான்.

        இதுதான் தீர விசாரிப்பது நலம் என்று சொல்கிறார்களோ??
    
**இந்த வேளையில் ,வாலில் சுட்ட சில வரிகள் நினைவுக்கு வந்தன:
எந்த ஒரு காயத்திற்கும் 
நண்பன் மருந்தாவான். 
ஆனால் ,
நண்பன் ஏற்படுத்தும் 
காயத்திற்கு மருந்தே இல்லை.
எனவே ,
யாரையும் காயப்படுத்தாதிருங்கள் .........!
                                                                                    

12 comments:

 1. Replies
  1. நெல்லை ராம்,நன்றி சார்!

   Delete
 2. எதுக்கு இங்கே இந்தப் புகைப்படம், ஸ்ஃகூபிப்டுபி புன்னகையில்?

  ReplyDelete
 3. இரு மணிக்கிட்ட போட்டுகொடுக்கறேன்.. நீ அவனைப்பத்தி டமாரம் அடிக்கிறாய் என.

  ReplyDelete
  Replies
  1. sCOOBY சிரிப்பு ,எவ்வளவு அழகு தெரியுமா அக்கா???மணிக்குத் தெரியும் ,நான் எதைச் சொல்வேன் ,சொல்லமாட்டேன்னு??என் நண்பர்கள் இன்னும் என்னை ஆழமாக புரிந்துவைத்துள்ளனர் அக்கா??(இரு பெர்சனல் ,மேசஜ்ஜிக்கு வரேன்!!!)

   Delete
 4. அந்த போட்டோவில் இருக்கும் சாமியாரிணி யார்?????? மேட்டருக்கு சம்பந்தமில்லாமல் இவர்கள் படம்?????????

  ReplyDelete
  Replies
  1. மணியின் படம் இல்லை விஜி,அதான் என் படம்!!அழகான படம்,இல்லையா???

   Delete
 5. கண்ணால் காண்பதும் பொய்.... காதால் கேட்பதும் பொய்..... தீர விசாரிப்பதே மெய். நல்ல பதிவு. வாழ்த்துகள் தோழி.

  ReplyDelete
 6. //அந்த போட்டோவில் இருக்கும் சாமியாரிணி யார்?????? மேட்டருக்கு சம்பந்தமில்லாமல் இவர்கள் படம்?????????//

  சாமியாரிணி இல்லை....என்னோட அழகு அண்ணி:-)

  ReplyDelete
 7. சில சின்ன சின்ன புரிதல் கோளாறு தான் பெரிய இடைவெளியை உருவாக்குது...உங்க விவரிப்பு தன்மை
  நல்லா இருக்கு அண்ணி...

  ReplyDelete
 8. அண்ணி....உங்க படைப்பில் முக்கியமா என்னை கவர்ந்த விஷயம்,முடிஞ்சவரை தமிங்க்லிஷ் ஐ
  நீங்க தவிர்த்து,நல்ல தமிழில் பதிவை கையாள்றது....

  ReplyDelete
 9. நன்றி ஆனந்தி!மிக்க மகிழ்ச்சிடா!உங்களைப்போன்ற பதிவர்கள் பாராட்டு ரொம்ப பெருமையாக இருக்கு!அண்ணி....உங்க படைப்பில் முக்கியமா என்னை கவர்ந்த விஷயம்,முடிஞ்சவரை தமிங்க்லிஷ் ஐ
  நீங்க தவிர்த்து,நல்ல தமிழில் பதிவை கையாள்றது..////எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை ஆனந்தி!மேலும் நான் தமிழச்சி ,தங்கிலிஸ்காரி அல்ல???!

  ReplyDelete