Friday, 3 February 2012

சிறார் பாலியல் சித்ரவதை!!!

அண்டத்தை ஆண்டுக்கொண்டிருக்கும்,அரன் எங்கோ ஆனந்தத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க , இங்கே இந்த அவலங்கள் அரங்கேற்றமாகின்றன???பால் குடி மறவா,பிஞ்சுகள் ‘பாலியல்’என்ற அரக்கன் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகின்றன!!!!கேவலமான இந்த செயல்கள் ,ஒரு தாயின் வயிற்றில் பிறந்த மனிதன் என்ற நாய்களால் நடத்தப்படுவதுதான் மிகப்பெரிய
வேதனை!!
                                                                                                                 
                
             முன்பெல்லாம் கற்பழிப்பு பற்றிய  செய்திகளை , நாட்டில்  எங்கோ ஒரு மூலையில்தான் கேட்டிருப்போம் ஆனால் தற்பொழுது நிமிடங்களுக்கு இத்தனை சம்பவங்கள் என் புள்ளி விவரம் காட்டுது!சிறார் பாலியல் சித்ரவதை என்ற வருத்தமான செயல்களும் அப்படியே?????இதில் வேடிக்கை என்னவென்றால் ,இது போன்ற செயல்களைச் செய்பவர்கள் வழிப்போக்கர்களோ அல்லது அறிமுகம் அல்லாதவர்களோ கிடையாது ,மாறாக வீட்டிற்கு வரும் உறவினர்கள் ,குழந்தைகள் காப்பக உறுப்பினர்கள்(எல்லோரும் அல்ல?)வீட்டு வேலைக்காரர்கள் மேலும் குழந்தைகளைப் பராமறிக்க விட்டு செல்லும் வீட்டில் உள்ள நபர்கள் ,மேலும் அம்மாவின் இரண்டாம் கணவன் ,அப்பாவின் இரண்டாம் மனைவி என் நன்கு தெரிந்த முகங்களே!!!!!
                                                                      
           பல சம்பவங்கள் ,வெட்டவெளியிலும் ,பொது இடங்களிலும்தான் நடக்கின்றன என்பது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!அதாவது குழந்தைகளை(ரொம்ப அன்பாக) உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போலவும்,பிஞ்சுகளின் பாலியல் உறுப்புகளைத்  தடவுதல் போன்றவையாகும்!ஒரு சில சம்பவங்கள்தான் ,ரகசியமாக செயல்படுத்தப்படுகின்றன!நடப்பவை நடக்கட்டும் நமக்கென்ன என்றில்லாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்போமே!ஒவ்வொரு தாயும் தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியில் பங்கெடுக்கின்றனர் ஆனால் பல வீடுகளில் பிள்ளைகளுக்கு உணவு ,பணம்,சொகுசு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டால் போதும் என்றே நினைக்கின்றனர் பெற்றோர்கள்.இது சரியா??
                                                                        
            இந்த சிறார் பாலியல் சித்ரவதைப்பற்றிய ஆய்வு(பாடம் கூட) ஒன்றினை அண்மையில், மலேசிய மகளிர் குடும்ப மேம்பாட்டுத் திட்டம் நடத்தியது.அதில் கலந்து கொண்டு பல விசயங்களை தெரிந்துகொள்ள வாய்ப்புக்கிட்டியது,பல திடுக்கிடும் தகவல்கள் என்றே சொல்லலாம்.ம்ம்ம்ம்,அம்மாவின் இரண்டாம் கணவன்(ஒரு சிலரே)இந்த செயல்களை செய்கிறான் ,பிறகு குழந்தைகளிடம் ,’யாரிடமாவது சொன்னால் ,உங்கம்மாவை கொலை செய்வேன் என்று மிரட்டுதல்,சொந்த அப்பாவே செய்கிறான் ,குழந்தைகளிடம் ‘நீ யாரிடமாவது சொன்னால் ,நான் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் என்றும் பிறகு உங்களுக்கு யார் சம்பாதித்துக்கு கொடுப்பாங்க’என்றும் செண்டிமெண்ட் பேசுவார்களாம்???வீட்டில் நம்பிக்கையாக வேலைக்காரர்களிடம் விட்டுச் செல்லும் குழந்தைகளிடம் வேலைக்காரர்கள் (ஒரு சிலரே)கைவரிசையைக் காட்டுகிறார்கள்.இங்கேயும் மிரட்டல்தானாம்!!யாரிடமாவது சொன்னால் ,உங்கள் விட்டில் எல்லோருக்கும் உணவில் விசம் வைத்துக்கொள்வேன் என்பதுதான்??இவைகளுக்கெல்லாம் பயப்படும் சிறார்கள் ஊமையாக்கப்படுகிறார்க்ள்!
                                                        
                     வேலைக்காரர்கள் என்றவுடன் ,அண்மையில் ஆசிரியர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ,ஒரு செய்தியைக் கேட்டு உறைந்து போனேன்.அந்த வீட்டில் அப்பா ,அம்மா ,பையன் மற்றும் வேலைக்காரி(எந்த இனம் என்பது ரகசியம்)!குடும்பத்தோடு ஆஸ்திரேலியா செல்ல ஏற்பாடுகள்!முதலவதாக மருத்துவப்பரிசோதனை!!சற்றும் எதிர்பாராத, அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தி அம்பலமாகிறது!இரத்தப் பரிசோதனையில் ,பெற்றோர்களுக்கு ஒன்றும் இல்லை,பையனின் இரத்தம் ‘ஹ்ச்.ஐ.வி +’?????தாய் மயங்கி விழுகிறாள்,அப்பாவுக்குப் பைத்தியமே பிடிக்கிறது!விசாரித்ததில் ,வேலைக்காரி பையனுடன் பாலியல் செயல்களில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகின்றன,வீட்டில் சொன்னால்..குடும்பமே காலி,என்றும் பையன் மிரட்டப்பட்டுள்ளான்????ஐயோ ,இனி என்ன செய்வது,கண்ணுக்கெட்டிய பிறகு சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்???’நாங்கள் வேலை வேலைன்னு போயிட்டோம்,இன்று என் பையனின் எதிர்காலம் போச்சேன்னு கதறுகின்றனர்,வேலைக்காரிக்கு தண்டனைக் கொடுக்கலாம், என்ன  பயன் ??பையனின் உயிர் ???
                                                                
         மலேசியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு,ஏழே வயது நிரம்பிய பெண் பிள்ளையின் அகோர பிணம் ,கைப்பையில் திணிக்கப்பட்டு ,ஒரு கடைத்தெருவில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது!நாட்டையே உலுக்கிய சம்பவம் அது!பிள்ளையை, பாசார் மாலாம்(இரவு சந்தையில்)கடத்திக்கொண்டுபோய்,ஒரு பொம்மையை இஷ்டப்படி என்னவெல்லாம் செய்யலாமோ,அப்படியெல்லாம் அந்த காமுகன் செய்துள்ளான்.அவன் ,அக்குழந்தைக்கு செய்த கேடுகெட்ட செயல்களை எழுத்தால் எழுதுவதோ,சொல்லால் சொல்லுவதோ அவ்வளவு சுலபமல்ல???பிள்ளையின் பிறப்புறுப்பில் ஏதோ ஆயுதங்களை நுழைத்து ,கொலை செய்துள்ள விசயம் பிரேத பரிசோதனையில் தெரிய வந்த்து!தகவல் ஊடகங்களில் ,யாருடைய வீட்டிலாவது பெண்பிள்ளை காணாமற் போயிருந்தால் ,உடனே இந்த பிரேதத்தை அடையாளம் காணலாம் என்று அறிவிக்கப்பட்டது!அந்த பெண் பிள்ளையின் பெற்றோர்கள் ,பிரேததைக் கண்டு .இது எங்கள் பிள்ளை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிள்ளை அடையாளம் தெரியாமல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள்!DNA சோதனையில் ,’என் பிள்ளை இல்லை என்று சொன்ன பெற்றோர்களே ,அந்த பிணத்துச் சொந்தம் என்று அழைக்கப்பட்டனர்!!
       பிள்ளையின் இறுதி சடங்கை வழிநடத்திய ‘ustaz' இறுதிகட்டத்தில் ,இப்படியும் மோசமாக கொலை செய்வார்களா என்று எண்ணி அழுத காட்சி ,இன்றும் என் கண்ணில் நிழலாடுகிறது??செய்தவன் மனிதன் தானே??போதை அடிமையாகத்தான் இருக்க முடியுமாம் காரணம் அவனுக்கு மட்டுமே தான் என்ன செய்கிறோம் என்பதை அறிய முடியாதாம்?????
                                                                                                                              
      
           இனி நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று ஒரு கண்ணோட்டமிடுவோம்!முதலில் ,மழலைகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்டுத்த வேண்டும்!தாயோ தகப்பனோ ,ஒரு காலகட்டம் வரையில்தான் குழந்தைகளைத் தொடமுடியும்!குழந்தைகள் ,அவர்களுடைய  பாலியல் உறுப்புகளை அறிந்து வைத்திருத்தல் மிக்க அவசியம்.அதாவது உதடு ,மார்பு,பிறப்பு உறுப்பு ,பிட்டம் போன்ற இடங்களை ,யார் எப்பொழுது தொடவேண்டும் என்று அறிந்து வைத்திருக்க கற்றுக்கொடுத்தல்!தங்களுக்கு பிடிக்காத செயல் இழைக்கப்படுகின்றது என்று உணரும் அடுத்த கட்டம் ,அவர்களுக்கு மிக அருகில் யார் இருக்கிறார்களோ ,அவர்களிடம் ஓடி சொல்ல சொல்லுங்கள்!!யாராவது ஒருத்தராவது செவி கொடுத்து,அந்த பிஞ்சுகளின் பிரச்சனைகளைக் கேட்கும் வரை ,சோர்வடையாமல் இருக்க ஆவன படுத்த வேண்டும்.தங்களுக்கு வேண்டிய நபர் செய்த குற்றம் என்றால் ,அதை மூடி மறைக்கத்தானே பலரும் செய்கின்றனர்??ஆகவே ,பள்ளியில் ஆசிரியர்களிடம் மனம் விட்டு பேசலாம்,வீட்டில் அம்மாவிடமோ .அப்பாவிடமோ பேசலாம்!அல்லது நண்பர்களின் குடும்பத்தில் சொல்லலாம் என்ற விழிப்புணர்வை ,ஒவ்வொரு சிறார் மத்தியிலும் ஏற்படுத்துங்கள்!
                                                                        
          சில நேரங்களில்,இல்லை பல நேரங்களில் தசவதாரம் படத்தில் கமல் சொல்லும் ‘இறைவன் இருந்தால் நல்லது’என்ற வசனம் நினைவுக்கு வருது?அதற்கு காரணம் ,அழியப்போகுது என்று வெறும் வதந்தியாக (ரொம்ப வருத்தமாக இருக்குது அழியமாட்டிங்குதுன்னு???) சொல்லப்படும் ,இந்த உலகத்தில்,இதுபோன்ற ஈனச்செயல்களைச் செய்யும் காமுகன்கள் அழிவதில்லையே ???அவர்களுக்கு அடுத்தப்பிறவியில் அல்லது இறந்தபின்பு(இது சைவ சமய நம்பிக்கையன்று)தான் தண்டனைக் கிடைக்குமாம்???இது என்ன நீதி???
                                                                  

9 comments:

 1. நல்ல பதிவு. ஆனால் இவ்வளவு ஆழமாக அந்த சம்பவத்தை விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து. பெண் குழந்தைகளுக்கு good touch.....bad touch..... பற்றி அறிவுறுத்த வேண்டியது மிக அவசியம். அவர்கள் தன்னிலை உணரும் வரை அவர்களை பாதுகாப்பது பெற்றோர்களின் கடமை.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி விஜி.தற்போதைய நிலமைக்கு ,அப்படித்தான் ஆழமாக புரியவைக்கவேண்டும் என்ற கட்டளை!!நீங்கள் சொன்ன குட் டச் ,பெட் டச் மிக அவசியமாக வலியுறுத்த வேண்டிய ஒன்றுகூட!!

   Delete
 2. யப்பா கண்ணுல ரத்த கண்ணீரே வருதே, கொய்யால எவானாவது ஒருத்தன் என் கையில் கிடைச்சாம்னா அருவாளால பொளந்து பீஸ் பீஸ் ஆக்கி புடுவேன் ராஸ்கல்.

  ReplyDelete
  Replies
  1. சாவடிங்க மனோ,உங்க அருவா அதுக்காவது பயன்படட்டுமே!!!

   Delete
 3. ரொம்ப ஆழமாக தைரியமாக சொல்லி இருக்குறீர்கள் செல்வி, இதை வாசிப்பவர்கள் இனி கொஞ்சமேனும் விழிப்புணரவுடன் இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை காரணம் நீங்கள் ஒரு ஆசிரியை...!!!

  ReplyDelete
  Replies
  1. இது ரொம்ப நாள் வாஞ்சை மனோ!அதான் எழுத்தாக உருவெடுத்துள்ளது!!நன்றி மனோ பாராட்டுக்கு!

   Delete
 4. இப்படி வெளி உலகுக்கு தெரியாத விஷயங்கள் இன்னும் இருந்து மனதை ரணமாக்குகிறது.

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் அறியாமைத்தான் மனோ!!

   Delete