Sunday 10 July 2011

மலரும் நினைவுகள்

நண்பர்களைப் பற்றி என்னை இங்கே எழுத பணித்த என் முகநூல் நண்பர் திரு கே.ஆர்.விஜயனுக்கு நன்றி!!
நண்பர்கள் உலகில் நான் ராணி என்பதை நான் அடிக்கடி சொல்ல பலரும் கேட்டதுண்டு..கிராமத்து பக்கத்து(பலகை)வீட்டு தோழி:பொதுவாக எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்ட நான் ,நண்பர்களைத் தேர்வு செய்வதில் மிக கவனம்!!(உன் நண்பனைச் சொல்,உன்னைப்பற்றி சொல்கிறேன்??நாங்கள் ,கிராமத்தில் பலகை வீட்டில் இருந்த பொழுது,என் பக்கத்து வீட்டில் வசித்தவள்தான் கலைமதி.நாங்கள் இருவரும் வேறு பள்ளியில்தான் படித்தோம்,ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் அவள் என் வீட்டில்,நான் அவள் வீட்டில்(இதுக்காக வீட்டில் அடி கூட வாங்கியதுண்டு!!அப்பா மற்றும் அண்ணன் இல்லாத அவள் வீட்டில் சென்று உறங்குவதும், அவள் என் படுக்கையில் உறங்குவதும் எங்களுக்கு தனி குஷி.தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே அவள் வீட்டில் உறங்கி அவர்களுக்கு பலகாரங்கள் செய்து கொடுப்பதும் வீட்டைச் சுத்தம் செய்வதும் யாருமே அனுபவித்திராத ஒரு சந்தோசம் என்றால் அது மிகையாகாது!!இடநிலைப்பள்ளிக்குச் சென்றோம். மீண்டும் அவள் வேறு,நான் வேறு பள்ளி!!எப்படியாவது என் பள்ளிக்கு இழுத்து வர நாங்கள் போட்ட திட்டம் கொஞ்ச நஞ்சமில்லை!பிறகு ....ஜப்பானிய நிறுவனத்தில் வேலை...இப்படியே எல்லா இடங்களுக்கும் பிரவேசம்..1997-இல் தமிழ்நாட்டுக்கும் நான் இழுத்துப்போனேன்.என் நட்பைவிட்டு விலக முடியாமல்?,.....என் இரண்டாவது அண்ணனை சைட் அடித்து இன்று என் அண்ணியாக என் வீட்டில்!தைரியம்,மனோதிடம் மற்றும் அழவே கூடாது என்ற அவளுடைய மனவலிமை என்னை வெகுவாக கவர்ந்தது!!அவள் அம்மா இறப்பில் கூட நாங்கள்தான் அழுது ஆர்ப்பாட்டம்!!



இடநிலைப்பள்ளி நண்பர்கள்:
நான் காலேஜ் போகாத்தால்(நல்லா படிச்சாதானே??)என் இடைநிலைப்பள்ளிதான் என் யூனிவர்சிட்டி!எனக்கு 16 வயது...(ஸ்ரீதேவிபோல)அறிமுகம் ஆன நண்பர்கள்(தம்பிகள்)சிவா,மணி,இளன்,இவா,முருகன்!எல்லோருக்கும் அடியேன் அக்கா!!ஆம் நான் மூத்தவள்..அந்த மரியாதை இன்னும் அவர்கள் மனதில் இருப்பது என் நட்புக்கு அடித்தளம்!!பள்ளியில் பல பெண்களுக்கு என் மேல் பொறாமை எங்கள் நட்பினால்??ரொம்ப அழகு,நெனப்பு..இவனுங்களும் ரொம்பதான்..என்ற முணுகல்!!அந்த நண்பர்களில் இன்றும் என்ன பிசியோ,வேலையோ என்னைத்தேடி வருபவன் சிவா!மணி எனக்கு போக்குவரத்து மினிஸ்டர்(கார் ஓட்ட தெரியாத காலங்களில்).எனக்கு போன் கூட பண்ணாமல் வீட்டு வாசலில் வந்து நிற்பான் சிவா.’ஏன் சிவா?நான் எங்காவது போயிருந்தால் என்ன செய்வாய் ’என்று கேட்டால்,இல்லை கோவில் சென்று அம்பாளை வணங்க நினைத்தேன் அதான் நேராக இங்கு??எங்கள் நட்புக்கு பாலமாக அமைந்தது எங்கள் அனைவரின் நகைசுவை உணர்வே!!அவனும் ஒரு பட்டதாரி ஆசிரியரே!நான் எங்காவது பிசியாக இருப்பேன்,போனில் அழைத்து ‘செல்வி ஒரு ஜோக் படிச்சேன்’என்று என்னை அதிகம் சிரிக்க வைத்தவன்.அவனுடைய இன்பதுன்பம் இரண்டையும் சொல்லி சிரித்தும் அழுதும் உள்ளான்!என் மனைவி , அம்மா மற்றும்அக்காள்கள் அனைவருடைய அன்பையும் ஒருங்கே உங்களிடம் காண்கிறேன் செல்வின்னு வாய் நிறைய சொல்லுவான்.என் திருமணத்தில் என் சித்திகள் பார்த்து ‘இவளுக்குத்தான் திருமணம் ஆச்சே??ஏன் இன்னும் இவள் பின்னால்’ என்று சொல்லியவர்கள் வாயை அடக்க வைத்தது எங்கள் நட்பு..ஆம் அவன் எனக்கு மட்டுமின்றி என் குடும்பம்..அதைவிட என் கணவருக்கும் நல்ல நண்பேண்டா??என் முதல் வேலை உலகம்(Matsushita air-cond corp):நான் முதன் முதலாய் வேலைக்குச் சென்ற நிறுவனம்..நல்லது கெட்டது படித்தது அங்கேதான்.அங்கேயும் இறைவன் எனக்கு ஒரு தம்பியை நண்பன் உருவத்தில் அனுப்பிவைத்தார்.அவன் பெயர் சின்னையா..என்ன பெயர் உனக்கு இனிமேல் பெயர் சீனு..நான் மாற்றினேன்.இன்று கூட அவனை சீனு என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.ஜப்பானியர்கள் முன்னிலையில் தமிழில் பேசி சிரித்து வேலையை கலகலப்பாக ஆனால் கவனமாக செய்வோம்.’அக்கா,இன்றைக்கு லீடர் ஏசிட்டான்,அவன் நாளை மானேஜருக்கு காட்டவேண்டிய ஃபைல்ஸ் அனைத்தும் நாளை காணாமல் போயிடும்??.எனக்கும் நாளைக் காய்ச்சல் ,தேடாதிங்கன்னு ,நான் திருட்டு முழி முழிப்பேன்!!அக்கா உங்கள் பிறந்தநாளுக்கு நாந்தான் முதலில் வாழ்த்து சொல்லணும் என்று கடந்த 12 வருடங்களாய் அவனே இரவு 12 மணிக்கு விழித்திருந்து சொல்பவன்!!ஒரு சில தரங்கட்ட நபர்களால் ,எனக்கு கெட்ட பெயர் வர இருந்ததை இவனும் கலைமதியும் அங்கே தடுத்தாண்டு கொண்டார்கள் என்றால் அது மிகையாகாது!!

அதே நிறுவனத்தில் இன்னொரு தோழி(பாகம் 2)
ஆம்.அந்த நிறுவனத்தில் முதலில் நான் manufacturing dept-இல் ,பிறகு அலுவலத்தில் குமாஸ்தா!!ஒன்றுமே தெரியாத என்னை பட்டைத்தீட்டி எடுத்தவள் புஷ்பா(தற்பொழுது கனடாவில்).அவளிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய ..ஆனால் அவள் என்னிடம் கற்றுக்கொண்டது (என் அறிவுக்கு எட்டிய,)தமிழும் சமயமும்!!இலங்கை குடும்பம் அவள்.வீட்டில் ஒரே பெண் என்பதால் அதிக செல்லம்.என் குடும்ப கண்டீசன் ,டிசிப்ளின் அவளுக்கு ரொம்ப பிடித்தது.காதல் என்று போய் ஒருவரிடம் ஏமாந்த அவளை, நான் பழைய நிலைக்கு கொண்டு வந்ததே ,அவர்கள் பெற்றோருக்கு நான் கொடுத்த பெரிய பரிசு!!இன்று நான் கணினி இயக்குகிறேன் என்றால் அவள்தான் முக்கிய காரணம்.மிகவும் முன் கோபக்காரி,ஆனால், உங்கள் கோபம் என்னை ஒன்று செய்யாது என்பேன் அமைதியாய்!கல்யாணம் செய்து கனடா செல்லும்போது அவள் குடும்பத்தைவிட ஏர்போர்ட்டில் அதிகம் அழுதவள் நானாகத்தன் இருக்க முடியும்.தற்பொழுது நான் உபயோகிக்கும் (perfium,handbag,lipstick and handphone)முதல் கொரியரில்(ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்) எனக்கு அனுப்பிவைத்து என்னை அதிகம் சங்கடத்துக்குள் ஆக்கிகொண்டிருக்கிறாள்!!’இதெல்லாம் வேண்டாம் புஷ்பா’ என்றால்..அப்படின்னா என் போனையோ,எஸ்.எம்.எஸ்-ஐ யோ எதிர்பார்க்காதே??என்று கோபங் கொள்(ல்)வாள்.நீ என் தங்கை, ..தோழியல்ல..?இதுக்கு, அவள் அம்மாவை வேறு அழைத்து சிபாரிசு செய்ய சொல்வாள் !

இளவரசி:
அதே ஜப்பானிய நிறுவனத்தில்(12 வருடமாச்சே),அறிமுகமானவள் இளவரசி!வேலைக்கு வந்த புதிதில் அக்கா ,என் அம்மா இட்லி செஞ்சு கொடுத்தாங்க,நீங்க சாப்பாடு வாங்க வேண்டாம் என்று அன்புதொல்லை செய்வாள் அடிக்கடி!நாளடைவில் மலாய்க்காரிகளும் ,சீனப்பெண்களும் எங்களைக் கண்டு பொறாமை படும் அளவு எங்கள் நட்பு வளர்ந்தது.’என்னதான் உங்களுக்கு பேசி சிரிக்க இருக்குதோ என்று அனைவரும் கேட்கும் வரையில் பேசுவோம் சிரிப்போம்.என் ரசனையும் அவள் ரசனையும் ஒரே மாதிரி(இசை மற்றும் நகைசுவை).எனக்கு முன்பே மாப்பிள்ளை வந்ததால் ,என்னை அம்போன்னு விட்டு போனாள்.துடித்தேன்..ஏன்னா நான் ஒரே தமிழ்பெண் (வேலைப்பிரிவில்)..மனதை தேற்றிக்கொண்டு நாட்களை கடத்தினேன்..இறைவன் இருக்கிறான் என்பதை உணர்த்திய அந்த தருணம்..ஆம் அவளைப்பிரிந்து சுமார் 5 வருட்ங்கள் கழித்து ஒரு கடையில் சந்த்திதேன்.சிரித்தோம்,சிரித்தோம் சிரித்தோம் ..அப்படி ஒரு சந்தோசம்.வானொலியில் எனக்கு பிடிச்ச பாடல் ஒலியேறும் ..அவளுக்கும் பிடிச்ச பாடலாச்சே?போனை எடுப்பேன்..ஆனால் அதற்குள் என் போன் அலறும்!அக்கா ரெடியோ கேளுங்க நம்ம பாட்டு ஓடுது(இது பலமுறை நடந்த சம்பவம்)டெலிபதி!!ரொம்ப கண்டீசனான கணவன்(என்னை மட்டுமே தன் வீட்டுக்கு அனுமதிக்கும் கணவன்)அண்மையில் இறந்துவிட்டார்!!!இன்னும் நெருக்கமானாள் என்னோடு,இன்றுவரை.**இதில் என்ன விசேசம் என்றால் ,நான் மேலே குறிப்பிட்டுள்ள அனைவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து நான் நண்பர்களாக்கி விட்டேன்(இது எனக்கு பெருமை)**இவர்களையெல்லாம் பற்றி என்னை இங்கு அழைத்த திரு கே,ஆர்.விஜயன் ,ஃபேஸ் புக்கில் அண்மையில் எனக்கு கிடைத்த ஒரு பொக்கிசம்!!!இன்னும் நிறைய பேரைப்பற்றி எழுத ஆசை..இன்னொரு நாளில் சந்திப்போம்

3 comments:

  1. உலக நாடுகளில் தமிழர்கள் கலக்குவதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களையும் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. பதிவு நல்லா இருக்கு,..
    பாராட்டுகள்..

    ReplyDelete