Friday, 13 April 2012

இறையே நான் ஏன் இதையெல்லாம் பார்க்கணும்?கேட்கணும்?

கடந்த மார்ச் 11-ம் தேதி,சென்னைக்கு செல்லும் விமானத்தில் அமர்ந்து பெல்ட்டை அணிந்துகொண்டேன்.விமான நிலையம் சென்றுகொண்டிருக்கும் இடையில்தான் ,(வெளிநாட்டிலிருந்து)தொலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்ததால் , மனம் பாதிக்கப்ப்ட்டு ,மனமுடைந்து (யாரிடமும் காட்டிக்கொள்ளவே இல்லை)ஓரளவு மகிழ்ச்சியாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டு விமானத்தில் அமர்ந்தேன்.
                                                                                                            
அந்த சமயம் என் பக்கத்தில் ஒரு சிறுமி (கண் கண்ணாடியுடன்)அமர்ந்திருந்தாள்.விமானம் புறப்பட்ட சில நேரங்களில்,அந்த சிறுமி அவளுக்கு அருகில் ,உடகார்ந்திருந்த ஒரு வயதான அம்மாவிடம் காதில் போய் ஏதோ கிசு கிசு என்றாள்.பிறகு அந்த அம்மா என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.ஆனாலும் அந்த சீட்டில் (அந்த சிறுமி)அமர்ந்து வந்த ஒரு இளம் பெண்ணின் நடவடிக்கை எனக்கு கொஞ்சம் நிம்மதியில்லாமல் செய்தது??அந்தப் பெண் தன் இரு குழந்தைகளோடு பேசும் பொழுது முகத்தைப்பார்க்காமல் ,வேறு எங்கோ(பார்வையிழந்தவர்களைப்போல) பார்த்துப்பேசிக்கொண்டிருந்தார்???
 அதை நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த அம்மா ,’அம்மா கொஞ்சம் சுடுதண்ணீர் வேண்டும்,கேட்டு வாங்கி கொடும்மா ‘என்று பால்புட்டியை நீட்டினார்.விமானப்பணிப்பெண்ணிடம் கேட்டு வாங்கி கொடுத்தேன்,(அந்த பெண்ணைப் பற்றியவிவரம் கேட்காவிட்டால் தலை வெடிச்சிப்போயிருமே நமக்கு???)                                                    
’அம்மா அவுங்க யாரு ,ஏன் அவுங்க’ ...என்று கேட்கும்வேளையில் ,விமானத்தில் விளக்கு அணைக்கப்பட்டது(நள்ளிரவு).அப்போ நான் கண்ட காட்சி ...அந்த பெண் கீழே விழுந்த ஏதோ பொருளை தரையில் ,தடவி தடவி எடுக்க முயன்றாள்.’அம்மா அவுங்க யாரு??என்ன பிரச்சனை’? என்றேன்.
என் பொண்ணுதான்மா,அவ பிரசவத்திற்கு பிறகு தன் பார்வையை கொஞ்சம்கொஞ்சமாக இழந்து வருகிறாள்,அதான் தமிழ்நாட்டிற்கு என் தம்பி அழைத்துச் செல்கிறான்;என்று தொடர்ந்தார்.இரண்டு பிள்ளைகள் பிறந்தவுடன் ,இருட்டில் அறவே பார்வைத் தெரியாதும்மா ‘என்றார்.ஆம்,அப்படி ஒரு விநோதமான நோயா??என்று என்னுள் வினவினேன்.ஏன் மலேசியாவில் ,டாக்டர் என்ன சொல்கிறார்கள் ?என்றேன்.அந்த அம்மா சொன்ன தகவல்,ஐயோ இன்னும் வேதனையாக இருந்தது!’அவளுக்கு ஒன்னும் செய்யமுடியாதும்மா,இப்போ நாங்கள் தமிழ்நாட்டிற்கு செல்வது அவளுக்கு வைத்தியம் பார்க்க இல்லைம்மா,அவ பிள்ளைகள் ரெண்டு பேருக்கும்,அதே போல பார்வை மங்கி வருகிறது ???அதான் தம்பிக்கு தெரிந்த டாக்டர் ,தமிழ்நாட்டில் தன் டாக்டர் நண்பனைப் பார்க்கசொன்னார்’என்றார்.ஐயோ,என்ன கொடுமை இது???இப்படி ஒரு வியாதி உண்டா??என் பக்கத்தில் கண்ணாடியோடு அம்ர்ந்திருந்த சிறுமி படிப்பில் கெட்டிக்காரியாம்(பார்த்தாலே தெரிந்தது),அவ தம்பியுக்கு அதே போல????
                                                                    
  சரிம்மா ,உங்க மருமகன்.......(கேட்கனுமே??)வரவில்லையா??என்று தயக்கமாக கேட்டேன்.இதுவரையில் அவர்தான்மா அவளுக்கு கண்ணுக்கு கண்ணாய் ,இருந்து பார்த்துக்கொண்டார்,ஆனால் இப்போ’என்று முடிப்பதற்குள் அந்த தாயின் கண்கள் குளமாகின??’என்னம்மா? ஏன் ?என்ன ஆச்சு?என்று தோள்பட்டையைத் தடவிகொடுத்தேன்.’அவரு சமீபத்தில் மூன்று மாதங்களுக்கு முன்புதான்,வேலை முடிந்து வீட்டிற்கு வந்து சேர இன்னும் பத்தே  நிமிடங்கள் ,இருக்கும்போது வழியில் அடிபட்டு இறந்துவிட்டார்!!!!!!!!!!!!!
இப்போ நான் அழ...அந்த அம்மா அழ!!!!!(ஏன் இறைவன் என்னை மட்டும் இப்படியெல்லாம் சோக கதைகளைக் கேட்க வைக்கிறான்???)
ஐயோ என்னால் கண்ணீரை மறைக்க முடியல,அடக்கிக்கொண்டு ‘ஒன்னும் இல்லைம்மா,நம் கர்மா(என்ன கர்மமோ??)எழுதி வைத்தப்படியேதான் நடக்கும்’என்று ஆறுதல் சொன்னேன்.ஆனால் ஒரு விசயம் அந்த அம்மா என்னை விட கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருப்பதுபோல் உணர்ந்தேன்.
                                                  
இப்போ அவுங்க டெர்ன்,என்னைப் பேட்டி எடுத்தாங்க.நீங்க எங்கம்மா போறிங்க,யாரெல்லாம் போறிங்கன்னு? கேட்டார்,விவரத்தைச் சொன்னேன்.’கோவிலுக்கெல்லாம் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போகிறோம்மா,ஒன்னும் கவலைப்படாதிங்க ,எல்லாம் நல்லபடி நடக்கும்’என்றேன்(அதுதானே நான் பண்ணமுடியும்)
’வந்தும்மா,அந்த பிள்ளைகளுக்கு ஒன்னும் இருக்ககூடாதும்மா,நானும் வசதியுள்ள அம்மா இல்லைம்மா,ஏதோ கூலிக்கு வேலை செய்கிறேன்,தம்பியின் அரவணைப்பில்தான் தமிழ்நாட்டிற்கு போகிறோம்’என்று தொடர்ந்தார்.அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா’என்று ஆறுதல் படுத்தினேன்.பிறகு அவர்களை உறங்க செய்ய நாற்காலியை சரி செய்து கொடுத்தேன்(இங்கே என் உறக்கம் போனதுதான் உண்மை!!!)
                                                                        
             சென்னை வந்ததும் ,அவர்கள் இறங்க தயார் ஆனார்கள்,நாங்கள் திருச்சி என்பதால் இறங்கவில்லை.’சரிம்மா நாங்க கிளம்புகிறோம்’என்று விடைப்பெற்றார் அந்த தாய்.’ஒன்னும் கவலைப்படாதிங்க ,நாங்க எல்லோரும் சேர்ந்து செய்யும் பிரார்த்தனை வீண் போகாது’என்றேன்,உறங்கி விழித்த என் டீச்சர் (விசயம் தெரியாது)என் காதருகே வந்து ‘இங்கேயே ஆரம்பிச்சிட்டிங்களா?என்று கேலி செய்தாள்.’இருங்க டீச்சர் பிறகு சொல்கிறேன்’என்று கண்ஜாடைக் காட்டினேன்.பிறகு விவரத்தை அனைவரிடம் பகிர்ந்துகொண்டேன்.’நல்லவேளை ,நாங்க யாரும் கேட்கவில்லை,மனசு கஷ்டமாகியிருக்குமே??என்றனர்.                                                                          
நாட்களும் ஓடின.நாங்கள் திரும்பி வரும்நாள்.சென்னை விமானநிலையத்தில் காத்திருந்தேன்.வழக்கம் போல ஏர் இந்தியா தாமதம்!அன்று நான் உடல்நலமில்லாமல் இருந்தேன். ஆகவே அமைதியாக உட்கார்ந்திருந்தேன்,அந்த சமயம் யாரோ ஒரு பையன் தடாலென ஓடிவந்து கீழே விழுந்தான்.அந்த தாய்(பார்வை இழந்துவரும்)ஓடி வந்து தூக்கினார்.ஆனால் நான் இருந்த நிலையில் ஏதும் கேட்டுக்கொள்ள்வில்லை
.பயணம் முடித்து மலேசியாவில் இறங்கிவரும் வேளையில்(நான் கொஞ்சம் ந்ல்ல நிலைக்கு வந்தேன்) அந்த சிறுமி என்னருகே நடந்து வந்தாள்.’ஹை  ‘பொண்ணு எப்படிம்மா இருக்கிறாய்?எங்கே பாட்டி என்று தேடிய வேளையில் ,அந்த பாட்டியின் தம்பி என்னை ஆர்வமாய் ‘என்னங்க ?என்றார்.இல்லை பாட்டி  எங்கே என்று அங்கும் இங்கும் தேடினேன்.அவுங்க பின்னாலே வராங்க என்றார்.ஆனால் சிறுமி கண்ணாடி போடவில்லை??இல்லை போன விசயம்??என்று ஒன்னும் பாதியுமாய்(பயம்தான்,பிசிபாடின்னு??)முடிப்பதற்குள் .அந்த மாமா,இனிமேல் ஒன்னும் இல்லைங்க ,எல்லாம் ஓகேதான்,பிள்ளைகள் கண்ணாடியும் அணியவேண்டியதில்லை,ஒரு பயமுமில்லை’என்று முகமலர்ச்சியாய் சொன்ன அந்த வார்த்தைகள்!!!!!இறைவா,கூட்டுப்பிரார்த்தனை வீண் போகவில்லை என்று என் சக ஆசிரியர்களை ஆர்வமாய் ,அங்கும் இங்கும் திரும்பி பார்த்தேன்.ஏதாவது சொல்லவேண்டுமே என்று அந்த சிறுமியிடம் உரத்தகுரலில் ,’god is always with you,dont worry be happy’ என்று பை பை சொல்லி விடைபெற்று திரும்பினேன்.என் உடல்நிலை மேலும் நல்ல நிலைக்கு வந்தது போல் உணர்ந்தேன்!
அந்த சிதம்பரநாதன் என் கண்முன்னே சிரிப்பதை போல் !!!!!!!!!!!!!!
                                                                                                                      

      

4 comments:

 1. சாமியார் செல்வியின் வார்த்தைகள் பலிக்க ஆரம்பித்துவிட்டது.இனி செல்லும் இடமெல்லாம் ஆசி மழைதான். மிக மிக நிறைவான பதிவு முதன் முதலாக செல்வியிடமிருந்து. வாழ்த்துக்கள் செல்வி.

  ReplyDelete
  Replies
  1. சாமி யாரோ???????நன்றி விஜி!பார்த்து ,குறி சொல்ற பாட்டியாக்கிடாதிங்கப்பா??

   Delete
 2. என் குருவிடம் எனக்கு ஆசி கிடைத்துவிட்டது!!நன்றி குரு.

  ReplyDelete