Wednesday 1 August 2012

என்னை விட்டு எங்கே போனாய்?

ஏன் என்னை விட்டுப் போனாய்??

வேலையில் கொஞ்சம் தாமதம் ஆனாலும் உடனே சமையலுக்கு விடுமுறை இப்போ!! 

எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் , சோற்றுப்பானையில் சோறும் ,குழம்பு பானையில் குழம்பும், தழும்ப தழும்ப தயாராக இருக்கும் அப்போ??

ஏன் என்னை விட்டுப் போனாய்??


காற்று ,மழையைக் கண்டாலே கதவைப் பூட்டி வீட்டிலே இருப்போம் இப்போ...


காற்று ,மழை ,கடுமையான வெயில், அதுதானே  பஸ் ஏறினாலும் சரி,
பள்ளி முடிந்து வீட்டுப் போனாலும் கூடவே வரும் நண்பன் அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

நள்ளிருளில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கார் ஓட்டும் காலம் இப்போ.......
நள்ளிருளில்நடனம் என்ன? விளையாட்டு என்ன ,விருந்து என்ன,வித விதமான கூத்துகள் அப்போ......

ஏன் என்னை விட்டுப் போனாய்??

தீபாவளி வந்திருச்சி ஆனால் கையில் பணம் இல்லை...
ஆகவே அடுத்த வருசம் தீபாவளி கொண்டாடலாம் இப்போ...
.காசு இல்லை அதைப் பற்றி என்ன கவலை ?
பட்சணம்,பலகாரம் ,புத்தாடை ,பட்டாசு ,மத்தாப்பு கோழிக்கறி ,ஆட்டுக்கறி ...
வருசா வருசம் கொண்டாடிய தீபாவளி அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

இரவில் பன்னிரண்டு மணி வரையில் கூட விழிக்கமுடியாமல் சிரமப்படுவது இப்போ...
விடிய விடிய விழித்திருந்தும் விழிக்கு நோகாமால் எழும் காலம் அப்போ..

எல்லாவற்றிற்கும் மேலாக,சமைத்து வைத்த எல்லாத்தையும் ஒரு பிடி பிடித்து நிம்மதியாக தூங்கிய ஒரு காலம் அப்போ......
கையில் பணம் இருந்தும் சமைக்கத் தெரிந்தும் நோய்க்கு பயந்து வாய்க்குக்கு ருசியாக சாப்பிட முடியாமல் வாழும் வாழ்க்கை இப்போ.....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

விட்டுப்போன உன்னைத் தேடுகிறேன்... காணமுடியவில்லையே....
என் குழந்தைப் பருவமே.....
இனி உன்னை எங்கே பார்ப்பேன்???
என் குழந்தைப் பருவமே...
                                                                              

7 comments:

  1. வார்த்தையில் சொல்ல முடியாத வலிகள் ஒவ்வொரு எழுத்திலும் எள்ளி நெஞ்சை துளைக்கிறது ரணமாய்...!

    ReplyDelete
  2. சாப்பிட காசில்லாத போது பசி இருந்தது....

    காசிருக்கும் போது பசியில்லை....!

    ReplyDelete
  3. பணமில்லை இருந்தாலும் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம்....இன்று பணமுண்டு எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது....!

    ஏன் என்னை விட்டு போனாய்...?

    ReplyDelete
  4. நார் கட்டிலில் உறங்கினேன் அன்று தூக்கம் சுகமாக இருந்தது அன்று....

    பஞ்சு மெத்தை, மனம் மலரும் நறுமணம், குளிர் இயந்திரம் இருந்தும் மஞ்சத்தில் உறக்கம் கண்ணுக்கு வரவெயில்லை இன்று...!

    நீ ஏன் என்னை விட்டு போனாய்...?

    ReplyDelete
  5. எல்லாம் கனவு போல போய்விட்டதே....!

    வேதனையான நினைவுகள்........அருமை அருமை...!

    ReplyDelete
  6. மனோ... தீவிர ரசிகர். வாழ்த்துகள்.

    ReplyDelete