Thursday 2 August 2012

கனிமொழியின் தீர்ப்பு சரியா?

அழகிய கிராமம்,அங்கே ஒரு காதல் ஜோடி,இளனும் கயல்விழியும்.இருவரும் அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் சேவை செய்யப்போய் அங்கே அறிமுகம் ஆனார்கள்(கடந்த 15 வருடங்களுக்கு முன்)!இளன் கோவிலில் செயளாலர்,கயல்விழி தேவாரம் வகுப்பு செல்வாள் .காதல் முளைத்தது.திரும்ணமும் முடிந்தது.இருவரும் தம்பதி சகிதமாய் கோவிலில் சேவை செய்தனர்.அந்த சமயம் அந்த கிராமத்து கோவில் ,ஒரு தகர கோயிலாக இருந்தது.இளன் மற்றும் அவர்தம் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து தகரகோவிலைக் கோபுரம் கொண்ட கோவிலாக கட்ட அரும்பாடுபட்டனர்.மலேசியாவில் கோவில் கட்டுவது என்பது சாதாரண விசயம் அல்ல என்பதுவும் குறிப்பிடத்தக்கது.பல அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ,நாய்க்கடி, மனிதர்களின் அவசொல் என்று அல்லும்பகலுமாய் உழைப்பைப்போட்டு கோபுரத்தை எழுப்பினர்.
                                                                                 
கோபுரம் ஏறியது,கூடவே பிரச்சனையும் தலை விரித்தாட ஆரம்பித்ததது.ஆமாம் கோவில் தலை நிமிர்ந்து நின்றவுடன் ,கோவிலின் முக்கிய புள்ளி ,சொரண்டி தின்ன ஆரம்பித்தார்.நிர்வாகத்துக்கு தெரியாமல் விடியற்காலையெல்லாம் பூஜைகள் ஏற்பாடு செய்து ,அதில் வரும் பணத்தை கணக்கில் போகாமல் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.லேசாக புகைய புகைய ,இளன் மற்றும் சகாக்களுக்கு விசயம் போனது.சும்மா விடுவார்களா?,அந்த முக்கிய தலையை உருட்டினர்.குடைய ஆரம்பித்தனர்.அங்கே பிளவு உண்டானது.கோவில் பணத்தை தின்னும் ’உன்னோடு நாங்கள் இருக்கப்போவதில்லை என இளனிம் டீம் அப்படியே விலகியது.ஆனால் ....ஆனால் ,இளன் விலகும்போது ஒரு பெரிய தப்பை தன்னோடு கொண்டு சென்றார்.கோவில் செயளாலர் என்பதால் ,கோவில் உண்டியலில் நேர்த்திக்காக பக்தர்கள் போடும் நகைகளை இளன் தன் பாதுகாப்பில் வைத்திருந்தார்.இளன் நேர்மையில் எல்லா புராண இதிகாச பாத்திரங்களையும் மிஞ்சியவர் என்றே கூறலாம்.கூடவே இருந்து பார்த்ததால்தான் ஆணித்தரமாக கூறுகிறேன்.
                                                                                 

இந்த பிரச்சனைக்களுக்கிடையில்தான் கயல்விழி கனிமொழிக்கு அறிமுகம் ஆனாள்.கனிமொழியின் தயவால் கயல்விழிக்கு ஆசிரியை வேலை கிடைத்தது.பிறகு சிலகாலம் கழித்து ,கனிமொழியின் பள்ளியிலே கயல்விழி வேலைக்கு சேர்ந்தாள்.கனிமொழி அந்த கோபுர கோயிலுக்கு போய் வருபவள் ஆனால் சேவைகள் செய்வது குறைவு ,அதற்கு காரணம் ஒன்று ,அது அவ பக்கத்துக்கிராமத்துக் கோவில்,மற்றொன்று பற்றின்றி கனிமொழி எந்த தெய்வ செயல்களிலும் ஈடுபாடு காட்டமாட்டாள்.

கயல்விழி வந்த பிறகு ,கனிமொழி தான் அரசல் புரசலாக கேள்விப்பட்ட உட்பூசல்களைப்பற்றி கயல்விழியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்(.இவர்கள் இருவரும் ,சிறுவயது முதல் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் ஆனால் வெவ்வேறு கிராமத்தினர்.)கயல்விழியும் தயங்கி தயங்கி ,சில விசயங்களை கனிமொழியிடம் கூறுவாள்.அவ கணவன் கோவிலில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் பல களவுகளை கையும் களவுமாக பிடித்தது முதல் இளனுடைய டீம் விலகல் வரை ,அனைத்து விவரங்களை கனிமொழியிடம் கூறினாள்.ஆகவே கனிமொழிக்கு எல்லா விவரங்களும் தெரிய வந்தது.
இளனைக் கனிமொழி தன் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுப்பழகினாள்.அவர்களின் இனிய நட்பு இனிதே இன்று இந்த நொடி வரை  தொடர்கிறது.
                                                                               

இப்படிப்பட்டவேளையில்தான் கனிமொழிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது ‘ஹலோ டீச்சர் ,உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியையின் கணவர் ,கோவில் நிர்வாகத்தை விட்டு விலகும் பொழுது ,அம்பாளின் நகைகளை சுருட்டிக்கொண்டு போய் விட்டாராமே???இப்படி ஒரு பழிச்சொல்லை கனிமோழி மூன்றாவது முறையாக கேட்கிறாள்.வேறு யார் கிளப்பிய புரளியாக இருக்கும்?அந்த முக்கிய புள்ளிதான்.ஏற்கனவே பள்ளியில் பெற்றோர்கள் பேசிக்கொள்ள ,கனிமொழியின் செவிக்கு எட்டியது.பிறகு கனிமொழியின் அண்ணி ,அதே கிராமத்தில் வசிப்பவள் ,ஆகவே அவர் மூலமும் ஒருமுறைக்கேட்டுவிட்டாள்.ஆனால் அப்போதெல்லாம் தக்க பதில் கொடுத்து இளனையும் அவர்தன் டீம் -ஐயும் காப்பாற்றி வந்தாள் கனிமொழி.ஆனால் கயல்விழியிடம் இது பற்றி சொல்லிக்கொண்டதில்லை.

இம்முறை பொருமையை இழந்தாள்.கயல்விழியை உடகாரவைத்து பேசி ஒரு முடிவெடுக்க எண்ணினாள்.’கயல் உன் கணவருக்கு ஏன் இந்த வீணான வேலை?கோவில் வேண்டாம் ,சாமி வேண்டாம் என்று சொல்லும் அவரும் அவரது சகாக்களும் ஏன் அந்த நகைகளை வங்கியில் பாதுகாத்து வருகின்றனர்?(இன்னுமொரு தகவல் :இளன் அந்த கோவிலை தனது தாய் வீடாக எண்ணி ,வேலை செய்து வந்தவர்.அப்படி உரிமைக்கொண்டாடிய மனிதர் கோவிலை விட்டு வந்து என் கண் பார்க்க ,பல கஷ்டங்களை அனுபவித்தார்.அவர் பலவருடங்கள் செய்த வேலைப்போனது ,நோய்வாய்ப்பட்டார்,கடன் தொல்லைகள் என் பல).

                                                                               
கனிமொழியின் கேள்விக்கு கயல் சொன்ன பதில்’இல்லை கனி,அங்கே உள்ளவன் எல்லாத்தையும் விற்று திங்கறான்,இதையும் கொடுத்தால் ,ரொம்ப மகிழ்ச்சியாக தின்னுவான்.அதை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.மேலும் அந்த கோபுரம் எழ நாங்கள் பட்ட சிரமம் இருக்கே?எங்களின் உழைப்பை யார் அறிவார் ?என்று அவளும் இளனும் அந்த கோவிலுக்காக பட்ட துன்பங்களை பற்றி அடுக்கிக்கொண்டே போனாள்.’உனக்கெல்லாம் என்ன தெரியும்?நியாயம் பேச வந்துட்ட?’என்று பதில் கொடுத்தாள் .

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழி ஒன்று கேட்டாள் ‘நீங்களோ அந்த கோவிலோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு வந்துட்டிங்க,அதன்பிறகு நீயும் உன் கணவரும் அடைந்த துன்பங்கள் நான் அறிவேன்.ஒருவேளை இந்த நகைகளை நீங்கள் வச்சிருப்பதலோ என்னவோ அந்த சோதனைகளை நீ அனுபவிக்கிறாயோ?(கனிமொழி கொஞ்சம்  சமயம் புரிந்தவள் என்றும் சொல்லலாம்).உன்னை சோதிப்பது இறைவனின் தொழில் அல்ல,ஆனாலும் .....தேவையில்லாத ஒன்றை நீயும் உன் கணவரும் ஏன் கட்டிக்கிட்டு அழனும்?மேலும் உங்கள் உழைப்பு உழைப்புன்னு நீ சொல்வதைப்பார்த்தால் ,உழைப்புக்கு ஊதியமாக அந்த நகைகளை பூதம் காப்பதுபோல் காத்து வருகிறாயா?இதெல்லாம் வீணான பழிச்சொல்.உன் பிள்ளைகளை நாளைக்கு யாராவது ‘கோவில் நகையை திருடி வச்சிப்பவன் புள்ளங்கதானேன்னு’சொன்னால் எப்படி இருக்கும்?என்று அவளுக்கு பட்ட நியாயத்தை எடுத்துரைத்தாள்.

கயல்விழியோ தன் கணவன் டீம் தோற்றுப்போக கூடாதுன்னும் ,அந்த பெரும்புள்ளிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் மேலும் அந்த நகைகளையும் கொடுத்தால் ,அவன் பணமாக்கி விடுவான் என்ற அக்கறையில் அப்படி செய்வதாக கூறினாள்.
இறுதிக்கு கொண்டு வர நினைத்த கனிமொழி சொன்னாள் ‘ஒரு பொருள் உன்னுடன் இருக்கும் வரை உனக்கு சொந்தம் ,அதை நீ வேறொருவரிடம் ஒப்படைத்தால் ,அது அவருக்கு சொந்தம் .அதை அவன் திருடுகிறானோ ,அழிக்கிறானோ அது அவன் பாடு.கோவில் சொத்து குலநாசம் .அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்,இறைவன் பார்த்துக்கொள்வான்’என்று தீர்ர்பு சொல்லி முடித்துக்கொண்டாள்.கனிமொழியின் கோபத்துக்கு காரணம் இளனின் நேர்மையை அவள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவள்.
                                                                             
                                             
(இந்த பதிவைப் படிக்கும் வாச்கர்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்,தயவு செய்து கனிமொழியின் தீர்ப்பு சரியா அல்லது கயல்விழியின் பிடிவாதம் நியாயமா என்று எடுத்துரைக்கவும் .உங்களின் இந்த கருத்துக்களைக்கொண்டுதான் இந்த இருவரின் நட்பும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது)

8 comments:

  1. கனிமொழி சொல்வதுதான் சரியாக படுது, விட்டாச்சுன்னா எல்லாத்தையும் விட்டுறலாமே அதானே நல்லது, வீணாக பாதுகாக்கிறேன் பேர்வழின்னு கையில் வைத்திருக்க வேண்டாமே...?

    அடுத்து அந்த பொக்கிஷத்தை அரசாங்கத்தில் ஒப்படைக்கலாம் அல்லவா..? நோ டென்ஷன், பழியும் இல்லாமல் போகும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ.அரங்கத்தில் பொக்கிஷத்தை ஒப்படைக்க சொல்லியும் கனிமொழி ஐடியா கொடுத்திருந்தாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

      Delete
  2. மனோவின் தீர்ப்பே மகோன்னதமான தீர்ப்பு. சரியாத்தான் சொல்லிருக்காரு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆபிசர்.என்ககும் அந்த பதிலில் திருப்தியே!

      Delete
  3. கனிமொழி போலிஸோ? மக்கள் தொலைப்பேசியில் அழைத்து, திருடு போன நகைகளைப்பற்றி பேசுகின்றார்களே.! ஊர் கதையில் கனிக்கு ஆர்வம் அதிகம் போலிருக்கு.!
    நானாகா இருந்தால், கோவிலுக்குப்போனோமா, சாமி கும்பிட்டோமா, முடிந்தால் சேவை செய்வோமா.. பேசாமல் வந்தோமான்னு இருந்துவிடவேண்டும். அப்படியே அவலங்களைக் கண்டு கொதித்தெழுபவராக இருந்தால், பொதுவில் மேடை போட்டு பேசவேண்டும், பத்திரிக்கையில் எழுதிப் போடவேண்டும் சொந்த பெயரோடு. ஆய்வுகளோடும் புள்ளி விபரங்களோடும் கருத்துகளைப் பகிரவேண்டும்.. இது பொதுமக்களின் சொத்து சம்பந்தப்பட்டது. கோவில் பொது சொத்து, அங்கே கொடுக்கப்படும் அனைத்தும் பொதுமக்களுக்கானது.
    இது உண்மைக் கதையென்றால், இதில் காவலர் என்கிற ஒருவர் இருப்பதால், உண்மை நிலவரம் ஒரு சாராரின் பேச்சைக்கேட்டு விட்டு, கதை தெரியாமல் கருத்து சொல்லக்கூடாது.
    சிறுகதை என்றால், உங்களுக்குக் கற்பனை வளம் குறைவு. கொஞ்சம் முயன்றால் அற்புதமான இலக்கியம் படைக்கலாம், காரணம் தமிழ் ஆளுமை தாண்டவமாடுகிறது.
    வாழ்த்துகள். தொடரட்டும் எழுத்துப்பணி.

    ReplyDelete
    Replies
    1. விஜி உங்கள் கமெண்ட்டைப் படித்தால் ,நம் டிவியில் ஒளியேறும் ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு ,உள்ளூர் நீதிபதிகள் சிலர் மொக்கையாகவும் ,சப்பையாகவும் ,அலுப்பை சலுப்பையாகவும் கருத்து சொல்வார்களே அப்படி இருக்கு!இது சிறுகதை அல்ல.உங்களைப்போல சிறுகதை,கவிதை ,தொடர்கதை எழுத நான் இன்னும் பழகவில்லை.இறுதி கமெண்ட்டுக்கு மட்டும் நன்றி.

      Delete
  4. அண்ணி...கடவுள் விஷயத்தில் போட்டு பார்க்கிறது ரொம்ப சில்லி தனம்னு தான் தோணுது...கயல் கோவிலுக்காக கஷ்டபட்டாங்கனு ஒரு காரணத்தையே திருப்பி திருப்பி சொல்லிட்டு இருக்கிறது நல்லாவும் தெரியல...என் கடன் பணி செய்து கிடப்பதே னு அடியார்கள் சொல்லிட்டு போன சமுதாயத்தில் வந்தவங்க நாம...பிரதிபலன் பாராமல் கடவுளுக்கு செய்யும் சேவை தான் மகத்தானது...பிரச்சனைன்னு வந்துட்டு கோவில் பணியே வேணாம்னு வந்தபிறகு...ஏன் அந்த உருப்படாத நகையை சுமந்துட்டு இருக்கணும்...அப்போ கடவுளை விட இவங்க தான் தண்டிக்க முடிவேடுத்துட்டான்களா...அப்போ இவங்க பக்தியை தாண்டி காழ்ப்புணர்வில் போய்கிட்டு இருக்காங்க அண்ணி...இவங்களுக்கு எல்லாம் அட்வைஸ் குடுக்கிறதே வேஸ்ட்...உண்மையான பக்திமான் இதையெல்லாம் தாண்டி என்னைக்கோ அமைதியா போய்கிட்டு இருப்பான் ஆரண்ய பிரவேஷம் மாதிரி...கோவில் காரியம் அப்டிங்கிறது காழ்ப்புணர்வு,பிரதி பலன் எல்லாத்தையும் தாண்டிய ஒரு divine ...இதை உண்மை பக்திமானால் மட்டுமே புரிஞ்சுக்க முடியும்....கடவுளுக்கு நாம காவல் காக்க கூடாது..:-) ரைட்...

    ReplyDelete
  5. பொது சொத்துன்னு சொல்றீங்க...உண்மையில் அவங்களுக்கு நகை மீது இச்சை இல்லை என்றால்...அரசாங்கத்திடம் உரிய ஆவணங்களை அளித்து விளக்கி விடலாமே...அதை அரசு பொது சொத்தாக்கி கஷ்டப்படும் மக்களுக்கு எதாவது உருப்படியான வேலை வாய்ப்பை உருவாக்கிதரவாவது உதவுமே....தெய்வத்தின் அணிகலன்கள் என்பது ஏழைகளின் சொத்து...!

    ReplyDelete