Wednesday 26 September 2012

ஒரு தாயின் குற்ற உணர்வு


 தன் பத்து வயது  மகன் அண்டைவீட்டாருடன் பழகுவது ,அவன் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒருவகை ஈகோ என்று சொல்லமாம் (காரணமில்லா வெறுப்பு) இவர் வெறுக்கும் அளவுக்கு  அந்த அண்டைவீட்டுக் குடும்பம் மோசமில்லை,இது,கணவன் அளவுக்கு படித்திருக்கும் அந்த பையனின் தாய்க்கும் நன்றாகவே தெரியும்.

 எல்லா தந்தையைப்போல ,இந்த அப்பாவும் வீட்டில் இருக்கமாட்டார் ,வேலைக்குப் போய் இரவில்தான் வீடு திரும்புவார்.அம்மா வீட்டில் இருப்பார்.ஆகவே ஒருநாள் முழுக்க பிள்ளைகளோடு நேரத்தை செலவிடும்  தாய்க்கு புரியும் மகனின் விருப்பு வெறுப்பு.பையனோ,வீட்டில் தன்னுடன் விளையாடும் அக்காவும் தங்கையும் பள்ளிக்குபோய் விடுவதால் ,தன்னுடன் விளையாட ஆள் இல்லாமல் ஏங்குவான் ,அதுவே அவனுக்கு ஒருவித சோர்வு போல ,இருப்பதை தாயும் உணர்கிறாள்.

பக்கத்து வீட்டில் இந்த பையனை அவுங்க சொந்த பிள்ளைப்போல பாசத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் ,அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் என்பதால் ,இந்த பையன் அங்கே போய் விளையாட ஆசைப்படுகிறான்.ஆனால் தந்தையோ சரியான காரணம் சொல்லாமல்  திட்டவட்டமாக அவனை அங்கே போகக்கூடாது என்று கூறுகிறார்.ஆனால் பையனோ ,அந்த வீட்டு ஆண்பிள்ளைகள் விளையாடுவதைப்பார்த்து ஏங்குகிறான்.இதைப்பார்த்த தாய் ,’சரி நீ போய் விளையாடு ,அப்பா வருவதற்குள் வீட்டிற்கு வந்துவிடு என்கிறாள்,பையனும் சந்தோசமாய் உற்சாகமாய் விளையாடுகிறான்.

அப்பா வருவதற்குமுன் வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்களை செய்கிறான்.தன் வீட்டிலிருந்து கல்லெறி தூரம்தான் அந்த அண்டை வீடு.ஆகவே தாய் அனுப்பிவிட்டு ,அவன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டுதான் ,இவளுடைய வேலைகளை செய்கிறாள்.இது நாலைந்து நாட்களுக்கு தொடர்கிறது.அப்பா வீட்டிற்கு வந்து ,.............நீ அங்கே போனாயா?’என்று பையனிடம் கேட்கும்போது ,அம்மா ’இல்லை என்று சொல்’ என கண் ஜாடைக் காட்டுகிறாள்.பையனும் அது போலவே சொல்கிறான் .இப்பொழுது பையன் அடிக்கடி அங்கே போய் விளையாட போகிறான் .அம்மா ,அப்பா கேட்டால் ,நான் போகவில்லைன்னு சொல்லுங்கஎன்று தைரியமாக சொல்லிவிட்டு போகிறான்.

இந்த தாயும் படித்தவள்தான் ,நல்லது கெட்டது தெரியுது.ஆனால் இப்போ பிரச்சனை என்னவென்றால் ,தன் பையன் பொய் சொல்ல தானே ஒரு காரணமாக விடுவதுபோல உணர்கிறாள் !ஒரு தாயாக அவள் செய்வது சரியா? அல்லது ஒரு தந்தையாக காரணமில்லாமல்(சரியா காரணம் சொல்லாமல்)பிள்ளையின் சந்தோசத்தை தடைப்போடுவது முறையா?

(தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.ஒரு தாயின் குற்ற உணர்வுக்கு உதவுவோமே!)

                               

6 comments:

  1. ஒரு வீட்டுக்கு கணவன் [அப்பா] விளையாடப் போகக்கூடாதுன்னு சொல்லும் போது, அந்த மனைவிக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க [[புரிந்திருக்க வேண்டும்] வேண்டும் ஏன் என்று...!

    இங்கே, கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு அவுட்டாகிறது...!

    ReplyDelete
  2. ஏன் அங்கே விளையாடப்போகக் கூடாது என்பதை அதே மனைவியோ, கணவனோ மூவரும் சேர்ந்து இருக்கும்போது விவாதித்து முடிவெடுக்கலாம்.

    குழந்தைக்கும் கொஞ்சம் பொறுப்பு வரலாம்.

    இங்கேயும் கதை அவுட்டாகிறது...!

    ReplyDelete
  3. நிறையபேர்கள் பக்கத்து வீடு என்றாலே ஒருவித அச்ச உணர்வோடுதான் இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது, இது சந்தேகமா பொறாமையா சொல்ல இயலவில்லை.

    பெண்கள் சகஜமாகத்தான் இருக்கிறார்கள்....சில கணவர்களுக்கு அது புரிவதில்லை...!

    ReplyDelete
  4. எதுக்குடா செல்லம் அங்கேப் போகக்கூடாதுன்னு பையனுக்கு தெளிவா சொன்னாலே போதும் கணவனும் மனைவியும்....!

    சிலர் ஜாதி அந்தஸ்து பாக்குறவிங்க இப்பவும் இருக்கத்தான் செய்யுறாங்க [[படிச்சவனும் கூட...!]]

    ReplyDelete
  5. பையனை பொய் பேச வைப்பதில் இரண்டு பேருக்குமே பங்கு இருக்கு, அடுத்து அப்பா மீது மகனுக்கு வெறுப்பு வரவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கு...!

    ReplyDelete
  6. அனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் ,போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேரட்டும்..நன்றி மனோ

    ReplyDelete