Thursday, 5 September 2013

முதன் முதல்...

             அண்மைய காலமாக ரொம்ப கனமான பாத்திரமாக மாறி, பதிவுகள் எழுதி தள்ளியாச்சு. சரி இப்போ கொஞ்சம் எல்.கே.ஜி லெவெலுக்கு இறங்கி நான் முதன் முதலாக என்ற தலைப்பில்  எழுதப்போறேன்.


 •            நான் ஸ்டூடியோவில் சென்று முதன்முதலாக பிடிச்ச படம் என் எட்டு வயது பிறந்தநாள் அன்று(என் அண்ணாவின் சட்டை அணிந்து)
 •                                                       

 •                நான் முதன்முதலாக படித்த பள்ளிக்கூடம் புக்கிட் ஜாலில்                                  தோட்டத்தமிழ்ப்பள்ளி.

 •                நாம் தியேட்டரில் அப்பாவோடு குடும்பமாக போய் பார்த்த முதல்                     திரைப்படம் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ 

 •                நான் பார்த்த முதல் இறப்பு ,என் அம்மாவின் தந்தை திரு.குஞ்சம்பு                     அவர்கள்.

 •               நான் முதன்முதலாக (இறப்பினால்)பிரிந்த நட்புகள் என் தோழியின்               அண்ணா தம்பிராஜா அவர் தங்கை விமலா.(குளத்தில் விழுந்து                       இறந்து போனார்கள்)

 •              நான் முதன்முதலாக பெற்ற பரிசு ஆசிரியரிடம் ஒருவெள்ளி.

 •               நான் முதன்முதலாக சென்ற இடைநிலைப்பள்ளி விவேகானந்தா                     பள்ளி(மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன்                    அவர்கள் படித்த பள்ளி)ஆனால் நான் ஒருநாள்தான் அங்கே                                 படித்தேன்!

 •              என் ஆரம்பப்பள்ள்யில் முதன்முதலாக இறந்துபோன என் தோழன்                 குமார்(தமிழ்நாட்டில் இருதய சிகிட்சைக்காக சென்று அங்கேயே                         இறந்துபோனான்).

 •              என் முதன்முதல் வலிமிகுந்த அறுவை சிகிச்சை ,என் காலில் .                            டாக்டர் என்னை ’லஃப்ஃபா’  வலிக்க வலிக்க என் காலை கத்தியால்                கிழித்து  உள்ளே இருந்த எதையோ அகற்றினார்.நான் அலறிய                          அலறல் ,என் அப்பாவே அழுதுவிட்டார்.

 •             நான் முதன்முதலாக பள்ளியில் நடித்த நாடகத்தில் இளவரசனின்                  தங்கையாக நடித்தேன்.என் பெயர் ஐயை!

 •            முதன்முதலாக பேசிய நாடக வசனம் ‘புலவரே இந்த செய்யுளின்                     பொருள் என்ன?’

 •              நான் முதலும் கடைசியுமாக அப்பாவிடம் வாங்கிய அடி                                        ,தோழியோடு சேர்ந்து சீனர் வீட்டில் முட்டைத் திருடியபோது.

 •             நான் முதன்முதலாக சென்ற வெளிநாடு ஜப்பான்.

 •                நான் முதன்முதலாக ஓட்டிய கார் (இன்னும் ஓட்டும் அதே                                   )மலேசிய புரோட்டோன் சாகா


 •              நான் எழுதிய முதல் எழுத்து  பத்திரிக்கையில் ’சாலை விபத்து’                       என்ற கட்டுரை.


 •             நான் முதன்முதலாக முழுவதுமாக படித்த முதல் கதை ‘தெருகூத்து             ‘(ராணிமுத்து)

 •              என்னை முதன்முதலாக உறங்க விடாமல் செய்த இறப்பு செய்தி என்            பள்ளி நண்பனின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான                                       கோர விபத்து செய்தி.


 •            இலக்கியப்பரிட்சைக்காக நான் படித்த முதல் நாவல் நெஞ்சினலைகள்


 •                முதன்முதலாக  நான் ஃபெயில் (சிகப்பு புள்ளி) பண்ணிய பரிட்சை                     குடியியல் .


 •                என் முதன்முதல் ஆண் ஆசிரியரின் பெயர் திரு.விஸ்வநாதன் .


 •               என் முதல் அண்டைவீட்டுத்தோழி சாந்தகுமாரி


 •                என் முதல் பஸ்பயணம் அப்பா வழி பாட்டி வீடு(ஜோகூர் மாநிலம்).


 •                நான் சந்தித்து பேசி படம் பிடித்துக்கொண்ட முதல் நடிகர்                                     சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.


 •                நான் முதன்முதலாக பதிவில் எழுதியது என் நட்புகளைப்பற்றி.

 •                
 •                 எங்கள் ஊர் வானொலியில் முதன் முதலாக என் பெயரை                                   அறிவித்து எனக்காக ஒலியேற்றிய பாடல் ‘ஒரு தங்கரதத்தில்                            பொன் மஞ்சள் நிலவு’


 •               நான் முதன்முதாலக வேலை செய்து பெற்ற சம்பள தொகை ரிம450


 •               என் முதல் வேலை அனுபவம் matsushita air cond company


 •                 எனக்கு முதன்முதலாக  அறுவை சிகிட்சை செய்து என் மகளை                        இவ்வுலகுக்கு கொண்டு வந்த மருத்துவர் மகப்பேறு நிபுணர்                              டாக்டர்.சிவகுமார்.


 •               என் முதல் பள்ளி தோழி சிவனேஸ்வரி (sumathi siva)

*************நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் ,இதை தொடர என் பதிவுலக நட்புகளை அழைக்கிறேன்!


11 comments:

 1. இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அன்புடன் அழைக்கின்றேன்...

  தீபாவளித் திருவிழாவை முன்னிட்டு ரூபனின் மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறேன்... வாருங்கள்... வாருங்கள்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

  ReplyDelete
 3. அனுபவப் பகிர்வு ...அருமை...

  ReplyDelete
 4. பாடத்தில் முட்டை வாங்காததால் திருடினீர்களோ????

  ReplyDelete
 5. அட... இதையே தொடர்பதிவாக அழைத்தால்? முயற்சி செய்யவும்...

  ReplyDelete
 6. தங்கள் பதிவைப் படித்ததும்தான்
  எனக்கும் பல "முதல்களை " நினைத்தும் பார்க்கும்
  எண்ணம் வந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  .பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . .

  ReplyDelete
 8. எல்.கே.ஜி சமர்த்து!ஞாபகப் பகிர்வு அருமை.

  ReplyDelete
 9. முதல்முதலாக என்னை பள்ளிக்கு நடந்தே அழைத்துச்சென்றது என் அக்காள் ஸ்ரீவிஜி. முதல்முதலாக செவித்தாய் வேலைசெய்தது - அக்காள் மகளுக்கு. முதல்முதலாக கேக்’கடைகளில் வாங்கித்தின்ன பழகிக்கொடுத்தது அக்காள் ஸ்ரீவிஜி. :P:P:P

  ReplyDelete
  Replies
  1. முட்டை களவாண்டதுக்கு நீங்களும் டீச்சரை போட்டு மிதிச்சிருக்கலாம், மிஸ் பண்ணிட்டீங்க விஜி ஹா ஹா ஹா ஹா....

   Delete
 10. மொத்த வரலாறே வெளியே கொட்டிட்டீங்களே டீச்சர்....அருமையான நினைவுகள்.....!

  ReplyDelete