Friday 23 May 2014

ஒரு பாராட்டும்... உற்சாகமான சொல்லும்!


                 எப்போதும் காலையில் 6.15 க்கு அலார்ம் அடித்தும் எழ மாட்டான், நான் அவசர அவசரமா பூஜையை முடித்துக்கொண்டு ஓடி வந்து எழுப்புவதற்குள் மணி 6.30 ஆகிடும் . அப்போ கூட எழமுடியாமல் சிரமப்பட்டு எழுந்து குளிக்கப்போகும் என் மகன் ,கடந்த இரண்டு நாட்களாக ஆறு மணிக்கெல்லாம் எழுந்து எனக்கு முன்பே கிளம்பி ’சீக்கிரம்ம்மா,சீக்கிரம்மா’என்று காருக்குள் போய் உட்கார்ந்து கொள்வான்.
           அதற்கு ஒரே ஒரு காரணம்தான், அவன் கவுன்சிலிங் ஆசிரியை இரண்டு நாட்களுக்கு முன்பு போன் பண்ணி’டீச்சர் வாசனிடம் கொடுங்கள் ‘என்றார்.’ஏன்?’என்றேன்.’ஒரு நியூஸ் சொல்லனும்’என்றார்.கொடுத்தேன் ‘அவன் பேசும்போது அவன் முகமலர்ச்சியைக் கண்டேன்.’பிறகு போனைக்கொடுத்தான்.
’டீச்சர் உங்கள் பையன் போனமுறை ஒழுங்காக செய்யாத தேசியமொழி பரிட்சையில் இந்த முறை ‘ஏ’வாங்கியிருக்கான்.நிறைய முயற்சிகள் போட்டுள்ளான். என் பிள்ளை தேர்ச்சியடைந்ததுபோல ஃபீல் பண்ணுறேன்..வாழ்த்துக்கள்’.வீட்டுக்கு வந்து சாப்பிடாமல் கூட போன் பண்ணுகிறேன்’என்று முடித்தார்.
          போனைவைத்தவுடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டு ;அம்மா நான் ‘ஏ’ எடுத்தேன் ‘என்றான்.யார் என் வீட்டுக்கு (பெரிம்மா,சித்தி,மாமா,என் தோழிகள்)போன் செய்தாலும் ஓடிப்போய் போனை எடுத்து ,என்னிடம் அந்த விசயத்தைச் சொல்லச்சொல்லி காதில் கிசுகிசுப்பான்.
                  பெற்றோர்களே..ஆசிரியப்பெருமக்களே ஒரு உற்சாகமான சொல்,ஒரு பாராட்டு (அதுவும் எதிர்பாராத வகையில்) எப்படி அவனுள் மாற்றைத்தை கொண்டு வந்துள்ளது?இன்னும் அவன் எட்டிப்பிடிக்க எவ்வளோ சிரமங்கள் இருந்தாலும் அந்த சின்ன மாற்றம் ,ஒரு மகிழ்ச்சிதானே?
           
ஆகவே ....யாராக இருந்தாலும் பாராட்டப்பழகுவோம்..மாற்றத்தைக்கொண்டு வருவோம்!

7 comments:

  1. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete

  2. வணக்கம்!

    பாராட்டித் தந்த பதிவைப் படித்துவந்தேன்
    சீராட்டும் தாயின் சிறப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. பாஸிட்டிவ் வார்த்தையின் மகத்துவம். அந்த சந்தோஷம் இன்னும் உயரங்களுக்கு குழந்தையைக் கொண்டு செல்லட்டும்.

    ReplyDelete
  4. வாழ்த்தும் பாராட்டும் இன்னும் பல முன்னேற்ற கனவு காணத்தூண்டும்! வாழ்த்துக்கள் பையணுக்கு!

    ReplyDelete
  5. உண்மைதான் ஒவ்வொரு மனதும் பாராட்டு என்னும் சிறிய அங்கீகாரத்திற்கு ஏங்கிக் கொண்டுதான் உள்ளது! நல்ல பகிர்வு! நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்,பையனுக்கு!பெற்ற உங்களுக்கும் தான்!!!(ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்..............!)

    ReplyDelete