Sunday 1 January 2012

என் எண்ணம் தப்பா???

                     அன்று ஒரு வேலையாக ,வெளியே போக தம்பி வந்து காரில் ஏற்றிச் செல்வதாக சொன்னான்!நானும் வேலைகளெல்லாம் முடித்துவிட்டு,ரொம்ப அழ்காக(உறவினர் வீட்டுக்குப்போவதால்)உடை உடுத்திகொண்டு ,கிளம்பினேன்!பொதுவாக புடவை என்றாலே கட்டுவதற்கு சோம்பல் படுவேன்!!ஆனால் கட்டினால் அழகாக இருப்பதாக, எனக்கு ஒரு நெனப்பு?????(மற்றவர்களும் சொல்வதால்தான்,இல்லாவிட்டால் ,தைரியமாக சொல்லுவேனா??)

                       எங்கள் அப்பார்ட்மெண்டில்,மலேசியர்களை விட அந்நிய நாட்டினர் அதிகம்,அவர்கள் கொடுக்கும் தொந்தரவுகள் அவ்வப்போது இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்!!நீக்ரோஸ்,இண்டோன்,பங்ளாதேசி,பாகிஸ்தானி மேலும் தமிழ்நாட்டு நண்பர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்!!!பொதுவாக இவர்களில் யாராவது பேசினால்(அவர்களுக்கு நம்மிடம் பேசரொம்ப ஆர்வம்)நான் பதில் சொல்வது ரொம்ப குறைவு!!!ஆனால் தமிழ்நாட்டு நண்பர்கள் என்றால் பதில் சொல்லுவேன்.ஆகவே நம் நண்பர்கள் ரொம்ப நல்லாவே பேசுவார்கள்!!
சிலவேளைகளில்,’அக்கா ,கணவர் எங்கே(அவரும் பழக்கம்)?,இன்னிக்கு ஸ்கூல் போகலையா?,அக்கா இன்னிக்கு உங்க டிரெஸ் அழகாக இருக்குன்னு,பேசுவாங்க!ஆனால் சிலர் பேசமாட்டார்கள்,ஏனோ தெரியாது..நம்மை வெறித்துப்பார்ப்பார்கள்??ஒருவேளை ,நம் இனம் என்ற உள்ளுணர்வோ அல்லது பேச ஆசை ஆனால் பயப்படுவார்களோ ???தெரியாது.

                     சரி கதைக்கு வருவோம்!சம்பவம் நடந்த அன்று,நான் ஹேட்ண்பேக்கை எடுத்துக்கொண்டு ,தம்பி ‘கார்ட் ஹவுசில்’வந்து நில்லு என்றதால் ,நடந்து வெளியே போனேன்!!அந்த சமயம் பார்த்து,குப்பைகளை வீச சென்ற நம் நண்பர் ஒருவர் ,என்னைப் பார்த்தார்,எத்ரெதிரே வந்ததால் சிரித்தார்!நானும் புதிய முகம் என்பதால் ,வேண்டாவெறுப்புக்கு சிரித்தேன்.சிறிது வினாடிக்குள்,குப்பைகளை வீசியவர்,என் பின்னால் வேகமாக நடந்து வருவதை உணர்ந்தேன்,நான் நடையை வேகமாக்கினேன்,அவர் செருப்பு சத்தம் வேகமாகியது!என்ன இது???இவ்வளவு தைரியமா உனக்கு??(என் திட்டல்)நான் இனி வேலைக்கு ஆகாது, என்று வியர்க்க விறுவிறுக்க ஓட ஆரம்பிச்சேன்(சும்மா ஓடுவதுபோல் ஆக்டிங்),என்ன ஆச்சரியம்,அவரும் ஓடி(இல்லை ,துரத்த)வந்தார்????என்ன தைரியம்,பட்ட பகலில்??எங்க ஏரியாவில்??வா..வா..என் தம்பி கார்ட் ஹவுசில் ,நிற்கிறான்,இன்றைக்கு ‘உன்னை நையப்புடைக்க சொல்கிறேன்’என்று மனதில் திட்டிக்கொண்டே மெதுவாக ஓடினேன்.

                        கார்ட் ஹவுசும் வந்துவிட்டது!தம்பி காரும் நின்றுகொண்டிருந்தது!!இப்போ,கொஞ்சம் திமிராக நடையை வேகமாக்கி ,காரை நோக்கிசென்றேன்(ஆள் இருக்கும் தைரியம்).ஆனால்,அவரோ இன்னும் வேகமாக ,என்னைத்தாண்டி ஓடினார்??????எனக்கு ஒன்றும் புரியல??என்ன ஆச்சு,ஏன்..இன்னும் எங்கே என்று திரும்பி அவர் திசையை நோக்கிப்பார்த்தால்,மனுசன் அறக்கப்பறக்க ஓடோடி ,அங்கே கிளம்புவதற்கு தயாராக நின்று கொண்டிருந்த 12பி பஸ்ஸைப் பிடிக்க ஓடி,அவசர அவசரமாக உள்ளே ஏறினார்???????????????????ஐயோ,’நான் தப்பாக ஒரு நண்பரை நினைத்துவிட்டோமே??”என்று ஒரு கணம் ,முகம் தெரியாத அந்த ஜீவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டேன்!!கொஞ்சநேரம் நானே என்னைத் திட்டித் தொலைத்தேன்!
                          பொதுவாக கோலாலும்பூர் போகும் டவுன்பஸ்கள் அங்கேதான் நிற்கும்,பாவம் அவருக்கு என்ன அவசரமோ???ஆனால் என் எண்ணம் தப்பா???
நான் தற்பொழுது நடக்கும்,சம்பவங்களை வைத்துதானே முடிவெடுத்தேன்??அது தப்பா??அன்று ,இறைவனின் புத்தகத்தில், என் பேஜில் ஒரு ’சிகப்பு மார்க்’விழுந்திருக்கும்??? ,இன்றும் என் செயலைக் கண்டு   என் மனம்  சிரிக்கிறது???????????இதெல்லாம் தப்பா??.
                                         


                     

7 comments:

  1. இந்தப் பீதி சரியானதே. காலம் கெட்டுக்கிடக்கு. எச்சரிக்கையாக இருப்பதுவே நல்லது

    ReplyDelete
  2. ஹி..ஹி....ஹி...... இதில் காமெடி பீஸ் யாரு??????????

    ReplyDelete
  3. கே. ஆர்.விஜயன் said...
    ஹி..ஹி....ஹி...... இதில் காமெடி பீஸ் ??
    விஜயன்,எந்த சந்தேகமும் இல்லை,நானேதான்???

    ReplyDelete
  4. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
    இந்தப் பீதி சரியானதே. காலம் கெட்டுக்கிடக்கு. எச்சரிக்கையாக இருப்பதுவே நல்லது///
    ஆனாலும் நான் ஓவர் எச்சரிக்கப்போல??

    ReplyDelete
  5. இந்த பீதி நிறைய பேருக்கு இருக்கும். சில நேரம் எனக்கும். புது செருப்பு, உடை போட்டு இருந்தால் நம்மையே எல்லோரும் பார்ப்பது போலவே தான் இதுவும். மற்றபடி சிவப்பு எல்லாம் விழாது. கவலை வேண்டாம். (நாங்க எவ்ளோ தடவை இப்படி நினைச்சு இருப்போம் ஹி ஹி ஹி )

    ReplyDelete
  6. எல்லாமே நாம பார்க்கும் பார்வையிலதான் இருக்கு . சந்தேகக்கண் கொண்டு பார்த்தா எல்லாமே சந்தேகமா , பயமாதான் இருக்கும் ...!!


    நினைச்சி பார்த்தேன் ஒரே காமெடியா தெரியுது ஹா..ஹா... !! :-))

    ReplyDelete
  7. ஆமாம் ஜெ!!!காமெடிதான்,நல்லவேளை அவசரப்பட்டு,என் தம்பியிடம் ஓடிப்போய் சொல்லவில்லையே???

    ReplyDelete