Tuesday 24 January 2012

மயிரிழையில் உயிர் தப்பினோம்!!!!!!

அந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன!!!இருப்பினும் ,இன்றும் பசுமரத்தாணிப்போல ,என் மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது ,அதற்கு காரணம் நாங்கள் (என் தோழியும்)தப்பித்து வந்த அந்த நொடிகள்!!!!!!

       ஆம்,அந்த வருடம் நாங்கள், எஸ்.பி.எம் தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரம்!!!பஸ்ஸில்தான் போவோம்!அம்மா கணக்கா ,சாப்பாடு  ,பஸ் கட்டணம் என்று கணக்கா ரிம1.50 காசு கொடுப்பார்!!கொடுக்கும் ஃபைனன்சை சரியாக யூஸ் பண்ண வேண்டும்,இல்லையென்றால் ,பள்ளி முடிந்து’ நடடா ராசா, நடடா கதைதான்!!!!அன்று கணிதம் பரிட்சை!பரிட்சைக்கு போகும்போதே (கணிதம் என்றாலே எனக்கு ராகு கேது எல்லாமே நிற்பாங்க????)பஸ்ஸைத் தவர விட்டோம்அவசர அவசரமாக போய் பரிட்சை ஹாலில் சேர்ந்தோம்!!(அப்படி போயும்  ,ஒன்னும் பெரிசா மார்க் கிடைக்கல??)

            என்னமோ பிரசவம் முடிந்து ,வெளியே வந்ததுபோல் ஒரு களைப்பு(உருப்படியாக படிச்சா ,ஏன் இந்த பதற்றம்????)ரொம்பவும் களைத்துப்போய் ,கொஞ்ச தூரம் நடந்துதான் ,பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகனும்!அலுத்து ,சலிச்சி ,வெயிலில் நடந்து போய் பஸ் ஸ்டாண்டைச் சேர்ந்தோம்!அந்த சமயம் பள்ளி விடுமுறை ,மலேசியாவில் அரசு தேர்வு என்றால் ,பிற வகுப்புக்கு விடுமுறை கொடுப்பாங்க!அதுக்கு காரணம் மற்ற மாணவர்களால் ,தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொல்லை வரக்கூடாதுன்னுதான்???

     அதனால் ,அன்று பஸ் ஸ்டாண்ட் கூட்டம் குறைவுதான்!!!பஸ் வந்தது ,ஏறினோம் ,ஏதோ பின்னாடி ஒரே சத்தம்!!!என்னவென்று பின்னால் எட்டியும் ,எம்பியும் பார்த்தேன்(தெரியாமல் போய்ட்டா ,தூக்கம் வராதே??ஊரான்வீட்டு கதை?????)ஒரு குடிகாரர்(எந்த இனம் என்று சொல்லவேண்டாமே)ஆனால் தமிழர்,சீனன்,மலாய்க்காரன் அல்ல???பிறகு???அது சஸ்பெண்ட்ஸ்!!!!!குடித்து விட்டு ஒரே ஆர்ப்பாட்டம்!ஆம் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு ஒரே சத்தம் !யாரும் அதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை,குடிகாரனுக்கு அதுதானே மரியாதை????மேலும் ,அது நிறைய கூட்டம் இல்லாத நேரம் ,ஆகவே பஸ்ஸில் ,ஆங்காங்கே பயணிகள் அமர்ந்திருந்தனர்,நிறைய சீட் காலியாக இருந்தன!!

          பஸ் காண்டக்டர் ,அவ்வப்போது அந்த குடிகாரனை ,ஓய் டியாம்லா!!(ஓய் பேசாமல் இரு)அப்படின்னு அவர் வேலையில் கவனமாய்!!நானும் என் தோழியும் ,டிரைவர் சீட் அருகே போய் உட்கார்ந்தோம்!!படு போதையில் இருந்த அந்த நபர்,பஸ் குலுங்க குலுங்க ,அங்கும் இங்குமாய் ,ஆடி ஆடி ,எங்களுக்கு அருகில் வ்ந்து சேர்ந்தார்!!(சனி பெயர்ச்சியில் ,சனி புலம் பெயர்ந்து என் ராசிக்கு பக்கத்தில் வந்ததுபோலவே????)ஒரே சம்சு வாடை(சாராயம்)!!!!பஸ் ஓடிக்கொண்டிருந்த சமயம் ,டிரைவர் சடென் பிரேக் போட்டார் பாருங்க,அந்த குடிகாரர் ,தடாலென கீழே (என் காலுக்கு அருகே)வந்து விழுந்தார்!!!!!எனக்கு சிரிப்பு தாங்கல???????என் தோழிக்கு அதைவிட!!!!!!!கொள்லென்று சிரித்தோம்.........அடுத்த கணம் ,அந்த குடிகாரக்கு மானம் போனது (இருந்துச்சோ????)’ஓய் அப்பா லு பாவா பஸ்????(ஓய் ,நீ எப்படி பஸ் ஓட்டுற )என்ற சத்தம்!!!ஓட்டுனரும் ,பதிலுக்கு ‘ஒய் மாபுக்(டேய் குடிகாரா)பேசாமல் உட்காருடா ‘என்று கத்த ,அந்த குடிகாரருக்கு கோபம்!!!!எடுத்த எடுப்பில் ,உடல் உறுப்பில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைகளயும் சொல்ல ,அடுத்த நிமிடம் ,நான் விழுந்து விழுந்து சிரிக்க,மனுசன் ஓடி வந்து என் அருகில்’ஏய் என்ன சிரிப்பு ,ஒழுங்கா இரு’இல்லை என்ன செய்வேன் தெரியுமா என்று கை நீட்டி என்னைத் திட்டினார்??????ஐயோ ,கத்தியை உருவி, கழுத்தில் வைத்தால் எப்படி இருக்கும்??அதுபோல ஒரு ஃபீலிங்!!!!!!!!!வியர்த்துக்கொட்டியது,உட்கார்ந்திருந்தும் ,உடல் தூக்கி எறிவதுப்போல ஓர் பதற்றம்!!!!! இந்த பாழாய்ப்போன சிரிப்பு வேறு(கெட்ட வார்த்தை ஞாபகம்)????

       அடுத்த நிமிடம் ,ஓட்டுனர் ,ஓய் பேசாமல் போய் உட்கார் ,உதை வேண்டுமா ??என்று எங்களைக் காப்பாற்ற போய் ,சிங்கத்தின் வாயில் தள்ளிவிட்டார்!!ஆம் ,அவர் கத்தியவுடன் மேலும் கோபமடைந்த குடிகாரன்,காலில் அணிந்திருந்த செருப்பை(சாதாரண ரப்பர் செருப்புதான்)கழற்றிக்கொண்டு ,ஓட்டுனரை நோக்கி ஓடினார்!!!!!!!ஓட்டுனர் கையில் ஸ்டேர்ரிங் ஆயுதமாய் இருந்ததால் ,மீண்டும் ஒரு சட்டென் பிரேக்!!!!!!!!!!!!!!!!!!!!!!தடால் என் குடிகாரன் விழ,நாங்க சிரிக்க,சிரிக்க......அவசர அவசரமாக எழுந்த குடிகாரன் ,செருப்பை ஏந்திக்கொண்டு என் அருகில் ஓடி வந்தார்!!!!!!!!!!!!!!!!ஐயோ???????இன்று யார் முகத்தில் முழித்தேனோ??????என் சிரிப்புக்கு பரிசு,செருப்படியா????நான் கொஞ்ச நேரம் செத்தேபோனேன்??????என்றுதான் சொல்லனும்!!!!!!!!!!!ரத்தம் உறைந்து போனது,உடல் ஜில்லென ஆகியது!!!!!குடிகாரன் செருப்புடன் என் கன்னம் அருகே?????

             சர்ச் ,மசூதி ,கோவில்கள் உட்பட எல்லா கடவுளும் என் கண் முன்னே!!!!ஆடாமல் ,அசையாமல் பிணமாய் (அசைந்தால் செருப்படி திண்ணம்??)சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன்..பீதி..பேதியாகாத குறைதான்....!!!!இருப்பினும் ,ஏதோ ஒரு சாமி ஹெப்ல் பண்ணியது!!!!பின்னாலே இருந்து ,ஒரு குரல்,;டேய் குடிகார ,பேசாமல் உட்காருடா!!!குரல் மட்டுமே,யாருமே ஓடி வந்து காப்பாற்றமாட்டாங்களோ??என் மனக்குமுறல்(அதுக்கும் நேரம் இருந்தது,அதான் ஆச்சரியம்????)குரலைக் கேட்ட குடிகாரர்,கொஞ்சம் செருப்பை திசைத் திருப்பி,பின்னால் பார்த்தவாறு’எவனுக்கு என்னை திட்ட தைரியம்,வாங்கடா ,வாங்க’ன்னு கத்தும் அந்த தருணம்,நான் மெதுவாக தலையைத்  திருப்பி ,நாம் அடி வாங்க போகும்,அந்த செருப்பை பார்க்கலாமேன்னு பார்த்தால்???ஐயோ ,சாதாரண ரப்பர் செருப்புதான் ,ஆனால் அதில் ஒட்டியிருந்த பொருட்கள்???சுவிங் கம்,புல்...?????

                 ஐயோ ......அழுவதற்குள்,தெய்வாதினமாய் யாரோ மணி அடிக்க,பஸ் நின்றது!!!!!நான் என் தோழியின் கை இழுத்துகொண்டு ‘வா இறங்கிடலாம்னு,தடால் புடாலென்று ,மணி அடித்தவர் இறங்குவதற்குள் நாங்க பஸ்ஸிலிருந்து இறங்கினோம்..இல்லை குதித்தோம்!!!!!!!!!!அந்த பஸ் ஸ்டாண்ட் நாங்க இறங்கும் இடத்திலிருந்து ,மூன்று ஸ்டாண்ட் முன்னமே இறங்கிட்டோம்,செருப்படி வாங்க தயாரில்லை,தைரியமுமில்லை.!!!!!!!!

            இறங்கி ,ஓடிப்போய் கொஞ்ச தூரம் தள்ளி,உடம்பே உதறுது ஆனால் சிரியோத்தனமாய் சிரிக்க ,என் பின்னால் இறங்கிய மலாய்க்காரர்’ஏன் அப்படி பயம்,அப்படியா அடிச்சிடுவான் குடிகாரன்,நாங்க இருக்கோம்ல????ஆனால் பஸ்ஸில் ஒன்னுமே பேசல??வெட்டி தைரியம் சொல்லிச் சென்றார்!பஸ்ஸும் நகர்ந்தது,இறைவா ,மயிரிழையில் உயிர் தப்பினோமே????என்று பெருமூச்சு விட்டு ,ஃபைனான்ஸ் காரணமாக நடந்தே(நடக்ககூட தெம்பே இல்லை,அப்படி ஒரு உதறல் +  சிரிப்பு) ..இல்லை சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்!!!!!!!!!!!!!!!!!!
             சம்பவம் நடந்து பல வருடங்கள்தான்,ஆனால் இன்று எழுத காரணம்,என் மகள் ‘அம்மா எப்போ பார்த்தாலும் காரில்தான் வெளியே போகிறோம்,இன்று ஒருநாளாவது பஸ் பயணம் செய்யலாமெனெ ,வற்புறுத்தி பஸ்ஸில் கடைக்கு அழைத்துச் சென்றாள்!!!!!!!!!!!!!!!!!!!கதையைக் கேட்ட அவள் ,என்னிடம் கேட்ட கேள்வி,அப்படி அந்த குடிகாரன் அடித்திருந்தால் ..அம்மாவின் ரியாக்சன் என்ன????                                        
                                                                         

9 comments:

  1. என்றோ நடந்தவைதான்,ஆனாலும் மறக்கமுடியலையே????

    ReplyDelete
  2. என் பின்னால் இறங்கிய மலாய்க்காரர்’ஏன் அப்படி பயம்,அப்படியா அடிச்சிடுவான் குடிகாரன்,நாங்க இருக்கோம்ல????//

    ஹா ஹா ஹ ஹா அதுதானய்யா ஆம்பிளைக்கு அழகு, வீரம், செல்வி, பேசாமல் இந்த ஆளை நீங்க செருப்பால நாலு போடு போட்டுருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லார் வீட்டிலேயும் ஆம்பளைங்க அப்படித்தானா மனோ???

      Delete
  3. என்னிடம் கேட்ட கேள்வி,அப்படி அந்த குடிகாரன் அடித்திருந்தால் ..அம்மாவின் ரியாக்சன் என்ன????//

    என்ன ரியாக்சன் பண்ணப்போறாங்க, ஒரு நான்கு நாள் ரூம் போட்டு அழுவாயிங்க பாப்பா, நீயும் கொஞ்சம் ரௌத்திரம் பழகு குட்டி பாப்பா...!!!

    ReplyDelete
    Replies
    1. அழுவதா??நானா???வீட்டில் அண்ணா கிட்டே போய் சொன்னால்,எங்க பேட்டை மக்களோடு போய்,அந்த நபரை துவைத்துவைன்னு துவச்சி எடுத்திருக்கும்!!ஆனால் ,வீட்டில் சொன்னேன்....உங்களுக்கு ஏன் வீணான சிரிப்புன்னு??ஒரே திட்டல் மனோ!!

      Delete
  4. இப்போ நினைத்தாலும் காய்ச்சல் வரும் போல இருக்கு மனோ!!!!பிளடி ஃபூல் குடிகாரன்லா!!!

    ReplyDelete
  5. ஓய் டியாம்லா!!

    ReplyDelete
    Replies
    1. ஏன் இந்த கொலைவெறி விஜி???சரி நான் பேசல!!!ரெண்டு மலாய் வார்த்தைகள் படிச்சிட்டிங்க??சரிதானே??

      Delete