Tuesday, 30 April 2013

ஒருக்காலமும் ஒப்பிட்டுப்பார்க்காதே!

         
           கணவன் மனவி இருவருமே வேலை செய்தால்தான் காலத்தை ஓட்ட முடியும் என்கிற சூழ்நிலையாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் தாய் வேலைக்குச் செல்லலாம்.'கணவர் வேலைக்குப்போகிறார் அவருக்கு சரிசமமாய் நானும் வேலைக்குப் போகனும் ,வெளி உலகத்தைப் பார்க்கனும் ,நான் மட்டும் ஏன் வீட்டில் இருந்து போராடனும் ?,நானும் அவரைப்போலத்தான் படித்திருக்கிறேன்,'என்ற வேட்கையோடு வேலைக்குச் சென்றால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகள்.ஒருக்காலம் அலுவலகத்தில் வேலை செய்த நான், இரண்டாம் பிரசவத்துக்குப்பிறகு இரண்டு மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டு மீண்டும் வேலைக்கு போகனும் என்று கிளம்பிய சமயம் என் மகள் என் கைகள் பற்றிக்கொண்டு 'வேண்டாம்மா,கனிமொழி பாவம் ,புது தம்பி பாவம் ,வேலைப் போவாதிங்க 'என்று மழலை பாஷையில் என்னைத் தடுத்து நிறுத்திய அந்த கணம்? பணம் என்ன பணம்?என்று வேலையை ராஜினாமா செய்த அந்த தருணங்கள்?'கனிமோழி ரொம்ப ராங்கி ,அம்மா வேலைக்குப் போகிறேன்,நீ அத்தை வீட்டில் (என் அண்ணா வீட்டில்)போய் இரு ' என்றதும் விளையாடிக்கொண்டிருந்த மூன்றே வயது நிரம்பிய என் மகள் ஓடி வந்து என் கால்களை அணைத்து 'அம்மா பாப்பா(அவளை) குட் கேர்ள் ,நான் அம்மாகூட இருக்கேன்,அம்மா வேலை வேண்டாம்'என கெஞ்சிய அந்த முகம் ,நான்கு டிஜிட் தொகை சம்பளத்தைக்கூட தூக்கியெறிந்து எந்த இலக்கும் இல்லை,சேமிப்பும் இல்லை ஆனாலும் வேலையை விட்டு நிற்க போகிறேன் 'என்று அதிரடியாய் எடுத்த முடிவு ,எனக்கே என்னுள் பெருமையாக நினைக்க தோணுது.
            'செல்வி நல்லா  யோசிச்சு முடிவு எடு,அப்புறம் உள்ளாடை வாங்க கூட கணவர் கையை ஏந்தனும் 'என்று வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல அறிவுரை சொன்ன தோழிகள் ,இன்னும் மானேஜர் என்கிற பெயரில் கண்டவர்களிடம்  திட்டு வாங்கிட்டு பணத்துக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு வேலை செய்வதும் !என்னத்த சொல்ல?ஆனாலும் ஒன்னு சொல்லியே ஆகனும்,ஒன்று நல்ல வசதியுடன் இருக்கணும் ,இல்லை வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கனும்,ரெண்டுகெட்டான் நிலைமை இருக்கே?நான் வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று தெரிந்ததும் என்னை அழைத்து இன்டர்வியூ செய்த, என் மேனேஜர்கள் இருவரும் சொன்ன ஒரே தாரக மந்திரம் ;ஒருக்காலமும் உன் வாழ்க்கையை இனி பிறரோடு ஒப்பிட்டுப்பார்க்காதே காரணம் நீ கை நிறைய சம்பாதித்து பழகியவள்,பணம் என்கிற நிலையில் பிறரை ஒப்பிட்டுப்பார்த்தால் ,உன் வாழ்க்கை கசக்க தொடங்கும் ,நிம்மதியை இழப்பாய்!இன்னும் என்னிடம் உள்ள அந்த நல்ல பழக்கம் பிறருடைய வசதியான வாழ்க்கையை என் நடுத்தர வாழ்க்கையோடு நான் ஒப்பிட்டுப் பார்த்ததே இல்லை,அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.அந்த வகையில் அந்த இரண்டு மானேஜர்களும் வாழ்க.
           உனக்கென்று விதிக்கப்பட்டிருந்தால் யார் தடுத்தாலும் உன்னை வந்து சேரும் என்ற கூற்றுக்கேற்ப ஆசிரியை தொழில் என்றால் என் உயிரோடு கலந்திருந்த ஒரு வைராக்கியம்,அந்த வாய்ப்பும் எனக்கு கிட்டியது .பிள்ளைகளுக்காக ராஜினாமா செய்த  வேலையை ,வேறு வேலை(ஆசிரியையாக) ரூபத்தில் அந்த பிள்ளைகள் கல்வியைத் தொடங்கிய அதே ஆரம்பள்ளியில் கிடைக்கப்பெற்றேன்.நான்கு டிஜிட் ஊதியம் எடுத்த பழகிய நான் ,முதன்முறையாக மூன்று டிஜிட் சம்பளம் பெற்றேன் ஆனால் அங்கே இல்லாத ஓர் ஆத்மதிருப்தி இந்த அர்ப்பணிப்பு தொழில் கிடைக்கப்பெற்றேன்.
ஆனாலும் அன்று தொட்டு இன்றுவரை உணவுக்கும் உடைக்கும் எந்த குறையும் இல்லாமே என்னை இறைவன் ஆட்டுவிக்கிறான்!!!

2 comments:

 1. எல்லாப் பிரச்சனையும் ஒப்பிட்டு பார்ப்பதால் தான்...

  நேரம் கிடைப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post_28.html

  ReplyDelete
 2. அருமையான பொருள்கொண்ட பதிவு சகோதரி...
  "" உன் நிலையை - நீ
  முன்னிலையுடன் ஒப்பிடாதே
  முன்னிலையுடன் ஒப்பிட்டால்
  என்நிலைக்கும் நீ தகுதியில்லை"""
  இது ஆன்றோர் வாக்கு...
  உங்கள் வாழ்வின் சம்பவங்களுடன்
  இந்தப் பொருளை உணர்த்தியமை மிக அழகு.
  ===
  உணர்ந்துகொண்டு
  வாழ்ந்தால்
  உயர்வுடன் வாழலாம்...

  ReplyDelete