Tuesday, 23 July 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

                முதல் கணினி அனுபவம் பற்றி எழுத ,என்னை இங்கே பணித்த அன்பு நண்பரும் ,பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்தி, ‘என் மன வானில்’என்ற ஐடியாவும் கொடுத்து  உருப்படியாக எதையாவது எழுதுங்கள் செல்வி’என்று பதிவர் அங்கீகாரத்தை எங்கள் நட்பின் அடையாளமாக கொடுத்த எனதருமை முகநூல் நண்பர் திரு. கே.ஆர்.விஜயன் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்!
                                                                 
                                                          (கொஞ்சம் சிரிங்க விஜி)

                        நண்பர் திரு நாஞ்சில் மனோ அவர்களின் முகநூலில் இந்த தலைப்பில் ஒரு பதிவைப்பார்த்தேன்(படிக்கவில்லை),என்னம்மோ பெரிய இடத்து சமாச்சாரம் என்று லைக் போட்டுவிட்டு நகர்ந்தேன்.நண்பர் விஜயன் தகவல் சொல்லி தொடரச் சொன்னார்.நம்மையும் மதித்து  சொல்றாங்களே(பாவம் பதிவுலகம்?,அதுக்கு வந்த கஷ்டகாலம்),உடனே ‘யெஸ்’ சொல்லி எழுதுகிறேன்.
                           
                           எனது முதல் கணினி அனுபவம் நான்  கடந்த 12 வருடங்கள் வேலை செய்து வந்த matsushita air-cond (macc) ஜப்பானிய நிறுவனத்தில் கிடைக்கப்பெற்றது.ஆம் முதன்முதலில் ஒரு சாதாரண மெசின் ஆப்ரேட்டராக பணிக்குச் சென்றேன்.பிறகு வெளியூர் வேலைக்கெல்லாம் அனுப்பி பதவி உயர்வு கிடைத்து ,அலுவலகத்தில் வேலைக்குச் சென்றேன்.முதன் முதலாக கணினிப் பெட்டியை இயக்க தோழி புஷ்பா(கனடா)கற்றுக்கொடுத்தாள்.
                                                             
     
                    பலவாறு டிரெய்னிங் கொடுத்தாள்.ஒருமுறை எனக்கு ஒரு வேலையைக் கொடுத்து ,என் பின்னால் சக அலுவலக நண்பர்களுடன் உட்கார்ந்துகொண்டு ‘நீ செய் ‘நான் சரிப்பார்க்கிறேன் ‘என்றார்.’ஐயோ !என்னை நிர்வாணமாக்கி நடுரோட்டில் நடக்க விட்டது போல ‘இருந்தது அந்த தருணம்?

               ஆம் நான் டைப் செய்யும் ஒவ்வொன்றும் தவறாக போனது,நான் பதற்றத்தில் தவறு தவறாக பட்டன்களை அழுத்தினேன்(அறவே அனுபவம் இல்லாத அறிவு அது).மிகவும் அன்பாக தைரியம் சொல்லி ,’ஒன்னும் பயப்படாதே செல்வி’யாரும் உன்னைத் திட்ட மாட்டார்கள் என்னை மீறி’என்று என்னை ஊக்குவித்து இன்று நான் நுனிவிரலில் சில கணினி வேலைகள் செய்கிறேன் என்றால்,அதற்கு தோழி புஷ்பாதான் காரணம்.

                பிறகு நன்கு கற்றுத்தேர்ந்தேன்.அந்த அலுவலகத்தில் மிகவும் முக்கிய பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது (எல்லாமே உபயம் தோழி புஷ்பா!).அது shipping dept ,ஆகவே அனைத்து வேலைகளும் கணினியில்தான்.சுமார் 8 வருடங்கள் அனுபவம் பெற்றேன்.

             உலகில் உள்ள 5 கண்டங்களுக்கும் குளிர்சாதப்பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் வேலை அது.கூடவே அட்மின் வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.microsoft excel செய்வதில் எனக்கென  ஒரு தனித்திறமையை உருவாக்கிக்கொண்டேன்.

               இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு  வேலையை ராஜினாமா செய்தேன்.வீட்டில் உட்கார்ந்தேன்.மூன்று வருடங்கள் ஓடின.வாசனுக்கு மூன்று வயது. அட்மின் வேலை அனுபவத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று நினைத்து வேலைத் தேடினேன்,அதுவும் அரைநாள் வேலை சிறப்பு என்று கிடைத்தது ஆசிரியை தொழில்!

                 பள்ளியில் சேர்ந்தவுடன் எல்லாமே எழுத்து வடிவில் இருந்தன.கணினியில் அங்கே (பாலர்பள்ளியில்)யாருக்கும் அனுபவமே இல்லை என்று சொல்லலாம்.என் அட்மின் + கணினி  அனுபவம் அங்கே குன்றின் மேல் இட்ட விளக்காய் பரவியது.

                தலைமையாசிரியர் என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து பள்ளி வேலைகள் மட்டுமின்றி அவர் சொந்த வேலைகளையும் செய்ய சொல்வார்.ஆனாலும் எனக்கு என்று கணினி வீட்டில் இல்லை.பிறகு பள்ளி வேலைகள் ஒருபுறம் ,நெட் உலகம் தலைத்தூக்கிய காலம்.எப்படியோ ஒரு கணினி ஓசியில் கிடைத்தது .

                அதை வைத்துதான் முதன்முதலாக முகநூலுக்கு வந்தேன்.ஆனால் பழைய கணினி என்பதால் ஆமைக்கு அண்ணன் போல ரொம்ப மெதுவாக செயல்படும் . நட்பு ஒரு மேசேஜ் போட்டு ரொம்ப நேரம் ஆன பிறகுதான் என் பதில் போகும்.நெட்டும் எனக்கு எதிராய் வேலை செய்யும் ?
                                                                         
                         
                    பிறகு ,என் அருமை பாஸ் என்ற திரு,பாலகிருஸ்ணன் ‘செல்வி என்னிடம் ஒரு லாப்டாப் உண்டு ஆனால் பாட்டரி பிரச்சனை ,எப்போதும் பவர் பூட்டியிருக்கனும்’ என்றார்.கரும்பு தின்னக்கூலியா?

                   உடனே ஓகே சொன்னேன்.அருமையான ‘dell' மடிகணினி.முகநூலில் கூடி சேர்ந்து கும்மி அடிச்சி கைக்குலுக்கி சண்டை,சச்சரவு என்று பெயர்போட்டேன்.ரொம்பவே பழசாகிப்போச்சு ,கடையில் கொடுத்தால் ,கயலாங் கடைக்கு முகவரி கொடுக்கிறானுங்க?இருந்தாலும் வச்சிருக்கிறேன்.

                 அப்படியே காலத்தை ஓட்டினேன்.சில மாதங்களுக்கு முன்  என் பாலர்பள்ளியைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய மடிகணினியை கொடுப்பாங்களா?எங்கள் என்.ஜி.ஓ.இப்போ அதன் தயவில்தான் ஆல் இன் ஆல்!
                                                         
                      
                                     ஒரு வழியாக கொடுத்த வேலையைச் செய்த திருப்தியில் ,விடைபெறுகிறேன்.யாரையாவது கோர்த்து விட்டால்தானே தொடர் பதிவுக்கு மரபு?யாரையாவது மாட்டி விடலாம் என யோசித்த வேளையில்......

               இவர்கள் யாராவது கைகொடுப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்!
மகேந்திரன் பன்னீர்செல்வம்
Venkatasubramanian Sankaranarayanan 
ஸ்கூல் பையன்

            

8 comments:

 1. கரும்பு தின்னக் கூலி கிடைத்தது...

  தொடர்ந்து தளத்திலும் (blog) தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அக்கா... என்னுடைய வலைப்பூ முகவரி

  http://schoolpaiyan2012.blogspot.com

  ReplyDelete
 3. என்னுடைய பதிவுலேயே டீச்சர் பெயரைப் போடலாம்னு இருந்தேன், நீங்க பிஸி என்று நினைத்துவிட்டேன்.

  அருமையான முதல் கணினி அனுபவங்கள் வாழ்த்துகள் டீச்சர்....!

  ReplyDelete
 4. அக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதியாயிற்று...

  http://schoolpaiyan2012.blogspot.com/2013/07/blog-post_24.html

  ReplyDelete
 5. \\\\தலைமையாசிரியர் என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து பள்ளி வேலைகள் மட்டுமின்றி அவர் சொந்த வேலைகளையும் செய்ய சொல்வார்\\\ மார்க்கெட்ல போயி காய்கறி வாங்கிட்டு வர சொல்லுவாங்களா????

  ReplyDelete
 6. கம்ப்யூட்டர்ல பெரிய கில்லாடியாத்தான் இருப்பீங்க போல...வாழ்த்துகள் !

  ReplyDelete
 7. சிறப்பான பதிவு. கணினி அனுபவங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்

  ReplyDelete
 8. மிக அறிவான கட்டுரை. வாழ்க.

  ReplyDelete