Friday, 18 October 2013

’ஒரு பால்’

          (திருச்சியில் ஷாப்பிங் செய்த போது நான் கண்ட ஒவ்வொரு ஜீவன்களைப் பற்றிய பாடல்தான் இது)

       பிறர் மெய்ச்சிக்கொள்ள உடுத்திக்கொண்டு  ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒருபால்....!

       பணமே இல்லாமல் கடன் வாங்கி மகிழ்ச்சியாய் ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒரு பால்..!
.
       ஆபிசில் வாங்கிய கடனை எப்படி கொடுப்பேன்?என்று யோசித்தவாறு மனமின்றி ஷாப்பிங் வந்த கணவர்கள் ஒருபால்...!

      ’என் அம்மாவுக்கும் ,அவ அம்மாவுக்கு எடுப்பதுபோலவே எடுப்பாளா?என்ற கனவில் கணவர்கள் ஒருபால்.....!

       கணவரின் பணம் இல்லாமல் நிம்மதியாய் அவ பணத்துல ஷாப்பிங் செய்யும் வேலைக்குப்போகும் மனைவிகள் ஒருப்பால்....!

        கொடுத்த பணத்தில் எவ்வளவு சேமிக்கலாம் என்று திட்டம் போட்டு வாங்கும் பெண்கள் ஒருபால்..!

       ‘இம்முறையாவது எனக்கு தரமாக எடுப்பாளா ?மருமகள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார்கள் ஒருபால்...!

        கூட்டத்தில் அல்ப்ப சுகத்துக்கு  முட்டி மோதி களிகொள்ளும் இளைஞர்கள் ஒருபால்..!

         எப்படியும் அவன் இங்கே வருவான் என்று  கூட்டத்தில் அலைபாயும் கண்களுடன் யுவதிகள் ஒருபால்...!

          அக்காள்  அணிந்து நொந்து போன செருப்பை தங்கை அணிந்து சிரத்தையுடன் நடந்துபோன சிறுமிகள் ஒருபால்..!

          நொந்துபோன செருப்பும் ,அளவில் பெரிய அக்காவின் செருப்பு கொடுக்கும் வலியை தாங்கிகொண்டு நடந்துபோன சிறுமிகள் ஒருபால்...!

          வலியை வெளியே சொன்னாள் ஷாப்பிங் வாய்ப்பு கிடைக்காமல் போயிடும் என்ற பயத்தில் நொந்துபோன பாப்பாக்கள் ஒருபால்...!

          பெத்தவங்க சிரமம் தெரியாமல் பிச்சிபுடுங்கி பிடிவாதமாய் உடைகள் வாங்கும் வாண்டுகள் ஒருபால்...!

          வீட்டின் சிரமம் புரிந்து ‘வேண்டாம் அம்மா ,வேண்டாம் அக்கா’என்று அடக்கமாய் நடந்துகொள்ளும் பசங்க ஒருபால்....!

         அந்த நெருக்கடியிலும் கைக்குழந்தைகளை ஏந்திக்கொண்டு அயராமல் அலைமோதும் தாய்மார்கள் ஒருபால்..!

         ’அவள் எப்படியும் சமாளித்து வாங்கிடுவா ,நமக்கென்ன என்று டாஸ்மாக்கை நோக்கி ஓடும் ஆண்கள் ஒருபால்....!

          நமக்கு நெனச்சமாதிரி வாங்கி வருவாங்களா?என்ற எதிர்பார்ப்பில்  தங்கை தம்பிகளைப் பொறுப்பாக  கடை வாசலில் காவல் காக்கும் உடன்பிறப்புகள் ஒருபால்....!

          கூட்டத்தையும் பண்டிகையையும்  தன் வசம் கொண்டு சம்பாதிக்க நினைக்கும் சில அதிகாரிகள் ஒருபால்..!

           எது நடந்தாலும் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் வியாபாரிகள் ஒரு பால்....

          ஏழை வியாபாரிகளிடம் கூட அதிகாரத்தை பாவித்து பணம் பிடுங்கும் சில கல்நெஞ்சுக்கார .....ஒரு பால்....!

           எங்களுக்கே இடம் இல்லை ,இதுங்க வேற ?என்று எங்களை திட்டியும் முறைக்கும் மக்கள் ஒரு பால்...!

            அங்கே உள்ள மக்கள் கூட்டம் போதவில்லை என்று வெளியூரில் இருந்து அங்கே போய் ஷாப்பிங் செய்யும் எங்களைப் போன்ற பிசிபாடிகள் ஒருபால்....!

**என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமானே ,அடுத்த வருசமும் தமிழ்நாட்டுக்கு ஷாப்பிங் போக எமக்கு அருள் கிட்டுவாயாக!

(மனதில் தோன்றியதை கிறுக்கியுள்ளேன் ,யாரையும் புண் படுத்தும் நோக்கில் அல்ல நட்புக்களே)

6 comments:

 1. நல்லாத்தாங்க இருக்கு...!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. கடைக்குப் போனோமா...
  வாங்குவதை வாங்கி வந்தோமா
  என்று இல்லாமல்...
  சுற்றி நடப்பதை கூர்ந்து கவனித்தல்
  எவ்வளவு பெரிய விஷயம்..
  அதிலும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு ]
  பாவித்தல் மிகவும் அழகு...

  ReplyDelete
 3. சரி அதெல்லாம் இருக்கட்டும், நண்பர்களை சந்திக்காமல் இப்பிடி திரும்பி வந்து பதிவு போடுறவிங்க ஒருபால்....!

  எப்பிடி நாங்களும் சொல்வோமுல்ல....

  ReplyDelete
 4. செல்வி, ப்லொக் போஸ்ட் நல்லா இருக்கு வாழ்த்துகள். உங்களுக்கு சிறுகதை எழுத நல்லாவரும் முயற்சி பண்ணுங்க....பார்க்கும் காட்சிகள உன்னிப்பா கவனிதிருக்கிங்க..."செல்வி சிறுகதை எழுத்தாளர் " என்றால் அக்கா விஜிக்கும் பெருமைதானே . ..

  ReplyDelete
 5. செல்வி, ப்லொக் போஸ்ட்
  நல்லா இருக்கு வாழ்த்துகள்.
  உங்களுக்கு சிறுகதை எழுத
  நல்லாவரும்
  முயற்சி பண்ணுங்க....பார்க்கும்
  காட்சிகள
  உன்னிப்பா கவனிதிருக்கிங்க
  ..."செல்வி சிறுகதை எழுத்தாளர்
  " என்றால் அக்கா விஜிக்கும்
  பெருமைதானே . ..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குரு முதன்முதலாய் என் வலைப்பதிவுக்கு வந்து கருத்து சொல்லியதற்கு

   Delete