Sunday, 20 October 2013

திருச்சியை நோக்கி எங்கள் பயணம்!

             கடந்த மாதம் திடிரென ஓர் அழைப்பு.மறுமுனையில் என் அக்கா ‘ஹலோ அடுத்த மாதம் திருச்சிக்கு ஃப்ரி டிக்கெட் இருக்கு,மாமாவுக்கு ஆஃப்பர் கிடச்சிருக்கு, மிக குறைந்த சீட்கள் மட்டுமே உண்டு ,சீக்கிரம் சொல் வருகிறாயா? சீக்கிரம் ,சீக்கிரம் , தாமதம் ஆனால் வேற ஆள் போட்டிருவாங்க ‘என்று அவசரப்படுத்தினார்கள் கணவன் மனைவி சகிதம்.’சரி இரு தேதி பார்க்கனும் ‘என்று முடிப்பதற்குள் ‘ஐயோ ஹாஜ் பெருநாள் லீவுலதான்.வெள்ளிக்கிழமைப்போய் அடுத்த பொதுவிடுமுறையில் வரவேண்டியதுதான்’என்று டிடெய்லுடன் என் சம்மதத்துக்கு ஆளாய்ப்பறந்தனர்.’சரி அப்படின்னா போடு’என்றேன்.மறுபடியும் போன் ‘பத்து பேருக்கு கிடைச்ச வாய்ப்பில் ஐந்து பேர் மட்டுமே நுழைய முடிந்தது,நல்லவேளை நீ உடனே ஓகே சொன்னாய்’ என்றார் அக்கா.                                                                                                  கையில் பணம் இருக்கா?என்று கூட யோசிக்கவில்லை,ஆனால் ஓகே சொல்லியாச்சே?என்று கொஞ்சம் தயங்கினேன்.ஆனாலும் மனதில் ஒரு ஆறுதல் இருந்தது அதாவது தமிழ்நாடு போகனும் என்றால் நேரமும் பணமும் எப்படியும் கிடைக்கும். கிடைத்தது !.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கணவர்  பணம் கொடுத்தார்.நான் திட்டமிட்ட பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றவற்றை வங்கியில் போட்டுவிட்டு கிளம்பினேன்.11/10/13 வெள்ளிக்கிழமை மாலை மணி 4 க்கு விமானத்தில் இருக்கனும். காலையில் ஆரவாரமாய் பள்ளியில் சரஸ்வதி பூஜை செய்துவிட்டு ,ஆர்ப்பாட்டமாய் மதியம் 12 மணிக்கெல்லாம் அம்மா, அக்காள்கள் ,அண்ணி ,மாமா என்று ஆறு பேர் வி.நிலையம் சென்றடைந்தோம்.
                                                                                       
              எல்லோர் லக்கேஜ்களிலும் ஏதோ ஓர் அடையாளமாக ரிப்பன் எல்லாம் கட்டியிருந்தார்கள் ,என் லக்கேஜ்ஜில் மட்டும் இல்லை.மாமா ‘எப்படி உன் லக்கேஜ்ஜை கண்டு பிடிப்பாய் ?என்றார்.பின்னால் திருப்பி லக்கேஜ்ஜின் கீழே லேசாய் கிழிந்தும் ,மேலும் நான்கு டயர்களில் இரண்டு காணாமற்போயிருக்கு’அதுதான் அடையாளம் என்றேன். நாயகன் பட டியூனில் எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்று நினைத்தது என் தவறுதான்/எல்லோரும் கோரசாக ‘ஆனை வாங்க காசு இருக்காம் ,சவுக்கு வாங்க காசு இல்லை,வருசா வருசம் ஊர் சுத்த கிளம்புகிறாய் ,ஆனால் ஒரு லக்கேஜ் வாங்க முடியாது’இப்படியெல்லாம் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணாதே?என்று கிண்டலாய் அண்ணி சொல்ல,எனக்கு கோபமே வரலையாம்!அதானே உண்மை!                                                                          
                                                                                           


              சுமார் ஏழெட்டு முறை தமிழ்நாடு போய்விட்டதால் அப்படி ஒரு பதற்றமும் இல்லை.எல்லா பரிசோதனைக்கூடங்களிலும் முன்னேறி போய் ‘duty free' கடையில் வழக்கம் போல் நல்ல மணம் உள்ள பெர்ஃபியூம்களை ஓசியில் டெஸ்டிங் என்ற பெயரில் தடவிக்கொண்டோம் ஆனால் வாங்கவில்லை!அம்புட்டு விலைப்போட்டால்? “நான்சென்ஸ் ஃபெல்லாவ்ஸ்”.அப்படி இப்படி என்று  மாலை மணி மூன்று முப்பதுக்கு விமானத்தின் உள்ளே நுழைந்தோம்.மணி 4.30 ஆகியது ,விமானம் கிளம்பவில்லை.வழக்கம் போல்,எப்போதும்போல், as usual விமானம் தாமதம்!ஹ்ம்ம் தமிழர்கள் கூடி இருக்கும் இடம் என்றால் தாமதமும் ஒட்டிக்கொள்ளுமோ?விமானியும் தன் திறமையால் ‘பயணிகளே என்ன கோளாறோ தெரியவில்லை ,ஐந்து நிமிடம் ஆகலாம் ,அரை மணி நேரம் ஆகலாம் ‘என்று கூறி கூறி வெற்றிகரமாய் ஒருமணி நேரம் ஆனது.(ஆனால் ஓர் உண்மை, நான் சென்ற ஏர் ஆசியா  இதுவே  முதன்முறையாக தாமதமாக கிளம்பியது )
                                                                                                 


                அன்னை திரேசா ஒருமுறை விமானம் தாமதமாக கிளம்பும் ‘என்று கேள்விப்பட்டதும் ‘சரி காலையில் நான் ஜெபம் செய்யவில்லை,இந்த நேரத்தைப் பயன்படுத்தி தியானம் செய்கிறேன் ,நான் அந்த தாமதமான காரணத்துக்கு நன்றி  சொல்லனும்’என்று சொன்னதுபோல நாமும்  பெருந்தன்மையாய்  நடந்துகொள்ள முடியுமா?அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கனுமே?சரி வழக்கம் போல என் ஹாபியாக ,  மொபைலில் பாடல்கள் கேட்க தொடங்கினேன்.பயணத்தில் நான் அதிகம் வெறுக்கும் பயணம் விமானப் பயணமே!ஆமாம் கார் ,பேருந்து என்றால் கொஞ்சம் வெளியே போய் இளைப்பாறி வரலாம்,இங்கே முடியுமா?அவசரத்தில் போனதால் புத்தகங்களும் எடுத்துப்போகவில்லை.    
                                                                             


                      ’சரி நம் பக்கத்தில் ஓர் இந்தியர் இருக்கிறார்,ஆள் பார்த்தால் நல்லா டிப்டாப்பாக இருந்தார்,ஏதும் புத்தகம் இருந்தால் வெட்கத்தை  விட்டு கேட்கலாம்’ என்ற முடிவில் இருந்தேன். ஆனால் அதிர்ச்சியை மட்டுமே கொடுத்தார்.வேற என்ன? ஓர் ஆங்கில புத்தகம் ,அதுவும் என்ன தலைப்புன்னு கூட புரியாத புத்தகத்தை திறந்து ரொம்ப ஆர்வமாய் படிக்க தொடங்கினார். நமக்கு ஒத்து வராத டிபார்ட்மெண்ட் என்று முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டேன்.பின்னால் அக்காள் ,அண்ணி ,அம்மா எல்லோரும் உறங்கினார்கள் ,ஐயோ எனக்கு அதிகம் கோபம் வரும் விசயம் என்னோடு பயணிப்பவர்கள் உறங்குவது?காரணம் என்னால் எந்த வண்டியில் பயணம் செய்தாலும் பத்து நிமிடத்துக்கு மேல் உறங்கவே முடியாது?என்ன சாபமோ? 
                                                                                           


          சரி மீண்டும் பக்கத்து ஆங்கில புத்தக ஓனர் ,ஏதோ பை பிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். ஆஹா ,ஏதோ பிஸ்கட் பொட்டலம் ,’அப்பாடா கண்டிப்பாக நம்மிடம் ’வேண்டுமா?என்று கேட்பார் போல என்று நானே கற்பனைப் பண்ணிக்கொண்டு கண்டும் காணாதது போல திரும்பி கொண்டேன்!அட தெய்வமே!மனுசன் பொட்டலத்தைப் பிரிச்சி சில நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு குப்பையையும் வீசினார்.’இன்றைக்கு நான் எது மூஞ்சியில முழிச்சேனோ? அவசர அவசரமாய் வந்ததால் எதுவும் வாங்கவில்லை, எதுவும் எடுத்தும் போகவில்லை சோ என் வேகம் எனக்கு  சோகம்!                                                                                            


            பணம் எல்லாம் மாமாவிடம் கொடுத்து வைத்திருந்ததால் ,அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்’என்று அமைதியாய் இருந்தேன்.கொஞ்ச நேரம் கழித்து பின்னால் திரும்பி அக்காளையும் அண்ணியையும் எழுப்பிவிட்டேன்.இன்னும் அரைமணி நேரம் எழுந்திருங்கள் ‘என்று . சில நிமிடங்களில் விமானியின் குரல் ‘பயணிகளே இன்னும் பத்து நிமிடங்களில் நாம் தரையிறங்க உள்ளோம்....திருச்சி உள்ளூர் நேரம் , விமானம் எத்தனை கிலோமீட்டர் தொலைவில்’என்ற தகவல்களுடன்.’அப்பாடா! ,எல்லோர் முகத்திலும் ஒரு புத்துணர்ச்சி. அருகில் இருந்த ஆங்கில ஓனர் மெதுவாய் சிரித்தார்.
‘பயணிகளே வெற்றிகரமாய் தரையிறங்கினோம்,மீண்டும் ஒருமணி நேரம் தாமதத்துக்கு...’என்று இழுத்தார்.’அடடா ஏதும் கொடுப்பாங்களோ?என்று எதிர்பார்த்தால் ‘மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
                                                                                          

            எது எப்படியோ நல்லபடியா கொண்டு வந்த சேர்ந்த புண்ணியவானுக்கும் இறைவனுக்கும்  நன்றி சொல்லி இறங்கினோம். விமான நிலையத்தில் நம்மை வரவேற்க டிரைவர் காத்திருப்பார் என்று எதிர்பார்த்து போன இடத்திலும் ஏமாற்றம் .தம்பி கொஞ்சம் தாமதமாய் வந்தார்.அந்த இடைவேளையில் அங்கே நடந்துகொண்டிருந்து சில கூத்துகளையும் கொடுமைகளையும் கொடூர பசியிலும்  ரசிக்க முடிந்தது.டெம்போ வந்தது. ’வண்டியை முதலில் சங்கீதா ஹோட்டலுக்கு விடுங்க,சாப்பிடனும்’மாமாவின் கட்டளை!
               இவ்வேளையில் எங்கள் ஊர் ஏர் ஆசியாவுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.ஒருக்காலம் தமிழ்நாடு போவதென்றால் மிகவும் அரிது.உண்மையிலே வசதி படைத்தவர்கள் மட்டுமே போக முடியும் அல்லது அவசர தேவை என்று வந்தால் கடன் பட்டுதான் போக முடியும் ஆனால் தற்பொழுது என்னைப்போன்ற நடுத்தர வருமானம் பெறும் அனைவராலும் பயணிக்க முடிகிறதே.நன்றி திரு.டோனி ஃபெர்னாண்டாஸ் அவர்களே!.
                                                                                                     

 

15 comments:

 1. சூப்பர் செல்வி இன்னும் நெறய எழுதுங்க.

  ReplyDelete
 2. சூப்பர் செல்வி இன்னும் நெறய எழுதுங்க.

  ReplyDelete
 3. என்ன டீச்சர்,சப்புன்னு முடிச்சுட்டீங்க?இன்னும்,இன்னும் நிறைய எதிர் பார்த்தேன்!

  ReplyDelete
 4. விமானப் பயணம் அருமை....அடப்பாவி...டூர் போகும்போதுமா காசு கணக்கு பார்ப்பாயிங்க அவ்வ்வ்வவ்....

  ReplyDelete
  Replies
  1. பின்னே.. சில விஷயங்களில் இழுத்துப்பிடித்தால்தான், சில விஷயங்களுக்குச் செலவு செய்யமுடியும். குடும்பம் இருக்கே.

   Delete
  2. என்னங்க விஜி, பாரின்ல இருக்கிறவங்கெல்லாம் இப்படி சொல்ல ஆரம்பிச்சா, உள்ளூர்ல இருக்கிறவங்க என்ன சொல்றதாம்?

   Delete
 5. பயணம் இனிதே அமைந்தமை நன்று...

  ReplyDelete
 6. அந்த நேரத்தில் நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலை..... அதனால் தான்.

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான்???? ஏர்போட் வரலையா?

   Delete
 7. முதல் முறையா வர்றேன் உங்க தளத்துக்கு.. சிரிச்சுகிட்டே படிச்சேன்.. தொடர்ந்து வர்றேன்..

  ReplyDelete
 8. //ஏர் ஆசியாவுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.//

  ஏர் ஏசியாவை ஒருவர் புகழ்ந்து முதல் முறையாக கேட்கிறேன்.. எங்களுக்கு நேர்ந்த அனுபவமாக இருக்கலாம்.. இது என்னுடைய அனுபவம்.. http://www.kovaiaavee.com/2012/12/air-asia.html

  ReplyDelete
 9. நல்ல பயண அனுபவதையில் வடிவம் கொடுத்திருக்கிங்க செல்வி....வாழ்த்துகள். அன்னை தெரசா செய்தி அருமை...

  ReplyDelete
 10. அருமை.. ஆனால் ஒன்று நன்றாக தெரிகிறது பயணத்தில் மொக்கை போட யாரும் கிடைக்காமல் காஞ்சுடீங்க போல...
  ஓ... இது தெரிஞ்சு தான் உங்களை வேறு இருக்கையில் தள்ளிவிட்டு அவங்க போய்டாங்களா????

  அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்...

  ReplyDelete