Friday 21 February 2014

நமக்கு தெரியாமல் போகும் நம்மைச் சார்ந்தவர்களின் இறப்பு!

             

        சில விசயங்களை நாம் எழுதி லைக் மற்றும் கமெண்ட் கிடைத்த போது இல்லாத ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ,யாராவது போனிலோஅல்லது நேரிலோ பார்த்து ,’அன்றைக்கு நீங்கள் எழுதிய அந்த விசயம் ,உண்மையில் மனசைப் பாதித்தது டீச்சர் ‘என்று சொல்லும்போதுதான் நம் எழுத்துக்கும் அப்படி ஒரு உந்துதல் உண்டு என்றே தோணுது.

    அந்த வகையில் அன்று நான் எழுதிய இந்த விசயத்தைப் படித்துவிட்டு என் நண்பன் தொலைபேசியில் அழைத்து ‘செல்வி அந்த இறப்பு விசயம் என்னை ரொம்பவே பாதித்தது செல்வி.உண்மையில் மனசில் லேசான பயம் கூட ஏற்பட்டது.நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இறந்துபோவதும் அது நமக்கு தெரியாமல் போவதும் ஐயோ!யாருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது செல்வி.இனி எல்லா நண்பர்களையும் போனில் அழைத்து அடிக்கடி நலம் விசாரிக்கவேண்டிய எண்ணம் வந்தது ‘என்றான்.அவன் சொன்ன அந்த விசயம் இதுவே :


Selvi Sk
19 February near Kuala Lumpur
ச்சே..ச்சே என்ன உலகம்?
நேற்று நான் வழக்கமாக செல்லும் பாதையில் ஓர் இறப்பு!பேருந்து ,கார் செல்லும் பிரதான பாதையில் பந்தல் போடப்பட்டிருந்தது.ஆகவே மாற்று சாலையில் செல்லவேண்டிய கட்டாயம். நானும் அவசரமான உலகில் உழன்று கொண்டிருப்பதால்,இறப்பு வீட்டை சுமார் மூன்று முறை கடந்தும் எதையும் சரியாக கவனிக்கவில்லை.இன்று பள்ளி முடிந்து அழுதுகொண்டே ஓடி வந்த என் மகள்,’அம்மா என் தோழியின் அம்மாதான் நேற்று இறந்துபோனவர் அம்மா.ஐயோ யாருமே சொல்லவில்லையே, ரொம்ப கவலையா இருக்கு ‘ என்று அழுது புலம்பினாள்.அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் என் மாணவிகள்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகளின் படிப்பை விசாரிந்துச் செல்வார்.மிகவும் பொறுப்பான அம்மா. மனசே சரியாக இல்லை. டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள்.’என்னால் அவளுக்கு போய் ஆறுதல் கூட சொல்லமுடியவில்லைம்மா,அவங்க பிரேதம் அவர் மாமா வீட்டில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாம்.அந்த மாமா வீடுதான் நான் கடந்து போன வீடு!
#ச்சே கேட்டதுமுதல் மனம் நெகிழ்ந்து போனது.நன்கு அறிமுகமானவரை இறுதியில் போய் பார்க்க வாய்ப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?ஏனோ இரண்டு மூன்று நாட்களாக எல்லாமே வெறுப்பாகவே இருக்கிறது!

4 comments:

  1. உங்களின் எழுத்திற்கு கிடைத்த உண்மையான கருத்திற்கும், புரிந்து கொண்ட நண்பருக்கும் பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.என் பதிவுக்கு அடிக்கடி கருத்து சொல்லும் நண்பர் நீங்கள்

      Delete
  2. மனசுக்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருக்கும் டீச்சர், நானும் அனுபவித்தது உண்டு !

    ReplyDelete
  3. அருமையான் கருத்துரை திருமதி. செல்வி அவர்களால் பதியப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கைதான் தற்போது நாம் வாழும் வாழ்க்கை....

    ReplyDelete