Wednesday 13 November 2013

கவையாகி கொம்பாகி....

            ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்’.   இப்படி 18 வயதில் எங்கள் ஊரில் சபைநடுவே(வகுப்பறையில்)முழுமையாக ஒரு வாக்கியத்தை மும்மொழிகளான தமிழ்மொழி ,மலாய்மொழி மற்றும் ஆங்கிலமொழிகளில் வாசிக்க முடியாமல் முழிப்பதாக திடுக்கிடும்  செய்தி வருடாவருடம் கண்டறியப்படுகிறது. இதில் நம் இன மாணர்வகளும் அடங்குவர் என்ற செய்திதான் நெஞ்சை பிழியவைக்கிறது.
        இடைநிலைப்பள்ளிக்கல்வியை பெரும்பாலும் ஐந்து வருடங்கள் முறையே  பயில்கிறோம். ஐந்தாம் படிவம்(form 5) என்று கூறப்படும்  18 வயதில்  பயிலும் மாணவனுக்கு சரியாக ஒரு வாக்கியத்தை முழுமையாக மும்மொழிகளிலும் நிறுத்தாமல்  வாசிக்க தெரிவதில்லை என்கிற விசயம் மிகுந்த வேதனைக்குரிய விசயம். இதைவிட வருத்தத்துக்குரிய விசயம் அவன் பெற்றோர்களுக்கு வேற எதுவாகவும் இருக்கவே முடியாது!அத்துடன் அவன் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.இனி முதியோர் கல்வியில்தான் அவன் எழுத  வாசிக்க பழகவேண்டும் என்று சொன்னாலும் அது பொய்யாகி விடாது.
               அதேப்போல சாதாரண கூட்டல், பெருக்கல் கணிதம் கூட செய்யத்தெரிவதில்லை.இந்த தேர்வுதான் மலேசியாவில் ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும்.நேர்க்காணலுக்கு சென்றால் குறைந்த பட்சம் இந்த தேர்வில் என்ன கிரேட் ?எடுத்துள்ளோம் என்பதைத்தான் கேட்பார்கள்.அதேப்போல மேற்படிப்புக்குச் செல்ல  இந்த கல்வித்தகுதி மிக மிக அவசியம்.இங்கே எழுதப்படிக்கத் தெரியாவதவனுக்கு, இனி வாழ்க்கை எங்கே தொடங்கும்?

            சரி இந்த பிரச்சனையின் முதல் காரணம் என்னவென்று ,நான்காம் படிவ ஆசிரியரைச் சென்றுக்கேட்டால் ,’நாங்கள் என்ன செய்ய ,மூன்றாம் படிவத்தில் அவனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே எங்களிடம் அனுப்பினர் என்று பதில் வரும்.சரி மூன்றாம் படிவம் வரை அவன் என்ன செய்தான் என்று கேட்டால் , முதல் படிவத்தில் அவன் சேரும்போதே இப்படித்தானே வந்தான்? பிறகு எப்படி நாங்கள் தட்டி நிமிர்த்துவது?

        அப்படியென்றால் அவன் ஆரம்பள்ளியில் என்னத்த படிச்சித் தொலைச்சான் என்று கோபப்பட மட்டுமே தோணும்.அங்கே போய் கேட்டால், ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அவனுக்கு ஓர் எழுத்து எண்கள் கூட தெரியாமல்தான் வந்தான்’.அப்படியென்றால் , மழலைக்கல்வி ஆசிரியரிடம் இறங்கி போய் கேட்டால், ’நீங்கள் வேற அவனை எங்களிடம் பேபி சிட்டருக்கு ஆள் இல்லையேன்னுதான் அனுப்பி விட்டாங்க, அவன் எங்களிடம் வரும்போது பென்சில் பிடிக்க தெரியாது, ஏடுகளைத் திருப்பக்கூட அவன் பெற்றோர்கள் பழக்கி கொடுக்கவில்லை?இப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறது?என்று.இறுதியில் பழி பெற்றோர்களின் தலையில் போய் விழுகிறது அல்லது உட்புகுத்தப்படுகிறது!

        ஆமாம் பெற்றோர்களே ,அதிலும் வீட்டில் இருக்கும் தாய்மார்களே, 4 வயது ஆகும் குழந்தைகளை பென்சில் பிடிக்க,எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஆவன படுத்துங்கள்.”அதான் பணம் கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகிறோமே ,அங்கே ஆசிரியர்கள் பாடு அவன் பாடு ‘என்று அலட்சியம் செய்யாமல் முடிந்த வரை உங்கள் பங்கினைக் கொஞ்சமாவது அப்ளைப் பண்ணுங்கள்.கருத்தரித்த மூன்றாவது மாதத்தில்(நான் கேட்டவரையில்) குழந்தை கற்க தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

        ஒரு சாதாரண பாரம் பூர்த்தி செய்யக்கூட  தெரியாமல் நாம் பெற்ற பிள்ளையின் நிலைமை உருவாக நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திட கூடாது.பல்கலைக்கழகம் வரை பயின்றுதான் முன்னேற வேண்டும் என்று இல்லை,அடிப்படைக்கல்வி அறிந்த ஒரு மனிதனாக சமுதாயத்தில் அவனும் நடமாட நாமும் துணை நிற்போமே!

3 comments:

  1. நல்ல பதிவு/பகிர்வு!இந்தக் காலத்துப் பெற்றோர்கள்,ஓடியோடி உழைக்கணும்,வரி எல்லாம் கட்டணும்!பாடிப் பாடி ..................முடியாதே?இருந்தாலும்,இப்போது சில முன்னேறிய நாடுகளில்,குழந்தையின் மூன்றாம் வயது வரை வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிக்க வழி,வகைகள் இருக்கின்றன தான்.ஆனாலும்,முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் பெற்றோருக்கு,குறிப்பாக தாய்மாருக்கு சற்று சிரமம் தான்!சிந்திக்க வேண்டிய விடயம்.///எல்லாம் திறந்த வெளிப் பொருளாதாரக் கொள்கையால் விளைந்தது தான்!என்ன செய்ய?

    ReplyDelete
  2. இங்கே எல்லாம் "தலை கீழ்" கல்லூரிக்கு போகும் முன்னே பாதி பாடாய் படுத்தி விடுகிறார்கள்.. பார்க்கவே பாவமாக உள்ளது,..

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு....!

    ReplyDelete