Monday 28 April 2014

பழமை என்றும் இனிமை!

               தமிழ்மொழியில்  எவ்வளவோ  சிறப்புகள் இருந்தாலும்,நான் சில பெரிசுகள் கிட்ட கேட்டு ரசித்த இந்த சொல்லாடைகளை மறக்கத்தான் முடியுமா?என் பாட்டி ஈரோட்டிலிருந்து வந்தவர்.அவரிடமும் என் அண்டைவீட்டு தோழியின் அம்மா மற்றும் என் அம்மாவிடமும் கேட்டவைகளை இங்கே பறிமாறிக்கொ(ல்)கிறேன்!இவைகளை முதன்முதலாய் கேட்கும் போது  நானும் என் மூன்று அக்கா தங்கை எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.பிறகு அதையே வச்சி பாட்டியும்  அம்மாவும் திட்டி திட்டி அது நார்மலா போச்சு. என் தோழிகள் மத்தியில் நான் ரொம்ப ‘விசயம்’தெரிந்தவளாக விளங்க இவைகளும் ஒரு காரணம்.இன்னும் நிறைய இருக்கு,அவைகள் யாவும் தணிக்கைக்கு உடபட்டவை என்பதால் வெளியிடவில்லை!

  1.ஓடற நாயைக் கண்டால் தொரத்துற நாய்க்கு தொக்கா போகும்.

  2.அஞ்சும் அஞ்சும் பத்து,ஆயும் தாயும் பொண்ணு

  3.பூசி மொழுகின வீட்டில் நாய் நுழஞ்ச மாதிரி

  4.நரிக்கு நாட்டாமை கொடுத்தால் ,நாலு வெள்ளாடு கேக்குமாம்

  5.முழுத்தேங்காயை நாய் உருட்டிட்டு போன மாதிரி

  6.கெட்ட நேரம் வந்தால்,ஒட்டகத்தின் மேலே ஏறி நின்னாலும் நாய் கடிக்குமாம்.

  7.ஆத்துல பெருங்காயத்தை கரச்ச கதைப்போல

  8.ஆத்து நிறைய தண்ணி ஓடினாலும் நாய் நக்கிதான் குடிக்கனும்

  9.வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுன மாதிரி

  10.எடவாதத்தூல ஒரு கொடவாதம் போல

  11.நடக்ககஷ்டப்பட்டவன் சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கிட்டானாம்

  12.கோழி மேச்சாலும் குமினியில மேய்க்கனுமாம்

  13.ஊர்ல கல்யாணமாம் ,மார்ல சந்தனம் பூசிக்குவான்

   14.ராவுத்தரே புல்லு சாப்பிடுறாராம் ,குதிரைக்கு கோதுமாவு ரொட்டி கேக்குதாம்

   15.யானைக்கு கோவணம் கட்டுறமாதிரி

   16.வேணும்னா வேர்ல கூட காய்க்குமாம்,வேண்டாம்னா கொம்புல கூட காய்க்காதாம்

   17.ஆட்டையும் மேச்ச்சுக்கனும் அண்ணனுக்கு பொண்ணையும் பார்த்துக்கணும்

    18.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்

     19.ஒப்புக்கு சித்தப்பா உப்பை போட்டு நக்கப்ப்பா

      20.பன்னிக்குட்டி தென்னை மரம் ஏறிச்சாம்.
         இப்படி உங்களுக்கு ஏதும் சரக்கு இருந்தால் எடுத்து விடுங்க,தெரிந்துகொள்வோம்!
                                                          

10 comments:

  1. ஆத்தா தவிட்டுக்கு அழுவுறா, மக பட்டுக்கு அழுவுறா

    ReplyDelete
  2. அருமையான பழமொழிகள்... எனது அம்மா, பெரியம்மா ஆகியோர் இந்த மொழிகளில் பலவற்றை அடிக்கடிச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு
    அறியாதவைகளை அறிந்து கொண்டேன்
    இருந்தா எடுத்து விடலாம்தான்
    ஆனா ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில்
    நுழைந்த மாதிரி ஆகிவிடுமோ எனப் பயந்து
    ஏதும் சொல்லாது நகர்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சுவாரஸ்யமான தொகுப்புகள்

    ReplyDelete
  5. அட இது நலலா இருக்கே?
    கொடுமை கொடுமை னு கோவிலுக்குப் போனானாம்
    அங்க ரெண்டு கொடுமை ஜிங்குஜிங்கு னு ஆடிச்சாம்!

    சேல இலலனு கேட்டு ஒருத்தி சின்னாயி வீட்டுக்குப் போனாளாம்! அவ
    ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு எதுத்தமாதிரி வந்தாளாம்!

    சொலவடைகள் நம் மக்களின் அனுபவக் கவிதைகள்!
    நல்ல “மனசு” நண்பர் சே.குமார் தளத்தின் வழி வந்தேன்.
    உங்கள் தளம் நலலாயிருக்கு தொடர்ந்து எழுதுஙகள். நானும் தொடர்கிறேன்.நன்றி

    ReplyDelete
  6. போதுமா போதுமா இன்னும் வேணுமா ? சூப்பர் டீச்சர்ர்ர்ர்....!

    ReplyDelete

  7. வணக்கம்!

    நாடோடி பாட்டில் நடைபெறும் சொற்காண
    ஓடோடி வந்தேன் உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா... நிறைய தெரிந்துகொண்டேன்....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு

    ReplyDelete