Friday, 19 September 2014

வரலாற்றில் முதன்முறையாக!

                                                                         
                மேல்படிப்புக்கு கொஞ்சம்  அல்ல நிறையவே பணத்தட்டுப்பாடு .நல்லவேளை தெய்வாதினமாக, முன்பு 12 வருடங்கள்  வேலை செய்ததால் . ஊழியர் சேமநிதி வாரியத்தில் எனக்கும் பணம் இருந்தது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ? அடடா !12 வருடங்களுக்கு இவ்வளவு பணம் இருக்கே!இன்றுவரை வேலை செய்திருந்தால் ,இன்னும் அதிகப்பணம் இருக்குமே?என்று தோழி கூறிய அடுத்த கணம் மனம் ஏங்க நினைத்தது.மறுகணம் என் மனசாட்சி ‘உனக்கு ஒதுக்கப்பட்டது இதுதான்,அதற்கு மேல் உள்ள பணத்தில் உன் பெயர் எழுதப்படவில்லை
.இருப்பதை வைத்து பரவசப்படு, ஒரு சிலருக்கு அது கூட இல்லை,வியர்வை சிந்தி உழைத்து ,முறையான கம்பெனி இல்லை ,ஏமாத்துக்கார முதலாளிகள் ,நமக்கு இதுதான் ,‘என்று நினைத்த அடுத்த கணம் செவிட்டில் அறைந்தது போல ஓர் உணர்வு!

                   சரி விசயம் அதுவல்ல. மலேசியாவில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழியர் சேமநிதி வாரியத்தில் பணம் (இருந்தால்)எடுக்கவேண்டுமென்றால் ,ஒன்று வீடு வாங்கினால் கொடுப்பார்கள் அல்லது மேல்படிப்படிக்கு மட்டுமே கொடுக்கப்படும்.வேற எந்த காரணத்துக்கும் பணம் கொடுக்கப்படாது( சைக்கிள் கேப்ல எனக்கு இன்னும் ஐம்பது வயசு ஆகலையாம்!!!!!)அலுவலகத்தை தொடர்பு கொண்டு ‘கல்விக்கு பணம் எடுக்க என்ன விதிமுதிமுறைகள் ?’என கேட்டுக்கொண்டேன். அந்த சமயம் தொடர்பில் இருந்த மலாய்க்காரப்பையன் ‘அக்கா நீ எங்கே வசிக்கிறாய் ?என்றான் .’பூச்சோங் என்றேன்.அக்கா உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளை இருக்கு.உனக்கு தெரியாதா?என்றான்.நிஜமாகவே எனக்கு தெரியாது,மேலும் எனக்கு இது புதிய தகவல் அதைவிட முக்கியம் எனக்கு மகிழ்ச்சியான விசயம்.காரணம் இது போன்றை நிறைய  அரசு அலுவல்கள்  பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலும்பூரரில்தான் இருக்கும்.பையனிடம் தீர விசாரித்து ,என்னவெல்லாம் கொண்டு போகணும் என்று என்னை தயார் பண்ணிக்கொண்டேன்.ஆனாலும் அரசு சார்ந்த அலுவல்களில் கண்டிப்பாக இரண்டு மூன்றுமுறை நம்மை அலைய வைப்பார்கள்  என்று சொல்லமாட்டேன் அலைய வேண்டி இருக்கும் என்பது 101% நிச்சயம்.

                    காலையில் அனைத்து டாக்யூமெண்ட்களையும்  எடுத்துக்கொண்டு ஓடினேன்.வழக்கம்போல் அரசு அலுவல தாரகமந்திரமாக ‘இன்குயரி கவுண்டரில் இன்று ‘சிஸ்டம் டவுன் ,நீ வரும்முன் ஒரு போன் பண்ணிட்டு வா என்று ஒரு நம்பரை கொடுத்தாள்.’சனி கார் சக்கரத்தில் உட்கார்ந்து வந்திருப்பான் போல?’’சரி நான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்க்கணும் ,இல்லையென்றால் நான் சும்மா சும்மா வரமுடியாது’என்று வழக்கமான தொனியில் சொன்னேன்’சரி அப்படின்னா நம்பரை எடுத்துக்கொண்டு ,அந்த கவுண்டரில் போய் கேட்டுக்கொள் என்றாள்.திரும்பி பார்த்தேன் என்ன ஆச்சரியம்?அங்கே உள்ள இருக்கையில் ஒருவர் கூட இல்லை.சிஸ்டம் டவுன் என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் போல?நம்பரை எடுத்தவுடன் என்னை அழைத்தார்கள்.அங்கே யாருமே இல்லை என்பதால்.

                 ’ரொம்ப அழகாக சிரித்த முகத்துடன் (கொஞ்சம் நேருக்கு மாறான செயலாக இருந்தது),சின்ன  பெண்  மலாயில் ’என்ன அக்கா ?’என்றாள்.’என் விபரங்களையும் நோக்கத்தையும் சொன்னேன்.’நான் சும்மா சும்மா வரமுடியாது, (நிறைய வேலைகளைத் தவிர்ர்த்து முகநூலில் பிசி என்பது அவளுக்கு தெரியாது),கொஞ்சம் பிசி,சோ என் தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து சொல் ‘என்றேன்.அவளும் ‘பரவாயில்லை ,நான் உனக்கு செய்து தருகிறேன் ,இப்போ சிஸ்டம் ஓகே ‘என்றாள்!என்னடா இது?இப்போதான் அவ சொன்னாள்,இன்றைக்கு ஒரு மலேசியா முழுவதும் சிஸ்டம் டவுன்???அதற்குள் அந்த குட்டி என் கையில் உள்ள உறையை எடுத்துக்கொண்டு  அனைத்து தாட்களையும் திருப்பி பார்த்தாள்.’ஓகே அக்கா, அனைத்தும் சரியா இருக்கிறது.இதோ இங்கே மட்டும் கையொப்பமிடு ‘என்றாள்.

                        பிறகு என்ன தொகை? உனக்கு எவ்வளவு  கொடுக்கணும்?பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு ?என்று கணக்கு போட்டு, பெருவிரல் அச்சுகளை எடுத்துக்கொண்டாள். என்னால் நம்பவே முடியவில்லை.ஒரு பத்து நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ,ஒரு மகிழ்ச்ச்சியான செய்தியும் சொன்னாள்.’உன் சொந்த பணத்தை நீ செலுத்தியிருந்தால் அதன் ரசிதைக்கொடு ,அதையும் உன் வங்கியில் போட்டு விடுவோம்.ரசீதைக்கொடுத்தேன்,அந்த பணம் உனக்கு சொந்தம் ,ஆகவே உன் வங்கிக்கு அனுப்பிவிடுவோம்,சோ மீதப்பணம் உன் பல்கலைகழகத்துக்குப் போய்சேரும் ‘என்றாள்.

                      சிவசிவா..வந்த வேலை இத்தனை சுலபமாக முடிந்ததே?நான் காண்பது கனவா? அவளுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னேன்.வெளியே வந்து காரில் ஏறிய பின்புதான் யோசித்தேன் ,அடடா அவளிடம் ஒரு வார்த்தை சொல்ல மறந்துவிட்டேன்’உன் வேலையும் சரி உன் செயலும் சரி ,மிகுந்த திருப்தியைக்கொடுக்கிறது.இப்படி எல்லோரும் இருப்பதில்லை அது தமிழர்களாக இருந்தாலும்’என! சரி மீண்டும் அடுத்த முறை போகும்போது அவசியம் சொல்லிவிட்டு அவளோடு ஒரு படமும் எடுத்துக்கொள்வேன்.

*இதைப்படிக்கும் மலேசிய,பூச்சோங் வட்டார  மக்களே ,இங்கே ஒரு கிளை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.நேரத்தை விரயம் செய்யாதீர்கள் ,எதற்கும் ஒரு முயற்சி இருத்தல் நலம்.காரியம் கைகூடும்.
                                                                       

5 comments:

 1. இதே இந்தியாவா இருந்தால் சிவா சிவா இல்லை கோவிந்தா கோவிந்தாதான்...!

  ReplyDelete
 2. பாருங்க... ஒரே நாள்ல வேலை முடிஞ்சிருச்சு... ஆனா நம்மூருல... ம்...

  ReplyDelete
 3. சின்ன வயசில்... சிறு மண் உண்டியலைக் கையில் கொடுத்து
  இதில காசு போட்டு வைச்சா பல மடங்கா பெருகும் நு அம்மா சொல்வாங்க..
  நான் ஒரு ஐந்து பைசா போட்டுட்டு... தினம் தினம் உற்றுப் பார்ப்பேன்..
  உண்டியல் நிறையவே நிறையாது...அடடா என்று இருக்கும்.. அம்மா பொய் சொல்லிட்டங்கன்னு
  தோணும்... அப்படியே நினைத்து இன்றைக்கு வரும் நாளைக்கு வரும் நு நினைச்சி
  கிடைக்கும் போதெல்லாம் ஒரு பைசா ரெண்டு பைசா பத்து பைசா (காலணா கிடைத்தால் ஆச்சர்யம்) போட்டுவைச்சி ஒரு நாள் பார்த்தால் உண்டியல் நிறைஞ்சிருசி...
  மகிழ்ச்சி தாங்கல..
  சிறுசேமிப்பின் அழகு அது...
  காலப்போக்கில் இப்போதுதான் அதன் அருமை விளங்குகிறது...
  ==
  அப்படிப் போட்டு வைத்து நமக்கு தேவைப்படும்போது எடுக்க நாம படும் பாடு இருக்கே..
  அப்பப்பா...அதைக்கொண்டு வா இதைக்கொண்டு வா என்று சொல்லி அவர்கள் படுத்தும்பாடு
  சொல்லில் அடங்காதது...
  ==
  தங்களின் மேற்படிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
  அதற்காக தங்களின் பணம் தங்களுக்கே வந்து அடைந்ததற்கு
  இன்னும் பல வாழ்த்துக்கள்..
  சகோதரர் சே.குமார் சொன்னது போல... இதுவே
  நம்ம ஊரா இருந்தால்... அவ்வளவுதான்... 60 வயசுக்கு மேல தான் படித்திருக்கணும்.. ஹா ஹா

  ReplyDelete
 4. மேற்படிப்பு வெற்றிகரமாக முடிய வாழ்த்துக்கள் டீச்சர்.

  ReplyDelete